November

கிறிஸ்தவனின் தகுதிநிலையும் நடைமுறைப் பண்பும்

November 14

“Whosoever will be great among you, let him be your minister; and whosoever will be chief among you, let him be your servant.” (Matthew 20:26, 27)

There are two kinds of greatness in the New Testament and it is helpful to distinguish them. There is a greatness associated with one’s position and another greatness linked with one’s personal character.

In speaking of John the Baptist, Jesus said that there was no greater prophet than he (Luke 7:28). Here the Savior was speaking about the greatness of John’s position. No other prophet had the privilege of being the forerunner of the Messiah. It does not mean that John had a better character than any of the Old Testament prophets, but only that his was the unique assignment of introducing the Lamb of God who takes away the sin of the world.

In John 14:28, Jesus said to the disciples, “My Father is greater than I.” Did He mean that His Father was greater personally? No, because all members of the Godhead are equal. He meant that the Father was enthroned in heavenly glory whereas He Himself was being despised and rejected by men on earth. The disciples should have rejoiced to know that Jesus was going back to the Father because then He would have the same glorious position as the Father.

All believers enjoy a great position by reason of their identification with the Lord Jesus. They are sons of God, heirs of God and joint heirs with Jesus Christ.

But then the New Testament also speaks of personal greatness. For instance, in Matthew 20:26, 27, Jesus said, “Whosoever will be great among you, let him be your minister; and whosoever will be chief among you, let him be your servant.” The greatness here is a greatness of personal character, demonstrated by a life of service to others.

Most men of the world are interested only in greatness as far as their position is concerned. The Lord Jesus referred to this when he said, “The kings of the Gentiles exercise lordship over them; and they that exercise authority upon them are called benefactors” (Lu. 22:25). But as far as their personal character is concerned, they may be utterly devoid of greatness. They may be adulterers, embezzlers and alcoholics.

The Christian realizes that positional greatness without greatness of character is worthless. It’s what’s inside a person that counts. The fruit of the Spirit is more important than a high place on the corporate ladder. It’s better to be listed among the saints than among the stars.

நவம்பர் 14

உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். மத்தேயு 20:26-27.

கிறிஸ்தவனின் தகுதிநிலையும் நடைமுறைப் பண்பும்

புதிய ஏற்பாட்டில் இரண்டு வகையான மேன்மைகள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றை நாம் வேறுபடுத்திக் காண்பது பயனுள்ளதாக இருக்கும். ஒன்று ஒருவரது கிறிஸ்துவுக்குள்ளான தகுதி நிலையைச் சார்ந்த மேன்மையாகும். மற்றதோ அவருடைய நடைமுறையைச் சார்ந்த மேன்மையாகும்.

யோவான் ஸ்நானகனைக் குறித்துப் பேசும்போது இயேசு கிறிஸ்து, ‘யோவான் ஸ்நானகனைப் பார்க்கிலும் பெரிய தீர்க்கதரிசி ஒருவனுமில்லை” என்று கூறினார். (லூக்.7:28). யோவான் ஸ்நானகனின் மேன்மையை இங்கு நமது இரட்சகர் குறிப்பிடுகிறார். மேசியாவிற்கு முன்னோடியாக விளங்கக் கூடிய சிலாக்கியத்தை வேறு எந்தத் தீர்க்கதரிசியும் பெறவில்லை. பழைய ஏற்பாட்டுத் தீர்;க்கதரிசிகள் எல்லோரைக் காட்டிலும் யோவான் சிறந்த குணநலம் படைத்தவன் என்று இதற்குப் பொருள் கிடையாது. ஆயினும் உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியை அறிமுகப்படுத்தும் தனிச் சிறப்புள்ள அலுவலை எவரும் பெறவில்லை என்பதே இதன் பொருளாகும்.

யோவான் 14:28 இல் ‘என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்” என்று இயேசு கிறிஸ்து தமது சீடர்களிடம் கூறினார். தனிப்பட்ட முறையில் அவருடைய பிதா அவரிலும் பெரியவர் என்பதுதான் இதன் பொருள்? இல்லை, தேவத்துவத்தில் மூவரும் இணையானவர்கள். பிதா பரலோகத்தில் முடிசூட்டப்பட்டவராக இருந்தார் என்பதும், கிறிஸ்துவோ உலக மனிதர்களால் நிராகரிக்கப்பட்டவராகவும் இழிவுபடுத்தப்பட்டவராகவும் இருந்தார் என்பதும் அவர் கூற்றின் பொருளாகும். தமது பிதாவினிடத்திற்கு அவர் மீண்டும் செல்வதைக் குறித்துச் சீடர்கள் கேட்டபோது, பிதா கொண்டிருந்த அதே மகிமையின் ஸ்தானத்தை இயேசு கிறிஸ்துவும் பெற்றிடுவார் என்று அறிந்து மகிழ்ந்திருக்க வேண்டும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு இணைந்துள்ள நிலையில் தாங்கள் பெற்றிருக்கிற மேன்மையான தகுதி நிலையை எல்லா விசுவாசிகளும் அனுபவித்து மகிழ்கின்றனர். அவர்கள் தேவனுடைய பிள்ளைகளும் தேவனுடைய சுதந்திரரும் இயேசு கிறிஸ்துவின் உடன் சுதந்திரருமாக இருக்கின்றனர்.

மேலும், தனிப்பட்ட மேன்மையைப் பற்றியும் புதிய ஏற்பாடு பேசுகிறது. எடுத்துக்காட்டாக, மத்தேயு 20:26,27 ஆகிய வசனங்களில் இயேசு கிறிஸ்து, ‘உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்” என்று கூறினார். இங்கே சொல்லப்பட்டிருக்கிற மேன்மை தனிப்பட்ட மனிதனுக்குரிய நடைமுறையைச் சார்ந்த மேன்மையாகும். பிறருக்காக அவர் தனது வாழ்க்கையில் ஆற்றுகிற பணியினால் இதனை ஒருவர் வெளிப்படுத்திக் காட்டுகிறார்.

கிறிஸ்துவுக்குள்ளான தகுதி நிலையின் அடிப்படையில் பெற்றிருக்கிற மேன்மையைக் குறித்தே, கிறிஸ்தவர்களில் பலர் ஆர்வம் உடையவர்களாயிருக்கின்றனர். “புறஜாதியாரின் ராஜாக்கள் அவர்களை ஆளுகிறார்கள், அவர்கள்மேல் அதிகாரம் செலுத்தகிறவர்களும் உபகாரிகள் என்னப்படுகிறார்கள்” என்று இயேசு கிறிஸ்து உரைத்தபோது, இதனையே குறிப்பட்டார் (லூக்.22:25). ஆனால், அவர்களுடைய தனிநபர் சார்ந்த பண்பு, அத்தகைய மேன்மை கொண்டதாக இல்லை. அவர்கள் ஒழுக்கங் கெட்டவர்களாகவும், பிறர் செல்வத்தை கொள்ளையிடுகிறவர்களாகவும் குடிகாரர்களாகவும் இருந்தனர்.

ஒருவர் கிறிஸ்துவுக்குள்ளான தகுதிநிலையைச் சார்ந்த மேன்மையைப் பெற்றிருந்தும் அவரது நடைமுறைப் பண்பு மேன்மையற்றதாயிருக்குமானால் அதில் சிறப்பில்லை என்பதைக் கிறிஸ்தவன் உணர்ந்திருக்கிறான். ஒருவனுடைய உள்ளாந்த நிலையே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். சமுதாய உயர்வைக் காட்டிலும் ஆவியின் கனியே மிகவும் இன்றியமையாதது. புகழ்பெற்ற மனிதர்களில் ஒருவராகக் காணப்படுவதிலும், பரிசுத்தவான்களில் ஒருவராக விளங்குவதே சாலவும் சிறந்தது.

14. November

»Wenn jemand unter euch groß werden will, wird er euer Diener sein, und wenn jemand unter euch der Erste sein will, wird er euer Sklave sein.« Matthäus 20,26.27

Es gibt zwei Arten von Größe im Neuen Testament, und es ist hilfreich, wenn man sie gut voneinander unterscheidet. Die eine Größe hat mit der Stellung eines Menschen zu tun und die andere mit seinen persönlichen Charaktermerkmalen.

Als Jesus von Johannes dem Täufer sprach, sagte er einmal, dass es keinen größeren Propheten gäbe als ihn (siehe Lukas 7,28). Da sprach der Heiland von der Größe, die in der Stellung des Johannes lag. Kein anderer Prophet hatte das Vorrecht, der direkte Vorläufer des Messias zu sein. Das heißt aber nicht, dass Johannes einen besseren Charakter gehabt hätte als irgendeiner der alttestamentlichen Propheten, sondern nur, dass er die einzigartige Aufgabe hatte, das Lamm Gottes vorzustellen, das die Sünde der Welt hinwegnimmt.

In Johannes 14,28 sagte Jesus zu seinen Jüngern: »Der Vater ist größer als ich.« Meinte Er damit, dass Sein Vater eine großartigere Persönlichkeit war? Nein, denn alle drei Personen der Gottheit sind ja gleich. Er wollte vielmehr damit sagen, dass der Vater in himmlischer Herrlichkeit thronte, während Er selbst von den Menschen auf der Erde verachtet und abgelehnt wurde. Die Jünger hätten sich eigentlich freuen sollen, als sie erfuhren, dass Jesus zurück zu Seinem Vater gehen wollte, weil Er ja dann wieder die gleiche herrliche Stellung bekommen würde wie Sein Vater.

Alle gläubigen Menschen haben eine großartige Stellung vor Gott, weil sie von Gott in dem Herrn Jesus gesehen werden. Sie sind Kinder Gottes, Erben Gottes und Miterben Jesu Christi.

Aber das Neue Testament spricht auch von persönlicher Größe. Beispielsweise sagt Jesus in Matthäus 20,26.27: »Wenn jemand unter euch groß werden will, wird er euer Diener sein, und wenn jemand unter euch der Erste sein will, wird er euer Sklave sein.« Hier ist die Größe des persönlichen Charakters gemeint, die sich gerade in einem Leben des Dienstes für andere sichtbar zeigt.

Die meisten Menschen dieser Welt sind nur an der Größe interessiert, die sich in der äußeren Stellung ausdrückt. Der Herr Jesus meinte das, als Er sagte: »Die Könige der Nationen herrschen über sie, und die Gewalt über sie üben, lassen sich Wohltäter nennen« (Lukas 22,25). Aber was ihren persönlichen Charakter angeht, fehlt ihnen vielleicht jede Größe. Sie sind möglicherweise Ehebrecher, Betrüger und Alkoholiker.

Der Christ erkennt, dass Größe in Bezug auf die soziale Stellung ohne wahre Größe des Charakters völlig wertlos ist. Das, was sich in einem Menschen abspielt, zählt allein. Die Frucht des Heiligen Geistes ist wichtiger als ein erhöhter Platz auf der Karriereleiter. Es ist viel besser, in der Liste der Heiligen vorzukommen als in der Liste der absoluten Stars.