September

யூபிலி ஆண்டு

September 1

“And ye shall hallow the fiftieth year, and proclaim liberty throughout all the land unto all the inhabitants thereof: it shall be a jubilee unto you; and ye shall return every man unto his possession, and ye shall return every man unto his family.” (Lev. 25:10)

Every fiftieth year in Israel’s calendar was known as the year of jubilee. The soil was supposed to lie fallow. Land reverted to its original owner. Slaves were set free. It was a joyous time of freedom, grace, redemption and rest.

When someone bought a piece of property, he had to take into account the nearness of the year of jubilee. For instance, the land would be more valuable if forty-five years remained before the next year of jubilee. But if there was only one year left, the land would hardly be worth buying. The buyer would be able to raise only one crop.

There is a sense in which the Lord’s coming will be the year of jubilee for believers today. They will enter into the eternal rest of the Father’s house. They will be set free from the shackles of mortality, and receive their glorified bodies. And all the material things that have been entrusted to them as stewards will revert to their original owner.

We should take this into account in valuing our material possessions. We may have thousands of dollars worth of real estate, investments and bank deposits. But if the Lord should come today, they would be worth nothing to us. The closer we get to His coming, the less real value they have. This means, of course, that we should put them to work today in the advancement of the cause of Christ and in the alleviation of human need.

Just as the year of jubilee was ushered in by the blowing of a trumpet, so the Lord’s return will be announced by the sound of “the last trump.” “All this teaches us a fine lesson. If our hearts are cherishing the abiding hope of the Lord’s return, we shall set light by all earthly things. It is morally impossible that we can be in the attitude of waiting for the Son from heaven, and not be detached from this present world… One who lives in the habitual expectation of Christ’s appearing must be separated from that which will be judged and broken up when He comes… May our hearts be affected and our conduct in all things influenced by this most precious and sanctifying truth” (C. H. Mackintosh).

செப்டம்பர் 1

ஐம்பதாம் வருஷத்தைப் பரிசுத்தமாக்கி, தேசமெங்கும் அதின் குடிகளுக்கெல்லாம் விடுதலை கூறக்கடவீகள். அது உங்களுக்கு யூபிலி வருஷம். அதிலே உங்களில் ஒவ்வொருவனும் தன்தன் காணியாட்சிக்கும் தன்தன் குடும்பத்திற்கும் திரும்பிப் போகக்கடவன். லேவியராகம் 25:10.

யூபிலி ஆண்டு

இஸ்ரவேல் நாட்டின் கணக்கின்படி ஒவ்வொரு ஐம்பதாம் ஆண்டும் யூபிலி வருஷமாகும். அந்த ஆண்டில் நிலத்தில் பயிரிடக்கூடாது. நிலம் முதலில் யாருக்கு சொந்தமாக இருந்ததோ, அவரிடத்தில் அதைத் திரும்பவும் ஒப்படைக்க வேண்டும். அடிமையாயிருந்தவர்கள் விடுதலை பெறுவர். விடுதலை, கிருபை, மீட்பு, மற்றும் இளைப்பாறுதல் ஆகியவை நிறைந்த மகிழ்ச்சியின் ஆண்டாக அது திகழும்.

ஒருவர் ஒரு நிலத்தை வாங்கும் முன்பு, இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து யூபிலி ஆண்டு வரும் என்பதைக் கணக்கில் கொள்ளவேண்டும் எடுத்துக்காட்டாக, அடுத்த யூபிலி ஆண்டு வருவதற்கு இன்னும் நாற்பத்தைந்து ஆண்டுகள் இருக்கும்மென்றால் அதனுடைய மதிப்பு மிக அதிகமாக இருக்கும். ஆனால், இன்னும் ஓராண்டே இருக்குமாயின் அப்பொழுது நிலத்தை வாங்குவதில் எவ்வித பயனுமில்லை. வாங்குபவர் ஓரே ஒரு முறைதான் பயிரிடமுடியும்.

இன்றைய கிருபையின் காலகட்டத்தில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகை விசுவாசிகளாகிய நமக்கு ஒரு விதத்தில் யூபிலி ஆண்டாக விளங்கும். நிலைபேறான இளைப்பாறுதலை அடையும்படி விசுவாசிகள் அனைவரும் திருத்தந்தையின் இல்லத்திற்குள் நுழைவார்கள். சாவின் பிடியினின்று விடுதலை அடைவர். மகிமையின் சரீரத்தைப் பெறுவர். அவர்களிடத்தில் உக்கிராண வேலையைச் செய்யும் பொருட்டு ஒப்புவிக்கப்பட்ட செல்வங்கள் அனைத்தையும் திரும்ப அவற்றின் உரிமையாளரிடத்தில் ஒப்புவிக்க வேண்டும்.

நம்முடைய பொருட்செல்வத்தின் மதிப்பைக் கணக்கிடும் வேளையில் இதனை நாம் கணக்கிலெடுத்துக் கொள்ளவேண்டும். இலட்சக்கணக்கான மதிப்புடைய அசையாச் சொத்துக்கள், முதலீடுகள், வங்கி வைப்புத் தொகைகளை நாம் உடையவர்களாய் இருப்போம். ஆனால், இன்று கர்த்தருடைய வருகை நடைபெறுமானால், இவற்றுக்கு மதிப்பேதும் இல்லை. அவருடைய வருகையை நாம் நெருங்க நெருங்க, அவற்றின் மதிப்பு குறைந்து கொண்டே போகும். அவ்வாறாயின், கிறிஸ்துவின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவும், மனித குலத்தின் தேவையைச் சந்திப்பதற்காகவும், இன்று அவற்றைத் தந்தருள வேண்டும்.

எக்காளம் தொனிக்கச் செய்து யூபிலி ஆண்டு அறிவிக்கப்படுவது போன்று, கர்த்தருடைய வருகை ‘கடைசி எக்காளம்” தொனித்து அறிவிக்கப்படும். ‘இவை யாவும் நமக்கு நல்லதொரு பாடத்தைக் கற்பிக்கிறது. கர்த்தருடைய வருகையை எண்ணி, அந்த நம்பிக்கையில் நிலைகொண்டு நம் இருதயம் களிகூறுமாயின், இவ்வுலகின் பொருட்செல்வம் அனைத்தும் நமக்கு மதிப்பற்றதாக தோன்றும். இவ்வுலகின் இன்பத்திலிருந்து நம்மை விலக்கிக் கொள்ளாமல், விண்ணுலகிலிருந்து தேவகுமாரனுடைய வருகைக்குக் காத்திருக்கும் மனப்பான்மையைக் கொண்டிருப்பது கூடாத ஒன்றாகும். கிறிஸ்துவின் பிரசன்னமாகுதலை ஆவலுடன் எதிர் நோக்குவதைத் தன்னுடைய வாழ்வின் பழக்கமாகக் கொண்டிருக்கும் ஒருவர், நியாயத்தீர்ப்புக்கும், அழிவுக்கும் நியமிக்கப்பட்டிருக்கிற இவ்வுலகினின்றும் தம்மைப் பிரித்துக்கொள்வார். உன்னதமானதும், நம்மை பரிசுத்தமாக்கக் கூடியதுமான இந்த உண்மையினால் நமது இருதயங்களும், நடத்தையும், தாக்கமுற்று மாற்றம் பெறட்டும்.” (C. H. மக்கின்டோஷ்)

1. September

»Und ihr sollt das Jahr des fünfzigsten Jahres heiligen und sollt im Land Freilassung für all seine Bewohner ausrufen. Ein Jubeljahr soll es euch sein, und ihr werdet jeder wieder zu seinem Eigentum kommen und jeder zu seiner Sippe zurückkehren.« 3. Mose 25,10

Jedes fünfzigste Jahr im Kalender Israels war als das »Jubeljahr« bekannt. Das Ackerland sollte dann brachliegen. Grund und Boden kehrte an seinen ursprünglichen Besitzer zurück. Sklaven wurden freigelassen. Es war eine frohe Zeit der Freiheit, Gnade, Erlösung und Ruhe.

Wenn jemand sich ein Grundstück kaufte, musste er dabei in Betracht ziehen, welches Jahr gerade war. Das Land war beispielsweise wertvoller, wenn noch 45 Jahre bis zum nächsten Jubeljahr blieben. Aber wenn es sich nur noch um ein einziges Jahr handelte, dann lohnte sich der Kauf kaum. Denn der Käufer würde ja nur ein einziges Mal davon ernten können.

Es gibt auch eine andere Deutung dieser Textstelle, nach der das Wiederkommen des Herrn für die Christen das Jubeljahr sein wird. Dann werden sie in die ewige Ruhe im Vaterhaus eingehen. Sie werden von den Fesseln der Sterblichkeit befreit werden und einen neuen herrlichen geistlichen Leib bekommen. Und alle materiellen Dinge, die ihnen als Verwaltern anvertraut waren, werden an ihren ursprünglichen Besitzer zurückkehren.

All das sollten wir mit bedenken, wenn wir unsere materiellen Besitztümer zählen. Wir mögen vielleicht viele Tausende von Euro unser Eigen nennen in Form von Grundbesitz, Investitionen oder Bankkonten. Aber wenn der Herr heute wiederkommen würde, wären sie für uns nichts mehr wert. Je näher wir Seiner Wiederkunft kommen, desto geringer wird der wirkliche Wert dieser Reichtümer. Das heißt aber auch, dass wir sie heute noch arbeiten lassen sollen zur Förderung der Sache Christi und zur Behebung menschlicher Not.

Geradeso wie das Jubeljahr durch Trompeten angekündigt wurde, so wird die Wiederkunft des Herrn einmal durch den Klang »der letzten Posaune« eingeleitet werden. C.H. Mackintosh sagt in diesem Zusammenhang: »All das will uns etwas Gutes lehren: Wenn wir die bleibende Hoffnung auf die Wiederkunft des Herrn stets in unserem Herzen tragen, werden wir unbeschwert sein von allen irdischen Dingen. Es ist moralisch ganz unmöglich, mit Freude und Geduld den Sohn vom Himmel zu erwarten und nicht gleichzeitig zu dieser gegenwärtigen Welt einen gesunden
Abstand zu haben … Einer, der in der ständigen Erwartung lebt, dass Jesus Christus erscheinen wird, muss von allem distanziert sein, was verworfen und zerbrochen wird, sobald unser Herr kommt … Möge unser Herz zu Ihm hingezogen und unser Leben und Tun in allen Dingen von dieser kostbaren und heiligenden Wahrheit beeinflusst werden.«