October

இரட்சிப்பின் வழி

October 21

“Enter ye in at the strait gate: for wide is the gate, and broad is the way, that leadeth to destruction, and many there be which go in thereat: Because strait is the gate, and narrow is the way, which leadeth unto life, and few there be that find it.” (Matt. 7:13, 14)

When you look out at the religious world today, you see numerous religions, denominations and cults. And yet basically there are only two religions, as suggested in today’s text. On the one hand there is the wide gate and the broad, well-traveled way that leads to destruction. On the other is the strait gate and sparsely traveled, narrow way that leads to life. All religions can be classified under one or the other. The feature that distinguishes the two is this: one religion tells what man must do to earn or deserve salvation; the other tells what God has done to provide salvation for man.

The true Christian faith is unique in that it calls on men to receive eternal life as a gift by faith. All other religions tell men that they must earn their salvation by works or by character. The Gospel tells how Christ finished the work necessary for our redemption. All other systems tell men what they must do to redeem themselves. It is the difference between DOING and DONE.

The popular idea is that good people go to heaven and bad people go to hell. But the Bible teaches that there are no good people, and that the only ones who go to heaven are sinners saved by God’s grace. The Christian Gospel eliminates boasting; it tells man that there are no meritorious deeds he can do to win God’s favor because he is dead in trespasses and sins. All other religions cater to man’s pride by implying that there is something he can do to save himself or to assist in his salvation.

All false religions are “the way that seems right unto a man” but are also the way which ends in death (Prov. 14:12). Salvation by believing on the Lord Jesus Christ seems “too easy” to men but this is the way that leads to life. In false religions Christ is nothing or only something. In the true Christian faith Christ is everything.

In other religions there can be no real assurance of salvation because a person never knows whether he has done enough good works or the right kind. The believer in Christ can know he is saved because it isn’t a question of his works but rather of Christ’s work for him.

Only two religions—one of law, the other of grace. One of works, the other of faith. One of doing, the other of believing. One of trying, the other of trusting. The first leads to condemnation and death, the second to justification and life.

ஒக்டோபர் 21

இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள், கேட்டுக்குப் போகும் வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது. அதன் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது. அதைக் கண்டு பிடிக்கிறவர்கள் சிலர். மத்தேயு 7:13-14

இரட்சிப்பின் வழி

இக்காலத்தில சமய உலகினை நோக்கிப் பார்க்குங்கால், எண்ணிலடங்கா மதங்களையும், சமயப் பிரிவுகளையும், கள்ளப் போதனைக் கூட்டங்களையும் காண்கிறோம். ஆயினும் இன்றைக்கு நாம் எடுத்துக்கொண்ட வசனத்தின்படி உலகில் இரண்டே இரண்டு சமயங்கள்தான் உள்ளன. ஒருபுறம் விலாசமான வாசல் திறந்து கிடக்கிறது. பலர் அதன் வழியாகப் பயணம் செல்கின்றனர். ஆனால் அதில் செல்லும் பயணிகள் அழிவை நோக்கி செல்கின்றார்கள். மறுபுறம் இடுக்கமான வாசல், அதன் வழியாக சிலரே பயணம் செய்கின்றனர். அந்த நெருக்கமான வழி மக்களை ஜீவனுக்கு வழி நடத்துகிறது. எல்லா மதங்களையும் இந்த இரண்டில் ஒன்றாக வகைப்படுத்தலாம். இந்த இரண்டையும் வகைப்படுத்திக் காணப் பயன்படுகிற ஒரே சோதனை: இரட்சிப்பிற்கு தகுதிபெற அல்லது அதனைச் சம்பாதிக்க மனிதன் செய்யவேண்டியது என்ன என்பதைச் சொல்வது முதல் வகையாகும்.  மனிதனுடைய இரட்சிப்பிற்கு இறைவன் என்ன செய்திருக்கிறார் என்பதைச் சொல்வது இரண்டாம் வகையாகும்.

விசுவாசத்தினால் கிடைக்கும் ஈவாகிய நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளும்படி  உண்மையான கிறிஸ்தவ விசுவாசம் மனிதர்களை அழைக்கிறது. கிறிஸ்தவ விசுவாசத்தின் தனிச்சிறப்பாக இது விளங்குகிறது. தங்களுடைய நற்செயல்களினாலும், நன்னடத்தையினாலும், மனிதன் இரட்சிப்பைச் சம்பாதிக்க வேண்டும் என்று மற்ற அனைத்து மதங்களும் கூறிக்கொண்டிருக்க, நம்முடைய மீட்பிற்குத் தேவையான செயலை, கிறிஸ்து எங்ஙனம் நிறைவேற்றி இருக்கிறார் என்று நற்செய்தி விளம்புகிறது. தங்களைத் தாங்களே மீட்டுக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று மற்ற மதங்கள் கூறுகின்றன. ஒன்று செய்ய வேண்டியது என்ன என்றும், மற்றதோ செய்து முடித்தது என்ன என்றும் கூறுகின்றன. இதுவே இவற்றுக்கிடையே உள்ள வேறுபாடு ஆகும்.

நல்ல மனிதர்கள் விண்ணுலகிற்கும் கெட்ட மனிதர்கள் நரகத்திற்கும் செல்வார்கள் என்பதே பொதுவான கருத்தாக விளங்குகிறது. ஆனால் நல்லவர் ஒருவரும் இல்லையென்றும், தேவனுடைய கிருபையால் இரட்சிக்கப்பட்ட பாவிகளே விண்ணுலகிற்குச் செல்வர் என்றும் வேதம் போதிக்கிறது. மனிதன் தன்னைக் குறித்து மேன்மை பாராட்டுதலை கிறிஸ்தவ நற்செய்தி ஏற்றுக்கொள்வதில்லை. அக்கிரமத்திலும், பாவத்திலும், மனிதன் இறந்து போவானாக இருக்கின்ற காரணத்தினால், தேவனுடைய சகாயத்தைப் பெறும்படி அவன் பாராட்டுக்குரிய நற்செயல் ஏதொன்றையும் செய்ய இயலாது என்று கிறிஸ்தவம் வலியுறுத்துகிறது. தன்னைத் தான் இரட்சித்துக்கொள்ள மனிதனால் நற்கிரியையைச் செய்ய இயலும் என்றும், இரட்சிப்பைப் பெற குறைந்தது மனிதனின் துணையும் அவசியம் என்றும் மற்ற மதங்கள் அனைத்தும் கூறுகின்றன.

“மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு. அதின் முடிவோ மரண வழிகள்” (நீதி.14:12). இதுவே எல்லா மதங்களின் தவறாக இருக்கிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதால் இரட்சிப்புக் கிடைக்கும் என்பது, “மிகவும் எளிய செயலாக” மனிதனுக்குத் தோன்றுகிறது. ஆயின் அதுவே நீடிய வாழ்வினைப் பெறுவதற்கு உரிய வழியாகும். கிறிஸ்து ஒன்றுமில்லையென்றோ அல்லது அவரிடத்தில் கொஞ்சம் ஏதேனும் கிடைக்கும் என்றோ தவறான மதங்கள் போதிக்கின்றன. உண்மையான கிறிஸ்தவ விசுவாசத்தில் கிறிஸ்துவே எல்லாமாக இருக்கிறார்.

தேவையான அளவு ஒருவன் நற்கிரியையைச் செய்திருக்கிறானா, அதனைச் செய்யவேண்டிய சரியான முறையில் செய்திருக்கிறானா என்று அவனால் அறிந்து கொள்ள இயலாது. ஆகையால் அந்த மதங்கள் இரட்சிப்பின் உறுதியை அவனுக்குத் தருவதில்லை. கிறிஸ்துவுக்குள்ளான ஒரு விசுவாசி, தனது இரட்சிப்பு தனது கிரியைகளைச் சார்ந்தது இல்லை, கிறிஸ்து தனக்காக செய்து முடித்த செயலையே சார்ந்திருக்கிறது என்பதை அறிந்திருக்கிறான். ஆகவே அவன் இரட்சிப்பின் உறுதியை உடையவனாக இருக்கிறான்.

இரண்டே இரண்டு மதங்கள் மட்டும் உள்ளன. ஒன்று பிரமாணம், மற்றது கிருபை. ஒன்று  நற்செயலைச் சார்ந்திருக்கிறது. மற்றதோ விசுவாசத்தைச் சார்ந்திருக்கிறது. ஒன்று செய்யவேண்டியதாக இருக்கிறது. மற்றதோ நம்புகிறதாக இருக்கிறது. ஒன்று முயற்சி, மற்றதோ நம்பிக்கை. முதலாவது ஆக்கினையையும் மரணத்தையும் கொண்டிருக்கிறது. இரண்டாவது நீதியையும், வாழ்வையும் உடையதாயிருக்கிறது.

21. Oktober

»Geht ein durch die enge Pforte; denn weit ist die Pforte und breit der Weg, der zum Verderben führt, und viele sind, die auf ihm hineingehen. Denn eng ist die Pforte und schmal der Weg, der zum Leben führt, und wenige sind, die ihn finden.« Matthäus 7,13.14

Wenn man sich die religiöse Welt heutzutage betrachtet, dann erkennt man verwirrend viele Religionen, Bekenntnisse und Kulte. Und doch gibt es im Grunde nur zwei Religionen, wie es in unserem heutigen Bibeltext heißt. Auf der einen Seite ist das weite Tor und der breite, von vielen begangene Weg, der zur Zerstörung führt. Und auf der anderen ist das enge Tor und der schmale Weg, der nur von wenigen benutzt wird, der aber zum Leben führt. Alle Religionen können auf der einen oder anderen Seite eingeordnet werden. Das Kennzeichen, das die beiden
unterscheidet, ist allein Folgendes: Die eine Religion sagt dem Menschen, was er tun muss, um sich das Heil zu verdienen; die andere aber sagt ihm, was Gott getan hat, um das Heil des Menschen zu bewirken.

Der wahre christliche Glaube ist einzigartig, weil er den Menschen aufruft, das ewige Leben als ein Geschenk im Glauben anzunehmen. Alle anderen Religionen sagen den Menschen, dass sie ihre Errettung durch besondere Werke oder Charaktereigenschaften erst verdienen müssen. Das Evangelium erzählt, wie Jesus Christus das Werk vollendet hat, das nötig war zu unserer Erlösung. Alle anderen religiösen Systeme erzählen den Menschen, was sie tun müssen, um sich selbst zu erlösen. Zwischen beiden ist ein entscheidender Unterschied: zwischen einem Tun, das sich erst jetzt und laufend vollzieht, und einem Tun, das schon längst abgeschlossen ist.

Die allgemeine Vorstellung ist die, dass die guten Menschen in den Himmel kommen und die schlechten in die Hölle. Aber die Bibel zeigt uns, dass es eigentlich überhaupt keine guten Menschen gibt, und dass die einzigen, die in den Himmel kommen, ganz genauso Sünder sind, mit dem Unterschied, dass sie durch Gottes Gnade erlöst wurden. Das Evangelium von Jesus Christus macht uns allen Stolz und eigenes Rühmen unmöglich: Es sagt dem Menschen, dass es keinerlei verdienstvolle Taten gibt, die er tun könnte, um die Gunst Gottes zu gewinnen, weil er tot ist in seinen
Sünden und Übertretungen. Alle anderen Religionen nähren dagegen den Stolz des Menschen, indem sie ihm zu verstehen geben, dass er sehr wohl etwas tun kann, um sich selbst zu retten oder zumindest bei seiner Errettung mitzuhelfen.

Alle falschen Religionen »erscheinen einem Menschen gerade, aber zuletzt sind es Wege des Todes« (Sprüche 14,12). Das Heil, das man dadurch erlangt, dass man an den Herrn Jesus Christus glaubt, erscheint den Menschen dagegen als »zu leicht«, aber nur das ist der Weg, der zum Leben führt. In falschen Religionen gilt Christus nur als einer neben anderen. Im wahren christlichen Glauben dagegen ist Jesus Christus alles.

In anderen Religionen gibt es keine wirkliche Gewissheit des Heils, weil ein Mensch niemals sicher sein kann, ob er genug gute Werke von der rechten Art getan hat. Derjenige aber, der an Christus glaubt, kann wissen, dass er errettet ist, weil es nicht um seine eigenen Werke, sondern um das Werk Christi für ihn geht.

Es gibt nur zwei Religionen – die eine ist die des Gesetzes, die andere die der Gnade. Die eine führt zum Verderben und zum Tod, die andere zur Rechtfertigung und zum Leben.