September

சோதனையைச் சந்தித்தல்

September 23

“O my soul, come not thou into their secret.” (Gen. 49:6)

These words are found in Jacob’s blessing of his sons. When he thought of the cruelty which Simeon and Levi showed to the men of Shechem, he said, “O my soul, come not thou into their secret.”

I would like to borrow the words and use them in a broader sense. There are secrets connected with sin which it is better never to know.

Temptation puts on its best face and suggests that we can never be happy until we have been initiated into its mysteries. It offers thrills, physical gratification, emotional highs, and the lure of the unknown.

Many people, especially those who have lived sheltered lives, are stirred by these appeals. They feel that they have missed out on true pleasures. They consider themselves disadvantaged. They think they can never be satisfied until they get a taste of the world.

The trouble is that sin does not come alone. There are built-in hazards and enduring consequences. When we come to experience any sin for the first time, we unloose a flood of pain and remorse.

Yielding to temptation lowers our resistance to sin. Once we have committed a sin, it is always easier to do it the next time. Soon we become expert in the sin. We even become slaves to it, bound by the chains of habit.

The moment we give in to temptation, our eyes are opened to a sense of guilt that we never had before. The exhilaration of breaking the code of sin is followed by a terrible sense of moral nakedness. It is true that the sin can be confessed and forgiven, but all through life there is the embarrassment of meeting former partners in transgression. There is the stabbing of memory when we unavoidably revisit the places of our folly. There are unwanted occasions when the whole sordid episode flashes back during our most holy moments—when our bodies actually pulsate and our lips muffle a groan.

While it is wonderful to experience the forgiveness of God for these sins, it is still better not to enter into their secrets in the first place. What poses as an attractive secret proves to be a nightmare. Pleasure soon turns to horror, and a moment of passion results in a lifetime of regret.

In the hour of trial, our response should be, “O my soul, come not thou into their secret.”

செப்டம்பர் 23

என் ஆத்துமாவே, அவர்களுடைய இரகசிய ஆலோசனைக்கு உடன்படாதே. ஆதியாகமம் 49:6

சோதனையைச் சந்தித்தல்

யாக்கோபு தன் குமாரர்களை ஆசீர்வதித்தபோது இச்சொற்களைப் பயன்படுத்தினான். சீகேம் மக்களுக்கு சிமியோனும் லேவியும் செய்த கொடுமைகளை எண்ணியவனாக, ‘என் ஆத்துமாவே, அவர்களுடைய இரகசிய ஆலோசனைக்கு உடன்படாதே” என்று கூறினான். இந்தச் சொற்களைச் சற்று விரிவான பொருளில் பயன்படுத்த விரும்புகிறேன். பாவமானது இரகசிய ஆலோசனையோடு சம்பந்தம் உடையதாக இருக்கிறது. அதனை ஒருக்காலும் அறியாதிருப்பதே சிறந்தது. சோதனையானது தனது இரகசிய முகத்தைக் காட்டிய வண்ணம் நம்மை நோக்கி வரும். அதனுடைய இரகசியங்களை நாம் அறியாதிருந்தால், நாம் ஒருக்காலும் மகிழ்ச்சியோடு இருக்கமுடியாது என்று அது ஆலோசனை கூறும். கிளர்ச்சியை உண்டுபண்ணும், சரீர வேட்கையைத் திருப்திசெய்யும், உணர்ச்சிப்பெருக்கு அடையச் செய்யும் என்று நாம் அறியாதவற்றைக் கூறி, சோதனையானது நம்மைக் கவர்ந்திழுக்கக் கூடியதாக இருக்கிறது.

பெரும்பாலோர் விஷேமாகப் பாதுகாப்பான சூழ்நிலையில் வாழ்கிறவர்கள், இவ்விதமான தூண்டுதலை அடையும்போது குழப்பமடைகின்றனர். உண்மையான இன்பத்தை இழந்துவிட்டதாக அவர்கள் நினைத்துக் கொள்கின்றனர். அனுகூலமற்ற நிலையில் தாங்கள் இருப்பதாக நினைக்கின்றனர். உலகத்தை அனுபவிக்கவில்லையென்றால் தாங்கள் மனநிறைவு அடையவே முடியாது என்று எண்ணுகின்றனர்.

பாவம் தனியாக வருவதில்லை என்பதே பிரச்சனை. பேரிடர் அதற்குள்ளாக மறைந்திருக்கிறது. நீடித்த விளைவுகளைச் சந்திக்க நேரிடும். முதல் முறையாக ஒரு பாவத்தை நாம் செய்யும் வேளையில் ஆற்றுப் பெருக்கென வேதனையையும் மன உலவையும் அது அவிழ்த்துவிடும்.

சோதனைக்கு நாம்; இடமளிக்கையில், பாவத்தை எதிர்த்து நிற்கிற வலிமை குன்றிப்போகிறது. ஒரு முறை ஒரு பாவத்தை நாம் செய்து விட்டால், அதனை மீண்டும் செய்வது மிக எளிது. கொஞ்ச நாட்களில் அப்பாவத்தைச் செய்வதில் திறமைமிக்கவர்களாக மாறிவிடுவோம். அதற்கு அடிமையாக மாறி, பழக்கம் என்னும் சங்கிலியால் கட்டப்பட்டுவிடுவோம்.

நாம் சோதனைக்கு இடம் கொடுத்த பிறகு, இதுவரை இல்லாத வகையில் குற்ற உணர்வுகளுக்கு நாம் ஆளாகிறோம். பாவத்தை மீறியதால் உண்டான மகிழ்ச்சியைத் தொடர்ந்து வெளியரங்கமான ஓழுக்கக் கேட்டின் பயங்கரமான உணர்வு நம் உள்ளத்தைத் தாக்கும். பாவத்தை அறிக்கை செய்வதால், மன்னிப்பைப் பெறுவது உண்மைதான். ஆனால் யாருடன் இணைந்து அப்பாவத்தைச் செய்தோமோ, அந்நபரைக் காண்கையில் இக்கட்டான நிலையில் நாம் தவிக்கிறோம். நாம் தவறு செய்த இடத்திற்குத் திரும்பிச் செல்கையில், முந்தின நினைவு நம்முடைய உள்ளத்தை உறுத்துகிறது. நமது நேரத்தைப் பரிசுத்தமாகக் கழிக்கையில், நம்முடைய பாவச்செயல் நம் கண்முன் பளிச்சிட்டு தோன்றுகிறது. அவ்வேளைகளில் நமது சரீரம் நடுங்குகிறது. நமது உதடுகளோ பெருமூச்சு விடுகின்றன.

இப்பாவங்களுக்கான தேவனுடைய மன்னிப்பை அனுபவித்து அருமையான அனுபவமாக இருந்த போதிலும், அத்தகைய பாவத்தின் இரகசியங்களுக்குள் பிரவேசிக்காதிருப்பதே அதினினும் சிறந்தது. கவர்ச்சி மிக்க இரகசியமாகத் தோன்றும் காட்சி, மனக்கிலியாகத் தொடர்கிறது. இன்பம் பேரச்சத்தையும், ஒரு நொடி வெறிதன்மை ஆயுட்காலம் முழுவதும் வருத்தத்தையும் உண்டுபண்ணும்.

சோதனை உண்டாகும் நேரத்தில், அதற்கு நாம் கொடுக்கவேண்டிய பதில், “என் ஆத்துமாவே, அவர்களுடைய இரகசிய ஆலோசனைக்கு உடன்படாதே” என்பதேயாகும்.

23. September

»Meine Seele komme nicht in ihren geheimen Rat.« 1. Mose 49,6

Diese Worte finden sich in Jakobs Segen über seine Söhne. Als er an die Grausamkeiten dachte, die Simeon und Levi an den Männern von Sichem begangen hatten, sagte er: »Meine Seele komme nicht in ihren geheimen Rat.«

Ich würde diese Worte gerne in einen breiteren Zusammenhang stellen. Es gibt Geheimnisse, die mit Sünde zu tun haben und von denen es besser ist, dass man sie nie erfährt.

Die Versuchung setzt dann ihr verführerischstes Gesicht auf und sagt uns, dass wir niemals glücklich sein können, wenn wir nicht in ihre Geheimnisse eingeweiht sind. Sie bietet uns Aufregendes an, körperliches Wohlbefinden, gefühlsmäßige Höhepunkte und das lockende Unbekannte.

Viele Menschen, besonders solche, die bisher ein sehr zurückgezogenes und behütetes Leben geführt haben, werden von solchen Verführungen angesprochen. Sie haben das Gefühl, dass sie bis jetzt die wahren Vergnügungen noch gar nicht kennen.Sie kommen sich benachteiligt vor. Und sie glauben, sie könnten niemals zufrieden sein, solange sie nicht einen umfassenden Eindruck von der Welt gewonnen haben.

Das Schwierige daran ist nur, dass die Sünde niemals allein kommt. Es gibt bei ihr immer eingebaute Risiken und böse Konsequenzen. Wenn wir mit einer Sünde, ganz gleich mit welcher, zum ersten Mal Erfahrungen machen, dann rufen wir damit eine ganze Flut von Quälereien und Gewissensbissen hervor.

Wenn wir einer Versuchung nachgeben, dann schwächt das unsere allgemeine Widerstandskraft. Wenn wir einmal eine Sünde begangen haben, wird es immer leichter, sie auch ein weiteres Mal zu tun. Bald werden wir schon Fachleute in Sachen Sünde. Ja, wir werden sogar zu ihren Sklaven und sind dann durch die Ketten der Gewohnheit an sie gefesselt.

In dem Moment, in dem wir einer Versuchung nachgeben, werden unsere Augen aber auch für ein Schuldgefühl geöffnet, das wir früher noch nie empfunden haben. Der Fröhlichkeit, mit der wir das Gesetz durchbrechen, folgt ein furchtbares Gefühl innerer Blöße und Leere. Es ist sicher wahr, dass Sünde bekannt und vergeben werden kann, aber das ganze Leben hindurch ist es peinlich, wenn man mit früheren Partnern dieser Übertretung wieder zusammentrifft. Es ist eine schmerzende Narbe in unseren Erinnerungen, wenn wir die Orte unserer Torheit wieder aufsuchen müssen. Es gibt ungelegene Momente, in denen die ganze schmutzige Angelegenheit wieder in unseren Gedanken auftaucht, oft gerade während unserer heiligsten Augenblicke – und unser Körper wird dann davon buchstäblich getroffen, und wir stöhnen auf.

Wenn es auch wunderbar ist, die Vergebung Gottes für diese Sünden zu erfahren, so ist es doch noch viel besser, gar nicht erst in ihre Geheimnisse einzudringen. Was sich zuerst als ein interessantes Geheimnis darbietet, stellt sich später als ein Alptraum heraus. Das Vergnügen schlägt bald um in Entsetzen, und ein Augenblick der Leidenschaft zieht oft ein ganzes Leben voller Vorwürfe nach sich.

In der Stunde der Versuchung sollte unsere Reaktion deshalb sein: »Meine Seele komme nicht in ihren geheimen Rat.«