May

பதறிப் பேசுதல்

May 18

“…he spake unadvisedly with his lips.” (Psa. 106:33)

When the people of Israel grumbled about the lack of water at Kadesh, God told Moses that water would flow if he would speak to the rock. But Moses was fed up with the people by now, so he lashed out at them, saying, “Hear now, ye rebels; must we fetch you water out of the rock?” Then he smote the rock twice with his rod. By his angry words and disobedient action, he misrepresented God to the people. The result was that he forfeited the privilege of leading the children of Israel into the promised land (Num. 20:1-13).

It is easy for a man of burning zeal to be intemperate with other believers. He is so self-disciplined whereas they need to be forever babied along. He is so knowledgeable and they so ignorant.

But what he must learn is that they are still God’s beloved people, and that the Lord will not tolerate any verbal abuse of them. It is one thing to preach the Word of God in such power that people are convicted and torn up. But it is quite another thing to scold them severely as an expression of personal irritation. This will cut a man off from God’s best rewards.

When David’s illustrious men are listed in 2 Samuel 23, there is one name that is conspicuous by its absence. It is the name of Joab, David’s commander-in-chief. But why is his name missing? It has been suggested that the reason is that Joab used the sword on some of David’s friends. If so, the incident is full of warning for us when we are tempted to use our tongues as a sword on God’s people.

When James and John, the sons of thunder, wanted to call down fire from heaven on the Samaritans, Jesus said, “Ye know not what manner of spirit ye are of” (Luke 9:55). How apropos the rebuke is to us when we speak unadvisedly with our lips to those who are His not only by creation (as the Samaritans were), but by redemption as well.

மே 18

அவன் தன் உதடுகளினாலே பதறிப் பேசினான். சங்கீதம் 106:33

பதறிப் பேசுதல்

காதேசில் அருந்துவதற்கு நீர் கிடைக்காததால் இஸ்ரவேல் மக்கள் முறையிட்டார்கள். அப்பொழுது, கன்மலையோடு மோசே பேசுவானாயின் அங்கிருந்து நீர் புறப்பட்டு வரும் என்று அவனிடம் தேவன் கூறினார். மக்களுடைய செய்கைகளைக் கண்டு களைத்துப்போன மோசே, கடுஞ்சினங் கொண்டு, ‘கலகக்காரரே கேளுங்கள், உங்களுக்கு இந்தக் கன்மலையிலிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படப்பண்ணுவோமா?” என்றான். பின்னர் இருமுறை அக்கன்மலையைக் கோல் கொண்டு அடித்தான். தன்னுடைய சினத்தினாலும், கீழ்படியாத செய்கையினாலும், மக்களுக்கு முன்னர் தவறான முறையில் தேவனை அவன் வெளிப்படுத்திக் காட்டினான். அதன் காரணமாக இஸ்ரவேல் மக்களை, அவர்கட்கு வாக்குறுதியாய்த் தரப்பட்ட நாட்டிற்கு வழி நடத்தி செல்லும் சிலாக்கியத்தை அவன் இழந்து போனான் (எண்.20:1-3).

தேவனுக்கென்று மிகுந்த வைராக்கியம் உள்ள மனிதன், மற்ற விசுவாசிகளிடம்; நிதானம் தவறி நடந்துகொள்வது மிக எளிது. தன்னடக்கம் மிக்கவனாக அவன் இருக்கிறான். மற்றவர்களோ எப்பொழுதும் குழந்தைகளென வழி நடத்தப்பட வேண்டியவர்களாக உள்ளனர். அவன் மதிநுட்பம் மிக்கவனாக இருக்கிறான். அவர்களோ மதியீனராக இருக்கின்றனர்.

ஆனாலும், அவர்களும் தேவனுக்கு அன்பான மக்களாக இருக்கின்றனர் என்பதை அவன் கற்க வேண்டியவனாக இருக்கிறான். அவர்களைக் கடுஞ்சொல் கொண்டு வசைபாடுவதை தேவன் பொறுத்துக்கொள்ளமாட்டார். தேவனுடைய வார்த்தையைக் கொண்டு மக்கள் கண்டித்து உணரவும், உள்ளம் உடையவும் பிரசங்கம் செய்வது தகும். ஆனால் சினமடைந்து வசைச்சொல்லால் அவர்களை இழிவுபடுத்துவது எவ்வகையிலும் தகுதி ஆகாது. சிறந்த பரிசுகளை தேவனிடத்திலிருந்து பெறும் வாய்ப்பை இதன் காரணமாக அவன் இழந்து போகிறான்.

2.சாமுவேல் 23ம் அதிகாரத்தில் தாவீதின் புகழ்பெற்ற மனிதர்களின் பட்டியலில் யோவாபின் பெயர் இடம்பெறவில்லை. அது நமது கவனத்தை ஈர்க்கிறது. அவன் தாவீதின் படைத்தலைவன். ஏன் அவனுடைய பெயர் அங்கு இடம் பெறவில்லை.? தாவீதின் நண்பர்களில் சிலருக்கு விரோதமாக அவன் தனது வாளைப் பயன்படுத்தியதே அதன் காரணம் என்று கருதப்படுகிறது. அவ்வாறாயின், நாம் தூண்டப்படும் வேளைகளில், தேவனுடைய மக்களுக்கு எதிராக நமது நாவைப் பட்டையமாகப் பயன்படுத்த இந்நிகழ்ச்சி மிகுந்த எச்சரிப்பைத் தரவேண்டும்.

இடிமுழக்கத்தின் குமாரர்கள் என்று அழைக்கப்பட்ட யாக்கோபும் யோவானும் சமாரியர்களை அழிக்க வானத்திலிருந்து அக்கினியைக் கீழிறங்கச் செய்ய வேண்டுமென விரும்பிய வேளையில், இயேசு கிறிஸ்து, ‘நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்கள் என்பதை அறியீர்கள்”, என்று அதட்டினார் (லூக்:9:55). சமாரியர்கள் தேவனால் படைக்கப்பட்ட மனிதர்களே. அவ்வாறாயின் அவரால் மீட்கப்பட்டவர்களாகிய விசுவாசிகளுக்கு எதிராக நாம் உதடுகள் பதறிப்பேசுவது எவ்வளவு பெரிய தவறாகக் கருதப்படும்.

18. Mai

»… so dass er unbedacht redete mit seinen Lippen.« Psalm 106,33

Als das Volk Israel in Kadesch über den Wassermangel murrte, sagte Gott zu Mose, dass Wasser aus dem Felsen kommen würde, wenn er diesen anredete. Aber Mose hatte inzwischen genug von dem Volk, so dass er es mit den Worten geißelte: »Höret doch, ihr Widerspenstigen! Werden wir euch Wasser aus diesem Felsen hervorbringen?« Dann schlug er den Felsen zweimal mit seinem Stab. Durch diese zornigen Worte und seine ungehorsame Handlung repräsentierte er Gott vor dem Volk in verkehrter Weise. Dadurch verspielte er das Vorrecht, die Kinder Israel in das
verheißene Land zu führen (4. Mose 20,1-13).

Ein Mann mit einem brennenden Eifer verliert anderen Gläubigen gegenüber leicht seine Beherrschung. Er selbst ist im Glauben gewachsen, während sie immer noch mit Kinderkrankheiten kämpfen. Er hat so viel Erkenntnis, und sie verstehen immer noch wenig.

Aber was er lernen muss, ist, dass sie trotz allem Gottes geliebte Kinder sind und dass der Herr jähzornige Ausfälle gegen sie nicht durchgehen lässt. Es ist eine Sache, das Wort Gottes mit solcher Vollmacht zu predigen, dass Menschen überführt und im Innersten zerbrochen werden. Aber es ist etwas ganz anderes, sie als Ausdruck persönlicher Verärgerung mit harten Worten zu verletzen. Dadurch verspielen wir viel von Gottes herrlicher Belohnung.

Wenn Davids Helden in 2. Samuel 23 aufgeführt werden, fällt ein bekannter Name durch seine Abwesenheit auf – nämlich der von Joab, Davids Oberbefehlshaber. Warum fehlt sein Name? Manche glauben, den Grund darin zu sehen, dass Joab das Schwert gegen einige von Davids Freunden gebraucht hat.

Als Jakobus und Johannes, die Donnersöhne, Feuer vom Himmel auf die Samariter herabfallen lassen wollten, sagte der Herr Jesus: »Ihr wisset nicht, wes Geistes ihr seid« (Lukas 9,55). Wie viel mehr gilt diese Zurechtweisung erst für uns, wenn wir unbedacht mit unseren Lippen gegen die reden, die dem Herrn nicht nur aufgrund der Schöpfung gehören (wie die Samariter), sondern auch aufgrund der Erlösung.