October

கர்த்தரின் வாஞ்சையை நிறைவேற்றுதல்

October 20

“And David longed, and said, Oh that one would give me drink of the water of the well of Bethlehem, that is at the gate!” (1 Ch. 11:17)

Bethlehem was David’s home town. He knew all its streets and lanes, the market place, and the community well. But now the Philistines had a garrison in Bethlehem and David was holed up in the Cave of Adullam. When three of his men heard David yearn for a drink of water from the well at Bethlehem, they broke through the enemy lines and brought the water to him. He was so moved by this courageous act of love and devotion that he could not drink the water, but rather poured it out as a libation to the Lord.

We may think of David here as a picture of the Lord Jesus. Just as Bethlehem was David’s place, so the entire “earth is the Lord’s and the fulness thereof.” David should have been on the throne but instead he was in the Cave. Similarly our Lord should be enthroned by the world but instead He is rejected and disowned. We can liken David’s longing for water to the Savior’s thirst for the souls of men all over the world. He longs to be refreshed by seeing His creatures saved from sin, self and the world. David’s three courageous men picture those intrepid soldiers of Christ who throw aside considerations of personal comfort, convenience and safety in order to fulfill the desire of their Commander-in-chief. They carry the good news to all the world, then offer their converts to the Lord as a sacrifice of love and devotion. David’s emotional reaction suggests the Savior’s response when He sees His sheep crowding to Him from every tribe and nation. He sees of the travail of His soul and is satisfied (Isa. 53:11).

In David’s case, he didn’t have to command, coax or cajole his men. The slightest hint was all they needed; they welcomed it as an order from their commander.

What then shall we do when we know the longing of the heart of Christ for those whom He purchased with His precious blood? Must we have high pressure missionary appeals and altar calls? Is it not enough to hear Him ask, “Whom shall I send, and who will go for us?” Shall it be said of us that we are unwilling to do for our Commander what David’s men were willing to do for him? Or shall we say to Him, “Your slightest longing is my command”?

ஒக்டோபர் 20

தாவீது பெத்லகேமின் ஒலிவமுக வாசலிலிருக்கிற கிணற்றின் தண்ணீர்மேல் ஆவல் கொண்டு, என் தாகத்திற்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வருகிறவன் யார் என்றான். 1.நாளா.11:17

கர்த்தரின் வாஞ்சையை நிறைவேற்றுதல்

தாவீதின் சொந்த ஊர் பெத்லகேம். அந்த ஊரின் எல்லாத் தெருக்களையும், சந்துகளையும், கடைத்தெருக்களையும் தாவீது அறிவான். அங்குள்ள பொதுக்கிணற்றையும் அவன் அறிவான். ஆனால் தற்போது பெலிஸ்தரின் தாணை பெத்லகேமில் இருந்தது. தாவீதோ அதுல்லாம் என்னும் கன்மலையில் ஒரு குகையில் இருந்தான். தாவீது பெத்லகேம் கிணற்றின் நீரைக் குடிக்க விரும்பினான் என்பதை அவனுடைய மூன்று மனிதர்கள் கேட்டவுடன், எதிரியின் எல்லைக்குள்ளாகச் சென்று கிணற்றின் நீரைக் கொண்டு வந்தனர். அன்பும் பயபக்தியும் கூடிய இந்தத் துணிவான செயலைக் கண்ட தாவீது, தனது உள்ளத்தில் அசைக்கப்பட்டவனாக அந்நீரைக் குடிக்காமல் கர்த்தருக்கு பானபலியாக ஊற்றிவிட்டான்.

இங்கே தாவீதைக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிற்கு ஒருபடமாகக் காணலாம். பெத்லகேம் தாவீதின் சொந்த ஊர். அதுபோல ‘பூமியும் அதன் நிறைவும் கர்த்தருடையது.” தாவீது அரண்மனையில் வீற்றிருக்க வேண்டும். ஆனால் அவனோ குகையில் இருந்தான். அதுபோலவே, நமது கர்த்தரை இவ்வுலம் முடிசூட்டியிருக்க வேண்டும். ஆனால் இவ்வுலகம் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. சொந்தமல்ல என்று நிராகரித்துவிட்டது. கிணற்றின் நீரை தாவீது வாஞ்சித்தது போல, உலகெங்கும் உள்ள மனிதர்களின் ஆத்துமாக்களை இரட்சகர் நாடினார். பாவத்தினின்றும், சுயத்தினின்றும், உலகினின்றும், அவருடைய படைப்புக்கள் இரட்சிப்படைய வேண்டும். அதன் வாயிலாக அவருடைய உள்ளம் புத்துணர்ச்சி அடையவேண்டும் என ஏங்கினார். தாவீதின் மூன்று துணிவுமிக்க மனிதர்களுக்கு ஒப்பாக, தங்களுடைய நலன் பேணாது. வசதிகளையும், பாதுகாப்பையும், துறந்து அஞ்சாநெஞ்சுடன் கர்த்தருடைய நற்செய்தியை ஏந்தியவர்களாக உலகமெங்கும் சுற்றித்திரிந்த இறைப்பணியாளர்கள் தாணைத் தலைவராகிய கிறிஸ்துவிடம் மனந்திரும்பினோரை அர்ப்பணித்தனர். தங்களுடைய அன்பிற்கும், பயபக்திக்கும் உரிய பலியாக அவர்களைப் படைத்தனர். உணர்ச்சிப்பெருக்கோடு தாவீது நீரைக் கர்த்தருக்கென்று ஊற்றிவிட்டான். ஒவ்வொரு நாட்டினின்றும் ஒவ்வொரு இனத்தினின்றும் மனந்திரும்பிய ஆடுகள் அவரைச் சூழ்ந்து கொள்கையில் இரட்கர் மனது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாகிறார் (ஏசாயா 53:11).

தாவீதைப் பொருத்தமட்டில், தனது மனிதர்களுக்கு அவன் கட்டளை கொடுக்கவில்லை. அவர்களைப் புகழ்ந்துபேசவோ, வசப்படுத்தவோ, தேவையில்லாதிருந்தது. மிகச்சிறிய குறிப்பு அவர்களுக்குப் போதுமானதாய் இருந்தது. தங்களுடைய தளபதியினிடதிலிருந்து பெற்றுக்கொண்ட கட்டளையாக அவர்கள் அதனை ஏற்றுக் கொண்டனர்.

தம்முடைய மதிப்புமிக்க செங்குருதியால் விலைக்கு வாங்கப்பட்டவர்களுக்காக கிறிஸ்துவின் உள்ளம் ஏங்குகிறதைக் காணும் நாம் என்ன செய்யவேண்டும்? ஊழியப் பணியில் மக்களைப் பங்குபெறச் செய்ய உணர்ச்சி மிகுந்த வேண்டுகோளை விடுக்க வேண்டுமா? அதற்கென மேடை அழைப்பு கொடுக்கவேண்டுமா? ‘நான் யாரை அனுப்புவேன்? எங்களுக்காக யார் போவார்கள்? என்று அவர் கூறுவதைக் கேட்டால் போதாது. தாவீதின் மனிதர்கள் தங்களுடைய தளபதிக்காக ஆற்றிய செயலுக்கு ஒப்பாக, இவர்களுக்குச் செய்ய மனதில்லை என்று சொல்ல வேண்டுமா? ‘உம்முடைய சிறிய வாஞ்சை எனக்குக் கிடைத்த கட்டளையாக இருக்கிறது” என்று நாம் அவரிடம் கூறுவோமா?

20. Oktober

»Und David verspürte ein Verlangen und sagte: Wer gibt mir Wasser zu trinken aus der Zisterne in Bethlehem, die im Tor ist?« 1. Chronik 11,17

Bethlehem war Davids Heimatstadt. Er kannte alle seine Straßen und Wege, den Marktplatz und den Brunnen. Aber nun hatten die Philister mit ihren Soldaten Bethlehem besetzt, und David musste sich in der Höhle Adullam verstecken. Als drei von seinen Leuten hörten, dass er sich nach einem Schluck Wasser aus dem Brunnen von Bethlehem sehnte, da brachen sie durch die Wachtposten der Feinde hindurch und brachten ihm das Wasser. Er war von dieser mutigen Tat der Liebe und ihrer Treue so gerührt, dass er das Wasser nicht trinken wollte, sondern es ausgoss als ein Trankopfer für den Herrn.

David wird uns hier ein Bild für den Herrn Jesus. So wie Bethlehem die Stadt Davids war, so ist auch die ganze »Erde des Herrn, und alles, was darinnen ist«. David hätte eigentlich auf dem Königsthron sitzen müssen, aber stattdessen hockte er in einer Höhle. Und in ähnlicher Weise müsste unser Herr eigentlich auf dem Thron der Welt sitzen, aber stattdessen wird Er abgelehnt und enteignet. Wir können das Verlangen Davids nach Wasser vergleichen mit der Sehnsucht des Heilands nach den Seelen der Menschen auf der ganzen Erde. Er möchte erquickt werden durch den Anblick Seiner Geschöpfe, die gerettet worden sind von der Sünde, dem eigenen Ich und der Welt. Und Davids drei mutige Männer sind ein Bild für die unerschrockenen Soldaten Christi, die alle Gedanken an persönlichen Wohlstand, an Bequemlichkeit und Sicherheit beiseite schieben, nur um das Verlangen ihres Obersten Befehlsherrn zu stillen. Sie verbreiten die Gute Nachricht in alle Welt und bieten dann, bildlich gesprochen, ihre Bekehrten dem Herrn als ein Opfer der Liebe und Hingabe an. Davids Rührung entspricht der Freude des Heilands, wenn Er sieht, wie seine Schafe sich aus jedem Stamm und aus jedem Volk zu Ihm drängen. »Um der Mühsal seiner Seele willen wird er Frucht sehen, er wird sich sättigen« (Jesaja 53,11).

David brauchte seinen Männern nicht zu befehlen, er musste sie auch nicht überreden oder ihnen schmeicheln. Sie hörten nur eine kleine Andeutung, das war ihnen schon genug; sie nahmen sie als einen Befehl ihres Herrn.

Was sollen wir nun tun, wenn wir die Sehnsucht im Herzen Christi kennen nach denen, die Er mit Seinem kostbaren Blut erworben hat? Müssen wir jetzt unter Hochdruck missionarische Appelle herausgeben und zum Geben drängen? Ist es nicht genug, wenn wir Ihn fragen hören: »Wen soll ich senden, und wer wird für uns gehen?«? Soll wirklich von uns gesagt werden, dass wir nicht bereit sind, für unseren Befehlsherrn das zu tun, was Davids Männer bereitwillig für ihren Herrn taten? Oder wollen wir nicht auch zu Jesus Christus sagen: »Dein kleinster Wink ist mir Befehl«?