April

ஏப்ரல் 4

ஏப்ரல் 4

அப்பொழுது எலிசா விண்ணப்பம்பண்ணி: கர்த்தாவே இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான் (2.இராஜா.6:17).

தேவனே, நாங்கள் பார்க்கத்தக்கதாய் எங்கள் கண்களைத் திறந்தருளும். இதுவே, நாம் நமக்காகவும், பிறருக்காகவும் செய்யவேண்டிய ஜெபம். ஏனென்றால் நம்மைச் சுற்றியுள்ள உலகம் முழுவதும், தீர்க்கதரிசியைச் சுற்றியிருப்பதுபோல, நம்மை மகிமையுள்ள வெற்றியின் இடத்திற்குக் கொண்டு போகக் காத்துக்கொண்டிருக்கிற தேவனுடைய குதிரைகளாலும் இரதங்களாலும் நிறைந்திருக்கிறது. இவ்விதமாய்க் காண, நம் கண்கள் திறக்கப்படும்பொழுது, நம் ஜீவியத்தில் சிறிதும் பெரிதுமான எல்லா விஷயங்களிலும் நம் ஆத்துமத்துக்கான இரதங்களைக் காண்போம்.

நமக்கு எற்படும் ஒவ்வொன்றையும் நாம் இரதமாகப் பாவிக்கும்பொழுது அவைகள் இரதங்களாகின்றன. அப்படியே நமக்கு உண்டாகும் சிறு சோதனைகளையும் இக்கட்டுக்களையும் நம்மை நசுக்கிப்போடும் பெருந்தேர் என்று எண்ணினால் அவகைள் அப்படியே ஆகும்.

இவ்விரண்டில் நம்முடையது எதுவாயிருக்கவேண்டும் என்பது நாமே தெரிந்துகொள்ளவேண்டிய காரியம். நேரிடும் சம்பவங்கள் எப்படிப்பட்டவை என்பதின்படியல்ல, நாம் அவைகளை எப்படி ஏற்றுக்கொள்ளுகிறோமோ அதன்படியே இருக்கும். நாம் அவைகளின் அடியில் கிடந்து, அவைகளை நம்மேல் ஏறிச்சென்று, நசுக்க விட்டுவிட்டால் அவைகள் நம்மை நசுக்கும் தேர்களாகும். ஆனால் அவற்றுள், ஏறி, வெற்றி இரதங்கள்போல் நம்மைச் சுமந்து செல்லவிட்டால் அவைகள் தேவனின் இரதங்களாகும்.

நசுங்கிள ஆத்துமாவைக்கொண்டு தேவன் அதிகம் செய்ய இயலாது. ஆகவே சத்துருவானவன், தேவனுடைய பிள்ளைகளைத் தங்கள் நிலைமையைக் குறித்தும், சபையின் நிலைமையைக் குறித்தும் மனந்தளர்ந்து நம்பிக்கை இழக்கச் செய்கிறான். மனந்தளர்ந்த சேனை, தோல்வியடைவோம் என்ற நிச்சயத்தோடே யுத்தக்களம் செல்கிறது. சிறிது காலத்திற்குமுன் ஒரு மிஷனறி அம்மையாரின் ஆவி சோர்ந்துபோனாதால், உடல் பலம் குன்றி, வியாதிப்பட்டு, சுயதேசம் திரும்பினார்கள் என்று கேள்வியுற்றேன். நம் ஆவிக்கு விரோதமாய்ச் சத்துரு செய்யும் தாக்குதல்களையும், அவைகளை நாம் வெற்றிகரமாக எதிர்க்கும் முறைகளையும் நாம் விளங்கிக்கொள்வது அவசியமாக இருக்கிறது. நம்முடைய நிலையைவிட்டு சத்துரு நம்மை அசைக்கக் கூடுமானால் (தானி.7:25). கடைசியாக நாம் பலவீனத்தால் வெற்றி என்ற கோஷத்தை விடும்வரை, முற்றுகையிட்டு நம்மை களைக்கச் செய்கிறான்.