October

இறைத் தண்டனை

October 16

“For the wrath of God is revealed from heaven against all ungodliness and unrighteousness.” (Rom. 1:18)

At selected times in human history, God has burst forth in judgment on men in order to show His extreme displeasure at certain sins they have committed. Obviously He does not strike men dead every time these sins are committed. If He did, the population of the world would be drastically reduced. But He has gone on record on isolated occasions to warn mankind that such ungodliness and unrighteousness will not go unpunished. If He does not deal with it in time, He most surely will in eternity.

When God looked down and saw that the earth was corrupt and filled with violence, He sent a cataclysmic flood, destroying the world (Gen. 6:13). Only eight people escaped with their lives.

Later the cities of Sodom and Gomorrah became centers of homosexuality (Gen. 19:1-13). Sodom was also guilty of pride, fulness of bread, and prosperous ease (Ezek. 16:49). God revealed His wrath from heaven by raining fire and brimstone on these cities, consigning them to perpetual extinction.

“Nadab and Abihu died before the Lord, when they offered strange fire” (Num. 3:4). They should have used fire from the altar (Lev. 16:12), but they decided to approach God in some other way. By smiting them with instant death, the Lord warned future generations against attempts to approach Him in any way other than the way He has appointed.

Nebuchadnezzar, King of Babylon, failed to acknowledge the Most High who rules in the affairs of men. Instead he claimed full credit for all the glory of Babylon. God punished him with madness. The king was driven away from men to live like an animal in the field. He ate grass like oxen, his body was wet with the dew of heaven, his hair grew like eagles’ feathers and his nails like birds’ claws (Dan. 4:33).

Ananias and Sapphira pretended to make a total sacrifice of their property to the Lord, but they secretly held back part for themselves (Acts 5:1-11). They both died suddenly as a warning against insincerity in worship and in service.

Some time later Herod accepted worship instead of giving God the glory. He was consumed by worms and died (Acts 12:22-23).

Sinful men should not presume on the seeming silence and inaction of God. Just because He doesn’t always punish sin instantly doesn’t mean that He won’t punish it ultimately. In isolated instances down through the years, He has given His verdict and revealed the penalties that follow.

ஒக்டோபர் 16

எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்திக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ரோமர் 1:18.

இறைத் தண்டனை

வரலாற்றில் சில குறிப்பிட்ட காலங்களில், சில குறிப்பிட்ட பாவங்களை மனிதன் செய்தபோது, தம்முடைய அளவுகடந்த சினத்தை வெளிப்படுத்தும் பொருட்டு தேவன் நியாயத்தீர்ப்பை வெடித்துச் சிதறச்செய்கிறார். அந்தப் பாவங்களை மனிதன் செய்யும்போதெல்லாம் அவனை அவர் அவ்வாறு தண்டிப்பதில்லை என்பது நாம் அறிந்ததே. அவ்வாறு அவர் செய்திருந்தால் மக்கள் தொகை மிகவும் குறைந்து போயிருக்கும். அவபக்தியும் அநியாயமும் தண்டிக்கப்படாமல் போகா என்று மனுகுலத்தை எச்சரிக்கும் பொருட்டு எப்போதாவது அவ்வாறு தண்டனையை அவர் வழங்கியுள்ளார். இந்தக் காhலத்தில் அவர் இதைச் செய்யவில்லை என்றால் நித்தியத்திலே நிச்சயமாகச் செய்வார்.

விண்ணுலகிலிருந்து தேவன் இந்த பூமி கொடுமையினாலும் பொல்லாங்கினாலும் நிறைந்திருப்பதைக் கண்டு கடல் கொந்தளிப்பை அனுப்பி உலகத்தை அழித்தார் (ஆதி.6:13). எட்டு பேர் மட்டுமே உயிர் தப்பினர்.

பின்னர் சோதோம் கொமோரா ஆகிய நகரங்கள் ஓரினச் சேர்க்கை என்னும் பாவத்தின் இருப்பிடமாக இருந்தன (ஆதி.19:1-13). பெருமை, ஆகாரத்திரட்சி, செல்வத்தின் மேட்டிமை, ஆகிய பாவங்களினாலும் சோதோம் குற்றமுடையதாயிருந்து (எசேக்.16:49). அக்கினியும் கந்தகமும் அந்த நகரங்களின் மீது பொழிந்து, அவை இல்லாதபடி தேவ கோபத்தினால் அழிந்தன.

‘நாதாபும் அபியூவும் அந்நிய அக்கினியைக் கர்த்தருடைய சமுகத்தில் கொண்டுவந்த போது, மரித்துப்போனார்கள்.” (எண்.3:4). பலிபீடத்திலிருந்து அக்கினியை அவர்கள் கொண்டு வந்திருக்கவேண்டும் (லேவி.16:12). அவர்களோ வேறுமுறையில் தேவனுடைய சமுகத்தில் நுழைந்தனர். தாம் ஏற்படுத்தின வழியே அன்றி, தேவனைச் சேர வேறு வழிகளில் வரக்கூடாது என்பதை எதிர் காலத்தில் மக்கள் அறியவேண்டும் என்று அங்கே அவர்களை உடனடியாக கொன்றுபோட்டார்.

மனுக்குலத்தை ஆளுகிறவராகிய உன்னதமானவரை பாபிலோன் அரசனாகிய நேபுகாத்நேச்சர் பாராட்டத் தவறினான். அதற்குப் பதிலாக, பாபிலோனின் மேன்மைக்குத் தானே காரணம் என்று பெருமை பாராட்டினான். தேவன் அவனைப் பயித்தியமாக்கினார். வயல்வெளியில் விலங்குகளைப்போல வாழும்படி மனிதர்களிடமிருந்து அவன் விரட்டப்பட்டான். மாடுகளைப் போல் புல் மேய்ந்;தான். அவனுடைய தலைமுடி கழுகுகளுடைய இறகுகளைப் போலவும், அவனுடைய நகங்கள் பறவைகளுடைய நகங்கள்போலவும், வளரும்மட்டும் அவன் சரீரம் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது (தானி.4:33).

தங்களுடைய சொத்து முழுவதையும் கர்த்தருக்கு அர்ப்பணிப்பதாக அனனியாவும் சப்பிராளும் வாக்குரைத்தனர். ஆனால் நிலத்தின் விலையில் ஒரு பகுதியை மறைத்துத் தங்களுக்கென்று வைத்துக்கொண்டனர் (அப்.5:1-11). ஆராதனையிலும், ஊழியத்திலும், உண்மையற்ற முறையில் நடப்பவர்களின் எச்சரிப்புக்கென்று அவர்கள் சடுதியில் மரணமடைந்தனர்.

தேவனுக்கு மகிமையைச் செலுத்துவதற்குப் பதிலாக, ஆராதனையை ஏரோது ஏற்றுக்கொண்டான் அவன் புழுபுழுத்துச் செத்தான் (அப்.12:22-23).

தேவன் அமைதியாகவும் செயலற்றவராகவும் இருக்கிறார் என்று மனிதன் தவறாக எண்ணுகிறான். உடனடியாகப் பாவத்தை அவர் எப்போதும் தண்டிப்பதில்லை என்னும் காரணத்தால், கடைசிவரை அவர் தண்டிக்கமாட்டார் என்பது பொருளன்று. காலங்காலமாகக் காண்கிறபோது அங்குமிங்குமாகச் சில நேரங்களில் தமது தீர்;ப்பை அவர் வெளிப்படுத்தி வரப்போகிற தண்டனையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அப்பொழுது கர்த்தர்: நான் சிருஷ்டித்த மனிதனைப் பூமியின் மேல் வைக்காமல் மனிதன் முதற்கொண்டு, மிருகங்கள், ஊரும்பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள், பரியந்தமும் உண்டாக்கினவைகளை நிக்கிரகம் பண்ணுவேன். (ஆதி.6:7).

16. Oktober

»Denn es wird geoffenbart Gottes Zorn vom Himmel her über alle Gottlosigkeit und Ungerechtigkeit der Menschen.« Römer 1,18

Zu besonderen Zeiten in der Geschichte der Menschheit hat Gott plötzlich ein Gericht kommen lassen, um den Menschen zu zeigen, wie sehr Ihm bestimmte Sünden missfielen, die sie begangen hatten. Ganz offensichtlich erschlägt Er die Menschen nicht sofort als Reaktion darauf, dass sie diese Sünden begehen. Denn wenn Er das täte, dann hätte sich die Weltbevölkerung schon drastisch verringert. Doch Er hat bei einzelnen Gelegenheiten deutlich Seine Meinung gesagt, um die Menschheit zu warnen: Ihre Gottlosigkeit und Ungerechtigkeit wird nicht unbestraft bleiben.

Als Gott auf die Erde herabsah und erkannte, dass sie von Grund auf verdorben und von Gewalttätigkeit bestimmt war, da schickte Er eine große Flut und zerstörte die ganze Welt (siehe 1. Mose 6,13). Nur acht Menschen kamen damals mit dem Leben davon.

Später wurden die Städte Sodom und Gomorra zu Zentren der Homosexualität (siehe 1. Mose 19,1-13). Sodom hatte sich außerdem der »Hoffart, Fülle von Brot und sorglosen Ruhe« (siehe Hesekiel 16,49) schuldig gemacht. Und Gott ließ die beiden Städte Seinen Zorn vom Himmel spüren, indem Er Feuer und Schwefel auf sie niederregnen ließ und sie für immer vernichtete.

»Nadab und Abihu starben vor dem Herrn, als sie in der Wüste Sinai fremdes Feuer vor dem Herrn darbrachten« (4. Mose 3,4). Sie hätten Feuer vom Altar nehmen müssen, wie es vorgeschrieben war (siehe 3. Mose 16,12), aber sie hatten sich entschlossen, sich Gott auf andere Weise zu nähern. Indem Er sie mit dem sofortigen Tod bestrafte, warnte der Herr die kommenden Generationen: Sie sollten niemals versuchen, sich Ihm in irgendeiner anderen Art zu nähern als in der, die Er bestimmt hatte.

Nebukadnezar, der König von Babylon, wollte den Höchsten nicht anerkennen, der alle Geschicke der Menschen lenkt. Stattdessen beanspruchte er, dass alle Herrlichkeit Babylons seine eigene Leistung war. Gott bestrafte ihn mit Wahnsinn. Der König wurde aus der menschlichen Gemeinschaft ausgestoßen und musste wie ein wildes Tier auf dem Feld leben. Er »aß Gras wie die Rinder, und sein Leib wurde benetzt vom Tau des Himmels, bis sein Haar wie Adlerfedern wuchs und seine Nägel wie Vogelkrallen« (Daniel 4,30).

Ananias und Saphira gaben vor, sie hätten all ihren Besitz dem Herrn geopfert, aber insgeheim hatten sie doch einen Teil davon für sich selbst zurückbehalten (siehe Apostelgeschichte 5,1-11). Beide starben auf der Stelle; das war eine ernste Warnung vor Unehrlichkeit in der Gemeinde und bei der Anbetung.

Eine Zeit lang später nahm Herodes die göttliche Verehrung des Volkes entgegen, anstatt Gott allein die Ehre zu geben. Und Er wurde von Würmern zerfressen und starb (siehe Apostelgeschichte 12,22.23).

Wir sündige Menschen sollten uns nicht damit beruhigen, dass Gott anscheinend zu unserem Verhalten schweigt und nichts unternimmt. Wenn Er Sünde nicht immer sofort bestraft, heißt das noch lange nicht, dass Er sie niemals ahnden wird. In einzelnen Situationen hat Er im Lauf der Jahrhunderte öfter Sein Urteil gesprochen und die Strafen offenbart, die auf die Sünde folgen.