September

கிறிஸ்து அடைந்த வெற்றி

September 4

“Then I restored that which I took not away.” (Psa. 69:4)

The speaker in Psalm 69 is the Lord Jesus. In verse 4 He is saying that in His glorious work of redemption, He made restitution to God for losses that had been caused by man’s sin. No doubt He is picturing Himself as the true trespass offering.

When a Jew stole from another Jew, the law of the trespass offering required him to repay the amount that was stolen and to add one-fifth of that value.

Now God was robbed through man’s sin. He was robbed of service, worship, obedience and glory. He was robbed of service because man turned to serve self, sin and Satan. He was robbed of worship because man bowed down to carved images. He was robbed of obedience because man rejected God’s authority. He was robbed of glory because man failed to give Him the honor that was His due.

The Lord Jesus came to restore what He did not take away.

Aside He threw His most divine array,
And veiled His Godhead in a robe of clay,
And in that garb did wondrous love display,
Restoring what He never took away.

He not only restored what had been stolen through man’s sin but added more. For God has received more glory through the finished work of Christ than He lost through the sin of Adam. “He lost creatures through sin, He gained sons through grace.” We may go so far as to say that God has been more glorified through the Savior’s work than He ever could have been even in an eternity of unfallen Adams.

Perhaps we have here an answer to the question, “Why did God allow sin to enter?” We know that God could have made men without the power of free moral choice. But He chose to make them with the ability to love and worship Him of their own volition. And that, of course, means that they also had the ability to disobey Him, to reject Him, to turn away from Him. Man chose to disobey Him, bringing in a great holocaust of sin. But God is not defeated by the sin of His creatures. In His death, burial, resurrection and ascension, the Lord Jesus triumphed over sin, hell and Satan. Through His work, God has received greater glory; and redeemed man has received richer blessings than if sin had never entered this world of ours.

செப்டெம்பர் 4

நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடுக்க வேண்டியதாயிற்று. சங்கீதம் 69:4

கிறிஸ்து அடைந்த வெற்றி

அறுபத்தொன்பதாம் சங்கீதத்தைக் கூறியவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே ஆவார். மனிதனுடைய பாவத்தின் மூலமாக தேவனுக்கு ஏற்பட்ட இழப்புகளை, தம்முடைய மகிமை நிறைந்த மீட்பின் செயலினாலே ஈடு செய்ததாக அவர் நான்காவது வசனத்தில் கூறியிருக்கிறார். தம்மை அவர் இங்கு உண்மையான குற்ற நிவாரண பலியாகச் சித்தரிக்கிறார்.

ஒரு யூதன் மற்றொரு யூதனிடம் களவாடினால், குற்ற நிவாரண பலியின் சட்டத்தின்படி தான் களவாடிய பணத்தையும் அதில் ஐந்தில் ஓரு பங்கையும் கூட்டிச் செலுத்தவேண்டும்.

மனிதனுடைய பாவத்தினால் தேவன் கொள்ளையிடப்பட்டிருக்கிறார். அவருக்கு சேவைபுரிதல், ஆராதித்தல், கீழ்படிதல், மகிமை செலுத்துதல் ஆகியவை அவரிடத்திலிருந்து கொள்ளையிடப்பட்டுள்ளன. மனிதன் தனக்கும், பாவத்திற்கும், சாத்தானுக்கும், இப்பொழுது பணிபுரிகிற காரணத்தால் அவருக்குச் செய்ய வேண்டிய சேவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. செதுக்கிய சிலைகளுக்கு முன்னர் மனிதன் தலைவணங்குவதால் தேவனுக்குச் செலுத்தவேண்டிய ஆராதனைகள் கைவிடப்பட்டன. அதன்மூலம் அவருக்குக் கீழ்படிதலைக் களவாடிவிட்டான். அவருக்குக் கொடுக்க வேண்டிய கனத்தை மனிதன் செலுத்தத் தவறியதால் தேவனுடைய மகிமை களவாடப்பட்டுள்ளது.

தாம் எடுத்துக்கொள்ளாததை ஈடுசெய்ய இயேசு கிறிஸ்து வந்தார். “தெய்வீக அணிகலனைக் களைந்து எறிந்தவராக, மண்ணை அணிந்து, தேவ மகிமையை மறைத்துக் கொண்டார். இவ்வெளிய ஆடையில் அதிசய அன்பைக்காட்டி தாம் எடுக்காததை ஈடுசெய்தார். ”

மனிதனுடைய பாவத்தினால் களவுசெய்யப்பட்டதை அவா திரும்பக் கொடுத்தது மட்டுமின்றி, அதற்கு மேலாகவும் கொடுத்தார். ஆதாமின் பாவத்தினால் தேவன் இழந்ததிற்கு மேலான மகிமையை, கிறிஸ்துவின் நிறைவேற்றப்பட்ட செயலினால் தேவன் அடைந்தார். ‘மனிதனுடைய பாவத்தினால் படைப்புகளை தேவன் இழந்தார். கிருபையினாலே குமாரர்களைப் பெற்றார்.” வீழ்ந்து போகாத ஆதாம்களினாலே நித்தியத்திலே அவர் அடைந்திருக்கக் கூடிய மகிமையை காட்டிலும், இரட்சகரின் செயலினால் அதிக மகிமையை அடைந்தார் என்று சொல்லுமளவிற்கு இதனை விவரிக்கலாம்.

‘ பாவத்தைத் தேவன் அனுமதித்ததன் காரணம் யாது? என்னும் கேள்விக்கு இங்கே விடையைக் காண்கிறோம். ஒழுக்க ரீதியாக எதைத் தெரிந்து கொள்வது என்று முடிவெடுக்கும் அதிகாரமின்றி மனிதனை தேவன் படைத்திருக்கலாம் என்று நாமறிவோம். ஆனால் தானாக விருப்பம் மேலிட்டு அன்பு பாராட்டுகிறவனாகவும், தேவனைத் தொழுது கொள்கிறவனாகவும், மனிதன் விளங்கும்படி அவன் படைக்கப்பட்டான். அவ்வாறாயின் அவன் தேவனுக்குக் கீழ்படியாதவனாகவும் இருக்கலாம். அவரை ஏற்றுக்கொள்ள மறுக்கலாம், அவரை விட்டு விலகிச்செல்லலாம் என்பதே அதன் பொருளாக இருக்கிறது. மனிதனோ கீழப்படியவில்லை. அதன் காரணமாக பெரும் அழிவாகிய பாவத்தைக் கொண்டு வந்தான். ஆனால், தனது படைப்பின் பாவத்தினால் தேவன் தோற்றுப் போகவில்லை. தமது மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல், விண்ணுலகு ஏவுதல், ஆகிய செயல்களின் மூலமாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பாவத்தையும், நரகத்தையும், சாத்தானையும், வெற்றி கொண்டார். அவருடைய செயலின் மூலம், தேவன் மாபெரும் மகிமையை அடைந்தார். நமது உலகில் பாவம் நுழைந்திராவிடில் என்ன ஆசீர்வாதத்தை மனிதன் பெற்றிருப்பானோ அதைக் காட்டிலும் சிறந்த ஆசீர்வாதத்தை இயேசு கிறிஸ்துவின் செயலினால் தற்பொழுது மனிதன் அடைந்திருக்கிறான்.

4. September

»Was ich nicht geraubt habe, muss ich alsdann erstatten.« Psalm 69,5

Der Sprecher in Psalm 69 ist der Herr Jesus. Im 5. Vers sagt Er, dass Er in Seinem herrlichen Werk der Erlösung Gott die Wiedergutmachung anbietet für die Verluste, die durch die Sünde des Menschen entstanden sind. Ohne Zweifel sieht Er sich hier als das wahre Sündopfer.

Wenn ein Jude einem anderen Juden etwas gestohlen hatte, verlangte das Gesetz des Sündopfers von ihm, dem Geschädigten die Summe zurückzuzahlen, die er genommen hatte, und noch ein Fünftel des Wertes hinzuzufügen.

Nun wurde auch Gott bestohlen durch die Sünde des Menschen. Man hat Ihm den Dienst, die Anbetung, den Gehorsam und die Ehre geraubt. Den Dienst, weil der Mensch sich von Ihm abgewendet und sich selbst, der Sünde und dem Satan gedient hat. Die Anbetung, weil der Mensch sich vor selbst gemachten Götzenbildern verneigt hat. Den Gehorsam, weil der Mensch die Autorität Gottes abgelehnt hat. Die Ehre, weil der Mensch Gott nicht die Ehre gegeben hat, die Ihm zukam.

Aber der Herr Jesus kam, um zurückzuerstatten, was Er nicht geraubt hat.

Er tat die Pracht der Gottheit ganz beiseite
Und kleidete irdisch sich in Erd’ und Staub.
So wurde sichtbar Seine große Liebe,
Die Gott zurückgibt, was wir Ihm geraubt.

Aber Er gab nicht nur wieder zurück, was durch die Sünde des Menschen gestohlen worden war, sondern Er fügte auch noch etwas hinzu. Denn Gott hat durch das vollbrachte Werk Christi mehr Ehre empfangen, als Er durch die Sünde Adams verloren hatte. »Durch die Sünde hat Er Seine Geschöpfe verloren; doch durch die Gnade hat Er Söhne gewonnen.« Wir können sogar so weit gehen, dass wir sagen: Gott ist durch das Werk des Heilandes mehr verherrlicht worden, als Er jemals in Ewigkeit durch Menschen nach der Art Adams, die aber nicht in Sünde gefallen wären, hätte verherrlicht werden können.

Vielleicht liegt hier auch die Antwort auf die Frage: »Warum hat Gott es zugelassen, dass die Sünde in die Welt kam?« Wir wissen wohl, dass Gott den Menschen ohne die Macht der freien sittlichen Entscheidung hätte erschaffen können. Aber es hat Ihm gefallen, die Menschen als Geschöpfe zu machen, die Ihn aus ihrer eigenen Willensentscheidung heraus lieben und anbeten können. Und das bedeutet natürlich auch, dass sie ebenfalls die Fähigkeit haben, Ihm ungehorsam zu sein, Ihn abzulehnen, sich von Ihm abzuwenden. Der Mensch entschied sich für den Ungehorsam und brachte so die große Katastrophe der Sünde in die Welt. Aber Gott erleidet durch die Sünde Seiner Geschöpfe keine Niederlage. Der Herr Jesus Christus hat durch Seinen
Tod, Sein Begräbnis, Seine Auferstehung und Himmelfahrt über Sünde, Hölle und Satan triumphiert. Durch Sein Werk hat Gott viel größere Herrlichkeit erlangt und der erlöste Mensch viel reicheren Segen erhalten, als wenn die Sünde niemals in unsere Welt hineingekommen wäre.