September

சிறந்த சுதந்திரம்

September 9

“A good man leaveth an inheritance to his children’s children.” (Prov. 13:22)

When we read this verse, we should not jump to the conclusion that a financial inheritance is intended. It is far more likely that the Spirit of God is referring to a spiritual heritage. A person could have been brought up by parents who were poor, yet godly; and that person might be everlastingly grateful for the memory of a mother and father who read the Bible daily, prayed together as a family, and raised him in the fear and admonition of the Lord—even though they didn’t leave him a cent when they died. A spiritual inheritance is the best kind.

Actually a son or daughter could be ruined spiritually by inheriting a large amount of money. Sudden wealth often proves intoxicating. Few are able to manage it wisely. Few who inherit fortunes go on well for the Lord.

Another consideration is that families are often torn apart by jealousy and strife when an estate is divided. It is true that “where there’s a will, there are a lot of relatives.” Family members who have lived peacefully for years suddenly become enemies over a few bits of jewelry or china or furniture.

Oftentimes Christian parents leave their wealth to unsaved children, to relatives in false religions or to ungrateful children, when that money could have been better used for the spread of the Gospel.

Sometimes this business of leaving money to children is a veiled form of selfishness. The parents actually want to hold onto it for themselves as long as they can. They know that death will one day tear it from their grip, so they then follow the tradition of bequeathing it to their children.

But no will has yet been devised that cannot be broken or eroded by legal fees. A parent can’t be sure that his wishes will be carried out after he is gone.

Therefore the best policy is to give generously to the work of the Lord while one is still alive. As the saying goes, “Do your giving while you’re living; then you’ll know where it’s going.”

And the best way to make out a will is to say, “Being of sound mind I put my money to work for God while I was alive. I leave my children the heritage of a Christian background, a home where Christ was honored, and where God’s Word was revered. I commend them to God and to the word of His grace, which is able to build them up and give them an inheritance among all those who are sanctified.”

செப்டெம்பர் 9

நல்லவன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்குச் சுதந்திரம் வைத்துப்போகிறான். நீதி.13:22.

சிறந்த சுதந்திரம்

இவ்வசனத்தைப் படித்தவுடன், தன்னுடைய சந்ததிக்காக ஒருவன் செல்வத்தைச் சேர்க்க வேண்டும், அது விரும்படத்தக்கது என்னும் முடிவிற்கு வந்துவிடக்கூடாது. இங்கு தேவஆவியானவர், ஆவிக்குரிய சுதந்தரத்தையே குறிப்பிடுகிறார் என்று அறியக்கடவோம். ஏழ்மையான பெற்றோர்களால் ஒருவன் வளர்க்கப்பட்டிருக்கக் கூடும். இருந்த போதிலும் அவர்கள் தெய்வபக்தி நிறைந்தவர்களாக இருப்பர். அனுதினமும் வேதத்தை வாசிக்கிறவர்களாகவும், குடும்பமாக ஜெபிக்கிறவர்களாகவும், கர்த்தருக்குப் பயந்து அவரால் எச்சரிக்கப்பட்டவனாக அவனை வளர்த்தவர்களாகவும், என்றாலும் ஒரு செண்ட் நிலத்தையாகிலும் அவனுக்கென்று சேர்த்து வைக்காமல் இறந்து போயிருப்பர். ஆனால் அப்படிப்பட்ட தாய் தந்தையரை நினைத்து அவன் என்றென்றும் நன்றியறிதலோடு நடந்து கொள்ளவேண்டும். ஆவிக்குரிய சுதந்தரமே பெரிதான செல்வமாகும்.

உண்மையில் அதிகமான பணத்தைச் சேர்த்து வைப்பதால் ஒரு மகனோ, மகளோ, ஆவிக்குரிய வீழ்ச்சியை அடையக்கூடிய நிலையே ஏற்படக்கூடும். திடீரென்று தன்னை வந்து சேர்கிற பணத்தால் ஒருவனுக்கு மட்டுமீறிய வெறி உண்டாகக் கூடும். அச்செல்வத்தைத் தக்கவாறு பயன்படுத்தவும் அவருக்குத் தெரியவில்லை. அவர் கர்த்தருக்காக முறையாக வாழ்கிறதுமில்லை.

மற்றொன்றும் சிந்திக்கப்பட வேண்டியதாக இருக்கிறது. பொருட்செல்வம் பங்கிடப்படுகிறபோது உண்டாகிற பொறாமையினாலும், சண்டையினாலும், குடும்பங்கள் சிதறுண்டு போகின்றன. ‘எங்கே சாசனம் எழுதப்பட்டிருக்கிறதோ, அங்கே பல உறவினர்கள் இருக்கின்றார்கள்” என்பது உண்மை தான். பல ஆண்டுகள் மகிழ்ச்சியோடு வாழ்ந்த குடும்பத்தினர், சில நகைகள் மற்றும அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றின் நிமித்தம் எதிரிகளாக மாறிவிடுகின்றனர்.

இரட்சிக்கப்படாத நன்றியற்ற பிள்ளைகளுக்காகவும், தவறான சமயக்கொள்கையைப் பின்பற்றும் உறவினர்களுக்காகவும் பெரும் சொத்துக்களைக் கிறிஸ்தவப் பெற்றோர்கள் விட்டுச் செல்வதை அவ்வவ்போது காண்கிறோம். நற்செய்திப் பணிக்கென அப்பணத்தைச் சிறந்த முறையில் செலவு செய்திருக்கலாம்.

சிலவேளைகளில், பிள்ளைகளுக்காகச் செல்வத்தைச் சேர்த்து வைப்பது சுயநலத்தின் மாறுவேடமாக இருக்கிறது. உண்மையில் எவ்வளவு காலம் அச்செல்வத்தைத் தங்களுக்கென வைத்துக்கொள்ள முடியுமோ அவ்வளவு காலம் அதைப் பெற்றோர்களே வைத்துக் கொள்ள விரும்புவார்கள். ஒரு நாள் மரணமானது அதை அவர்களிடமிருந்து பலவந்தமாய்ப் பற்றிக் கொள்ளும், பின்னர் சம்பிரதாயத்தின்படி பிள்ளைகளை அச்செல்வம் சென்று சேரும் என்பதை அவர்கள் அறிவார்கள்.

ஆனாலும், மீறப்படாத வகையிலும், சட்ட செலவுகள் இன்றியும் நிறைவேற்றக் கூடியபடி எந்த மரண சாசனமும் எழுதி வைக்கப்படவில்லை. தனது மரணத்துக்குப் பிறகு எல்லாம் தன்விருப்பப்படி நடக்குமா என்று ஒரு தகப்பனால் உறுதியாக நம்ப முடியாது.

ஆகவே, தான் உயிரோடிருக்கும்போதே, கர்த்தருடைய ஊழியத்திற்காக ஒருவர் தாராளமாகக் கொடுப்பதே சிறந்த கொள்கையாகும். ‘நீங்கள் வாழும்போதே கொடுங்கள், அப்பொழுது அது எங்கே போகிறதென்று அறிவீர்கள்.” என்று பழமொழி ஒன்று கூறுகிறதே.

சிறந்ததொரு மரணசாசனம் எவ்வாறு எழுதுவது எனில், ‘நல்ல மனநிலையில் நான் உயிரோடு இருக்கும்போதே என்னுடைய பணத்தையெல்லாம் தேவனுடைய ஊழியத்திற்காகச் செலவு செய்து விட்டேன். என்னுடைய பிள்ளைகளுக்காக கிறிஸ்தவப் பாரம்பரியத்தை விட்டுச் செல்கிறேன். கிறிஸ்து கனப்படுத்துகிற வீடாகவும், திருமறை மதிக்கப்படுகிற இடமாகவும் எங்கள் இல்லம் இருக்கிறது. தேவனிடத்திலும், அவருடைய வார்த்தையின் கிருபையினிடத்திலும், அவர்களை ஒப்புவிக்கிறேன். அது அவர்களுடைய வளர்ச்சிக்கு உதவும். பரிசுத்தமாக்கப்பட்டவர்களிடையே அவர்களுக்கு அது சுதந்தரத்தைக் கொடுக்கும்” என்பதேயாகும்.

9. September

»Der Gute vererbt auf Kindeskinder.« Sprüche 13,22

Wenn wir diesen Vers lesen, sollten wir nicht gleich den Schluss daraus ziehen, dass es hier um ein finanzielles Erbe geht. Es ist viel wahrscheinlicher, dass der Geist Gottes ein geistliches Erbe meint. Ein Mensch kann von Eltern erzogen worden sein, die zwar arm, aber gottesfürchtig waren; und dieser Mensch ist vielleicht in Ewigkeit dankbar für die Erinnerung an eine Mutter und einen Vater, die täglich in der Bibel lasen, mit der Familie zusammen beteten und ihn in der Furcht und Ermahnung des Herrn erzogen haben – selbst wenn sie ihm bei ihrem Tod keinen Cent
hinterlassen konnten. Ein geistliches Erbe ist immer noch das beste.

Ja, Sohn oder Tochter können sogar geistlich ruiniert werden, wenn sie eine große Geldsumme erben. Plötzlicher Reichtum erweist sich oft als geradezu vergiftend. Nur wenige sind fähig, weise damit umzugehen. Nur wenige, die ein ganzes Vermögen erben, führen auch weiterhin ein Leben, das Gott gefällt.

Eine andere Überlegung ist die, dass Familien oft durch Eifersucht und Zank entzweit werden, wenn ein Besitz aufgeteilt wird. Es ist schon wahr: »Wo ein Testament ist, da gibt es auch viele Verwandte.« Mitglieder einer Familie, die jahrelang in Frieden miteinander gelebt haben, werden plötzlich zu Feinden wegen ein paar Schmuckstücken oder einem Porzellan-Service oder einigen Möbeln.

Oft hinterlassen christliche Eltern ihren Reichtum ungläubigen Kindern oder Verwandten, die einer falschen Religion angehören, oder auch sehr undankbaren Kindern, wo doch das Geld zur Ausbreitung des Evangeliums viel besser hätte verwendet werden können.

Manchmal ist auch der Wunsch, seinen Kindern Geld zu hinterlassen, eine verschleierte Form von Egoismus. In Wirklichkeit sind es die Eltern, die ihren Besitz solange es geht festhalten wollen. Sie wissen wohl, dass der Tod ihnen eines Tages alles aus den Händen nehmen wird, deshalb folgen sie dann der Tradition, es wenigstens ihren Kindern zu vermachen.

Aber es ist noch kein Testament erdacht worden, das nicht durch ganz legale Schachzüge doch noch gebrochen oder unterhöhlt werden könnte. Ein Vater kann niemals sicher sein, dass seine Wünsche auch ausgeführt werden, wenn er einmal nicht mehr da ist.

Daher besteht das beste Vorgehen darin, dass man großzügig für die Arbeit des Herrn gibt, während man noch am Leben ist. Es gibt ein Sprichwort, das heißt: »Gib deine Spenden, solange du lebst; dann weißt du auch, was daraus wird.«

Und die beste Art von Testament ist die folgende: »Im Vollbesitz meiner geistigen Kräfte habe ich mein Geld für die Arbeit Gottes eingesetzt, solange ich noch am Leben war. Ich vermache meinen Kindern das Erbe eines christlichen Hintergrundes, eines Elternhauses, in dem Christus geehrt wurde und wo man Gottes Wort fürchtete. Ich befehle sie Gott an und dem Wort Seiner Gnade, das sie aufbauen kann und ihnen im Himmel ein Erbe gemeinsam mit allen Heiligen schenken wird.«