May

தேவன் தரும் பொக்கிஷம்

May 8

“And I will give thee the treasures of darkness.” (Isa. 45:3)

When God made this promise to Cyrus, He was speaking of material treasures from lands of darkness that Cyrus would conquer. But we are not doing violence to the verse when we take it and apply it in a spiritual sense.

There are treasures that are discovered in the dark nights of life that are never found in days of unrelieved sunshine.

For instance, God can give songs in the darkest night (Job 35:10) that would never have been sung if life were completely devoid of trials. That is why the poet wrote:

And many a rapturous minstrel among those sons of light
Will say of his sweetest music, “I learned it in the night;”
And many a rolling anthem that fills the Father’s home
Sobbed out its first rehearsal in the shade of a darkened room.

There is the darkness of what J. Stuart Holden calls “life’s inexplicable mysteries—the calamities, the catastrophes, the sudden and unexpected experiences which have come into life, and which all our forethought has not been sufficient to ward off; and life is dark because of them—sorrow, loss, disappointment, injustice, misconception of motive, slander.” These are often the things that make life dark.

Humanly speaking, none of us would choose this darkness, and yet its benefits are incalculable. Leslie Weatherhead wrote, “Like all men, I love and prefer the sunny uplands of experience, when health, happiness and success abound, but I have learned far more about God and life and myself in the darkness of fear and failure than I have ever learned in the sunshine. There are such things as the treasures of darkness. The darkness, thank God, passes. But what one learns in the darkness, one possesses for ever.”

மே 8

அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களைத் தருவேன். ஏசாயா 45:4

தேவன் தரும் பொக்கிஷம்

இவ்வாக்குறுதியை கோரேசு மன்னனுக்கு கொடுத்தார். அதாவது இருண்ட நாடுகளின் மீது அவனுக்கு வெற்றியைக் கொடுத்து உலகத்தின் செல்வங்களை அவனுக்குத் தருவேன் என்பதே இதன் பொருளாகும். இவ்வசனத்திற்கு ஆவிக்குரிய விளக்கத்தைத் தருவது எந்தவிதத்திலும் தவறாகாது.

சலிப்பை மாற்ற இயலாத பகற்காலத்தில் கண்டு பிடிக்க முடியாத செல்வங்களை, வாழ்வில் இருண்ட இரவுகளில் கண்டுபிடிக்கலாம்.

எடுத்துக்காட்டாக, மிகவும் இருண்ட இரவில் தேவன் கீதத்தை அருளுகிறவராக இருக்கிறார். (யோபு 35:10). சோதனையின்றி அப்பாடல்களை எவரும் இயற்றியிருக்க மாட்டார்கள். எனவேதான் ஒரு கவிஞர் இங்ஙனம் பாடுகிறார்.

“விண்ணகம் ஏகிடும் வெளிச்சத்தின் பிள்ளைகள்
பன்னரும் இசையினைப் பாங்காய் எழும்புவர்.
மண்ணகம் வாழ்ந்த வேளையில் தோன்றிய
காருரிள் சூழலில் கற்றதாய் சொல்லுவர்.
சோகத்தின் ஆழத்தில் எழுந்த நற்பாடல்கள்
சோதனை கூட்டத்தில் ஒத்திகை கண்டபின்,
நேசத்தின் கீதமாய் இனிதுடன் ஒலித்திடும்.
தந்தையின் வீட்டினைத் தகைவாய் நிரப்பிடும்”

J..ஸ்டூவர்ட் ஹோல்டன் என்பார் இந்த இருளைக் குறித்து எழுதியுள்ளதாவது, ‘வாழ்க்கையில் ஏற்படும் விளக்க இயலாத மர்மங்கள், பேராபத்துக்கள், பேரழிவுகள், சடுதியாய் எதிர் பாராவண்ணம் எழுகின்ற அனுபவங்கள், இவைகளிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நம்முடைய முன்னறிவு போதுமானதாயில்லை. இதன் விளைவாக வாழ்க்கையில் உண்டாகும் இருள், துயரம், இழப்புகள், ஏமாற்றம், அநீதி, நோக்கங்களைக் குறித்த தப்பெண்ணம், பழிசொல், ஆகியவையே.” இவை நமது வாழ்க்கையை அவ்வப்போது இருளடைய செய்து விடுகின்றன.

மனித இயல்பின்படிக் கூறுவோமாயின், நம்மில் ஒருவர் இவ்வகை இருளைத் தெரிந்தெடுக்க மாட்டோம். என்றாலும் இவற்றின் பயன்கள் அளவிடமுடியாதவை. லெஸ்ஸி வெதர்ஹெட் என்பார் இதனை இவ்வாறு விளக்குகிறார். ‘எல்லா மனிதர்களைப் போலவே, நானும் உடல்நலம், மகிழ்ச்சி, வெற்றி ஆகியவை பெருகுகின்ற மேலான அனுபவங்களையே விரும்பி நாடுகின்றேன். அவ்வகையான மகிழ்ச்சி நிறைந்த காலங்களைக் காட்டிலும், பயம், தோல்வி, ஆகியவை சூழ்ந்த இருண்ட காலத்திலேயே என்னைக் குறித்தும், என் வாழ்வைக் குறித்தும், தேவனைக் குறித்தும் மிகுதியாகக் கற்றுக்கொண்டிருக்கிறேன். இருளில் உண்டாகும் பொக்கிஷம் என்னும் கூற்று உண்மையே. இருளான காலங்கள் என்னைவிட்டுக் கடந்து செல்வதற்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். ஆனால் அந்த இருண்டநாட்களில் கற்றுக்கொண்டவற்றையே ஒருவர் எப்பொழுதும் பொக்கிஷமாகக் கொண்டிருக்கிறார்.

8. Mai

»Und ich werde dir Schätze der Finsternis … geben.« Jesaja 45,3

Als Gott Kyros diese Verheißung gab, sprach Er von materiellen Schätzen in Ländern der Finsternis, die Kyros erobern würde. Doch tun wir dem Vers keine Gewalt an, wenn wir ihn auch in einem geistlichen Sinn anwenden.

Es gibt Schätze, die in den finsteren Nächten des Lebens entdeckt werden, die aber an Tagen ungetrübten Sonnenscheins nie gefunden würden.

So kann Gott zum Beispiel Gesänge in der Nacht geben (Hiob 35,10), die niemals gesungen worden wären, wenn es im Leben keinerlei Prüfungen gäbe. Darum schreibt der Dichter:

Und manch ein begeisterter Sänger
Unter jenen Söhnen des Lichts
Sagt dann von seiner schönsten Musik:
»Die lernte ich in der Nacht«;
Und manch gewaltige Hymne,
Die braust durch des Vaters Haus
Erlebte seufzend ihre erste Probe
Im Dunkel eines finsteren Raums.

Es gibt die Finsternis dessen, was J. Stuart Holden bezeichnet als »die unerklärlichen Geheimnisse des Lebens – die Unglücksfälle, die Katastrophen, die plötzlichen und unerwarteten Ereignisse, die in unser Leben eingedrungen sind und die all unsere Vorsorge nicht verhindern konnte; sie machen das Leben dunkel – Schmerz, Verlust, Enttäuschung, Ungerechtigkeit,
Missverständnisse, Verleumdung«. Das sind häufig die Dinge, die das Leben verfinstern.

Menschlich gesprochen, würde sich niemand diese Finsternis wünschen, und doch ist ihr vielfältiger Nutzen unschätzbar. Leslie Weatherhead schrieb: »Natürlich liebe ich wie alle Menschen die sonnigen Höhen des Lebens, wenn Gesundheit, Glück und Erfolg reichlich vorhanden sind, aber ich habe mehr über Gott und das Leben und mich selbst in der Dunkelheit der Angst und des Versagens gelernt als jemals im Sonnenschein. Es gibt so etwas wie ›Schätze der Finsternis‹. Die Finsternis vergeht, Gott sei Dank! Aber was man in der Finsternis gelernt hat, bleibt ewiger Besitz.«