March

தீமையை வெல்லும் நன்மை

March 7

“The fruit of the Spirit is…goodness…” (Gal. 5:22)

Goodness means excellence of character. Someone has defined it as “virtue equipped at every point,” which simply means that the person possessing it is kind, virtuous and righteous in every area of life.

Goodness is the opposite of badness. A bad man may be deceitful, immoral, treacherous, unjust, cruel, selfish, hateful, covetous, and/or intemperate. The good man, though not perfect, exemplifies truth, justice, purity and other similarly desirable traits.

The Apostle Paul distinguishes between a righteous man and a good man in Romans 5:7. The righteous man is just, honest and straightforward in his dealings, but he may be icily detached from others. The good man, on the other hand, is affectionate and lovable. One would scarcely die for a righteous man, but one might die for a good man.

And yet we must remember that goodness can be firm. It would not be good to condone or overlook sin. And so goodness can rebuke, correct and discipline. We see this when the Lord Jesus, who is goodness incarnate, cleansed the Temple.

A unique feature of goodness is that it can overcome evil. Paul wrote to the Roman believers, “Be not overcome of evil, but overcome evil with good” (Rom. 12:21). When we allow someone else’s hatred to ruin our disposition, we have been overcome by his evil. But when we rise above it and show grace, mercy and love, we have overcome evil with good.

Murdoch Campbell tells of a godly Highland minister whose wife tried to make life miserable for him. One day as he was reading his Bible, she snatched it from his hands and threw it in the fire! He looked up into her face and said quietly, “I don’t think I’ve ever sat by a warmer fire.” His goodness overcame her evil. She became a lovely, gracious wife. As Campbell comments, “His Jezebel became a Lydia. His thorn became a lily.” Goodness had conquered!

மார்ச் 7

ஆவியின் கனியோ… நற்குணம் (கலா.5:22)

தீமையை வெல்லும் நன்மை

பண்புகளில் மிகச் சிறந்தது நற்குணமாகும். “எல்லாக் காலங்களிலும் பண்புமிக்க மனிதனாக விளங்க ஒருவரை ஆயத்தப்படுத்துவது இந்த நற்குணமேயாகும்” என்று ஒருவர் இதனை வரையறுத்துக் கூறியுள்ளார். அதாஃது¸ நற்குணத்தை உடையவராக¸ ஒழுக்கமுடையவராக¸ நீதியுடையவராக இருப்பார் என்பதே இதன் பொருளாகும்.

நற்குணம் துர்க்குணத்திற்கு எதிரானதாகும். துர்க்குணம் உடையன் ஏமாற்றுகிறவனாக¸ ஒழுக்கமற்றவனாக¸ நம்பத்தாகாதவனாக¸ நீதியற்றவனாக¸ கொடுமைப்படுத்துபவனாக¸ தன்னலமுடையவனாக¸ வெறுக்கிறவனாக¸ இச்சையுடையவனாக¸ சுயக் கட்டுப்பாடு அற்றவனாக இருக்கிறான். நல்ல மனிதனோ¸ நிறைவானவனாக இல்லாத போதும்¸ உண்மையையும் நீதியையும்¸ தூய்மையையும் இதற்கொப்பான விரும்பத்தக்க குணங்களையும் வெளிப்படுத்துவதில் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறான்.

நீதிமானுக்கும் நல்லவனுக்கும் உள்ள வேறுபாட்டை அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் 5:7 ல் பிரித்துக் காட்டுகிறார். நீதிமான் தன் நடக்கைகள் யாவற்றிலும் உண்மையோடும்¸ நேர்மையோடும் விளங்கினாலும் மற்றவர்களிடம் ஐக்கியம் கொள்ளாமல் பிரிந்து வாழ்கிறான். மாறாக¸ நல்ல மனிதனோ மற்றவர்களை நேசிக்கிறவனாகவும்¸ மற்றவர்களால் அன்புகூரப்படுகிறவனாகவும் இருக்கிறான். நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது. நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான்.

இருந்தபோதிலும்¸ நற்குணம் உறுதிபடைத்ததாக விளங்கும் என்பதை எப்பொழுதும் நாம் நினைவுகூர்ந்தவர்களாக இருக்கவேண்டும். பாவத்தைப் பொறுத்துக்கொள்வதோ¸ காணாததுபோல் நடந்துகொள்வதோ நற்குணத்தின் அடையாளமில்லை. ஆனால்¸ நற்குணம் கண்டித்து உணர்த்தும்¸ தவறைத் திருத்தும்¸ ஒழுங்குபடுத்தும்¸ நற்குண அவதாரமாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தேவாலயத்தைத் தூய்மைப்படுத்திய நிகழ்ச்சி இதனை நமக்கு வெளிப்படுத்துகிறது.

“நீ தீமையினால் வெல்லப்படாமல்¸ தீமையை நன்மையினால் வெல்லு” என்று அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியிருப்பதாலேயே தீமையை நற்குணம் வெல்லக்கூடிய தனித்தன்மையுடையது என்பது தெளிவாகும் (ரோ.12:21). வேறொருவர் நம்மீது கொண்ட வெறுப்பின் காரணமாக¸ நமது சாட்சியைக் கெடுத்துக்கொள்வோமாயின் தீமையினால் நாம் வெல்லப்பட்டுவிடுவோம். நாம் அதற்கு மேலாக உயர எழுந்தவர்களாக¸ கிருபையையும் இரக்கத்தையும்¸ அன்பையும் காட்டுவோமாயின் தீமையை நன்மையால் வெல்கிறவர்களாயிருப்போம்.

முர்டோக் கேம்பெல் என்பார் தேவபக்தியுள்ள ஓர் ஊழியரைக் குறித்துச் சொன்ன கதை: அந்த ஊழியருடைய மனைவி அவருடைய வாழ்க்கையைப் பரிதாபத்திற்குரியதாக ஆக்கினாள். ஒருநாள் திருமறையை அவர் படித்துக்கொண்டிருக்கும்போது¸ அவருடைய கரத்திலிருந்து பிடுங்கி அதை நெருப்பில் எறிந்துவிட்டாள். அவளுடைய முகத்தை ஏறிட்டு நோக்கிய ஊழியர்¸ “இதைக் காட்டிலும் நல்ல சுகமான இடத்தில் இதுவரை உட்கார்ந்ததில்லை” என்று அமைதியோடு கூறினார். அவருடைய நற்குணம் மனைவியின் துர்க்குணத்தை வென்றது. பின்னர் அப்பெண்மணி அன்புமிக்க¸ கிருபைபொருந்தின மனைவியாக மாறினாள். இம்மாற்றத்தைக் குறித்து கேம்பெல் கூறியதாவது: “அவருடைய யேசபேல்¸ லீதியாளாக மாறினாள். அவருடைய முள் லீலிபுஷ்பமாக மாறியது. நற்குணம் வெற்றி வாகை சூடியது.

7. März

»Die Frucht des Geistes aber ist: … Güte …« Galater 5,22

Güte bedeutet charakterliche Vortrefflichkeit. Jemand hat Güte einmal als »mit allem Zubehör ausgestattete Tugend« definiert, was einfach heißt, dass der Mensch, der sie besitzt, in jedem Lebensbereich freundlich, tüchtig und rechtschaffen ist.

Güte ist das Gegenteil von Schlechtigkeit. Ein schlechter Mensch kann betrügerisch, unmoralisch, verräterisch, ungerecht, grausam, selbstsüchtig, gehässig, habsüchtig und/oder zügellos sein. Ein guter Mensch aber legt, wenn er auch nicht vollkommen ist, Wahrheit, Gerechtigkeit, Reinheit und andere ähnlich erstrebenswerte Charakterzüge an den Tag.

In Römer 5,7 unterscheidet der Apostel Paulus zwischen einem Gerechten und einem Gütigen. Der Gerechte ist aufrichtig, ehrlich und geradlinig in seinem Handeln, aber er kann anderen gegenüber kalt und gleichgültig sein. Der Gütige dagegen ist warmherzig und liebenswürdig. Für einen Gerechten würde man kaum sterben wollen, vielleicht dagegen aber für einen Gütigen.

Und doch dürfen wir nicht vergessen, dass Güte auch konsequent sein kann. Es wäre nicht gut, Sünde zu ignorieren oder gar zu tolerieren. Deshalb kann wahre Güte auch tadeln, zurechtweisen und züchtigen. Wir sehen dies deutlich, wenn der Herr Jesus, der doch die Güte verkörpert in Seiner Person, den Tempel reinigt.

Ein einzigartiger Zug der Güte ist es, dass sie das Böse überwinden kann. Paulus schrieb an die Gläubigen in Rom: »Lass dich nicht von dem Bösen überwinden, sondern überwinde das Böse mit dem Guten« (Römer 12,21). Wenn wir zulassen, dass der Hass eines anderen unsere innere Einstellung ruiniert, dann sind wir vom Bösen überwunden worden. Aber wenn wir uns davon nicht beeinflussen lassen und Gnade, Barmherzigkeit und Liebe erweisen, haben wir das Böse mit dem Guten überwunden.

Murdoch Campbell berichtet von einem gottesfürchtigen Pfarrer im schottischen Hochland, dessen Frau ihm sein Leben mit allen Mitteln zu verleiden suchte. Als er eines Tages seine Bibel las, riss sie sie ihm aus den Händen und warf sie ins Feuer! Er blickte sie an und sagte ruhig: »Ich glaube nicht, dass ich jemals an einem wärmeren Feuer gesessen bin.« Seine Güte überwand das Böse. Seine Gattin wurde schließlich zu einer liebevollen gütigen Ehefrau. Campbell kommentiert dazu: »Seine Isebel wurde zu einer Lydia. Sein Dorn wurde zu einer Lilie.« Die Güte hatte überwunden!