May

மறக்க வேண்டிய இழப்புகள்

May 6

“How long wilt thou mourn for Saul, seeing I have rejected him from reigning over Israel.” (1 Sam. 16:1)

There comes a time in life when we must stop mourning over the past and get on with the work of the present.

God had rejected Saul from being king. The action was final, irreversible. But Samuel had difficulty in accepting it. He had been closely associated with Saul and he now wept to see his hopes disappointed. He continued to mourn a loss that would never be retrieved. God said, in effect, “Quit mourning. Go out and anoint Saul’s successor. My program has not failed. I have a better man than Saul to step onto the stage of Israel’s history.”

We would like to think that Samuel not only learned the lesson for himself but that he passed it on to David, who took Saul’s place as king. At any rate, David showed that he had learned the lesson well. As long as his baby was dying, he fasted and mourned, hoping that God would spare the child. But when the infant died, he bathed, changed his clothes, went to the Tabernacle to worship, then ate a meal. To those who questioned his realism, he said, “Now he is dead, wherefore should I fast? can I bring him back again? I shall go to him but he shall not return to me” (2 Sam. 12:23).

This has a voice for us in our Christian life and service. Sometime it may happen that a ministry might be wrenched away from us and given to someone else. We grieve over the death of an avenue of service.

It may be that a friendship or a partnership is severed, and that, as a result, life seems empty and flat. Or that we have been cruelly disappointed by someone who was very dear to us. We mourn the death of a valued relationship.

Or it may be that some life-long dream is shattered or some ambition is frustrated. We mourn the death of a noble aspiration or vision.

There is nothing wrong about mourning, but it should not be prolonged to the extent that it cripples our effectiveness in meeting the challenges of the hour. E. Stanley Jones said he made it a point to “recover within the hour” from the griefs and blows of life. An hour may not be long enough for most of us, but we must not be forever inconsolable over circumstances that cannot be changed.

மே 6

இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக் கொண்டிருப்பாய். 1.சாமுவேல் 16:1

மறக்க வேண்டிய இழப்புகள்

முன்னர் நடந்த நிகழ்ச்சிகளை நினைத்து மனங்கலங்குவதை விடுத்து, தற்பொருது ஆற்றவேண்டிய நற்பணியில் முன்னேறிச் செல்லவேண்டிய காலம் நம் வாழ்வில் ஏற்படுவதுண்டு.

மன்னனாக ஆட்சி செய்யும் நிலையிலிருந்து சவுலை தேவன் நீக்கிவிட்டார். அது முடிவு பெற்ற செயல், இனி மாற்ற இயலாது. ஆனால் அதனை ஏற்றுக்கொள்வது சாமுவேலுக்கு மனக்கடினத்தைக் கொடுத்தது. சவுலோடு மிக நெருங்கிப் பழகிய சாமுவேல், தனது நம்பிக்கை அற்றுபோனதின் நிமித்தமாக இப்பொழுது அழுதுகொண்டிருக்கிறான். திரும்பப் பெற இயலா இழப்பை நினைத்துத் தொடர்ந்து துக்கம் கொண்டாடின அவனிடம் தேவன், ‘துக்கப்படுவதை நிறுத்து, வெளியே சென்று சவுலின் வாரிசை அபிஷேகம்பண்ணு. என்னுடைய திட்டம் தோற்றுப்போகவில்லை. இஸ்ரவேல் நாட்டின் வரலாற்றில் இடம்பிடிக்க சவுலைக்காட்டிலும் மேன்மையான மனிதனை நான் தெரிந்துகொண்டிருக்கிறேன்” என்னும் பொருள்படக் கூறினார்.

தான் இந்தப் பாடத்தைக் கற்றுக்கொண்டது மட்டுமின்றி, தாவீதும் இதனைக் கற்றுக்கொள்ள சாமுவேல் கற்பித்தான் என்று நாம் சிந்திக்கத் தேன்றுகிறது. மன்னனாகத் திகழ்ந்த சவுலின் இடத்தைப் பிடித்த தாவீது இந்தப் பாடத்தை நன்கு கற்று, பின்னர் தன் வாழ்வில் அதனை வெளிப்படுத்திக் காண்பித்தான். அவனுடைய குழந்தை இறந்துபோகும்வரை, தேவன் எவ்வாறேனும் அதனைத் தப்புவிப்பார் எனக் கருதி உபவாசம் இருந்தான். துக்கம் கொண்டாடினான். ஆனால் குழந்தை இறந்தவுடன் அவன் குளித்து, ஆடைகளை மாற்றிக் கொண்டு ஆசாரிப்புக்கூடாரத்திற்குச் சென்று தேவனைத் தொழுதுகொண்டான். உணவு உண்டான், இதன் காரணத்தை வினவிய மனிதர்களிடம் ‘அது மரித்துள்ள நிலையில் இப்போது நான் உபவாசிக்க வேண்டியது என்ன? இனி நான் அதைத் திரும்பிவரப் பண்ணக்கூடுமோ? நான் அதனிடத்திற்குப் போவோனே அல்லாமல், அது என்னிடத்திற்குத் திரும்பி வரப்போகிறது இல்லை.” என்றான். (2.சாமு.12:23).

கிறிஸ்தவ வாழ்விலும் பணியிலும் இந்த நிகழ்ச்சி நம்முடன் பேசுகிறதாய் இருக்கிறது. நாம் ஆற்றுகிற பணியினை நம்மிடத்திலிருந்து பறித்து அதனை வேறொருவர் வசம் தேவன் ஒப்புவிக்கலாம். நாம் ஊழியம் செய்யும் வாய்ப்பை இழந்து போனதைக் குறித்து வருந்துகிறோம்.

ஒருவருடைய நட்பையோ அல்லது உறவையோ இழக்க நேரிடும். அதன் விளைவாக வாழ்வு ஒன்றுமில்லாததாகவும், சலிப்படைந்ததாகவும,; தோன்றும். நமக்கு மிகவும் அன்பானவர் நம்மிடம் கடுமையுடன் நடந்து, பெருத்த ஏமாற்றத்தைக் கொண்டுவருவார். உயர்வாகக் கருதப்பட்ட அந்த உறவை இழந்ததினாலே நாம் துக்கமடைவோம்.

நமது வாழ்வின் கனவு சிதறடிக்கப்படலாம். நமது நோக்கம் நிறைவேறாது நாம் ஏமாந்துபோகலாம். நமது மேன்மை தாங்கிய இலக்கை இழந்து போனதால் துக்கம் கொண்டாடுவோம்.

துக்கம் கொண்டாடுவதில் தவறேதும் இல்லை. ஆயின், அது நாம் எதிர் கொள்ளும் அறைகூவல்களில் தொய்ந்து போகக்கூடிய நிலையினை ஏற்படுத்தும் அளவுக்குத் தொடரக்கூடாது. தனது வாழ்க்கையில் உண்டாகும் வருத்தங்களிலிருந்தும், அவர் மீது விழும் அடிகளிலிருந்தும் ஒருமணி நேரத்துக்குள்ளாக முன்னிருந்த நிலைக்குத் திரும்புவதை இன்றியமையாததாகக் கருதுவதாக ந. ஸ்டேன்லி ஜோன்ஸ் என்பார் கூறியுள்ளார். நம்மில் பொரும்பாலோருக்கு ஒருமணி நேரம் போதாது. ஆனால் மாற்றமுடியாத சூழ்நிலைகளை எண்ணி என்றென்றும் ஆறுதல் அடையாமல் இருக்கக்கூடாது.

6. Mai

»Bis wann willst du um Saul trauern, da ich ihn doch verworfen habe, dass er nicht mehr König über Israel sei?« 1. Samuel 16,1

Es kommt eine Zeit im Leben, wo wir mit dem Trauern über das Vergangene aufhören und uns an die Arbeit der Gegenwart machen müssen.

Gott hatte Saul als König verworfen. Das war eine endgültige, irreversible Tatsache. Aber Samuel fiel es schwer, sie zu akzeptieren. Er war mit Saul eng verbunden gewesen und weinte nun über seine enttäuschten Hoffnungen. Er betrauerte immer noch einen Verlust, der unwiederbringlich war. Gott sagte deshalb zu ihm: »Hör auf mit dem Trauern. Geh und salbe Sauls Nachfolger. Meine Pläne sind nicht vereitelt. Ich habe einen besseren Mann als Saul, der nun die Bühne der Geschichte Israels betreten wird.«

Wir können annehmen, dass Samuel die Lektion nicht nur für sich selbst lernte, sondern sie auch an David weitergab, der Sauls Stelle als König einnahm. Auf jeden Fall zeigte David, dass er diese Lektion gut gelernt hatte. So lange sein kleiner Sohn im Sterben lag, fastete und betete er in der Hoffnung, dass Gott das Kind vielleicht retten würde. Doch als es gestorben war, badete er sich, wechselte die Kleider, ging ins Haus Gottes, um anzubeten, und ließ sich dann eine Mahlzeit vorsetzen. Denjenigen, die mit seinem Realismus Probleme hatten, sagte er: »Nun es aber tot ist, warum sollte ich denn fasten? Vermag ich es wieder zurückzubringen? Ich gehe zu ihm, aber es wird nicht zu mir zurückkehren« (2. Samuel 12,23).

Das hat auch uns etwas zu sagen in unserem Dienst und Leben als Christen. Manchmal geschieht es, dass uns ein Dienst genommen und jemand anderem gegeben wird. Wir trauern über das Ende einer Möglichkeit zum Dienen.

Vielleicht zerbricht eine Freundschaft oder Partnerschaft, und als Folge davon scheint uns das Leben leer und schal. Oder wir wurden von jemand grausam enttäuscht, der uns sehr nahe stand. Wir betrauern das Ende einer geschätzten Beziehung.

Oder vielleicht zerbricht ein lebenslang gehegter Traum, oder eine hohe Ambition wird zunichte. Wir trauern über das Ende unseres Sehnens und Trachtens.

Trauern ist an sich nicht verkehrt, aber es sollte sich nicht so lange hinziehen, dass es unsere Fähigkeit verkrüppelt, den Herausforderungen der Gegenwart zu begegnen. E. Stanley Jones sagte, er habe sich angewöhnt, sich »innerhalb einer Stunde von den Kümmernissen und Schlägen des Lebens zu erholen«. Eine Stunde dürfte für die meisten von uns zu kurz sein, aber wir dürfen nicht für immer untröstlich bleiben über Umstände, die sich nicht ändern lassen.