May

இடறற் கல்

May 13

“But whoso shall offend one of these little ones which believe in me, it were better for him that a millstone were hanged about his neck, and that he were drowned in the depth of the sea.” (Mt. 18:6)

It would be difficult to imagine a more effective and foolproof method of drowning than this. The millstone here was not the small one that was operated by hand, but the great one that was turned by an ass. To have a millstone like that secured around one’s neck would mean speedy and inescapable drowning.

At first we might be startled by the vehemence of the Savior’s words. He seems to thunder out with unusual condemnation against the sin of offending a little one. What is it that provokes such anger?

Let us take an illustration! Here is a minister of the Gospel who has a constant line of people coming to him for counseling. Among them is a young person who is enslaved by some sexual sin. This young person needs help—desperately. He (or she) looks to the minister as one in whom he can have confidence, as one who will help him find the way of deliverance. But instead of that, the minister finds himself inflamed with passion, he makes improper advances, and soon he has led his counselee back into immorality. The young person is shattered by this betrayal of trust and is thoroughly disillusioned by the religious world. It may be that he is crippled spiritually for the rest of his life.

Or the offender may be a college professor who labors tirelessly to rob his students of whatever faith they may have. By sowing doubts and denials, he undermines the authority of the Scriptures and attacks the Person of our Lord.

Again it may be a Christian whose behavior stumbles a young believer. Overstepping the fine line between liberty and license, he is seen engaging in some questionable activity. The young Christian interprets his behavior as acceptable Christian conduct and leaves the path of godly separation to plunge into a life of worldliness and compromise.

We should be solemnly warned by the words of the Savior that it is a tremendously serious thing to contribute to the ethical, moral or spiritual delinquency of a minor who belongs to Him. Better to drown in literal water than to drown in a sea of guilt, disgrace and remorse for causing one of His little ones to fall into sin.

மே 13

என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்கிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும். மத்தேயு 18:6

இடறற் கல்

ஒரு மனிதனை நீருக்குள் அமிழ்த்துவதற்கு இதனைக் காட்டிலும் திறமைமிக்கதும், உறுதியாகச் செயலாற்றக் கூடிய ஒருமுறை வேறெதுமில்லை. இங்கு சொல்லப்பட்டிருக்கிற திருகை கையினால் சுற்றப்படும் சிறிய அளவிலானது அன்று. கழுதையைப் பூட்டிச் சுற்றும் அளவிற்கு இந்தத் திருகை பெரியது. இவ்வளவு பெரிய திருகையை ஒரு மனிதனுடைய கழுத்தில் கட்டி நீருக்குள் மூழ்கடித்தால் அவன் தப்பிக்கமுடியாது. விரைவாக நீரின் ஆழத்துக்குள் அமிழ்ந்து போவான்.

இந்த வேதப்பகுதியை முதன்முதலாகப் படிக்கையில், கர்த்தருடைய சொற்களின் கடுமையை நாம் கண்டு திடுக்கிடுகிறோம். சிறியவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றத்திற்கு விரோதமாக அசாதாரண முறையில் கர்த்தர் சாபத்தை இடிபோன்று முழக்கமிடுவதாகத் தோன்றுகிறது. இங்ஙனம் அவரைச் சீற்றம்கொள்ளச் செய்தது எது?.

ஓர் எடுத்துக்காட்டியை காணலாம் நற்செய்திப் பணியாளர் ஒருவரிடம் தொடர்ந்து சிலர் அறிவுரை நாடி வருகின்றனர். அவர்களில் வாலிபப்பெண் ஒருத்தி, சிற்றின்பத்தில் சிக்குண்டவளாக, அதிலிருந்து விடுதலையை நாடி அவரிடம் வருகிறாள். இந்த ஊழியர் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். சீர்கேட்டிலிருந்த விடுபட இவர் நிச்சயம் உதவி புரிவார் என்ற எண்ணத்தோடு வந்தளைக் கண்ட ஊழியர் மோகம் கொண்டு, தன்னிடம் அறிவுரை வந்த அவளிடமே தகாத வகையில் நடந்து தவறிழைக்கிறார். (இது ஒரு இளைஞனோடு ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதாகவும் இருக்கலாம்.) அவளுடைய நம்பிக்கை சிதறடிக்கப்படுகிறது. சமய உலகத்தைக் குறித்து அவள் கொண்டிருந்த கருத்து முற்றிலும் மாறுபடுகிறது. அவளுடைய வாழ்நாள் முழுவதும் ஆவிக்குரிய முடமாய்ப் போன ஆன்மீக வாழ்வுடையவளாகவே அவள் இருப்பாள்.

ஒருவேளை, குற்றம் புரிபவர் ஒரு சமயக்கல்லூரி ஆசிரியராயிருப்பின், தம்முடைய மாணாக்கர் கொண்டிருந்த சிறிதளவு விசுவாசத்தையும் கொள்ளையிடுவதையே தமது அயராத ஊழியமாகக் கொண்டிருப்பார். சந்தேகத்தையும், மறுத்துக் கூறும் எண்ணத்தையும் விதையாகத் தூவி, வேதத்தின் நம்பகத்தன்மையைக் குறைவுபடுத்துவார். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆள்தத்துவத்தை தாக்குவார். அல்லது ஒரு கிறிஸ்தவரது நடத்தை ஒரு இளம் விசுவாசிக்கு இடறலாக அமையலாம். ஒருவர் கிறிஸ்துவுக்குள் பெற்றிருக்கிற விடுதலையின் எல்லையைத் தாண்டி இழிந்த நடத்தை உடையவராக இருப்பாராயின் அவரைக் கண்ணுறும் வாலிபன், இதுதான் கிறிஸ்தவ நடத்தை என்று கருதி தேவனுக்காகப் பிரிந்து வாழும் வாழ்க்கையை விடுத்து, உலகப்பிரகாரமாகவும், அதனோடு இசைந்து செல்கிறவானாகவும் மாறிப்போவான்.

ஒரு சிறுபிள்ளை நெறி தவறுவதற்கும், ஆவிக்குரிய வீழ்ச்சி அடைவதற்கும், ஒழுக்கம் கெடுவதற்கும், காரணமாக விளங்குவது எவ்வளவு இழிந்த செயல் என்பதை இரட்சகருடைய சொற்கள் கடுமையாக எச்சரிக்கிறது. சிறுபிள்ளைகள் அவருடையவர்கள். அவர்களில் ஒருவரைப் பாவத்திற்குட்படுத்தி, குற்றவுணர்வு, அவமானம், பொல்லாப்பு, ஆகிய சமுத்திரத்தில் மூழ்குவதைக் காட்டிலும் உண்மையான சமுத்திரத்தில் மூழ்கி அழிவதே மேல்!

13. Mai

»Wer aber irgendeinem dieser Kleinen, die an mich glauben, einen Fallstrick legen wird, dem wäre nütze, dass ein Mühlstein an seinen Hals gehängt und er in die Tiefe des Meeres versenkt würde.« Matthäus 18,6

Es ist schwierig, sich eine effektivere und todsicherere Methode des Ertränkens vorzustellen. Der Mühlstein hier ist nicht der kleine handbetriebene, sondern der große, durch einen Esel bewegte. Die sichere Befestigung eines solchen Mühlsteines an jemandes Hals bedeutet dessen schnelles und unausweichliches Ertrinken.

Zuerst sind wir vielleicht erschrocken über die scheinbare Brutalität der Worte unseres Herrn. Offensichtlich geißelt Er mit ungewöhnlicher Schärfe die Sünde, einem der Kleinen einen Fallstrick zu legen. Was ruft diesen Zorn hervor?

Nehmen wir dazu eine Illustration. Stellen wir uns einen Diener des Evangeliums vor, zu dem beständig Menschen in die Seelsorge kommen. Darunter ist ein junger Mensch, der an eine sexuelle Sünde versklavt ist. Diese junge Person sucht verzweifelt Hilfe. Er (oder sie) blickt zu dem Seelsorger als jemand auf, zu dem man Vertrauen haben kann und der hilft, einen Weg der Befreiung zu finden. Aber stattdessen wird der Seelsorger selber von Leidenschaft entflammt, macht ungebührliche Angebote und hat den Ratsuchenden bald schon wieder zurück in die Unmoral geführt. Der junge Mensch ist durch diesen Vertrauensmissbrauch moralisch völlig zerstört und von der religiösen Welt gründlich enttäuscht. Es kann gut sein, dass er für den Rest seines Lebens geistlich verkrüppelt bleibt.

Oder es ist ein Universitätsprofessor, der unermüdlich daran arbeitet, seinen Studenten jeden Glauben zu rauben. Indem er Zweifel und Irrglauben sät, unterminiert er die Autorität der Schrift und greift die Person unseres Herrn an.

Oder es handelt sich um einen Christen, dessen Verhalten einen jungen Gläubigen zu Fall bringt. Er überschreitet die schmale Grenze zwischen Freiheit und Zügellosigkeit und erlaubt sich fragwürdige Aktivitäten. Der junge Christ interpretiert sein Verhalten als akzeptabel für Christen und verlässt den Pfad biblischer Absonderung, um sich in ein Leben der Weltlichkeit und des ständigen Kompromisses zu stürzen.

Die Worte des Herrn sollten uns eine eindringliche Warnung sein, was für eine schreckliche und furchtbare Sünde es ist, zum ethischen, moralischen oder geistlichen Verderben eines der Schwachen und Kleinen, die Ihm angehören, beizutragen. Es ist besser, in buchstäblichem Wasser zu ertrinken als in einem Meer von Schuld, Schande und Gewissensbissen, weil wir einem Seiner Kleinen ein Anlass zur Sünde gewesen sind.