October

நிறைவான ஞானம்

October 18

“I have more understanding than all my teachers: for thy testimonies are my meditation. I understand more than the ancients.” (Psa. 119:99, 100)

When we first read these verses, they sound like the words of an immature braggart or a full grown egotist. In fact, we might almost be surprised to find such boasts in the Bible. They seem rather sub-Christian.

However, as we study the verses more closely, we find a key that removes the difficulty. The psalmist gives a reason for his superior understanding. He says, “… for thy testimonies are my meditation.” In other words, he is saying that he has more understanding than all his teachers who do not know the Scriptures. He understands more than the ancients whose knowledge was purely secular. He is not contrasting himself with other believers, but only with the men of this world.

And of course he is right! The humblest believer can see more on his knees than the most learned unbeliever can see on his tiptoes. Let us consider a few illustrations:

Here is a governmental leader assuring the people that there will be peace in the world if a certain course of action is followed. In a remote village, a Christian farmer hears the speech on his radio. He knows that there will never be peace until the Prince of Peace sets up His Kingdom on earth. Not till then will men beat their swords into plowshares and learn war no more. The farmer has more understanding than the diplomat.

Now meet a renowned scientist who teaches that the universe as we know it came into being without divine agency. Sitting in his class is a recent convert to Christ. Through faith this student understands that the worlds were framed by the word of God so that what is seen was not made out of things that are visible (Heb. 11:3). The student has insight that the scientist does not possess.

Then again we think of the psychologist who seeks to explain human behavior but who is unwilling to accept the fact of inborn sin. The believer who knows God’s word realizes that every man inherits an evil, corrupt nature, and that failure to recognize this can only lead to worthless solutions to man’s problems.

So the psalmist was not indulging in idle boasting when he said he had more understanding than all his teachers. Those who walk by faith have better vision than those who walk by sight. Those who meditate on God’s testimonies see truths that are hidden from the wise and prudent.

ஒக்டோபர் 18

உம்முடைய சாட்சிகள் என் தியானமாயிருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்களெல்லாரிலும் அறிவுள்ளவனாயிருக்கிறேன். முதியோர்களைப் பார்க்கிலும் ஞானமுள்ளவனாயிருக்கிறேன். சங்கீதம் 119:99-100

நிறைவான ஞானம்

இவ்வசனங்களை முதன்முதலில் படிக்கிறபோது, வளர்ச்சியற்ற தற்பெருமைக்காரர் அல்லது தற்புகழ்ச்சியில் முழு வளர்ச்சியடைந்த ஒருவரின் கூற்று என்று நாம் நினைக்கத் தோன்றும். இப்படிப்பட்ட பெருமை பாராட்டுதலை வேதத்தில் காண்பது உண்மையில் நமக்கு வியப்பைத் தருகிறது. கிறிஸ்தவருக்கு இது அழகல்ல என்றும் நாம் நினைக்கிறோம்.

ஆயினும், இவ்வசனங்களை நாம் ஆழ்ந்து படிக்குங்கால், இடர்பாடு நீங்கிவிடும். தன்னுடைய அறிவின் மிகுதிக்கு சங்கீத ஆசிரியன் தகுந்த காரணத்தை விளம்புகிறான். ‘உமது சாட்சிகள் எனது தியானமாயிருக்கின்றன”. அதாவது, வேதத்தை அறியாத ஆசிரியர்களைக் காட்டிலும் அவன் அதிக ஞானமுள்ளவனாயிருக்கிறான். முந்தய காலத்து மனிதர்கள் உலக ஞானமுடையவர்களாகவே மட்டுமே இருந்தனர். மற்ற விசுவாசிகளோடு அவன் தன்னை ஒப்பிட்டுப் பார்க்கவில்லை. இந்த உலக மனிதர்களோடுதான் அவன் தன்னை ஒப்பிடுகிறான்.

உண்மையில் அவன் கூறுவது சரியே! படிப்பறிவுமிக்க அவிசுவாசி பெற்றிருக்கிற அறிவினைக் காட்டிலும், தாழ்மையுள்ள விசுவாசி ஒருவன் முழங்காலில் நிற்கும்போது மேன்னையான ஞானத்தை உடையவனாக இருக்கிறான். சில எடுத்துக்காட்டுகளைச் சிந்திப்போம்.

அரசாட்சி செலுத்தும் தலைவர், தான் செய்யப்போகிற செயல்களினால் உலகில் அமைதி நிலவும் என்று அறிவிக்கிறார். தொலைதூரத்தில் உள்ள சிற்றூரில் வாழும் கிறிஸ்தவ விசுவாசியாகிய உழவர் அந்தப் பேச்சை வானொலி வாயிலாகக் கேட்கிறார். சமாதானப் பிரபு இவ்வுலகத்திற்கு வந்து தமது அரசாட்சியை நிறுவும்மட்டும் இவ்வுலகில் அமைதியை காணமுடியாது என்பதை அவர் அறிந்திருக்கிறார். தங்களுடைய பட்டயங்களை மண்வெட்டிகளாக அதுவரை மனிதர்கள் அடிக்கமாட்டார்கள். அதன் பிறகு தான் போரினைக் குறித்துக் கற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதை அந்த விசுவாசி அறிந்திருக்கிறார். அந்த அரசியல் தலைவரைக் காட்டிலும் அந்த உழவர் அதிக ஞானமுடையவரைக இருக்கிறார்.

வேறொரு அறிவியல் அறிஞரை எடுத்துக்கொள்ளுங்கள். தெய்வீக வல்லமையின்றி இவ்வுலகம் உண்டாயிற்று என்று கற்பிக்கிறார். புதியதாக இரட்சிப்பைப் பெற்ற மாணாக்கன் வகுப்பறையில் அமர்ந்திருக்கிறான். உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டவையென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லை என்றும் விசுவாசத்தினால் அந்த மாணவன் அறிந்திருக்கிறான் (எபி.11:3). அந்த அறிவியல் அறிஞர் பெற்றிராத நுண்ணறிவை அந்த மாணவன் பெற்றிருக்கிறான்.

ஒரு உளநூல் வல்லுநரைக் காண்போம். மனிதனுடைய நடத்தையை விளக்கிக் கூறும் அவர், அவன் உள்ளார்ந்த பாவத்தைப் பிறப்பிலேயே உடையவனாக இருக்கிறான் என்னும் உண்மையை அவர் ஒத்துக்கொள்வதில்லை. ஒவ்வொரு மனிதனும் பொல்லாங்கையும், கேடுபாடான இயல்பையும், பிறப்பிலேயே பெற்றுள்ளான் என்பதை தேவனுடைய திருமறையை அறிந்த விசுவாசி அறிந்திருக்கிறான். இதை அறியாது, மனிதனுடைய பிரச்சனைக்கு அவர் தருகிற தீர்வுகள் அனைத்தும் தகுதியற்றவையாகவே காணப்படும்.

ஆகவே, தனது ஆசிரியர்களைக் காட்டிலும், தான் கூடுதலான அறிவைப் பெற்றுள்ளதாகப் பாடகன் உரைத்திருப்பது வீணான தற்பெருமை அன்று. தரிசித்து நடப்பவர்களைக் காட்டிலும் விசுவாசித்து நடப்பவர்கள் அதிக ஞானமுடையவர்களாக இருக்கின்றனர். தேவனுடைய சாட்சிகளில் தியானமாயிருப்பவன், ஞானிகளுக்கும், அறிஞர்களுக்கும், மறைக்கப்பட்ட பல உண்மைகளை அறிந்திருக்கிறான்.

18. Oktober

»Verständiger bin ich als alle meine Lehrer. Denn deine Zeugnisse sind mein Überlegen. Einsichtiger als Greise bin ich.« Psalm 119,99.100

Wenn wir diese Verse lesen, klingen sie zuerst wie die Worte eines unreifen Angebers oder eines aufgeblasenen Egoisten. Ja, wir könnten sogar überrascht sein, solche Sätze in der Bibel zu finden. Sie hören sich so gar nicht christlich an. Doch wenn wir sie aufmerksamer betrachten, finden wir ein Schlüsselwort, das die Schwierigkeiten beseitigt. Der Psalmist gibt ja einen Grund an für sein hervorragendes Verständnis. Er sagt: »Denn deine Zeugnisse sind mein Überlegen.« Mit anderen Worten: Er hat mehr Weisheit als alle seine Lehrer, die die Heilige Schrift
nicht kennen. Er versteht mehr als die Alten, deren Weisheit nur weltlicher Art ist. Er vergleicht sich also nicht mit anderen Gläubigen, sondern mit den Menschen dieser Welt.

Und dann hat er natürlich Recht! Der schlichteste Gläubige kann auf den Knien liegend mehr sehen, als der gelehrteste Ungläubige erkennen kann, wenn er sich auf die Zehenspitzen stellt. Das wollen wir an einigen Beispielen erläutern.

Da ist ein führender Mann in der Regierung, der seinem Volk versichert, dass es Frieden in der Welt geben wird, wenn eine bestimmte Richtung eingeschlagen wird und wenn man dies und jenes tut. In einem weit entfernten Dorf hört ein christlicher Bauer diese Rede in seinem Radio. Er weiß aber, dass es niemals Frieden geben wird, bis der Friedefürst einmal Sein Reich auf der Erde aufrichtet. Erst dann werden die Menschen aus ihren Schwertern Pflugscharen machen und aufhören, Kriege zu führen. Hier hat der Bauer mehr Verständnis als der Diplomat.

Oder da ist ein bekannter Naturwissenschaftler, der die Lehre verkündet, dass das Weltall, so wie wir es kennen, ohne göttliches Eingreifen entstanden ist. Einer seiner Studenten ist ein junger Mann, der sich vor kurzem zu Jesus Christus bekehrt hat. Durch seinen Glauben versteht er, »dass die Welten durch Gottes Wort bereitet worden sind, so dass das Sichtbare nicht aus Erscheinendem geworden ist« (siehe Hebräer 11,3). Dieser Student hat eine Einsicht gewonnen, die der Professor nicht besitzt.

Oder denken wir an den Psychologen, der versucht, das menschliche Verhalten zu erklären, aber nicht bereit ist, die Tatsache der uns allen angeborenen Sünde anzuerkennen. Der Gläubige, der Gottes Wort kennt, weiß wohl, dass jeder Mensch schon eine böse, verdorbene Natur geerbt hat und dass man, solange man das nicht einsieht, nur zu scheinbaren Lösungen für die Probleme des Menschen kommen kann.

So war der Psalmist also kein eitler Angeber, als er sagte, dass er mehr Einsicht hätte als alle seine Lehrer. Die, die im Glauben leben, haben eine bessere Sicht als die, die sich nur auf ihre eigenen Augen verlassen wollen. Diejenigen, die über Gottes Zeugnisse nachdenken, sehen Wahrheiten, die vor den Weisen und Klugen verborgen sind.