September

இரட்சிப்பின் செயல்முறை

September 29

“Salvation is of the Lord.” (Jonah 2:9)

We are all familiar with the zealous “soul winner” who dashes around, buttonholing unsuspecting prospects, leading them through a salvation formula, and badgering them until they finally make a profession in order to get rid of him. He chalks up another convert and then looks around for more heads to count. Is this evangelism?

We would have to admit that it is not. It is a form of religious harassment. Like any service performed in the energy of the flesh, it does more harm than good.

John Stott was right when he wrote: “Christ has the keys. He opens the doors. Then let us not barge our way unceremoniously through doors which are still closed. We must wait for Him to make openings for us. Damage is continually being done to the cause of Christ by rude or blatant testimony. It is indeed right to seek to win for Christ our friends and relatives at home and at work. But we are sometimes in a greater hurry than God. Be patient! Pray hard and love much, and wait expectantly for the opportunity of witness.”

We may not agree with much of Dietrich Bonhoeffer’s doctrine, but we might well take to heart the following words of his: “The word of salvation has its limits. He has neither power nor right to force it on other men… Every attempt to impose the Gospel by force, to run after people and proselytize them, to use our own resources to arrange the salvation of other people, is both futile and dangerous… We shall only meet with the blind rage of hardened and darkened hearts, and that will be useless and harmful. Our easy trafficking with the word of cheap grace simply bores the world to disgust, so that in the end it turns against those who try to force on it what it does not want.”

Real conversion is a work of the Holy Spirit. It is “not of the will of man” in the sense that a man cannot produce it by his own efforts, however well intended. People who are pressured into a profession of Christ without the full consent of their will become disillusioned, disaffected and often become enemies of the Cross of Christ.

It is one of the great experiences of life when the Holy Spirit uses us in the salvation of another person. But it is bizarre and grotesque when we try to do it in our own strength.

செப்டெம்பர் 29

இரட்சிப்பு கர்த்தருடையது. யோனா 2:9

இரட்சிப்பின் செயல்முறை

வைராக்கியமுள்ள ‘ஆத்துமாவை வென்றிடுவோரை” நாம் அனைவரும் நன்கு அறிந்திருக்கிறோம். அவர் விரைந்து அங்கும் இங்கும் செல்கிறார். மற்றவர்கள் மனதுருகும்படி பேசுகிறார். எதிர் காலத்தில் அவர்களது சாட்சி எப்படி விளங்கும் என்று அவர் ஐயம் ஏதும் கொள்வதில்லை. இரட்சிப்பின் வாய்ப்பாட்டை ஒப்புவிக்கச் செய்கிறார். இவரிடத்தில் இருந்து எவ்வாறு தப்புவது என்று எண்ணி அவர்கள் அறிக்கை செய்யும் வரை அவர்களுக்குத் தொல்லை கொடுக்கிறார். அடுத்தது யாரை மனந்திருப்பச் செய்வது என்று குறித்துக் கொள்கிறார். சுற்றிலும் பார்த்து இன்னும் எத்தனை பேரைக் கொண்டு வரலாம் என்று எண்ணுகிறார். இக்கதை தொடர்ந்து கொண்டே போகும். இது நற்செய்திப் பணியாகுமா?

நற்செய்திப் பணியினை இவ்வாறு செய்யலாகாது என்று உடனடியாக நாம் ஒப்புக்கொள்கிறோம். இது ஒருவகை மதத் தொல்லையாகும். மாமிசத்தின் சக்தியினால் செய்யப்படுகிற எந்தவொரு வேலையைப் போலவே, இதுவும் நன்மையைக் காட்டிலும் தீமையையே கூடுதலாகச் செய்கிறது.

ஜான் ஸ்டாட் என்பார் இதைக் குறித்து மிகச் சரியாகவே எழுதியுள்ளார். ‘திறவுகோல் கிறிஸ்துவினிடத்தில் இருக்கிறது. அவர் கதவைத் திறந்தார். கதவு இன்னும் மூடியிருக்கையில் மரியாதையற்ற முறையில் பலவந்தமாய் உட்செல்ல வேண்டாம். அவர் நமக்காகக் கதவைத் திறக்கும்வரை பொறுமையோடு காத்திருப்போம். முரட்டுத்தனமான, பெருங்கூச்சலோடு செய்யப்படுகிற செயல்களால் கிறிஸ்துவின் நோக்கத்திற்குத் தொடர்ந்து தீங்கு விளைவிக்கப்படுகிறது. நம்முடைய நண்பர்களையும், உறவினர்களையும், மற்றும் அலுவலகத்திலும் வீட்டிலும் கர்த்தருக்காக வெற்றிகொள்ள நினைப்பது உண்மையில் சரியானதே. ஆனால், நாம் சில வேளைகளில் தேவனைக் காட்டிலும் விரைந்து செயல்பட முனைகிறோம். பொறுமையோடு இருங்கள்! பலத்தோடு ஜெபியுங்கள், அதிகமாக அன்புகூருங்கள், சாட்சிகூறச் சர்ந்தப்பம் கிடைக்குமென்று நம்பிக்கையோடு காத்திருங்கள்.”

டயட்ரிச் போன்ஹெபியர் என்பாருடைய கோட்பாடுகளில் பலவற்றை நாம் ஒப்புக்கொள்ள மாட்டோம். எனினும் கீழ்காணும் அவருடைய சொற்களை நம்முடைய உள்ளார்வத்தோடு ஏற்றுக்கொள்வோம். ‘இரட்சிப்பின் சொற்களுக்கு சில எல்லைகள் உள்ளன. அதனை மற்றவர் மீது செலுத்துவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. அது முறையும் அன்று. நற்செய்தியைப் பலவந்தமாய் மற்றவர் மீது செலுத்தும் ஒவ்வொரு முயற்சியும், மனிதர்கள் பின் ஓடி அவர்களை மதமாற்றம் பெறச் செய்வதும், நம்முடைய சொந்த ஏதுக்களால் பிறருடைய இரட்சிப்பிற்கு வழிவகுப்பதும் வீணான செயலாகும். ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகும். நாம் கடுஞ்சீற்றத்தையும், கடினப்பட்டதும் இருளடைந்ததுமான இருதயங்களையுமே சந்திக்க வேண்டிவரும். அதில் எந்தவித பயனுமில்லை. அது கேட்டையே விளைவிக்கும். கிருபையைக் குறித்து மிகச் சாதாரணமாக நாம் கூறும் சொற்கள் அவர்களுக்கு இழிவாகவும், சலிப்புத் தட்டுவதாகவும் அமைந்துவிடும். உலகம் அதனை ஏற்றுக் கொள்ளாமல் அதனை வற்புறுத்திச் சொல்வோருக்கு எதிராகச் செயல்படத் தொடங்கும்.”

உண்மையான மனமாற்றம் தூய ஆவியானவரின் செயல்படாக இருக்கிறது. அது ‘மனிதனுடைய சித்தத்தினால் உண்டாவதில்லை.” என்னதான் விருப்பம் இருந்தாலும், மனிதன் தன்னுடைய சொந்த முயற்சியினால் அதை உருவாக்கமுடியாது. முழு சம்மதமின்றி, கிறிஸ்துவை அறிக்கை செய்யும்படி வற்புறுத்தப்படுகிற மக்கள், பின்னர் மயக்கத்திலிருந்து வெளிவருவர், மனதில் குறைபாடு உண்டாகும், கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞராக மாறிவிடுவர்.

மற்ற ஒருவருடைய மனம் மாறுதலில், நாம் பயன்படுவது பரிசுத்த ஆவியானவருடைய அரிய பெரிய செயலாக இருக்கிறது. நம்முடைய சொந்த முயற்சியனால் அதைச் செய்ய முயற்சி செய்வது விபரீதமானதும், நகைப்பிற்குரியதுமாகக் காணப்படும்.

29. September

»Bei dem Herrn ist Rettung.« Jona 2,10

Wir alle kennen übereifrige »Seelengewinner«, die rastlos umherjagen, ahnungslose Kandidaten am Schlips festhalten, mit ihnen ein Formular zur Seelenrettung durchgehen und sie so lange bedrängen, bis sie schließlich ein Bekenntnis ablegen, nur um diesen unangenehmen Menschen endlich loszuwerden. Der hakt dann wieder einen Bekehrten ab und sieht sich nach weiteren Häuptern um, die er später zählen kann. Ist das wirklich Evangelisation?

Nein, das müssen wir wohl zugeben. Das ist eher eine Form religiöser Belästigung. Wie jeder Dienst, der nur mit der Energie des Fleisches betrieben wird, richtet er mehr Schaden an, als er Gutes hervorbringt.

John Stott hat schon Recht, wenn er schreibt: »Jesus Christus hat die Schlüssel. Er öffnet die Türen. Deshalb wollen wir nicht gewaltsam und auf eigene Faust durch die Türen einbrechen, die noch verschlossen sind. Wir müssen schon auf Ihn warten, dass Er Türen vor uns öffnet. Der Sache Christi wird immer wieder geschadet durch ein gefühlloses oder aufdringliches Zeugnis. Bestimmt ist es richtig, wenn man sich bemüht, die Freunde und Verwandten zu Hause und an der Arbeitsstelle für Christus zu gewinnen. Aber wir haben es dabei manchmal eiliger als Gott. Sei geduldig! Bete inständig und liebe viel und warte dann hoffnungsvoll auf die Gelegenheit für ein Zeugnis.«

Wir stimmen vielleicht in vielen Punkten nicht mit der Lehre von Dietrich Bonhoeffer überein, aber wir sollten uns die folgenden Worte von ihm doch zu Herzen nehmen: »Das Wort des Heils hat seine Grenzen. Ein Mensch hat weder die Macht noch das Recht, es anderen aufzuzwingen … Jeder Versuch, das Evangelium einem Menschen mit Gewalt überzustülpen, hinter den Leuten herzurennen, um sie zu bekehren, und unsere ganze Findigkeit einzusetzen, um die Errettung anderer Menschen zustande zu bringen, ist sowohl nichtig als auch gefährlich … Wir werden dann
nur der blinden Wut von verhärteten und verdunkelten Herzen begegnen, und das ist zwecklos und schädlich. Unser leichtfertiger Umgang mit dem Wort der billigen
Gnade langweilt die Welt bis zum Ekel, so dass sie sich schließlich sogar gegen die wendet, die versuchen, ihr etwas aufzuzwingen, was sie nicht haben will.«

Eine wirkliche Bekehrung ist das Werk des Heiligen Geistes. Sie kommt nicht »aus dem Willen des Menschen«, das heißt, dass ein Mensch sie aus eigener Anstrengung nicht hervorbringen kann, mag er auch noch so gute Absichten haben. Leute, die zu einem Bekenntnis zu Jesus Christus gedrängt werden, ohne selbst voll und ganz zuzustimmen, werden enttäuscht, unzufrieden
und schließlich oft sogar zu Feinden des Kreuzes Christi.

Es ist eine der großartigen Erfahrungen des Lebens, wenn der Heilige Geist uns bei der Rettung eines anderen Menschen gebraucht. Aber es wirkt eigenartig und abstoßend, wenn wir versuchen, das aus unserer eigenen Kraft heraus zu vollbringen.