September

சத்தியத்தை வாங்கு அதை விற்காதே

September 25

“Am I therefore become your enemy, because I tell you the truth?” (Gal. 4:16)

Paul’s experience with the Christians in Galatia reminds us that we often make enemies of our friends when we tell them the truth. The apostle had introduced these people to the Lord and nurtured them in the faith. But later when false teachers infiltrated their Christian assemblies, Paul had to warn believers that they were forsaking Christ for the law. That caused them to become hostile toward their father in the faith.

It was also true in Old Testament times. Elijah was always honest and forthright in his messages to Ahab. Yet one day when Ahab met him, he said, “Art thou he that troubleth Israel?” (1 Ki. 18:17). “Troubleth Israel”? Why, Elijah was one of the best friends Israel ever had! But his thanks for being faithful was to be denounced as a troublemaker.

Micaiah was another fearless prophet. When Jehoshaphat asked if there was a prophet of the Lord whom they could consult, the king of Israel said, “There is yet one man, Micaiah the son of Imlah, by whom we may inquire of the Lord: but I hate him; for he doth not prophesy good concerning me, but evil.” The king didn’t want the truth, and hated the one who spoke it to him.

In the New Testament we find John the Baptist telling Herod, “It is not lawful for you to have your brother’s wife” (Mk. 6:18 NIV). It was true, but such courageous handling of the truth soon led to John’s execution.

Our Lord stirred up the hatred of the unbelieving Jews. What caused this hatred? It was because He had told them the truth. He said, “But now ye seek to kill me, a man that hath told you the truth” (John 8:40).

Thomas Jefferson wrote, “If you meant to escape malice, you should have confined yourself within the sleepy line of regular duty. There are two sides to every question, and if you take one with decision and act on it with effect, those who take the other will, of course, be hostile in proportion as they feel that effect.”

The truth often hurts. Instead of bowing to it, men often curse the one who speaks it. The true servant of the Lord has already counted this cost. He must speak the truth or die. He knows that the wounds of a friend are faithful, but the kisses of an enemy are deceitful (Prov. 27:6).

செப்டெம்பர் 25

நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொன்னதினாலே உங்களுக்குச் சத்துருவானேனோ? காலத்தியர் 4:16

சத்தியத்தை வாங்கு அதை விற்காதே

நாம் சத்தியத்தைக் கூறுங்கால் நமது நண்பர்கள் நமக்கு எதிரிகளாகின்றனர் என்ற உண்மையை, கலாத்திய நாட்டுக் கிறிஸ்தவர்களிடம் பவுல் பெற்ற அனுபவம் நமக்கு நினைவுபடுத்துகிறது. அந்த மக்களைக் கர்த்தருக்கு அறிமுகப்படுத்தி, விசுவாசத்தில் வளர்த்தவர் அந்த அப்போஸ்தலனே ஆவார். ஆனால், பின்னர் அச்சபைகளுக்கு வருகை புரிந்த கள்ளப்போதகர்கள் விசுவாசத்தோடு பிரமாணத்தையும் கைக்கொள்ள வேண்டுமெனப் போதித்தனர். இதனால், அந்த விசுவாசிகள் பிரமாணத்திற்கு முதலிடம் கொடுக்கத் தொடங்கினர். விசுவாசத்தைக் கைவிட்ட மக்களை பவுல் எச்சரிக்க வேண்டியதாயிற்று. அதன் நிமித்தம் அவர்களுடைய விசுவாசத் தகப்பனிடத்தில் அவர்கள் விரோதம் கொண்டனர்.

பழைய ஏற்பாட்டுக் காலத்திலும் இது உண்மையாயிருந்தது. ஆகாபினிடம் செய்தியை வழங்கும்போதெல்லாம் எலியா நேர்மையோடும், உண்மையோடும் பேசினான். இருந்த போதிலும் அவனை ஒருநாள் ஆகாப் சந்தித்தபோது, ‘இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா? என்று வினவினான். (1.இராஜா.18:17). ‘இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவனா?” உண்மையில், இஸ்ரவேலின் சிறந்த நண்பர்களில் ஒருவனாக அல்லவா திகழ்ந்தான் எலியா! ஆனால் அந்த நாட்டிற்கு அவன் உண்மையோடு செயல்பட்டும், கலங்கப்பண்ணுகிறவன் என்று பழித்துரைக்கப்பட்டான்.

முன்னுரைப்போன் மிகாயா அஞ்சாநெஞ்சினன். விசாரித்து அறிகிறதற்குக் கர்த்தருடைய தீர்க்கதரிசி எவரேனும் உண்டோ என்று யோசபாத் இஸ்ரவேலின் அரசனிடத்தில் வினவியபோது, ‘கர்த்தரிடத்தில் விசாரித்து அறிகிறதற்கு இம்லாவின் குமாரனாகிய மிகாயா என்னும் மற்றொருவன் இருக்கிறான், ஆனாலும் நான் அவனைப் பகைக்கிறேன். அவன் என்னைக் குறித்து நன்மையாதை அல்ல, தீமையாகவே எப்போதும் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன்.” என்று அவன் பதிலுரைத்தான். அந்த மன்னனோ சத்தியத்தை விரும்பவில்லை,. சத்தியத்தை எடுத்துரைத்தவனை அவன் வெறுத்தான்.

புதிய ஏற்பாட்டில், ஏரோதினிடத்தில் யோவான் ஸ்நானகன் உண்மையை உரைத்தான். ‘நீர் உம்முடைய சகோதரன் மனைவியை வைத்துக்கொள்வது நியாயமல்ல” (மாற்கு:6:18). உண்மையை துணிவுடன் எடுத்துரைத்ததால் விரைவில் யோவான் கொல்லைசெய்யப்பட்டான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பேச்சு விசுவாசமற்ற யூதர்களின் வெறுப்பை எழுப்பிவிட்டது. இந்த வெறுப்புக்குக் காரணம் யாது? அவர் சத்தியத்தை அவர்களிடம் உரைத்ததே அதன் காரணமாகும். ‘தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள்” என்று அவர் கூறினார் (யோவான் 8:40).

“பகைமையிலிருந்து நீங்கள் தப்பிக்க விரும்பினால், எப்பொழுதும் செய்கிற ஊக்கமற்ற செயல்களையே நீங்கள் செய்துகொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும் இரண்டு பக்கங்கள் உள்ளன. ஒன்றை நீங்கள் தீர்மானமாய்த் தெரிந்துகொண்டு அதன்படி செயலாற்றத் தொடங்குவீர்களாயின், அதனுடைய தாக்கத்தை உணரும் மறுபக்கத்தார் அந்தத் தாக்கத்திற்கு ஏற்றபடி உங்களிடம் தங்களது பகைமையை வெளிப்படுத்துவர்” என்று தமாஸ் ஜெபர்ஸன் என்பார் எழுதியுள்ளார்.

உண்மையைக் கூறுதல் அவ்வப்போது வேதனையை விளைவிக்கும். சத்தியத்திற்கு தலைவணங்குவதை விடுவித்து, அதனைக் கூறுபவரை மனிதர்கள் எப்பொழுதும் சபிக்கவே செய்கின்றனர். கர்த்தருடைய உண்மையுள்ள ஊழியக்காரன் இதனுடைய விலையை ஏற்கவே கணக்கிட்டிருப்பான். அவன் உண்மையைப் பேச வேண்டும் அல்லது மரணமடைய வேண்டும். ‘சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையுள்ளவைகள், சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்” (நீதி.27:6).

25. September

»Bin ich also euer Feind geworden, weil ich euch die Wahrheit sage?« Galater 4,16

Die Erfahrungen des Paulus mit den Christen in Galatien erinnern uns daran, dass unsere Freunde uns oft plötzlich als ihre Feinde betrachten, wenn wir ihnen offen die Wahrheit sagen. Der Apostel hatte diese Leute mit dem Herrn bekannt gemacht und sie im Glauben gefördert. Aber später, als falsche Lehrer in ihre christlichen Versammlungen eindrangen, musste Paulus
die Gläubigen warnen, dass sie dabei waren, um der Gesetzlichkeit willen Jesus Christus aufzugeben. Und das brachte sie schließlich dazu, ihrem Vater im Glauben gegenüber feindlich gesinnt zu sein.

Das gab es auch schon zu Zeiten des Alten Testaments. Elia war immer ehrlich und geradeheraus in seinen Botschaften für den König Ahab. Aber eines Tages, als Ahab ihm begegnete, sagte der König: »Bist du da, der Israel ins Unglück gebracht hat?« (1. Könige 18,18). Israel ins Unglück gebracht? Nun, Elia war doch einer der besten Freunde, die Israel je gehabt hatte! Aber der Dank für seine Treue war nun, dass er als Unglücksstifter verschrien wurde.

Micha war ein anderer furchtloser Prophet. Als Josaphat sich erkundigte, ob es denn hier keinen Propheten des Herrn gebe, den man befragen könnte, erwiderte ihm der König von Israel: »Einen Mann gibt es noch, durch den man den Herrn befragen könnte; aber ich hasse ihn, denn er weissagt nichts Gutes über mich, sondern nur Böses; es ist Micha, der Sohn des Jimla« (1. Könige 22,8). Der König wollte die Wahrheit nicht hören, und er hasste den, der ihm diese Wahrheit ins Gesicht sagte.

Im Neuen Testament finden wir Johannes den Täufer, der zum König Herodes sagte: »Es ist dir nicht erlaubt, die Frau deines Bruders zu haben « (Markus 6,18). Das entsprach der Wahrheit, aber solch mutiger Umgang mit der Wahrheit führte schnell dazu, dass Johannes hingerichtet wurde.

Unser Herr Jesus rief auch den Hass der ungläubigen Juden hervor. Und was war der Grund für diesen Hass? Er hatte ihnen die Wahrheit gesagt. Er sprach zu ihnen: »Jetzt aber sucht ihr mich zu töten, einen Menschen, der die Wahrheit zu euch geredet hat« (Johannes 8,40).

Thomas Jefferson hat einmal geschrieben: »Wenn man jeder Bosheit ausweichen will, dann sollte man besser bei der schläfrigen Routine der alltäglichen Pflichterfüllung bleiben. Jede Frage hat zwei Seiten, und wenn man sich entschieden für die eine Seite entschließt und daran mit Erfolg arbeitet, werden diejenigen, die sich für die andere Seite entschieden haben, einem natürlich feindlich gegenüberstehen, umso mehr, je stärker sie die Erfolge des anderen verspüren.«

Die Wahrheit tut oft weh. Anstatt sich ihr zu beugen, verfluchen die Menschen meist denjenigen, der sie ausspricht. Doch ein wahrer Diener des Herrn hat schon genau erkannt, was es ihn kosten kann. Er muss die Wahrheit sagen oder sterben. Er weiß, dass die Schläge eines Freundes doch dessen Treue zeigen, während die Küsse des Feindes trügerisch sind (siehe Sprüche 27,6).