April

ஏப்ரல் 5

ஏப்ரல் 5

உள்ளே போய், உன் பிள்ளைகளுடன் உள்ளே நின்று கதவைப் பூட்டி….. (2.இராஜா.4:4).

அவர்கள் தேவனோடு தனித்திருக்க வேண்டியதாயிருந்தது. ஏனென்றால் அவர்கள் செய்ய வேண்டிய காரியம், இயற்கை விதி, மானிட ஆட்சிமுறை, சபை, ஆசாரியத்துவம், கர்த்தருடைய தீர்க்கதரிசி இவற்றோடு சம்பந்தப்பட்டதல்ல. ஆகையால் அவர்கள் எல்லாச் சிருஷ்டிகளையும் விட்டு சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பாராமல், மனுஷீக யோசனையைச் சார்ந்திராமல், ஒரு மூலைமுடுக்கில் தள்ளப்பட்ட போதிலும், கர்த்தர் மேல் மாத்திரம் சார்ந்திருந்து, அற்புதங்களின் ஊற்றண்டை இருக்கவேண்டியிருந்தது.

கர்த்தருடைய திட்டத்தில் இது ஒரு பாகமாகும். பயன் கொடுக்கக்கூடிய ஒவ்வொரு ஆத்துமாவும், எப்பொழுதாவது ஒரு சமயம் ஜெபம், விசுவாசம் என்னும் இரகசிய இறைக்குள் செல்லவேண்டும்.

கர்த்தர் சில சமயம் நம்மைச் சுற்றி ஒரு கோட்டையை அமைத்து, சகல ஆதாரங்களையும் அகற்றி, சாதாரணமாய்க் காரியங்களைச் செய்யம் வழிகளை நீக்கி முற்றிலும் புதுமையானதும், எதிர்பாராததும், பழைய வழங்கங்களுக்கு ஒத்து வராததுமான இடத்தில் நம்மை வைக்கிறார். அங்கே என்னதான் நேரிடும் என்று நாம் அறியோம். அங்கே நமது வாழ்க்கையை வேறுவிதமாக மாற்றி அமைக்கிறார். நாம் அவரையே நோக்கிப் பார்க்கும்படி செய்கிறார்.

பக்தியுள்ளவர்களில் மிகுதியான பேர் இயந்திரம் போன்ற ஜீவியம் நடத்துகிறவர்கள். இவர்கள் இன்னது நடக்கும் என்று திட்டம்போட முடியும். ஆனால் தேவன் விசேஷித்த சடுதியான காரியத்திற்கு அழைத்துச் செல்லும் ஆத்துமாக்களைத் தனியே பிரித்து அடைத்து விடுகிறார். அங்கெ அவர்கள் கர்த்தர் தங்கபை; பிடித்திருக்கிறார். அவரோடு காரியத்தை நடத்துகிறோம். அவரிடமே யாவும் எதிர்பார்க்கவேண்டும் என்பதை மட்டுமே அறிவார்கள்.

இவ்வாக்கியத்தில் குறிப்பிட்ட விதவையைப்போல் கர்த்தரின் அதிசயத்தைக் காணத்தக்க, வெளியரங்கமான யாவையும் விட்டு விலகி உள்ளந்திரியத்தில் தேவனோடு ஒன்றிக்கொள்ள வேண்டும். மிகுந்த சோதனையில் கர்த்தர் தமது இனிமையை நாம் காணச் செய்கிறார்.

இதயத்தோடு இதயம் பேசினாற்போல்
பெரிய சப்தத்தினிடையே
சில அரிய யோசனை சொல்லித்
துன்பத்தினூடும், துக்கத்தினூடும் பேசவே
தேவன் நம்மைச் சில வேளைகளில்
உள்ளே விட்டுக் கதவை அடைக்கிறார்.