November

சுய ஆதாயத்திற்காக வேதத்தைப் புரட்டுதல்

November 16

“…they that are unlearned and unstable wrest…the Scriptures, unto their own destruction.” (2 Peter 3:16b)

Dr. P. J. Van Gorder used to tell about a sign over a woodworker’s shop which said, “All kinds of twisting and turning done here.” It is not only woodworkers that are good at that; many professing Christians twist and turn the Scriptures when it suits them. Some, as our verse says, even wrest the Scriptures to their own destruction.

We are all fairly expert at rationalizing, i.e., at excusing our sinful disobedience by giving creditable explanations or assigning worthy motives to our actions. We often try to bend the Scriptures to suit our behavior. We give plausible but untrue reasons for our conduct or attitudes. Here are some examples.

A Christian businessman knows that it is wrong for him to go to law against another believer (1 Cor. 6:1-8). Yet when he is challenged about it, he says, “Yes, but he was definitely wrong, and the Lord doesn’t want him to get away with it.”

Jane is planning to marry John, even when she knows he is not a believer. When a Christian friend reminds her that this is forbidden by 2 Corinthians 6:14, she says, “Yes, but the Lord told me to marry him so I can lead him to Christ.”

Glen and Ruth profess to be Christians, yet they are living together without being married. When a friend of Glen pointed out that this was fornication and that no fornicator will inherit the kingdom of God (1 Cor. 6:9, 10), Glen replied, “That’s what you say. We are deeply in love with one another, and in God’s sight we are married.” Here is a Christian family living in luxury and splendor, in spite of Paul’s admonition that we should live simply, being content with food and covering (1 Tim. 6:8). They justify their lifestyle with the pat answer, “There’s nothing too good for the people of God.”

Or here is a covetous businessman, greedily amassing all the wealth he can. His philosophy is, “There’s nothing the matter with money. It’s the love of money that’s the root of all evil.” It never occurs to him that he might be guilty of loving money.

Men try to put a better interpretation on their sins than the Scriptures allow. And when they are determined to disobey the Word, one excuse is as good (or bad) as another.

நவம்பர் 16

கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேத வாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்கு கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள். 2.பேதுரு 3:16.

சுய ஆதாயத்திற்காக வேதத்தைப் புரட்டுதல்

மரத் தொழிலாளி ஒருவருடைய கடையின் முன்புறம், ‘எல்லாத் திருப்பு வேலைகளும், திருகல் வேலைகளும் செய்யப்படும்” என்ற பெயர்பலகை தொங்கவிடப்பட்டிருந்தது. இதனை அவ்வப்போது முனைவர் P. J. வான் கோர்டர் என்பார் சுட்டிக் காட்டுவதுண்டு. இந்த வேலையைத் மரத் தொழிலாளிகள் மட்டும் சிறப்பாகச் செய்கிறதில்லை, தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அறிக்கை செய்கிற பலர் வேதத்தைத் தங்களுக்கு உகந்தபடி திரித்தும், திருப்பியும் கூறுவர். இன்றைய வசனத்தில் காண்கிறபடி, சிலர் வேத வாக்கியங்களைத் தங்களுக்கு கேடுவரத்தக்கதாகப் புரட்டுகின்றனர்.

நடந்த நிகழ்ச்சிகளை நியாயப்படுத்திக் கூறுவதில் நாம் அனைவரும் நிபுணர்களாயிருக்கிறோம். அதாவது, நம்புவதற்கேற்ற விளக்கங்களைக் கூறியோ, தகுந்த நோக்கங்களைக் கற்பித்தோ நமது பாவத்தோடு கூடிய கீழ்ப்படியாமையை நியாயப்படுத்துகிறோம். நமது நடத்தைக்கு உகந்த வண்ணம் வேத வசனங்களை வளைத்து விட முயற்சி செய்கிறோம். நம்முடைய நடத்தைகளும், நோக்கங்களும் உண்மையற்றதாயிருப்பினும் சரியானது போன்று தோற்றமளிக்கும்படி காரணங்களைக் கூறுவோம். சில எடுத்துக்காட்டுக்களை இங்கே தருகிறேன்.

ஒரு கிறிஸ்தவ வணிகர் வேறொரு கிறிஸ்தவ வணிகருக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார். அவ்வாறு வழக்கு தொடர்வது தவறு என்பதையும் அவர் அறிவார். (1.கொரி.6:1-8). ஆனாலும் இதைக் குறித்து அவரிடம் கேட்டபோது, ‘ஆம், இது நிச்சயமாகத் தவறுதான். இருந்தாலும் இதிலிருந்து அவர் எளிதில் தப்பிச் செல்ல கர்த்தர் விரும்பவில்லை” என்று விடை பகிர்ந்தார்.

ஜேன் தான் விரும்புகிற ஜான் விசுவாசியில்லையென்பதை அறிந்தும், அவனை மணந்துகொள்ளத் தீர்மானித்தாள். 2.கொரி.6:14 இல் இப்படிப்பட்ட திருமணம் தடைசெய்யப்பட்டிருக்கிறது என்பதைக் கூறி இடித்துரைத்தபோது அவள் ‘ஆம், இதை அறிவேன். ஆனாலும் நான் அவனைத் திருமணம் செய்து கொண்டு கிறிஸ்துவிடத்தில் வழிநடத்த வேண்டும் என்று கர்த்தர் என்னிடம் கூறினார்“ என்று பதில் கூறினாள்.

கிளன் மற்றும் ரூத், தாங்கள் கிறிஸ்தவர்கள் என்று அறிக்கை செய்கின்றனர். ஆனாலும் அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமலே கூடி வாழ்கின்றனர். அவ்வாறு வாழ்வது விபச்சாரம் என்றும் விபச்சாரர் தேவனுடைய இராஐ;யத்தைச் சுதந்தரிக்க மாட்டார்கள் என்றும் ஒரு நண்பன் சுட்டிக் காட்டினார் (1.கொரி.6:9,10). ‘நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள். நாங்கள ஒருவரையொருவர் ஆழ்ந்து நேசிக்கிறோம். தேவனுடைய பார்வையில் நாங்கள் திருமணம் செய்து கொண்டவர்களாக காணப்படுகிறோம்” என்று கிளன் பதில் உரைத்தார். சுகபோகத்திலும், ஆடம்பரத்திலும் வாழ்கின்ற இன்னொரு கிறிஸ்தவ குடும்பத்தைப் பாருங்கள். ‘உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்” என்று பவுல் எளிமையான முறையில் வாழவேண்டுமென்று எச்சரித்துள்ளார் (1.தீமோ.6:8). ‘தேவனுடைய மக்கள் அனுபவிக்கக் கூடாதது ஒன்றுமில்லை” என்று பொருத்தமான பதிலைக் கூறி தங்களுடைய நடத்தையை அவர்கள் நியாயப்படுத்துகின்றனர்.

பேராசையின் மிகுதியினால் தன்னால் முடிந்த மட்டும் செல்வத்தைச் சேகரித்தார் ஒரு தொழிலதிபர். அவருடைய தத்துவம், ‘பணத்தைப் பற்றி ஒன்றுமில்லை. பண ஆசையே எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது” என்பதாகும். தனக்கு மிகுந்த பண ஆசை இருக்கிறது என்ற குற்ற உணர்வு அவருக்கு ஏற்படவேயில்லை.

தங்களுடைய பாவத்தைச் சுட்டிக் காட்டும் வசனங்களுக்குச் சாமர்த்தியமாக தகுந்த விளக்கமளிக்க மனிதர்கள் முற்படுகின்றனர். திருமறை வசனத்திற்குக் கீழ்படியக் கூடாது என்று அவர்கள் முடிவு செய்யும்போது, நல்லபல (கெட்ட) காரணங்களைக் கூறுகிறார்கள்.

16. November

»… was die Unwissenden und Unbefestigten verdrehen, wie auch die übrigen Schriften zu ihrem eigenen Verderben.« 2. Petrus 3,16b

Dr. P.J.Van Gorder erzählte öfter von einem Schild, das er über einem Schreinergeschäft entdeckt hatte und auf dem stand: »Hier werden Drechsel- und Schleifarbeiten aller Art ausgeführt.« Nicht nur Schreiner sind gut in diesem Handwerk; viele bekennende Christen drechseln und schleifen auch an Schriftstellen herum, wie es ihnen gerade passt. Und manche verdrehen sie sogar zu ihrem eigenen Verderben, wie unser Bibelvers heute sagt.

Wir sind alle recht gut im Rationalisieren, das heißt wir können unseren sündhaften Ungehorsam sehr gut entschuldigen, indem wir glaubhafte Erklärungen dafür abgeben oder ehrenwerte Motive für unser Handeln nennen. Oft versuchen wir auch, Schriftstellen umzudeuten, damit sie zu unserem Verhalten passen. Wir geben verständliche, aber unwahre Gründe für unsere Taten oder Einstellungen an. Hier seien nur ein paar Beispiele dafür genannt.

Ein christlicher Geschäftsmann weiß sehr gut, dass es unrecht ist, wenn er gegen einen anderen Gläubigen vor Gericht zieht (siehe dazu 1. Korinther 6,1-8). Doch wenn er es doch tut und deswegen zur Rede gestellt wird, dann sagt er: »Ja, ich weiß, aber der andere hatte offensichtlich Unrecht, und der Herr will doch nicht, dass der einfach so davonkommt!«

Helga hat die Absicht, Harald zu heiraten, auch wenn sie weiß, dass er nicht gläubig ist. Als eine christliche Freundin sie daran erinnert, dass das nach 2. Korinther 6,14 verboten ist, sagt sie: »Ja, das stimmt schon; aber der Herr hat mir gesagt, ich sollte ihn heiraten, damit ich ihn zu Jesus führen kann.«

Horst und Ruth sagen, dass sie Christen sind, und doch leben sie zusammen, ohne miteinander verheiratet zu sein. Als ein Freund von Horst darauf hinweist, dass das nach der Bibel Unzucht ist und dass kein Unzüchtiger das Reich Gottes erben wird (siehe 1. Korinther 6,9.10), erwidert Horst: »So siehst du das. Aber wir lieben uns doch sehr, und in Gottes Augen sind wir deshalb längst verheiratet.« Oder da ist eine christliche Familie, die in Glanz und Gloria lebt trotz der Ermahnung des Paulus, dass wir einfach leben und mit Essen und Kleidung zufrieden sein sollen (siehe 1. Timotheus 6,8). Diese Leute rechtfertigen aber ihren Lebensstil mit der unbekümmerten Antwort: »Für das Volk Gottes ist nur das Beste gut genug.«

Oder nehmen wir einen habsüchtigen Geschäftsmann, der gierig jeden Besitz ansammelt, den er nur bekommen kann. Seine Philosophie ist die folgende: »Am Geld an sich ist gar nichts Schlimmes. Nur die Liebe zum Geld ist die Wurzel allen Übels.« Und es fällt ihm nicht im Traum ein, dass diese Liebe zum Geld etwa seine eigene Sünde sein könnte.

Die Menschen versuchen immer, ihre Sünden besser und günstiger zu interpretieren, als die Heilige Schrift es erlaubt. Und wenn sie entschlossen sind, dem Wort Gottes ungehorsam zu sein, dann ist für sie eine Entschuldigung so gut (oder so schlecht) wie die andere.