May

பெயர் அறியப்படாத மக்கள்

May 9

“…the maid that is of the land of Israel.” (2 Ki. 5:4)

A person doesn’t have to be known by name in order to accomplish great exploits for God. In fact, some of the people in the Bible who won immortal fame are not identified by their names.

There were the three men who brought water to David from the well of Bethlehem (2 Sam. 23:13-17). David considered this act of devotion so remarkable that he would not drink the water but poured it out as a holy offering. But the men are unnamed.

We do not know the name of the great woman of Shunem (2 Ki. 4:8-17) but she will always be remembered for building a prophet’s chamber for Elisha.

It was an anonymous Jewish maid whose advice sent Naaman to Elisha to be healed of leprosy (2 Ki. 5:3-14). God knows her name, and that is all that matters.

Who was the woman who anointed the head of Jesus (Mt.26:6-13)? Matthew does not give her name, but her fame is announced in the words of our Lord, “Verily I say unto you, Wheresoever this gospel shall be preached in the whole world, there shall also this, that this woman hath done, be told for a memorial of her” (v. 13).

The poor widow who cast her two mites into the treasury is another of “God’s unknowns” (Lu. 21:2). She illustrates the truth that it’s wonderful how much you can do for God if you don’t care who gets the credit.

Then, of course, there was the lad who gave his five loaves and two fishes to the Lord and saw them multiplied so that they fed 5000 men plus women and children (John 6:9). We don’t know his name but what he did will never be forgotten.

A final illustration! Paul sent two brothers to Corinth with Titus in connection with a collection for the poor saints in Jerusalem. He does not give their names but he eulogizes them as messengers of the churches and the glory of Christ (2 Cor. 8:23).

As Gray looked at the tombstones of obscure people in a country churchyard, he wrote:

Full many a flower is born to blush unseen,
And waste its sweetness in the desert air.

With God, however, nothing is wasted. He knows the names of all those who serve Him anonymously, and He will reward in a manner that is worthy of Himself.

மே 9

இஸ்ரவேல் தேசத்துப் பெண். 2.இராஜா.5:4

பெயர் அறியப்படாத மக்கள்

தேவனுக்காக அருஞ்சாதனை நிகழ்த்துவதற்கு ஒருவருடைய பெயர் அறியப்பட வேண்டியதில்லை. உண்மையில், அழிவில்லாப் புகழ்ச்சியைப் பெற்றவர்களில் சிலருடைய பெயர்கள் வேதத்தில் குறிப்பிடப்படவில்லை.

பெத்லகேம் கிணற்றிலிருந்து, தாவீது பருகுவதற்காக மூவர் நீரைக் கொண்டு வந்தனர் (2. சாமு.23:13-17) அவர்களுடைய செயலைப் பக்தி என்று எண்ணியவனாக, தாவீது அந்த நீரைப் பருகாமல், பரிசுத்த பலியாகத் தரையில் ஊற்றிவிட்டான். அந்த மனிதர்களுடைய பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.

சூனேம் என்னும் ஊரில் வாழ்ந்த கனம் பெருந்திய பெண்மணியின் பெயரை நாம் அறியோம். (2.இராஜா.4:8-17). எனினும் முன்னுரைப்போன் எலிசா தங்குவதற்குப் படுக்கை அறையைக் கட்டினவள் என்று எப்பொழுதும் அவள் நினைவு கூரப்படுகிறாள்.

பெயர் தெரியாத யூதப்பெண்ணின் ஆலோசனைக்கிணங்க, தனது குஷ்டம் நீங்கி நலம்பெற நாகமான் எலிசாவினிடத்தில் அனுப்பப்பட்டான். (2.இராஜா.5:3-14). அவளுடைய பெயரை தேவன் அறிவார். அதுவே சிறந்தது.

இயேசு கிறிஸ்துவின் தலையில் அபிஷேகம் செய்த பெண்மணி யார்? (மத்.26:6-13). அவளுடைய பெயரை மத்தேயு அறிவிக்கவில்லை. ஆயினும், கர்த்தர் திருவாய் மலர்ந்து அவளுக்குப் புகழ்மாலை சூட்டினார். ‘இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ, அங்கெல்லாம் அவளை நினைப்பதாக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”

ஆலயத்தின் காணிக்கைப் பெட்டியிலே இரண்டு காசுகளைப் போட்ட ஏழை விதவை ‘தேவனுடைய அறியப்படாத மக்களில்” இன்னுமொருத்தி (லூக்.21:2). நற்பெயர் யாருக்கு உரியதாகும் என்பதைக் கருத்தில் கொள்ளலாம். தேவனுக்காக எவ்வளவாய்த் திருப்பணி ஆற்றமுடியும் என்பதற்கு அப்பெண் நல்லதோர் இலக்கணமாக விளங்குகிறாள்.

உணவினைப் பெருகச் செய்து, கர்த்தர் தாமே 5000 ஆண்களுக்கும் மற்றும் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் உணவளித்தார். அதற்கென ஜந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும், கர்த்தரிடத்தில் கொடுத்த பையனின் பெயர் தெரியாது. ஆயினும் அவன் ஒருக்காலும் மறக்கப்படமாட்டான். (யோ.6:9).

ஒரு கடைசி எடுத்துக்காட்டு! எருசலேம் நகரில் வாழ்ந்த ஏழைப் பரிசுத்தவான்களுக்குக் காணிக்கையை எடுத்துச் செல்லும்படி, பவுலினால் தீத்துவுடன் அனுப்பப்பட்ட இரு சகோதரர்களின் பெயர் கொடுக்கப்படவில்லை. ‘சபைகளுடைய ஸ்தானாபதிகளும் கிறிஸ்துவுக்கு மகிமையுமானவர்கள்” என்று பவுல் அவர்களுக்குப் புகழ்மாலை சூட்டுகிறார்.

ஒரு சிற்றூரில் இருந்த கல்லறைத் தோட்டத்தில், அறியப்படாத மக்களின் கல்லறையைக் கண்டு கிரே என்பார், ‘அழகிய மலர்கள் மலர்ந்தன, ஒருவரும் அறியாவண்ணம் வெட்கிக் குனிந்தன. அவற்றின் வாசனை பாலவனக் காற்றிலே வீணாகக் கலந்து சென்றது” என்று எழுதினார். ஆயின், தேவனைப் பொருத்தமட்டில் ஒன்றும் வீணாய்ப் போவதில்லை. எவரும் அறியாவண்ணம் அவருக்கென்று உழைக்கும் மக்களின் பெயர்களை அவர் அறிவார். தமது மேன்மைக்கேற்ப அவர்கட்கு வெகுமதிகளைத் தருவார்.

9. Mai

»… das Mädchen … das aus dem Lande Israel ist.« 2. Könige 5,4

Jemand muss nicht namentlich bekannt sein, um große Taten für Gott zu vollbringen. Im Gegenteil: Manche Personen in der Bibel, die unsterblichen Ruhm erlangt haben, werden nicht mit Namen genannt.

Da sind die drei Männer, die David Wasser aus der Zisterne von Bethlehem brachten (2. Samuel 23,13-17). David sah diesen Beweis ihrer Hingabe als so außergewöhnlich an, dass er das Wasser nicht trinken wollte, sondern es als Trankopfer auf die Erde goss. Doch die Helden bleiben ungenannt.

Wir kennen den Namen der berühmten Frau von Sunem nicht (2. Könige 4,8-17), aber man wird ihrer allezeit gedenken, weil sie das Prophetengemach für Elisa bauen ließ.

Es war ein anonymes jüdisches Mädchen, auf dessen Empfehlung Naaman zu Elisa reiste, um vom Aussatz geheilt zu werden (2. Könige 5,3-14). Gott kennt ihren Namen, und allein darauf kommt es an.

Wer war die Frau, die das Haupt des Herrn Jesus gesalbt hat (Matthäus 26,6-13)? Matthäus nennt ihren Namen nicht, aber ihr Ruhm wird mit den Worten des Herrn vorausgesagt: »Wahrlich, ich sage euch: Wo irgend dieses Evangelium gepredigt werden wird in der ganzen Welt, wird auch von dem geredet werden, was diese getan hat, zu ihrem Gedächtnis« (Vers 13).

Die arme Witwe, die ihre zwei Scherflein in den Schatzkasten einlegte, ist eine weitere von »Gottes Unbekannten« (Lukas 21,2). Sie ist ein leuchtendes Beispiel dafür, wie erstaunlich viel wir für Gott tun können, wenn wir uns nicht darum kümmern, ob wir Anerkennung dafür bekommen.

Dann ist da natürlich noch der Junge, der seine zwei Brote und fünf Fische dem Herrn gab und erlebte, wie sie vermehrt wurden und dadurch den Hunger von 5000 Männern plus Frauen und Kindern stillen konnten (Johannes 6,9). Wir kennen seinen Namen nicht, aber seine Tat wird nie vergessen werden.

Und eine letzte Illustration! Paulus sandte mit Titus zwei Brüder nach Korinth in Verbindung mit der Sammlung für die bedürftigen Heiligen in Jerusalem. Er nennt ihre Namen nicht, aber er preist sie als Gesandte der Versammlungen und Christi Herrlichkeit (2. Korinther 8,23).

Als Gray (James Martin, 1851-1935, amerikanischer Autor und Bibellehrer, Mitherausgeber der Scofield-Bibel) einmal die Grabsteine unbekannter Leute in einem Dorffriedhof betrachtete, schrieb er:

Gar manche Blume wächst, um ungesehen zu blühen, Und damit ihren Duft an Wüstenluft zu verschwenden.

Bei Gott wird jedoch nichts verschwendet. Er kennt die Namen all derer, die Ihm anonym gedient haben, und Er wird sie auf eine Ihm würdige Weise belohnen.