October

கேட்க மனதற்ற மனிதர்கள்

October 15

“O Jerusalem, Jerusalem…how often would I have gathered thy children together, even as a hen gathereth her chickens under her wings, and ye would not!” (Matt. 23:37)

It has been called the passing of religious opportunity. It means that people are favored with a marvelous visitation, a glorious opportunity, but they fail to seize it.

That is what happened to Jerusalem. The incarnate Son of God walked its dusty streets. Its ochre-tinted buildings looked down on the Creator and Sustainer of the universe. The people heard His matchless words and saw Him perform miracles that no other man had ever performed. But they failed to appreciate Him. They would not receive Him.

Things would have been so much better for them if they had. Conditions would have been like those described in Psalm 81:13-16: “Oh that my people had hearkened unto me, and Israel had walked in my ways! I should soon have subdued their enemies, and turned my hand against their adversaries. The haters of the Lord should have submitted themselves unto him: but their time should have endured forever. He should have fed them also with the finest of the wheat: and with honey out of the rock should I have satisfied thee.”

Isaiah also describes what might have been. “O that thou hadst hearkened to my commandments! then had thy peace been as a river, and thy righteousness as the waves of the sea: Thy seed also had been as the sand, and the offspring of thy bowels like the gravel thereof; his name should not have been cut off nor destroyed from before me” (Isa. 48:18).

Bret Harte wrote, “Of all the words of tongue or pen, the saddest are, ‘It might have been.’”

Think of those who have rejected the Gospel call. Jesus of Nazareth passed by but they missed Him. Now they are living empty lives and facing an eternity of doom.

Or think of those believers who heard the call of Christ to some specific sphere of service but failed to respond. They have no idea of the present blessings and eternal rewards which they have missed.

It is true that sometimes opportunity knocks only once. Though it is laden with choicest treasures, it may seem at the moment to conflict with personal plans or to involve personal sacrifice. It represents God’s very best for us, but for reasons of our own we let the opportunity pass. We refuse His best and settle for His second best. All the time He is saying, “I would but you would not.”

ஒக்டோபர் 15

எருசலேமே, எருசலேமே… கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும் வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன். உங்களுக்கோ மனதில்லாமற் போயிற்று. மத்தேயு 23:37.

கேட்க மனதற்ற மனிதர்கள்

மதம் தருகின்ற சந்தர்ப்பங்கள் பயன்படுத்தப்படாமல் வீணாகின்றன என்று இதனைக் கூறலாம். அதாவது, வியத்தகு தரிசனம் மக்களுக்கு அருளப்பட்டது. அது மகிமை நிறைந்த சந்தர்ப்பமாகும். ஆயினும் அதனை அவர்கள் பயன்படுத்தத் தவறிவிட்டனர்.

எருசலேம் நகரத்திற்கு இதுவே நிகழ்ந்தது. அந்நகரின் புழுதி நிறைந்த தெருக்களின் வழியாக தேவகுமாரன் நடந்தார். பிரபஞ்சத்தின் படைப்பாளரும், ஆதாரமுமானவரை காவி வர்ணம் அடிக்கப்பட்ட வீடுகள் உற்று நோக்கின. அவருடைய ஒப்பற்ற சொற்களை மக்கள் கேட்டனர். எந்த மனிதரும், எக்காலத்திலும் செய்திராத அற்புதங்களை அவர் செய்ததை மக்கள் கண்டனர். ஆனாலும் அவருடைய மதிப்பை அறிந்து அவர்கள் பாராட்டத் தவறினர். அவரை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஏற்ற முறையில் அவர்கள் நடந்திருப்பார்களெனில் அவர்கள் எல்லாச் சிறப்பையும் பெற்றிருப்பர். சங்கீதம் 81:13-16 ஆகிய வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிற சூழ்நிலை உண்டாயிருக்கும். ‘ஆ, என் ஜனம் எனக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேல் என் வழிகளில் நடந்தால் நலமாயிருக்கும்! நான் சீக்கிரத்தில் அவர்கள் எதிராளிகளைத் தாழ்த்தி, என் கையை அவர்கள் சத்துருக்களுக்கு விரோமாகத் திருப்புவேன். அப்பொழுது கர்த்தரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள். அவர்களுடைய காலம் என்றென்றைக்கும் இருக்கும். உச்சிதமான கோதுமையினால் அவர்களைப் போஷிப்பார். கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்”.

எவ்வாறான சூழ்நிலை உண்டாயிருக்கும் என்பதை ஏசாயாவும் விளக்குகிறான். ‘ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும், அப்பொழுது உன் சமாதானம் நிதியைப்போலவும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப் போலும் இருக்கும். அப்பொழுது உன் சந்ததி மணலத்தனையாகவும், உன் கற்பப்பிறப்பு அதின் அணுகளத்தனையாகவும் இருக்கும். அப்பொழுது அதன் பெயர் நம்மை விட்டு அற்றுப்போகாமலும் அழிக்கப்படாமலும் இருக்கும். (ஏசாயா 48:18,19).

‘பேச்சிலோ, எழுத்திலோ மிகவும் வேதனையைத் தரும் சொற்கள், “இவ்விதமாக நடந்திருக்குமே என்பதே” என்று பிரட் ஹார்டே என்பார் மொழிந்துள்ளார்.

நற்செய்தி அழைப்பை ஏற்றுக்கொள்ளாதவர்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள். நாசரேத்து ஊரைச் சேர்ந்த இயேசு அவர்கள் பக்கமாய் நடந்து சென்றார். ஆனால், அவர்களோ அவரை நழுவ விட்டு விட்டனர். இப்பொழுதோ அவர்கள் வெறுமையான வாழ்வை வாழ்கின்றனர். நித்திய அழிவை நோக்கிச் செல்கின்றனர்.

இதில் விசுவாசிகளுக்கு ஒரு படிப்பினை உண்டு. குறிப்பிட்ட சில ஊழியங்களைச் செய்வதற்காகக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அழைப்பினைக் கேட்கும் விசுவாசிகள் சிலர் அதனை ஏற்றிட மனதற்றவர்களாகத் தவறிவிடுகின்றனர். அவர்களைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்குங்கால், தற்காலத்தில் பெறக்கூடிய வெகுமதிகளைப் பற்றியும் நித்தியத்தில் பெறக்கூடிய நற்பேறுகளைக் குறித்தும் அவர்கள் அறியாதிருக்கிறார்கள் என்பது வேதனைக்குரியது.

சிலவேளைகளில் சந்தர்ப்பமானது ஒரே ஒரு முறைதான் கதவினைத் தட்டும் என்பது உண்மையே. அந்த அழைப்பில் விரும்பத்தக்கப் பரிசுப்பொருட்கள் நிறைந்திருந்தாலும், நமது தற்காலத் திட்டங்களுக்கு எதிரானதாகவும், நம்மை தியாகமாக தத்தம் செய்யவேண்டிய சூழ்நிலைகளை உண்டுபண்ணக் கூடியதாகவும் அது தோன்றுகிறது. தேவன் நமக்கு அருளும் மிகச்சிறந்த வாய்ப்பாக அது இருக்கின்றது. ஆனால் நமது சொந்தக் காரணங்களால் அந்த வாய்ப்பை நழுவ விடுகிறோம். அவருடைய மிகச்சிறந்த அருட்கொடையை நழுவவிட்டு இரண்டாவதைத் தக்கவைத்துக் கொள்கிறோம். அந்நேரங்களில் அவர் கூறுகிறார், “உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று”.

15. Oktober

»Jerusalem, Jerusalem … wie oft habe ich deine Kinder versammeln wollen, wie eine Henne ihre Küken versammelt unter ihre Flügel, und ihr habt nicht gewollt.« Matthäus 23,37

Man hat dieses Geschehen als das Verpassen einer einzigartigen Chance bezeichnet. Das heißt, dass Menschen mit dem wunderbaren Besuch Gottes beschenkt werden, mit einer herrlichen Gelegenheit, aber sie ergreifen sie nicht und lassen sie ungenutzt vorübergehen.

So geschah es mit Jerusalem. Der Mensch gewordene Sohn Gottes ging durch die staubigen Straßen. Die ockerfarben getünchten Häuser der Stadt sahen auf den Schöpfer und Erhalter der ganzen Welt hinunter. Die Leute hörten Seine unvergleichlichen Worte und sahen, wie Er Wunder vollbrachte, die kein anderer Mann je hatte tun können. Aber sie erkannten Ihn nicht an. Sie wollten Ihn nicht aufnehmen.

Alles hätte für sie viel besser ausgesehen, wenn sie Ihn aufgenommen hätten. Ihre Lage wäre so gewesen, wie sie in Psalm 81,14-17 beschrieben wird: »O dass mein Volk auf mich hörte, Israel in meinen Wegen wandelte! Bald würde ich ihre Feinde beugen, meine Hand wenden gegen ihre Bedränger. Die den Herrn hassen, würden ihm Ergebung heucheln, ihre Zeit würde ewig sein. Mit dem besten Weizen würde ich es speisen, und mit Honig aus dem Felsen würde ich es sättigen.«

Auch Jesaja beschreibt, wie es hätte sein können: »Ach, hättest du doch auf meine Gebote geachtet! Dann wäre wie der Strom dein Friede gewesen und deine Gerechtigkeit wie die Wogen des Meeres. Dann wäre wie der Sand deine Nachkommenschaft gewesen und die Sprösslinge deines Leibes wie seine Körner. Sein Name würde nicht ausgerottet und nicht ausgetilgt werden vor meinem Angesicht« (Jesaja 48,18.19).

Bret Harte hat einmal geschrieben: »Von allen Worten, die je gesprochen oder geschrieben wurden, sind die traurigsten: ›Es hätte sein können.‹«

Denken wir nur an die Menschen, die den Ruf des Evangeliums zurückgewiesen haben. Jesus von Nazareth ist an ihnen vorübergegangen, aber sie haben ihn verpasst. Nun führen sie ein sinnentleertes Leben und stehen vor der ewigen Verdammnis.

Oder denken wir an die Gläubigen, die den Ruf Jesu in einen bestimmten Dienst wohl gehört, aber nicht darauf reagiert haben. Sie haben gar keine Ahnung davon, wie viel irdischen Segen und wie viel ewigen Lohn sie dadurch verpasst haben.

Es stimmt schon, dass eine Gelegenheit manchmal nur ein einziges Mal anklopft. Selbst wenn sie voll beladen ist mit den ausgesuchtesten Schätzen, scheint sie vielleicht im ersten Moment nur mit unseren persönlichen Plänen in Konflikt zu kommen oder persönliche Opfer von uns zu verlangen. Sie stellt das Beste dar, was Gott für uns ausgesucht hat, aber aus egoistischen Gründen lassen wir die Gelegenheit ungenutzt vorübergehen. Wir lehnen Gottes bestes Angebot ab und setzen auf das zweitbeste. Und die ganze Zeit sagt Er zu uns: »Ich wollte gern, aber ihr habt nicht
gewollt.«