May

வரம்பு மீறிய நகைச்சுவை

May 14

“Let there be no…silly talk, nor levity, which are not fitting.” (Eph. 5:4 RSV)

Excessive levity should be avoided because it inevitably results in a leakage of spiritual power.

The preacher deals with serious issues, with life and death, with time and eternity. He may deliver a masterpiece of a message, and yet if there is undue humor in it, people are apt to remember the jokes and forget the rest.

Oftentimes the power of a message can be dissipated by lighthearted conversation afterwards. A solemn Gospel appeal may result in the hush of eternity coming over a meeting. Yet when the people rise to leave, there is the buzz of social chatter. People talk about the football scores or the business of the day. Little wonder that the Holy Spirit is grieved and nothing happens for God.

Elders who are forever cracking jokes have little real spiritual impact on young people who look to them for inspiration. They might think that their wit ingratiates them with the young, but the truth is that the latter feel a keen sense of disappointment and disillusionment.

A form of levity that is especially harmful is making puns on the Bible, using passages of Scripture to get a laugh rather than to change a life. Every time we pun on the Bible, we lower its sense of authority in our own lives and in the lives of others.

This does not mean that a believer must be a gloomy Gus, without a trace of humor showing. It means rather that he should control his humor so that it will not cancel out his message.

Kierkegaard tells of the circus clown who ran into a town to cry out that the circus tent on the outskirts was on fire. The people listened to his cries and roared with laughter. He had been clowning so much that he had lost his credibility.

Charles Simeon kept a picture of Henry Martyn in his study. Wherever Simeon went in the room, it seemed that Martyn was following him with his eyes and saying, “Be earnest, be earnest; don’t trifle, don’t trifle.” And Simeon would reply, “Yes, I will be in earnest; I will, I will be in earnest; I will not trifle, for souls are perishing, and Jesus is to be glorified.”

மே 14

அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள். எபேசியர் 5:4

வரம்பு மீறிய நகைச்சுவை

அற்புத்தனமான பேச்சு தவிர்க்கப்பட வேண்டும். எனெனில் அது மிகும்போது ஆவிக்குரிய வகையில் இழப்பு ஏற்படுவது திண்ணம்.

இறைச்செய்தியை வழங்கும் வேளையில் வாழ்வோடும், சாவோடும் காலத்தோடும், நித்தியத்தோடும், பிரசங்கி ஈடுபடுகிறார். இத்தகைய இன்றியமையாத காரியங்களைக் குறித்து, திறமை வாய்ந்த சொற்பொழிவை அவர் நிகழ்த்தலாம். எனினும் தேவைக்கு அதிகமான நகைச்சுவை அதில் காணப்படுமென்றால், கேட்கிற மக்கள் நகைச்சுவையை மனதிற்கொண்டு மற்றவற்றை மறந்துவிடுவார்கள்.

பெரும்பாலான நேரங்களில், பிரசங்கத்திற்குப் பிறகு நடக்கும் கவலையற்ற உரையாடல்கள், பிரசங்கத்தின் வல்லமையை இழந்துபோக செய்து விடுகின்றன. நற்செய்தியானது தெய்வீக வல்லமையோடு கொடுக்கப்படும்போது அக்கூட்டத்தில் நித்தியத்தைப் பற்றிய எண்ணம் ஆட்கொண்டிருக்கும். பிறகு மக்கள் எழுந்து செல்லும்வேளையில் சாதாரண சமுதாயப் பேச்சு இடம்பெறுகிறது. கிரிக்கெட்டைப் பற்றிபேசுகிறார்கள், அல்லது தொழில் சம்பந்தமான உரையாடல் நிகழ்கிறது. பரிசுத்த ஆவியானவர் துக்கமடைவதில் எந்தவித வியப்பும் இல்லை. அங்கே தேவனுக்காக எதுவும் நிறைவடைவதில்லை.

இளைஞர்கள் தெய்வீக ஊக்கத்தைப் பெறுவதற்கு மூப்பர்களை நோக்குகின்றனர். ஆயின் அவர்கள் எப்பொழுதும் நகைச்சுவையாகப் பேசிக்கொண்டிருந்தால் எவ்வித ஆவிக்குரிய மாற்றத்தையும் விளைவிக்க முடியாது. அவ்வாறு நகைச்சுவையும் பரியாசமுமாகப் பேசுவதால் இளைஞர்களின் நல்லெண்ணத்தைப் பெறலாம் என்று நினைக்கின்றனர். ஆனால் இதனிமித்தம் ஏமாற்றமும் மயக்கமும் அடைகின்றனர் என்பதே உண்மை.

வேத வசனங்களுக்கு சிலேடையாகப் பொருள்கூறிப் பேசுவது, திருமறைக்கு ஊறுவிளைவிக்கக் கூடியதாக இருக்கும். பரியாசப்பேச்சு சிரிப்பை உண்டாக்கும். ஆனால் வாழ்வில் மாற்றத்தை உண்டுபண்ணுவதில்லை. ஒவ்வொரு முறையும் வேதத்தை இருபொருள்பட விளக்கும்போது, நம்முடைய வாழ்க்கையிலும், கேட்போருடைய வாழ்க்கையிலும் வேதம் கொண்டிருக்கும் அதிகாரத்தை வலுவிழக்கச் செய்கிறோம்.

ஒரு விசுவாசி எப்போதும் துக்கத்தோடும், புன்னகை அற்றும் இருக்க வேண்டும் என்பது இதன் பொருளன்று. தனது நகைச்சுவை, செய்தியின் ஆழ்ந்த கருத்துக்களை அகற்றிவிடாதபடி ஒருவர் தன்னைக் கட்டப்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஊர்புறத்தே அமைக்கப்பட்டிருந்த சர்க்கஸ் கூடாரம் தீப்பற்றிக் கொண்டதை ஊர்மக்களுக்கு அறிவிக்கச் சென்ற சர்க்கஸ் கோமாளியைப்பற்றி கெயர்க்கோ கார்டு என்பார் கூறிய கதையை நாம் அறிவோம். அந்தக் கோமாளியின் சத்தத்தைக் கேட்ட ஊர்மக்கள் சிரித்து மகிழ்ந்தனர். அவ்வளவு கோமாளித்தனத்தை அவன் செய்ததிருந்த காரணத்தினால் அவன் கூறுவதை மக்கள் உண்மையென்று நம்பவில்லை.

ஹென்றி மார்டின் என்பாருடைய படத்தைத் தன்னோடு எப்போதும் சார்லஸ் சிமியோன் வைத்துக்கொண்டிருப்பார். தன்னுடைய அறைக்குள் அவர் செல்லும்போதெல்லாம், மார்டின் அவரைப்பார்த்து, ‘மனப்பூர்வமாகச் செயல்படு, விளையாட்டுத்தனமாகப் பேசாதே,” என்று சொல்லுவதுபோல உணர்வார். உடனடியாக சிமியோன், ‘நான் மனப்பூர்வமாக நடந்துகொள்வேன், விளையாட்டுத்தனமாக பேசமாட்டேன், ஆத்துமாக்கள் அழிந்துபோகின்றனர், இயேசு கிறிஸ்து மகிமைப்பட வேண்டும்”. எனப் பதிலுரைப்பார்.

நீ கிறிஸ்துவைப் போலாக வேண்டுமாயின்,
உன்னில் அடிப்டையான மாற்றங்கள் அவசியம்.

14. Mai

»Auch Schändlichkeit und albernes Geschwätz oder Witzelei, welche sich nicht geziemen …« Epheser 5,4

Wir sollten allzu lockeres Betragen vermeiden, weil es zum Verlust geistlicher Kraft führt.

Der Prediger behandelt gewaltige und ernste Themen wie Leben und Tod, Zeit und Ewigkeit. Vielleicht gibt er eine meisterhafte Botschaft, aber wenn sie zu viel Humor enthält, erinnern sich die Zuhörer meist nur noch an die Witze und vergessen das Übrige.

Oft verfliegt die Stoßkraft einer Botschaft durch eine oberflächliche Unterhaltung danach. Ein feierlicher Bekehrungsaufruf kann bewirken, dass sich im nachfolgenden Schweigen der Eindruck der Ewigkeit auf die Versammlung senkt. Doch wenn die Besucher aufstehen und gehen, hört man das Stimmengewirr des Alltagsgeredes. Die Leute reden über die Fußballergebnisse oder die Tagespolitik. Kein Wunder, dass der Heilige Geist betrübt wird und nichts für Gott geschieht.

Älteste, die ständig Witze reißen, haben wenig echten geistlichen Einfluss auf junge Menschen, die zu ihnen als Vorbilder aufschauen. Sie denken vielleicht, dass ihr Humor den Jungen imponiert, aber Letztere haben ein feines Gespür für solche Dinge und fühlen sich dann oft enttäuscht und desillusioniert.

Eine Form von Albernheit, die besonders schädlich ist, ist die Verwendung der Bibel für Witze, indem wir Schriftstellen hernehmen, um jemand zum Lachen zu bringen, anstatt sein Leben zu verändern. Jedes Mal wenn wir über die Bibel witzeln, schwächen wir das Gespür für ihre Autorität in unserem Leben und dem Leben anderer.

Das heißt nun nicht, dass der Gläubige keinen Sinn für Humor haben darf. Es bedeutet einfach, dass er seinen Humor so unter Kontrolle haben sollte, dass seine Botschaft dadurch nicht verwischt oder verfälscht wird.

Kierkegaard erzählt von dem Zirkusclown, der in die Stadt rannte und schrie, dass sein Zirkuszelt am Stadtrand in Flammen stehe. Die Menschen hörten sein Schreien und Flehen und brüllten vor Lachen. Niemand glaubte ihm.

Charles Simeon hatte in seinem Arbeitszimmer ein Bild von Henry Martyn hängen. Wo immer Simeon in seinem Studierzimmer hinging, schien ihm Martyn mit seinem Blick zu folgen und zu sagen: »Sei ernst, sei ernst; tändle nicht, tändle nicht.« Und Simeon pflegte zu antworten: »Ja, ich will ernst sein; ich will, ich will ernst sein; ich will nicht tändeln, denn Seelen gehen verloren, und Jesus muss verherrlicht werden.«