September

செய்நன்றி மறத்தல்

September 18

“Were there not ten cleansed? but where are the nine?” (Lu. 17:17)

The Lord Jesus healed ten lepers but only one returned to thank Him, and that one was a despised Samaritan.

One of the valuable experiences for us in life is to encounter ingratitude, for then we can share in a small degree the heartbreak of God. When we give generously and do not receive so much as an acknowledgment, we have a greater appreciation of Him who gave His beloved Son for a thankless world. When we pour out ourselves in tireless service for others, we join the fellowship of the One who took the place of a slave for a race of ingrates.

Unthankfulness is one of the unlovely traits of fallen man. Paul reminds us that when the pagan world knew God, they glorified Him not as God, neither were thankful (Rom. 1:21). A missionary to Brazil discovered two tribes who had no words for “Thank you.” If a kindness was shown to them, they would say “That is what I wanted” or “That will be useful to me.” Another missionary, working in North Africa, found that those to whom he ministered never expressed gratitude because they were giving him the opportunity of earning merit with God. It was the missionary who should be grateful, they felt, because he was acquiring favor through the kindness he showed them.

Ingratitude permeates all of society. A radio program called “Job Center of the Air” succeeded in finding jobs for 2500 people. The emcee later reported that only ten ever took time to thank him.

A dedicated school teacher had poured her life into fifty classes of students. When she was eighty, she received a letter from one of her former students, telling how much he appreciated her help. She had taught for fifty years and this was the only letter of appreciation she had ever received.

We said that it is good for us to experience ingratitude because it gives us a pale reflection of what the Lord experiences all the time. Another reason why it is a valuable experience is that it impresses on us the importance of being thankful ourselves. Too often our requests to God outweigh our thanksgiving. We take His blessings too much for granted. And too often we fail to express our appreciation to one another for hospitality, for instruction, for transportation, for provision, for numberless deeds of kindness. We actually come to expect these favors almost as if we deserved them.

The study of the ten lepers should be a constant reminder to us that while many have great cause for thanksgiving, few have the heart to acknowledge it. Shall we be among the few?

செப்டெம்பர் 18

சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பது பேர் எங்கே? லூக்கா 17:17

செய்நன்றி மறத்தல்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பத்து தொழுநோயாளிகளைச் சுகமாக்கினார். அவர்களில் இழிவாய்க் கருதப்பட்ட சமாரியன் மட்டும் திரும்பி வந்து நன்றிகூறினான்.

நமது வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டிய பயனுள்ள அனுபவங்களில் செய்நன்றி மறத்தலைச் சந்திப்பது ஒன்றாகும். அதன் வாயிலாகவே தேவன் அடைந்த கடுந்துயரில் ஒரு சிறு பங்கை நாம் பகிர்ந்து கொள்ள முடியும். தாராளமாகக் கொடுத்தும், அதற்குரிய பாராட்டுதலை நாம் பெறாதபோதே, நன்றியற்ற இவ்வுலகிற்கு தம்முடைய அன்பான குமாரனைக் கொடுத்த தேவனை அதிகமாகப் பாராட்டுகிறவர்களாக இருப்போம். மற்றவர்களுக்காக அயராது உழைக்கும்படி நம்மை ஊற்றுகிறபோது, செய்நன்றி மறந்த இனத்திற்காக அடிமையின் கோலத்தை எடுத்துக் கொண்ட ஒருவரோடு ஐக்கியம் உடையவர்களாக இருப்போம்.

வீழ்ந்துபோன மனிதனின் இனிமையற்ற குணங்களில் ஒன்றுதான் செய்நன்றி மறத்தல். இவ்வுலக சமயத்தார் தேவனை அறிந்தும், தேவனுக்குரிய மகிமையையும், நன்றியையும் அவருக்குச் செலுத்தாமல் இருந்தனர் என்று பவுல் நமக்கு நினைப்பூட்டகிறார். (ரோ.1:21). பிரேசில் நாட்டிற்குச் சென்ற மிஷனெரி ஒருவர், இரண்டு பழங்குடி மக்களின் மொழிகளிலே ‘நன்றி” என்ற சொல்லுக்கு இணையான சொல் இல்லாததைக் கண்டுபிடித்தார். அவர்களுக்கு ஒருவர் நன்மை செய்யும்போது, உடனே அவர்கள் ‘இதைத்தான் நான் விரும்பினேன்” என்றோ ‘இது எனக்கு மிகவும் பயனுள்ளது” என்றோ கூறுவார்கள். மற்றொரு மிஷனரி வடஆபிரிக்கா சென்று அம்மக்களிடையே சேவை புரிந்தார். ஆயின் அதற்காக அந்நாட்டு மக்கள் அவருக்கு நன்றி செலுத்தவில்லை. தேவனிடத்திலிருந்து அதற்குரிய புகழ்ச்சியை அவர் அடைந்துகொள்வார். ஆகவே அதற்கான சந்தர்ப்பத்தை அவருக்குத் தாங்கள் தருவதாகவே எண்ணினர். அவர்களுக்கு அந்த மிஷனெரி நன்மை செய்ததன் மூலம், தேவனிடத்திலிருந்து அவர் சகாயத்தை அடைவார் என்றும், அதன் காரணமாக அவரே நன்றியுடையவராக இருக்க வேண்டுமென்றும் அந்நாட்டு மக்கள் நினைத்தனர்.

எல்லா சமுதாயத்திலும் நன்றியற்ற நிலைமை நிலவுகிறது. வானொலி ஒன்றில் ‘வேலைவாய்ப்பு நிகழ்ச்சி” ஒன்று நடத்தப்பட்டது. அதன் மூலம் 2500 பேருக்கு வேலை கிடைத்தது. ஆனால் அவர்களில் பத்துப்பேர் மட்டுமே அந்த வானொலி அலுவலகத்திற்கு நன்றி செலுத்தினர்.

ஐம்பது ஆண்டுகள் தன் வாழ்க்கையை ஊற்றி ஒரு பள்ளி ஆசிரியை அயராது உழைத்தார். ஐம்பது வகுப்புக்களுக்கு ஆசிரியையாக இருந்த அந்த அம்மையார் தனது எண்பதாவது வயதில் ஒரு முன்னாள் மாணவனிடத்திலிருந்து ஒரு மடலைப் பெற்றார். அந்த ஆசிரியை செய்த பணியால் தான் பெற்ற நன்மையை விவரித்து நன்றிகூறி அம்மடலை அவர் எழுதியிருந்தார். தன் வாழ்நாள் முழுவதிலும் அந்த ஆசிரியை பெற்ற நன்றிமடல் அது ஒன்றுதான்.

செய்நன்றி மறத்தலை அனுபவிப்பது நமக்கு நல்லது என்றும், அதன் வாயிலாக கர்த்தரின் அனுபவத்தில் ஓரளவு பிரதிபலிப்பைப் பெறுவோம் என்றும் ஏற்கனவே நாம் கூறியிருந்தோம். இது பயனுள்ள அனுபவமாக இருக்கிறது என்பதற்கு மற்மொரு காரணம் யாதெனில் நாம் ஏன் நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துவதேயாம். அவ்வப்போது நம்முடைய நன்றிபாராட்டுதலை, வேண்டுதல் மிஞ்சிவிடுகிறது. கர்த்தரிடத்திலிருந்து நாம் பெறும் நற்பேறுகள், நமக்குரியவை என்று உரிமை பாராட்டுகிறோம். விருந்தோம்பல், அறிவுரை, பயணவசதிகள், தேவைகள், சந்திக்கப்படுதல் இன்னும் பற்பல நன்மைகளைப் பிறரிடம் பெற்றும் அவர்களுக்கு நாம் நன்றி பாராட்டாதிருக்கிறோம். உண்மையில் இவை யாவும் நமக்குரியவைகளே என்று இந்த நன்மைகளை எதிர்பார்க்கிறோம்.

நன்றிகூறுவதற்குத் தகுந்த காரணங்களை உடையவர்களாயிருந்தும் அதை வெளிப்படுத்துவதற்குச் சிலரே உள்ளம் நிறைந்தவர்களாயிருக்கின்றனர் என்பதை எப்போதும் நினைவுபடுத்தும் வகையில் பத்துத் தொழுநோயாளிகளைக் குறித்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. அந்த ஒரு சிலராக நாம் இருப்போமா?

18. September

»Sind nicht die Zehn gereinigt worden? Wo sind die Neun?« Lukas 17,17

Der Herr Jesus hatte zehn Leprakranke geheilt, aber nur einer kehrte zu Ihm zurück, um Ihm zu danken, und das war ausgerechnet ein verachteter Samariter.

Es ist eine wertvolle Lebenserfahrung für uns, wenn wir Undankbarkeit begegnen, denn nur dann können wir in kleinem Ausmaß den Kummer Gottes nachempfinden. Wenn wir großzügig schenken und keinerlei Anerkennung dafür erhalten, dann können wir eher ermessen, wie es Gott zumute ist, der Seinen geliebten Sohn für eine undankbare Welt gab. Wenn wir uns in rastlosem Dienst für andere verausgaben, dann sind wir in Gemeinschaft mit Gott, der den Platz eines Sklaven einnahm, um einer undankbaren Menschheit zu dienen.

Undankbarkeit ist einer der wenig liebenswürdigen Charakterzüge des gefallenen Menschen. Paulus erinnert uns daran, dass die heidnische Welt zwar Gott kannte, aber Ihn nicht als Gott verehrte und Ihm auch keinen Dank darbrachte (siehe Römer 1,21). Ein Missionar in Brasilien entdeckte zwei Indianerstämme, die kein Wort für »Danke« kannten. Wenn man ihnen eine Freundlichkeit erwies, sagten sie einfach »Genau das wollte ich« oder »Das wird mir nützlich sein«. Ein anderer Missionar, der in Nordafrika arbeitete, stellte fest, dass diejenigen, denen er einen Dienst erwies, ihm niemals ihren Dank ausdrückten, weil sie meinten, sie gäben ihm doch nur eine Gelegenheit, bei Gott Verdienste zu erlangen. Sie erwarteten, dass vielmehr er, der
Missionar, ihnen dankbar wäre, weil er durch die Freundlichkeit, die er ihnen zeigte, doch selber Gunst bei Gott erwarb.

Undankbarkeit durchdringt die ganze Gesellschaft. Ein Radioprogramm in den USA, das sich »Arbeitsvermittlung im Rundfunk« nannte, brachte es fertig, für 2500 Leute eine Arbeitsstelle zu finden. Doch der Ansager berichtete später, dass nur ganze 10 davon sich die Zeit nahmen, ihm dafür zu danken.

Eine Lehrerin, die mit Hingabe ihre Arbeit tat, hatte in ihrem Leben 50 Schulklassen unterrichtet. Als sie 80 Jahre alt wurde, bekam sie einen Brief von einem ihrer früheren Schüler, der ihr schrieb, wie sehr er ihre damalige Hilfe zu schätzen wusste. Sie hatte 50 Jahre lang unterrichtet, doch das war der einzige Dankesbrief, den sie jemals bekam.

Wir haben gesagt, es ist gut für uns, wenn wir Undankbarkeit erfahren, weil uns das einen schwachen Abglanz davon vermittelt, was der Herr die ganze Zeit über empfindet. Undankbarkeit ist auch deshalb eine wertvolle Erfahrung, weil wir daran merken, wie wichtig es ist, dass wir selbst dankbar sind. Allzu oft nehmen unsere Bitten an Gott mehr Raum ein als unsere Dankgebete. Wir nehmen Seinen Segen als selbstverständlich hin. Und allzu oft vergessen wir, einem anderen Menschen Anerkennung auszusprechen für seine Gastfreundschaft oder seinen Rat, für das Mitnehmen im Auto, für seine Fürsorge und zahllose andere Freundlichkeiten. Ja, wir erwarten solche Dienste schließlich sogar, so als ob wir sie verdient hätten.

Die Geschichte von den zehn Aussätzigen sollte uns immer daran erinnern, dass wohl viele Menschen sehr viel Grund zum Danken haben, aber nur wenige sich ein Herz fassen und ihren Dank auch äußern. Ob wir wohl wirklich zu diesen wenigen gehören?