September

தேவ பிள்ளைகளாகுதல்

September 5

“He was in the world, and the world was made by him, and the world knew him not. He came unto his own, and his own received him not. But as many as received him, to them gave he power to become the sons of God, even to them that believe on his name.” (John 1:10-12)

He was in the world. It was incredible grace that the Lord of life and glory would ever come to live on this tiny planet. It would not be newsworthy to say of anyone else, “He was in the world.” That is something over which man has no control. But for Him, it was a deliberate choice, an act of wonderful compassion.

and the world was made by Him. The wonder increases! The One who was in the world is the One who made the world. He who fills the universe compressed Himself into the body of a baby, a youth, a man, and in that body dwelt all the fullness of the Godhead.

and the world knew him not. This was a case of inexcusable ignorance. The creatures should have recognized their Creator. Sinners should have been struck by His sinlessness. They should have known by His words and works that He was more than just a man.

He came unto his own. Everything in the world belonged to Him. As Creator, He had inalienable rights to it all. He did not trespass on someone else’s property.

and his own received him not. Here was the ultimate insult. The Jewish people rejected Him. He had all the credentials of the Messiah, but they didn’t want Him to rule over them.

But as many as received him. An unrestricted invitation goes out. It is for Jews and Gentiles alike. The sole condition is that they must receive Him.

to them gave he power to become the sons of God. What an undeserved honor—that rebel sinners should become children of God through a miracle of love and grace!

even to them that believe on his name. The terms could not be simpler. Authority to become children of God is granted to all those who, by a definite act of faith, receive Jesus Christ as Lord and Savior.

So there is sad news and glad news. First the sad news: “the world knew him not” and “his own received him not.” Then the glad news: “But as many as received him, to them gave he power to become the sons of God, even to them that believe on his name.” If you have not already received him, why not believe on His Name today?

செப்டெம்பர் 5

அவர் உலகத்தில் இருந்தார். உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று. உலகமோ அவரை அறியவில்லை. அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார். அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். யோவான் 1:10-12.

தேவ பிள்ளைகளாகுதல்

அவர் உலகத்தில் இருந்தார். ஜீவனுக்கும் மகிமைக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இச்சிறிய சிகரத்தில் வாழ்வதற்காக வந்தார் என்பது நம்புதற்குரிய கிருபையாகும். ‘அவர் உலகத்தில் இருந்தார்.” என்று வேறொருவரைக் குறித்துச் சொல்வது எவ்விதத்திலும் ஏற்புடைய கூற்றாகாது. எந்த மனிதனும் இந்த உலகத்தின் மீது அதிகாரம் உடையவனில்லை. அவர் இவ்வுலகிற்கு வந்தது, தானாக மனம் உவந்து செய்த தெரிந்தெடுப்பாகும், வியத்தகுமுறையில் அவர் காண்பித்த கருணையின் செயலாகும்.

உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று. வியப்பு மேலிடுகிறது! இந்த உலகத்தில் இருந்தவர், இந்த உலகினைப் படைத்தவர் ஆவர். இப்பிரபஞ்சத்தை நிறைத்திருக்கிறவர், ஒரு சிறு குழந்தையாக, ஒரு இளைஞராக, ஒரு மனிதனாக, ஒரு சரீரத்திற்குள் தம்மை அடக்கிக் கொண்டார். தேவத்துவத்தின் நிறைவு அச்சரீரத்தில் வாசமாயிருந்தது. உலகமோ அவரை அறியவில்லை. இது பொறுத்துக்கொள்ளக் கூடாத அறியாமையாகும். படைப்புகள் படைப்பாளரை அறிந்திருக்க வேண்டும். பாவிகள், அவருடைய பாவமற்ற தன்மையைக் கண்டு அதிர்ந்திருக்க வேண்டும். அவருடைய சொற்களாலும், செயல்களாலும், அவர் மனிதர்களைக் காட்டிலும் மேலானவர் என்பதை அறிந்திருக்க வேண்டும்.

அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார். இவ்வுலகில் உள்ள அனைத்தும் அவருடைய உடைமையாகும். படைப்பாளர் என்னும் அடிப்படையில், மற்றவர்களுக்கு அதைக் கொடுக்கக் கூடாதபடி இவ்வுலகின் உரிமையாளராக இருக்கிறார். வேறொருவருடைய சொத்தில் அவர் அனுமதியின்றிப் பிரவேசிக்கவில்லை.

அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. இதுவே அவருக்குச் செய்யப்பட்ட முடிவான அவமானச் செயலாகும். யூதர்கள் அவரை ஏற்க மறுத்தனர். மேசியாவுக்குரிய அனைத்துத் தகுதிகளையும் அவர் நிறைவாகக் கொண்டிருந்தார். எனினும் அவர்களை ஆளும்படியாக அவரை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ. வரையறையற்ற அழைப்பு இங்கே கொடுக்கப்படுகிறது. யூதர்களுக்கும் பிற இனத்தவர்களுக்கும் ஒரே விதமாக இவ்வழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அவரை எற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஒன்றே நிபந்தனையாகும்.

அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். தகுதியற்றவர்களுக்குக் கிடைத்த மேன்மை எத்தனை பெரியது. அன்பும் கிருபையும் நிறைந்த அற்புதச் செயலால், கலகக்காரர்களாகிய பாவிகள் தேவனுடைய பிள்ளைகளாக மாறுகின்றனர்.

அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய். இதைக் காட்டிலும் எளிமையானது வேறு ஒன்றுமில்லை. விசுவாசம் என்னும் குறிப்பிட்ட செயலின்படி, இயேசு கிறிஸ்துவைக் கர்த்தரும் இரட்சகருமாக ஏற்றுக்கொள்வதால் தேவனுடைய பிள்ளைகளாகும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

இங்கே சோகச்செய்தியும், மகிழ்ச்சியின் செய்தியும் உள்ளன. முதலாவது சோகச்செய்தி: ‘உலகமோ அவரை அறியவில்லை, அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.” பிறகு மகிழ்ச்சியின் செய்தி. ‘அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்”. நீங்கள் இதுவரை அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், இன்று அவர் நாமத்தின்மேல் ஏன் விசுவாசம் கொள்ளக்கூடாது?

தேவனால் உருவாக்கப்பட்ட வெற்றிடம் ஒவ்வொரு மனிதனுடைய
வாழ்க்கையிலும் உள்ளது. அதை தேவன் மட்டுமே நிரப்ப முடியும்
சிலுவையின் சுவிசேஷ செய்தியே அவ்வெற்றிடத்தை நிரப்பும்.

5. September

»Er war in der Welt, und die Welt wurde durch ihn, und die Welt kannte ihn nicht. Er kam in das Seine, und die Seinen nahmen ihn nicht an; so viele ihn aber aufnahmen, denen gab er das Recht, Kinder Gottes zu werden, denen, die an seinen Namen glauben.« Johannes 1,10-12

»Er war in der Welt.« Es war eine unglaubliche Gnade, dass der Herr des Lebens und der Herrlichkeit auf diesen winzigen Planeten kam und hier leben wollte. Es wäre nicht der Erwähnung wert, wenn man von irgendjemand anderem sagen würde: »Er war in der Welt.« Das ist ja etwas, was der Mensch selbst nicht beeinflussen kann. Aber für den Sohn Gottes war es eine bewusste Entscheidung, ein Akt wunderbaren Mitgefühls.

»… und die Welt wurde durch ihn.« Das Wunder wird noch größer! Der Eine und Einzige, der in der Welt war, ist auch der Eine und Einzige, der die Welt geschaffen hat. Er, der das Universum ausfüllt, machte sich ganz klein und wurde zu einem Kind, einem Jugendlichen, einem Mann, und in Seinem Leib wohnte die ganze Fülle der Gottheit.

»… und die Welt kannte ihn nicht.« Das war ein Fall von unentschuldbarer Unwissenheit. Die Geschöpfe hätten ihren Schöpfer eigentlich erkennen müssen. Die Sünder hätten von Seiner Sündlosigkeit geblendet sein müssen. Und sie hätten an Seinen Worten und Taten erkennen müssen, dass Er mehr war als nur ein Mensch.

»Er kam in das Seine.« Alles in dieser Welt gehörte Ihm. Als der Schöpfer hatte Er unveräußerliche Rechte auf alles. Er vergriff sich wahrlich nicht am Eigentum eines anderen.

»… und die Seinen nahmen ihn nicht an.« Hierin lag die schlimmste Beleidigung. Das Volk der Juden lehnte Ihn ab. Er hatte alle jene Vorbedingungen und Charakterzüge, die Ihn als Messias auswiesen, aber sie wollten nicht, dass Er über sie herrschte.

»So viele ihn aber aufnahmen …« Er spricht eine uneingeschränkte Einladung aus. Sie gilt für Juden und Heiden gleichermaßen. Die einzige Bedingung liegt darin, dass die Menschen Ihn aufnehmen müssen.

»… denen gab er das Recht, Kinder Gottes zu werden.« Was für eine unverdiente Ehre – dass widerspenstige Sünder Kinder Gottes werden sollen durch das Wunder der Liebe und Gnade!

»… denen, die an seinen Namen glauben.« Einfacher kann es gar nicht mehr ausgedrückt werden. Das Recht, Kinder Gottes zu werden, wird allen denen gegeben, die Jesus Christus durch einen bewussten Akt des Glaubens als ihren Herrn und Heiland aufnehmen.

Also liegt in diesen Versen eine schlimme und eine gute Nachricht. Zuerst die traurige: »Die Welt erkannte ihn nicht.« Und: »Die Seinen nahmen ihn nicht an.« Doch dann die gute: »So viele ihn aber aufnahmen, denen gab er das Recht, Kinder Gottes zu werden; denen, die an seinen Namen glauben.« Wenn du Ihn noch nicht in dein Leben aufgenommen hast, willst du dann nicht heute noch anfangen, an Seinen Namen zu glauben?