May

சுவிசேஷத்தின் புதுமை

May 20

“…no man putteth new wine into old bottles; else the new wine will burst the bottles, and be spilled, and the bottles shall perish. But new wine must be put into new bottles, and both are preserved.” (Lu. 5:37, 38)

The bottles referred to here were actually containers made from the hides of animals. When these wineskins were new, they were pliable and somewhat elastic. But when they became old, they were stiff and inflexible. If new wine was placed in old skins, the fermenting action of the wine would build up too much pressure for the old wineskins to accommodate, and they would burst.

Here in Luke 5, Jesus uses this to illustrate the clash between Judaism and Christianity. He is saying that “the outmoded forms, ordinances, traditions and rituals of Judaism were too rigid to hold the joy, the exuberance and the energy of the new dispensation.”

This chapter contains dramatic illustrations. In verses 18-21, we see four men tearing up the roof of a house in order to bring a paralyzed man to Jesus for healing. Their innovative, unconventional method is an illustration of the new wine. In verse 21, the scribes and Pharisees begin to find fault with Jesus; they are the old wineskins. Again, in verses 27-29 we have Levi’s enthusiastic response to Christ’s call, and the banquet he held to introduce his friends to Jesus. That is the new wine. In verse 30, the scribes and Pharisees grumble again. They are the old wineskins.

We see this in all of life. People get set in traditional ways of doing things and find it hard to adjust to change. The housewife has her own way of doing the dishes and finds it irritating to see someone else fumbling around in her sink. The husband has his own ideas as to how a car should be driven, and nearly loses his senses when wife or children drive.

But the great lesson for all of us is in the spiritual realm. We should be flexible enough to allow for the joy, the effervescence, the enthusiasm of the Christian faith, even if it comes in unconventional ways. We neither want nor need the stodginess and cold formalism of the Pharisees, who sat on the sidelines criticizing when God was working.

மே 20

ஒருவனும் புது திராட்சரசத்தைப் பழந்துருத்தியில் வார்த்து வைக்கமாட்டான். வார்த்து வைத்தால் புதுரசம் துருத்திகளைக் கிழித்துப்போடும். இரசமும் சிந்திப்போம். துருத்திகளும் கெட்டுப்போம். புதுரசத்தைப் புது துருத்திகளில் வார்த்து வைக்கவேண்டும். அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும். லூக்கா 5:37-38

சுவிசேஷத்தின் புதுமை

இங்கு காணும் துருத்திகள் விலங்குகளின் தோல்களினால் ஆனவை. அவை புதிதாக இருக்கும்போது எளிதில் வளையக்கூடியதாகவும், கொஞ்சம் மீள்சக்தியுடையதாகவும் இருக்கும். ஆனால், பழையதான பிறகு விறைப்பானதாகவும், வளைக்க இயலாததாகவும் போய்விடும். புதுப்பிழிவைப் பழந்துருத்திகளில் ஊத்தி வைக்கும்போது, அது புளிக்கும் போது ஏற்படும் அழுத்தத்தைத் தாங்கும் சக்தி அத்துருத்திகளுக்கு இராமல், அவை கிழித்துப்போடும்.

லூக்கா 5வது அதிகாரத்தில், யூதமுறைமைக்கும் கிறிஸ்தவத்துக்கும் உள்ள முரண்பாட்டை விளக்குவதற்கு, இயேசு கிறிஸ்து இதனை ஒரு எடுத்துக்காட்டாகப் பயன்படுத்துகிறார். ‘புதிய காலகட்டத்தில் உண்டாகும் மகிழ்ச்சி, எழுச்சி, ஆற்றல், ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டிருக்கக் கூடாதபடி, மாறிப்போன வழக்கங்கள், கற்பனைகள், பாரம்பாரியங்கள், சடங்குகள் ஆகிய யூதமுறைமைகள் யாவும் கண்டிப்பானவையாக உள்ளன.

இந்த அதிகாரத்தில் நாடகக்காட்சிகள் போன்ற நிகழ்ச்சிகள் சிலவற்றைக் காண்கிறோம். வீட்டின் கூரையைப் பிரித்து, அதன் வழியாக திமிர்வாத நோயினால் பாதிக்கப்பட்ட மனிதன் நலம் பெறவேண்டும் என்ற எண்ணத்தோடு, இயேசு கிறிஸ்துவிடம் நான்கு மனிதர்களால் கொண்டுவரப்படுகிறான். அவர்களுடைய செயல் புதுப்பிழிவுக்கு ஒப்பாக இருக்கிறது. இயேசு கிறிஸ்துவிடம் குற்றம் கண்டுபிடிக்க முயற்சி செய்த வேதபாரகரும் பரிசேயரும் பழந்துருத்திகளுக்கு ஒப்பாக உள்ளனர். மேலும், இயேசு கிறிஸ்துவின் அழைப்பிற்கு உற்சாகத்தோடு உடன்பட்ட லேவியைக் குறித்து 27-29 ஆகிய வசனங்களில் காண்கிறோம். தொடர்ந்து, தனது நண்பர்களை இயேசு கிறிஸ்துவிடம் அறிமுகப்படுத்துவதற்கென அவன் ஏற்பாடு செய்திருந்த விருந்தினைக் குறித்துப் பார்க்கிறோம். அது புதுப்பிழிவாக இருக்கிறது. வேதபாரகரும் பரிசேயர்களும் மீண்டும் முறுமுறுக்கிறதை 30வது வசனத்தில் காண்கிறோம். அவர்கள் பழந்துருத்திகளாக உள்ளனர்.

நமது வாழ்க்கை முழுவதும் இதனை நாம் காண்கிறோம். பாரம்பரிய வழக்கத்தின்படி செயல்களைச் செய்கின்ற மனிதர்கள் மாற்றங்களுக்கு இணங்க மறுக்கின்றனர். அடுக்களையில் பொருட்களைக் குறிப்பிட்ட இடத்தில் வைக்கும் குடும்பத்தலைவி, யாராவது அவற்றை வேறுவகையில் அடுக்கிவைத்தால் தடுமாறுகிறாள். தனது பழக்கத்தின்படி வாகனத்தை ஓட்டுகிற கணவன், மனைவியோ பிள்ளைகளோ வேறுவிதமாக ஓட்டும்போது எரிச்சல் அடைகிறான்.

ஆவிக்குரிய வகையில் இது நல்லதொரு படிப்பினையைத் தருகிறது. கிறிஸ்தவ விசுவாசத்தில் உண்டாகிற மகிழ்ச்சியையும் களிப்போடு பொங்கிவரும் எழுச்சியையும், பேரார்வத்தையும் அனுமதிக்கும் அளவிற்கு நாம் இசைந்து கொடுக்கிறவர்களாக இருக்கவேண்டும். ஒருவேளை அவை வழக்கத்திற்கு மாறாக இருக்கலாம். தேவன் தமது செயலை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் போது, மூலையில் அமர்ந்துகொண்டு குறைகூறும் பரிசேயர்களின் பழம்பாணியும், இசைந்து கொடுக்காத தன்மையும் நமக்குத் தேவையில்லை.

20. Mai

»Und niemand tut neuen Wein in alte Schläuche; sonst wird der neue Wein die Schläuche zerreißen, und er selbst wird verschüttet werden, und die Schläuche werden verderben; sondern neuen Wein tut man in neue Schläuche, und beide werden zusammen erhalten.« Lukas 5,37.38

Die hier erwähnten Schläuche waren aus Tierhäuten hergestellt. Solange
diese
Weinschläuche neu waren, blieben sie dehnbar und elastisch. Aber wenn sie alt
wurden, waren sie steif und unflexibel. Wenn neuer Wein in alte Schläuche gefüllt
wurde, entwickelte der Gärungsprozess so viel Druck, dass sich die alten Schläuche
dem nicht anpassen konnten und deshalb zerrissen.

Hier in Lukas 5 gebraucht der Herr Jesus dieses Bild, um den Zusammenstoß
zwischen Judentum und Christentum zu vergleichen. Er sagt damit, dass »die veralteten
Formen, Zeremonien, Traditionen und Rituale des Judentums zu starr und steif
waren, um die überschäumende Freude und Energie der neuen Haushaltung fassen
zu können«.

Dieses Kapitel enthält dramatische Illustrationen. In Vers 18-21 sehen wir vier
Männer das Dach eines Hauses abdecken, um einen Gelähmten zu Jesus zu bringen.
Ihre neue, unkonventionelle Methode ist eine Illustration
für den neuen Wein.
In Vers 21 tadeln die Schriftgelehrten und Pharisäer
den Herrn Jesus; sie sind die
alten Schläuche. Dann wiederum haben wir in den Versen 27-29 Levis begeisterte
Reaktion auf den Ruf des Herrn, und ein Bankett wird abgehalten, um seine Freunde
mit Jesus bekannt zu machen.
In Vers 30 murren die Schriftgelehrten und Pharisäer
schon wieder. Sie sind die alten Schläuche.

Wir sehen dies immer wieder im Leben. Die Menschen gewöhnen sich an traditionelle
Handlungs- und Verhaltensweisen und haben große Mühe,
sich Veränderungen
anzupassen. Die Hausfrau hat ihre eigene Art abzuwaschen
und wird nervös,
wenn jemand anders sich an ihre Spüle stellt. Der Ehemann hat seine eigenen Vorstellungen
vom richtigen Autofahren und wird reizbar, wenn seine Frau oder seine
Kinder am Steuer sitzen.

Aber die wichtigste Lektion für uns alle liegt im geistlichen Bereich. Wir sollten
flexibel genug sein, Raum für die Begeisterung und das Übersprudeln
echten christlichen
Glaubens zu haben, auch wenn er sich manchmal auf unkonventionelle Art äußert.
Wir wollen und brauchen die Schwerfälligkeit
und den kalten Formalismus der
Pharisäer nicht, die mürrisch und nörgelnd abseits standen, während Gott wirkte.