November

பரம சீயோன்

November 6

“Therefore the redeemed of the Lord shall return, and come with singing unto Zion; and everlasting joy shall be upon their head: they shall obtain gladness and joy; and sorrow and mourning shall flee away.” (Isa. 51:11)

In its setting, this prophecy of Isaiah looked forward to the joyous return of God’s chosen people from their seventy-year captivity in Babylon.

It may also refer to Israel’s still-future restoration when the Messiah will regather them to the land from all over the world. That too will be a time of great jubilation.

But in its widest sense, we are justified in applying the verse to the rapture of the Church. Awakened by the shout of the Lord, the voice of the archangel, and the trump of God, the bodies of the redeemed of all the ages will rise from the grave. Living believers, changed in a moment, will join them as they ascend to meet the Lord in the air. Then begins the grand processional to the Father’s house.

It is quite possible that the entire route will be flanked by angelic hosts. At the head of the procession will be the Redeemer Himself, flushed with His glorious victory over death and the grave. Then come the ransomed throng, some from every tribe, tongue, people and nation. Ten thousand times ten thousand and thousands of thousands, they are singing with all musical perfection, “Worthy is the Lamb that was slain to receive power, and riches, and wisdom, and strength, and honour, and glory, and blessing.”

Every one in the multitude is a trophy of God’s wonderful grace. Each was ransomed from sin and shame, and made a new creature in Christ Jesus. Some went through deep suffering for their faith, others laid down their lives for the Savior. But now all the scars and mutilations are gone, and the saints have their deathless, glorified bodies.

Abraham and Moses are there, David and Solomon. There are the beloved Peter, James, John and Paul. Martin Luther, John Wesley, John Knox and John Calvin are there. But they are no more conspicuous now than God’s hidden ones, unknown on earth, yet well-known in heaven.

Now the saints are marching into the King’s palace. Sorrow and sighing are gone forever, and everlasting joy is on their heads. Faith has become sight and hope has received its long-awaited consummation. Loved ones greet each other with fervent embraces. Overflowing gladness prevails. Everyone is awed by the amazing grace that has brought them from the depths of sin to such heights of glory.

நவம்பர் 6

கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் ஆனந்த களிப்புடன் பாடி சீயோனுக்குத் திரும்பி வருவார்கள். நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேல் இருக்கும். சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள். சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம். ஏசாயா:51:11.

பரம சீயோன்

தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட மக்கள், பாபிலோன் நாட்டில் எழுபது ஆண்டுகள் அடிமைகளாக வாழ்ந்து, பின்னர் மகிழ்ச்சியோடு தங்களுடைய சொந்த நாட்டிற்குத் திரும்பி வரப்போவதை ஏசாயாவின் இந்தத் தீர்;க்கதரிசனம் சித்தரித்துக் காட்டுகிறது.

எதிர்காலத்தில், உலகத்தின் எல்லாத் திசைகளிலிருந்தும் இஸ்ரவேல் நாட்டினர் மீண்டும் மேசியாவினால் சொந்த தேசத்திற்கு வரவழைக்கப்பட இருக்கிறார்கள் என்பதை இது குறிக்கிறது என்று கூறலாம். அந்த நாட்களும் ஆனந்தக் களிப்பு மிகுந்த காலமாகும்.

இந்தச் சொற்கள் மிகவும் விசாலமான பொருளில், சபை எடுத்துக்கொள்ளப்படுவதைக் குறிக்கின்றன என்போமாயின் அதுவும் சரியே. கர்த்தருடைய ஆரவாரம், பிரதான தூதருடைய சத்தம், தேவ எக்காளம் ஆகியவற்றால், எல்லாக் காலத்திற்கும் உரிய கிறிஸ்துவிற்குள் மீட்க்கப்பட்டோருடைய சடலங்கள் விழிப்படைந்து கல்லறையிலிருந்து உயிருடன் எழுந்திருக்கும். உயிரோடு இருக்கிற விசுவாசிகள் யாவரும் ஒரு நொடிப் பொழுதில் மறுரூபம் அடைந்து, அவர்களோடு சேர்ந்து கர்த்தரைச் சந்திக்க ஆகாயத்திலே எடுத்துக்கொள்ளப்படுவர். பின்னர் திருத்தந்தையின் வீட்டை நோக்கி மாபெரும் அணிவகுப்பு செல்லும்.

அணிவகுப்பு பாதையின் இருபுறமும் தேவ தூதர்களின் பெருங்கூட்டம் நிற்கும் என்பதில் ஐயமில்லை. ஊர்வலத்தின் தொடக்கத்தில் மீட்பரே தலைவராக விளங்குவார். மரணத்தையும் பாதாளத்தையும் வென்று மகிமையுள்ளவராக அவர் திகழ்வார். மீட்க்கப்பட்டோரின் திரளான கூட்டம் அவரைப் பின்தொடரும். ஒவ்வொரு இனத்திலிருந்தும், மொழியிலிருந்தும், ஜனங்களிலிருந்தும், நாட்டிலிருந்தும், மக்கள் திரண்டு வருவார்கள். அவர்களது எண்ணிக்கை பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரம் ஆயிரமாகவும் இருக்கும். நிறைவான இசையோடு அவர்கள் ‘அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும், ஞானத்தையும், பெலத்தையும், கனத்தையும், மகிமையையும், ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராக இருக்கிறார்” என்று பாடுவார்கள்.

திரள்கூட்டத்தில் இருக்கும் ஒவ்வொருவரும், தேவனுடைய வியத்தகு கிருபையின் வெற்றிச் சின்னமாக விளங்குவார்கள். பாவத்திலிருந்தும் அவமானத்திலிருந்தும் ஒவ்வொருவரும் மீட்கப்பட்டு, கிறிஸ்து இயேசுவுக்குள் புதுப்படைப்பாக இருப்பார்கள். தங்களுடைய விசுவாசத்தின் பொருட்டு, சிலர் ஆழ்ந்த வேதனைக்குள்ளாக கடந்து சென்றிருப்பார்கள். இரட்சகருக்காகச் சிலர் தங்களுடைய வாழ்வை ஒப்புவித்திருப்பார்கள். இப்பொழுதே அவர்கள் அடைந்த தழும்புகளும், உடற்பாதிப்புக்களும் மறைந்து விட்டன. பரிசுத்தவான்கள் யாவரும் சாவு இல்லாத மகிமைக்குரிய சரீரங்களைப் பெற்றவராயிருப்பர்.

ஆபிரகாம் மோசே, தாவீது, சாலோமோன் யாவரும் அங்கே இருப்பார்கள். பிரியமான பேதுரு, யாக்கோபு, யோவான், பவுல், யாவரும் அங்கே இருப்பார்கள். மார்டின் லூத்தர், ஜான் வெஸ்ஸி, ஜான் நாக்ஸ், ஜான் கால்வின், அனைவரும் இருப்பார்கள் என்றாலும் அவர்கள் அங்கே தனிச்சிறப்பு வாய்ந்தவர்களாயிருக்க மாட்டார்கள். உலகத்திலே அறிமுகமின்றி தேவனுக்குள் மறைந்து வாழ்ந்தவர்களும் அவர்களைப் போலவே பரலோகில் நன்கு அறியப்பட்டவர்களாகயிருப்பர்.

இப்பொழுது இராஜாவின் மாளிகைக்குள் பரிசுத்தவான்கள் அனைவரும் செல்வார்கள். வருத்தமும் சஞ்சலமும் என்றென்றைக்குமாக மறைந்து போகும். நித்திய மகிழ்ச்சி அவர்கள்மேல் தங்கும். விசுவாசம் காணக்கூடியதாகவும், நம்பிக்கை நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த நிறைவையும் பெறும். பிரியமானவர்கள் ஒருவரையொருவர் வாழ்த்தி ஆர்வத்துடன் தழுவிக்கொள்வர். பொங்கி வழியும் மகிழ்ச்சி மேலோங்கிக் காணப்படும். பாவத்தின் ஆழத்திலிருந்து மகிமையின் உன்னதத்திற்குக் கொண்டுவந்த வியத்தகு கிருபையை எண்ணி பயபக்தியோடு யாவரும் திகைத்து நிற்பர்.

6. November

»Und die Befreiten des Herrn werden zurückkehren und nach Zion kommen mit Jubel, und ewige Freude wird über ihrem Haupt sein. Sie werden Wonne und Freude erlangen, Kummer und Seufzen werden entfliehen.» Jesaja 51,11

In ihrem Textzusammenhang lässt diese Prophezeiung Jesajas die Vorfreude auf die fröhliche Rückkehr des auserwählten Gottesvolkes aus der siebzigjährigen Gefangenschaft in Babylon aufleuchten.

Aber man kann es auch auf die spätere Zukunft hin deuten, auf die Wiederherstellung Israels, wenn der Messias es von überall in der Welt ins Land zurückführen wird. Auch das wird eine Zeit des großen Jubels sein.

Doch im weitesten Sinne sind wir auch berechtigt, diesen Vers auf die Entrückung der Gemeinde Jesu zu beziehen. Die Leiber der Erlösten aus allen Zeitaltern werden dann aus ihren Gräbern auferstehen, erweckt durch den Ruf ihres Herrn, die Stimme des Erzengels und die Trompete Gottes. Die lebenden Gläubigen, die von einem auf den anderen Augenblick verwandelt worden sind, werden sich ihnen zugesellen, wenn sie emporsteigen, um dem Herrn in der Luft zu begegnen. Und dann beginnt der große Festzug zum Vaterhaus.

Es ist durchaus möglich, dass der ganze Weg von den Heerscharen der Engel gesäumt ist. An der Spitze des Zuges wird der Erlöser selbst gehen, strahlend durch Seinen ruhmreichen Sieg über den Tod und das Grab. Dann kommt die Menge der Freigekauften, einige aus jedem Stamm, jeder Sprache, jedem Volk und jeder Nation. Zehntausende mal Zehntausende und Tausende mal Tausende werden es sein, und alle singen im vollkommensten Wohlklang: »Würdig ist das Lamm, das geschlachtet worden ist, zu empfangen die Macht und Reichtum, Weisheit und Stärke und Ehre, Herrlichkeit und Lobpreis.«

Jeder Einzelne in der Menge ist ein Siegeszeichen für Gottes wunderbare Gnade. Jeder ist von Sünde und Schande losgekauft und in Jesus Christus zu einer neuen Schöpfung geworden. Manche sind für ihren Glauben durch tiefes Leiden gegangen, andere haben ihr Leben für den Heiland gelassen. Aber nun sind die Narben und Verstümmelungen vergangen, und die Heiligen
haben alle einen unsterblichen, verherrlichten Körper bekommen.

Abraham und Mose sind dabei, David und Salomo. Da sind auch die vom Herrn geliebten Jünger Petrus, Jakobus, Johannes und Paulus. Martin Luther, John Wesley, John Knox und Johannes Calvin ziehen mit. Aber sie sind jetzt nicht auffälliger als die verborgenen Leute Gottes, die auf Erden unbekannt, aber im Himmel stets wohlbekannt waren.

Und jetzt ziehen die Heiligen in den Königspalast ein. Sorgen und Seufzen sind für alle Ewigkeit vorbei, und immer währende Freude wartet auf sie. Der Glaube ist sichtbar geworden, und die Hoffnung hat ihre lang erwartete Vollendung gefunden. Menschen, die sich lieben, grüßen sich und liegen sich glücklich in den Armen. Überströmende Freude herrscht überall. Und jeder staunt voller Ehrfurcht über die Gnade, die ihn aus den Tiefen der Sünde zu solchen Höhen der Herrlichkeit emporgebracht hat.