November

சாதுரியத்துடன் நடத்தல்

November 18

“Be ye therefore wise as serpents, and harmless as doves.” (Matt. 10:16)

One important element of practical wisdom is tactfulness. The Christian should learn how to be tactful. This means that he should develop a delicate sensitivity as to what to do or say so as to avoid offense and cement good relations. The tactful person puts himself in the other fellow’s shoes and asks himself, “How would I like to have that said or done to me?” He seeks to be diplomatic, considerate, gracious and discerning.

Unfortunately the Christian faith has had its share of tactless adherents. One classic example was a Christian barber in a small midwestern town. When a luckless customer entered the shop one day and asked for a shave, the barber seated him, tied the usual white cloth around his neck and tilted back the chair. On the ceiling the customer saw the words “Where will you spend eternity?” The barber lathered his face liberally; then as he began to sharpen the razor on the strop, he began his evangelistic witness with the question, “Are you prepared to meet God?” The customer bolted out of the chair—towel, lather and all—and hasn’t been heard from since.

Then there was the zealous student who went out one night to do some personal evangelism. Walking down a dark street, he saw a young lady walking ahead of him in the shadows. As he tried to catch up with her she began to run. Anxious, he ran after her. When she doubled her pace, he did the same. Finally she ran up onto the porch of a house in near shock and started fumbling in her handbag for her keys. As he ran up onto the porch, she was too paralyzed with fear to scream. Then smilingly he handed her a tract and left, happy to have reached another sinner with the Gospel.

Great tact is needed in visiting the sick. It doesn’t help to say, “You really do look sick” or “I knew a person with the same trouble—and he died.” Who needs that kind of comfort?

And we should be tactful when we visit the bereaved. We shouldn’t be like the Texan who said to the widow of a slain politician, “And just to think that it had to happen in Texas!”

God bless those choice saints who always seem to know how to speak the gracious, appropriate word. And God teach the rest of us how to be tactful diplomats instead of tactless bumblers.

நவம்பர் 18

சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள். மத்தேயு 10:16

சாதுரியத்துடன் நடத்தல்

நடைமுறை ஞானத்தில் ஒரு இன்றியமையாத கூறு சாதுரியமாகும். சாதுரியமாக நடப்பதற்கு கிறிஸ்தவன் கற்றல் வேண்டும். நம்முடைய பேச்சும் செயலும் பிறர் உள்ளத்தைப் புண்படுத்தலாகாது. அவர்களோடு நாம் கொண்டுள்ள உறவு வலுப்பெற வேண்டும். இதற்கென நாம் நுட்பமான உணர்வுத் திறன் உடையவர்களாக இருத்தல் வேண்டும். சாதுரியவான் தன்னைப் பிறருடைய இடத்தில் வைத்து, தன்னையே நோக்கி, ‘இது எவ்விதமாகச் செயல்ப்பட்டிருக்க வேண்டும் அல்லது செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்?” என்று கேட்கிறான். அவன் சாமர்த்தியமாகவும், அக்கறையோடும், கிருபையுடன், உயிர்த்துணருகிறவனாகவும், இருக்க விரும்புகிறான்.

கிறிஸ்தவ விசுவாசத்தைச் சாதுரியமற்ற தன்மையோடு கடைப்பிடிப்பது வருத்தத்துக்குரிய ஒன்றாகும். முடிதிருத்தம் செய்கிற தொழிலாளி ஒருவருடைய கதை இதற்குச் சிறந்ததொரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. முகச் சவரம் செய்து கொள்ள ஒரு வாடிக்கையாளர் கடைக்குள்ளாக நுழைந்தார். கடைக்காரர் அவரை இருக்கையில் அமரச் செய்தார், கழுத்திலே ஒரு வெள்ளைத்துணியைக் கட்டினார். இருக்கையை பின்புறமாகச் சாய்த்தார். அறையின் உட்கூரையில், ‘உங்களுடைய நித்தியத்தை எங்கே கழிக்கப் போகிறீர்கள்?” என்று எழுதியிருந்தது. சவரத் தொழிலாளி வாடிக்கையாளரின் முகத்தில் சவுக்கார நுரையை மிகுதியாகத் தடவினார். பின்னர் கத்தியை எடுத்து, தோல்வாரிலே தீட்டத் தொடங்கினார்;. நற்செய்தியைக் கூற இதுதான் சமயம் என்று கருதிய சவரத்தொழிலாளி வாடிக்கையாளரின் அருகில் சென்று, ‘நீங்கள் தேவனைச் சந்திக்க ஆயத்தமுடையவராக இருக்கிறீர்களா? என்று கேட்டார். அவ்வளவுதான், அந்த வாடிக்கையாளர் இருக்கையிலிருந்து எழுந்து, துணியைத் தூக்கி எறிந்துவிட்டு ஒரே ஓட்டம் ஓடினார். அதிலிருந்து அந்தக் கடைப்பக்கம் அவர் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை.

ஓர் இரவிலே கிறிஸ்தவ மாணவன் ஒருவனுக்குத் தனியாள் ஊழியம் செய்ய வேண்டுமென்ற வாஞ்சை பெருக்கிட்டது. கையில் சில நற்செய்திப் பிரதிகளை எடுத்துக் கொண்டவனாகத் தெருவில் நடக்கத் தொடங்கினான். தெருவில் இருள் சூழ்திருந்தது. ஓர் இளம்பெண் சாலையோரத்தில் அவனுக்குச் சிறிது தூரத்திற்கு முன் நடந்து கொண்டிருந்தாள். அவளை நெருங்கி வேண்டுமென்று தனது வேகத்தை அவன் அதிகப்படுத்தினான். அவன் வேகமாக வருவதைக் கண்ட பெண் ஓடத்தொடங்கினாள். ஆவல் மேலிட்டவனாக இவனும் ஓடினான். தன்னுடைய வேகத்தை இரண்டு மடங்கு துரிதப்படுத்தினாள். இவனும் விடவில்லை. இறுதியில் அவளுடைய வீடு வந்துவிட்டது. அதிர்ச்சியடைந்த பெண் கதவைத் திறப்பதற்காக, கைப்பையில் சாவியைத் தேடினாள். தடுமாற்றத்தில் சாவியோ கிடைக்கவில்லை. ஓடிவந்தவன் நெருங்கி விட்டான். அச்சத்தினால் என்ன செய்வதென்று அறியாது திகைத்து நின்றவளால் கூச்சலிடவும் முடியவில்லை. இவனோ முகமலர்ச்சியுடன் ஒரு கைப்பிரதியை எடுத்து அவளிடம் கொடுத்துவிட்டுத் திரும்பினான். ஒரு பாவியிடம் நற்செய்தியைப் பகிர்ந்து கொண்ட மனநிறைவு அவனை ஆட்கொண்டது.

நோயுற்றோரைக் காணச் செல்லும்போது சாதுரியம் தேவை. ‘உங்களைப் பார்த்தாலே மிகவும் பலவீனமாக இருக்கிறீர்;கள்” என்றோ, ‘இதே பிரச்சனை எனக்குத் தெரிந்த ஒருவருக்கு இருந்தது. கொஞ்ச நாளில் இறந்து போனார்” என்றோ கூறுவதில் ஏதாவது நன்மை உண்டாகுமா? இப்படிப்பட்ட ஆறுதல் யாருக்குத் தேவை?

உற்றாரைப் பறிகொடுத்துத் துயரத்தில் ஆழ்ந்திருக்கிறவர்களைச் சந்திப்பதற்கும் சாதுரியம் தேவை. ஒரு பிரமுகர் கொலை செய்யப்பட்டுவிட்டார்.  அங்கு வந்த அரசியல் தலைவர் ஒருவர், ‘ இந்த மண்ணில் இவ்வாறு நடக்கிறது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்” என்று இறந்து போனவருடைய மனைவியிடம் கூறினார். அவரைப் போன்று நாம் இருக்கலாகாது. கிருபையோடும், பொருத்தமானபடியும், பேசுவதற்குத் தனிச்சிறப்பு வாய்ந்த பரிசுத்தவான்களை தேவன் ஆசீர்வதிக்கிறார். சாதுரியமில்லாமல் பிதற்றாதபடி, சாதுரியத்தோடு நடந்து கொள்ள தேவன் ஏனையோருக்கும் கற்றுத் தருகிறார்.

18. November

»So seid nun klug wie die Schlangen und einfältig wie die Tauben.« Matthäus 10,16

Ein wichtiger Bestandteil praktischer Weisheit ist es, taktvoll zu sein. Ein Christ sollte solchen Takt lernen. Das heißt, dass er feinfühlig, sensibel dafür werden soll, was man tun oder sagen kann, um Beleidigungen zu vermeiden und gute Beziehungen zu festigen. Ein taktvoller Mensch versetzt sich in die Lage des anderen und fragt sich: »Wie hätte ich selbst es gerne, wenn mir dies oder jenes gesagt oder getan werden müsste?« Er versucht, diplomatisch, rücksichtsvoll, gütig und einsichtig zu sein.

Leider hat der christliche Glaube auch eine ganze Reihe von taktlosen Anhängern. Ein klassisches Beispiel dafür ist die Geschichte eines christlichen Friseurs. Als ein unglücklicher Kunde eines Tages den Laden betrat und rasiert werden wollte, ließ der Friseur ihn Platz nehmen, band ihm das übliche weiße Tuch um den Hals und kippte den Sessel nach hinten. Jetzt konnte der Kunde an der Decke deutlich eine große Schrift lesen: »Wo werden Sie die Ewigkeit verbringen?« Darauf seifte der Friseur das Gesicht des Mannes großzügig ein, und als er anfing, das Rasiermesser
am Lederriemen zu schärfen, begann er auch sein evangelistisches Zeugnis mit der Frage: »Nun, sind Sie bereit dazu, Ihrem Gott zu begegnen?« Der Kunde schoss in die Höhe, sprang aus dem Sessel und rannte hinaus, mit Tuch, dem Rasierschaum und allem Drum und Dran, und man hat nie wieder etwas von ihm gehört.

Da gab es auch noch einen sehr eifrigen Studenten, der eines Abends ausging, um persönliche Evangelisationsarbeit zu leisten. Er ging eine dunkle Straße entlang und sah vor sich eine junge Dame im Schatten. Als er versuchte, sie einzuholen, beschleunigte sie ihre Schritte. Er ließ jedoch nicht locker und eilte hinter ihr her. Als sie ihr Tempo steigerte, tat er das Gleiche. Endlich lief sie ängstlich in die Toreinfahrt eines Hauses und fing an, fieberhaft in ihrer Handtasche nach dem Schlüssel zu suchen. Auch er bog im Laufschritt in die Einfahrt ein, und jetzt war die Frau schon vor
Angst wie gelähmt, so dass sie nicht einmal mehr schreien konnte. Er aber überreichte ihr lächelnd eine christliche Broschüre und drehte sich um, glücklich, dass er nun wieder einen Sünder mit dem Evangelium erreicht hatte.

Großes Taktgefühl braucht man auch bei Krankenbesuchen. Es ist wenig hilfreich, wenn man sagt: »Ach, Sie sehen aber wirklich krank aus!« Oder: »Ich hab jemanden gekannt, der hatte dasselbe wie Sie, und der ist daran gestorben!« Wer kann wohl diese Art von Trost gebrauchen?

Und noch taktvoller sollten wir sein, wenn wir Besuch in einem Trauerhaus machen. Da sollten wir nicht wie der Texaner sein, der zu der Witwe eines ermordeten Politikers nur sagte: »Nein, wenn man denkt, dass das auch ausgerechnet in Texas passieren musste!«

Gott segne jene ausgezeichneten Heiligen, die anscheinend immer wissen, welches gütige und richtige Wort im jeweiligen Augenblick angebracht ist. Und Gott möge uns allen beibringen, wie wir taktvoll werden können, anstatt uns taktlos und tollpatschig zu benehmen.