November

குடும்பத்தில் சாட்சி

November 7

“Go home to thy friends, and tell them how great things the Lord hath done for thee, and hath had compassion on thee.” (Mk. 5:19)

When we are first saved, we think it is so simple, so wonderful that all our relatives will want to believe on the Savior when we tell them. Instead we find in some cases that they are resentful, suspicious and hostile. They act as if we had betrayed them. Finding ourselves in such an atmosphere, we often respond in ways that actually hinder their coming to Christ. Sometimes we lash back at them, then become distant, moody and withdrawn. Or we criticize them for their unChristian lifestyle, forgetting that they do not have the divine power necessary for meeting Christian standards. It is easy under such circumstances to give them the impression that we consider ourselves superior to them. Since they are likely to accuse us of a “holier than thou” attitude anyway, we should carefully avoid giving them just cause for doing so.

Another mistake we often make is to force the Gospel down their throats. In our love for them and our zeal for their souls, we estrange them by our offensive evangelism.

One thing leads to another. We fail to show loving submission to our parents, as if our Christian faith released us from any obligation to obey them. Then we increasingly absent ourselves from home, spending the time at church services and with Christians. This, in turn, increases their resentment against church and Christians. When Jesus healed the demoniac, Legion, He told him to go home and tell his friends what great things the Lord had done for him. That is the first thing we should do—give a simple, humble, loving testimony of our conversion.

Then this should be coupled with the witness of a changed life. We should let our light so shine before them that they will see our good works, and glorify our Father in heaven (Mt. 5:16).

This will mean showing new honor, submission, love and respect for our parents, taking their advice unless it conflicts with Scripture. We should be more helpful at home than we have ever been before – cleaning our room, washing dishes, taking out the trash—and all this without being asked.

It will mean taking criticism patiently without retaliating. They will be pleasantly stunned by our spirit of brokenness, especially if they have never seen it before. Little kindnesses help break down opposition—letters of appreciation, greeting cards, phone calls and gifts. Instead of cutting ourselves off from our parents, we should spend time with them in an effort to strengthen relationships. Then they will be more likely to accept an invitation to attend church with us—and eventually to commit themselves to the Lord Jesus Christ.

நவம்பர் 7

நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்குப்போய், கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவி. மாற்கு 5:19.

குடும்பத்தில் சாட்சி

நாம் இரட்சிக்கப்பட்ட சமயத்தில், இவ்வளவு எளிமையானதும் ஆச்சரியமானதுமான நற்செய்தியை நமது உறவினர்களிடம் பகிர்ந்து கொண்டால் நிச்சயமாக அவர்கள் இரட்சகரை ஏற்றுக்கொள்வார்கள் என்று எண்ணினோம். ஆனால் அவர்களோ அதற்கு மாறாகச் சினங்கொள்ளவும், சந்தேகிக்கவும், பகைக்கவும், செய்கின்றனர். நாம் ஏதோ அவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டதாக நடந்து கொள்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், அவர்கள் கிறிஸ்துவிடம் வருவதற்குத் தடையாக நடந்து கொள்கிறோம். சிலவேளைகளில் நாம் கடுமையான சொற்களால் திருப்பித் தாக்குகிறோம். அவர்களை விட்டு தூரமாகச் சென்றுவிடுகிறோம். அவர்களிடம் சிடுசிடுப்பாக நடந்துகொள்கிறோம். அல்லது நமது நோக்கத்தைக் கைவிட்டு விடுகிறோம். கிறிஸ்தவர்களுக்கான தகுதியைக் கடைப்பிடிக்க அவர்களிடம் தெய்வீக வல்லமை இல்லை என்பதை மறந்து போனவர்களாக, அவர்களது நடத்தை கிறிஸ்தவர்களுக்கு ஏற்றதாக இல்லையென்று அவர்களைக் குற்றப்படுத்துகிறோம். இவ்வாறு நடந்து கொள்வதால், அவர்களைக் காட்டிலும் நாம் மேலானவர்கள் என்று நம்மைக் குறித்து நினைக்கிறோம் என்னும் எண்ணம் அவர்களுக்கு உண்டாகிறது. ‘நான் உன்னைக் காட்டிலும் பரிசுத்தவான்” என்னும் மனப்பான்மை உடையவர்களாக இருக்கிறோம் என்று அவர்கள் நம்மைக் குறித்துக் குற்றப்படுத்தாத வகையில் நாம் நடந்து கொள்ள வேண்டும்.

வேறொரு தவறையும் நாம் செய்துவிடுகிறோம். நற்செய்தியை அவர்களது குரல்வளையில் வைத்துத் திணிக்கிறோம். அவர்கள் மீது நாம் கொண்டுள்ள அன்பினாலும், ஆத்தும மீட்பைக்குறித்து நமக்குள்ள வாஞ்சையினாலும், கட்டாய சுவிசேஷத்தை வலிறுத்தி அவர்களுடைய நட்பை இழந்து போகிறோம்.

ஒரு செயல் மற்றொன்றுக்கு வழிவகுக்கிறது. நம்முடைய பெற்றோர்களிடம் நமது அன்போடுகூடிய கீழ்ப்படிதலைக் காட்டுவதில்லை. நமது கிறிஸ்தவ விசுவாசம் அத்தகைய கீழ்ப்படிதலிலிருந்து நம்மை விடுவித்துவிட்டது என எண்ணிக்கொள்கிறோம். சபைக்கூட்டங்களிலும், கிறிஸ்தவ நண்பர்களோடும் அதிகமான நேரத்தைச் செலவிட்டு விட்டில் செலவிடுகிற நேரத்தைக் குறைத்துவிடுகிறோம். சபைக் கூட்டங்களைக் குறித்தும் கிறிஸ்தவர்களைக் குறித்தும் கூடுதலான சினங்கொள்ள இச்செயல் காரணமாகிவிடுகிறது. லேகியோன் என்னும் பிசாசு பிடித்தவனை கிறிஸ்து குணமடைய செய்தபிறகு, அவன் தன் வீட்டுக்குச் சென்று அவனுடைய உறவினர்களிடமும் நண்பர்களிடமும் கர்த்தர் அவனுக்குச் செய்த பெரிய காரியங்களைக் குறித்துச் சொல்லும்படி அவர் கூறினார். அதைத் தான் நாம் செய்ய வேண்டும். நாம் அடைந்த மனமாற்றத்தின் சாட்சியை எளிமையாகவும், தாழ்மையாகவும், அன்போடும் கூறவேண்டும்.

இதனோடுகூட நமது மாற்றமடைந்த வாழ்வின் மூலம் அவர்களுக்குச் சாட்சி பகிரவேண்டும். நம்முடைய வெளிச்சத்தை அவர்களுக்கு முன் பிரகாசிக்கச் செய்து, நம்முடைய நற்செயலை அவர்கள் கண்டு, விண்ணுலகப் பிதாவை மகிமைப்படுத்துவார்கள் (மத்.5:16).

புதிய வகையில் கனத்தையும், கீழ்ப்படிதலையும், அன்புபாராட்டுதலையும் நம் பெற்றோருக்குச் செலுத்துவது என்பதே அதன் பொருளாகும். தேவ வசனங்களுக்கு எதிர்மாறாக இல்லாதிருந்தால் அவர்களுடைய ஆலோசனையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுவரை இல்லாதபடி நமது வீடுகளில் நாம் உதவி செய்கிறவர்களாக இருக்க வேண்டும். நமது அறையைச் சுத்தம் செய்ய வேண்டும். பாத்திரங்களைக் கழுவித்தர வேண்டும். குப்பையை வெளியே சென்று கொட்டி விட்டு வரவேண்டும். இவையெல்லாவற்றையும் அவர்கள் சொல்லாமலே செய்யவேண்டும்.

நமக்கு எதிராகச் செயல்படுகிற குறைகளை, எதிர்த்து நிற்காமல் பொறுமையோடு கேட்பது என்பதும் இதன் பொருளாகும். இதுவரை காணதபடி உள்ளம் நொறுங்கியவர்களாக நாம் செயல்படுவதைக் கண்டு அவர்கள் வியப்படையவும் மகிழவும் செய்வார்கள். சிறிய உதவிகளும்கூட எதிர்ப்பை நொறுக்கிவிடும். பாராட்டுக் கடிதங்கள், வாழ்த்து அட்டைகள், தொலைத்தொடர்பு, பரிசுப்பொருட்கள்,  ஆகியவை பகமை உணர்ச்சிகளை நீங்கச் செய்யும். பெற்றோர்களை விட்டுப் பிரிந்து வாழலாம் என்ற எண்ணத்தைக் கைவிட்டு, அவர்களோடு அதிக நேரத்தைச் செலவிட்டு உறவைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் சபைக்கூட்டங்களுக்கு நீங்கள் அழைப்பு விடுக்கும்போது அதனை ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு பெருகும். இதனுடைய விளைபயனாக அவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிற்கு தங்களை ஒப்புவிக்கவும் செய்ய வாய்ப்புண்டு.

7. November

»Geh in dein Haus zu den Deinen und verkünde ihnen, wie viel der Herr an dir getan und wie er sich deiner erbarmt hat.« Markus 5,19

Wenn wir gerade erst von Gott errettet worden sind, dann meinen wir, der Glaube sei so einfach und so wunderbar, dass auch alle unsere Verwandten bestimmt nichts lieber wollen, als an den Heiland zu glauben, wenn wir ihnen nur davon erzählen. Doch stattdessen stellen wir fest, dass sie beleidigt, misstrauisch oder sogar feindlich reagieren. Ja, sie verhalten sich so, als hätten wir sie betrogen. Und wenn wir uns unversehens in einer solchen Atmosphäre wiederfinden, dann benehmen wir uns oft so, dass wir selbst für unsere Familie ein Hindernis auf dem Weg zu Jesus werden. Manchmal schimpfen wir heftig zurück und gehen dann auf Abstand, werden launisch und einsilbig. Oder wir kritisieren die anderen wegen ihrer unchristlichen Lebensweise und vergessen dabei, dass sie einfach nicht die göttliche Kraft haben, die nötig ist, um christlichen Lebensmaßstäben gerecht zu werden. Unter solchen Umständen kommt es leicht vor, dass unsere
Verwandten den Eindruck gewinnen, wir kämen uns als etwas Besseres vor. Da sie uns wahrscheinlich sowieso vorhalten, wir würden sie immer spüren lassen, dass wir »heiliger wären als sie«, sollten wir sorgfältig vermeiden, ihnen auch noch Gründe für diese Anklage zu liefern.

Ein anderer Fehler, den wir auch oft machen, besteht darin, ihnen das Evangelium gewaltsam einzutrichtern. In unserer Liebe zu ihnen und in unserem Eifer um ihre Seele befremden wir sie eher durch unsere angriffslustigen Evangelisierungsversuche.

Eins führt hier zum anderen. Wir lassen die liebevolle Unterordnung unter die Autorität unserer Eltern vermissen, so als ob unser christlicher Glaube uns von aller Verpflichtung entbunden hätte, Vater und Mutter zu gehorchen. Allmählich sind wir immer häufiger von zu Hause fort und verbringen unsere Zeit in Gottesdiensten und mit anderen Christen aus der Gemeinde. Das aber verstärkt bei unserer Familie nur wieder den Ärger gegen die Gemeinde und die Christen.

Als Jesus den von Dämonen besessenen Gadarener geheilt hatte, sagte Er ihm, er solle nach Hause gehen und den Seinen erzählen, welch große Dinge der Herr an ihm getan hätte. Das ist das Erste, was wir tun sollen; ein einfaches, demütiges, liebevolles Zeugnis von unserer Bekehrung geben.

Und dann sollte das verbunden sein mit dem Zeugnis eines veränderten Lebens. Wir sollen unser Licht leuchten lassen vor den Leuten, damit sie unsere guten Werke sehen und unseren Vater im Himmel preisen (siehe Matthäus 5,16).

Das wird bedeuten, dass wir neue Ehrerbietung, Unterordnung, Liebe und Achtung für unsere Eltern an den Tag legen und dass wir ihren Rat annehmen, solange wir dadurch nicht mit der Heiligen Schrift in Konflikt geraten. Wir sollten zu Hause auch mehr mithelfen, als wir es früher getan haben; beim Saubermachen unseres Zimmers, beim Abwaschen, beim Mülleimerwegbringen;
und all das, ohne dass man uns erst lange darum gebeten hat.

Anstatt uns von unserer Familie völlig zu trennen, sollten wir mehr Zeit mit ihr verbringen in dem Bemühen, unsere Beziehungen zu stärken. Dann werden die »Unsrigen« viel eher die Einladung annehmen, einmal mit uns zum Gottesdienst zu gehen, und sich schließlich vielleicht sogar an den Herrn Jesus Christus ausliefern.