June

திருமுழுக்கின் இன்றியமையாமை

June 28

“He that believeth and is baptized shall be saved; but he that believeth not shall be damned.” (Mk. 16:16)

If this were the only verse in the Bible on the subject, we might justifiably conclude that salvation is by faith plus baptism. But when there are 150 verses in the New Testament that condition salvation on faith alone, we must conclude that those 150 verses cannot be contradicted by one or two like this one.

However, although baptism is not essential for salvation, it is essential for obedience. God’s will is that all who have trusted His Son as Lord and Savior should publicly identify themselves with Him in the waters of believer’s baptism.

The New Testament does not contemplate any such anomaly as an unbaptized believer. It assumes that when a person is saved, he will be baptized. In the book of Acts, the disciples practiced what we might call “instant baptism.” They didn’t wait for a formal service in a church setting, but baptized immediately on the basis of a person’s profession of faith.

The sequence of belief and baptism is so close that the Bible speaks of them in the same breath— “He that believeth and is baptized…”

In our desire to avoid the unscriptural teaching of baptismal regeneration, we often allow the pendulum to swing too far in the opposite direction. People are apt to go off with the false idea that it doesn’t really matter whether they are baptized. But it does matter.

We hear some saying glibly, “I can go to heaven without being baptized.” I always answer them, “Yes, that is true. You can go to heaven without being baptized, but if you do, you’ll be unbaptized for all eternity.” There will be no opportunity for baptism in heaven. It is one of those acts in which we can obey the Lord now or never.

All who have trusted Jesus Christ as Lord and Savior should lose no time in being baptized. In this way they publicly identify themselves with Him in His death and resurrection and they publicly commit themselves to walk with Him in newness of life.

யூன் 28

விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான். விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாத் தீர்;க்கப்படுவான். மாற்கு 16:16.

திருமுழுக்கின் இன்றியமையாமை

இந்தப் பொருளைக் குறித்துத் திருமறையில் இந்த வசனம் ஒன்று மட்டும் இருக்குமாயின், விசுவாசத்தோடு ஞானஸ்நானம் பெறுவதால் இரட்சிப்பு உண்டாகிறது என்னும் முடிவிற்கு வருவதற்கு நேர்மையான காரணம் இருக்கும். இரட்சிக்கப்படுவதற்கு விசுவாசம் மட்டும் போதுமானது என்று புதிய ஏற்பாட்டில் 150 வசனங்கள் இருக்கிறபடியால், இதுபோன்ற ஓரிரு வசனங்கள் அந்த 150 வசனங்களை மறுத்துரைக்கமாட்டா என்று முடிவு செய்யவேண்டும்.

இரட்சிப்புக்கு ஞானஸ்நானம் அவசியமில்லையெனினும், கீழ்படிதலுக்கு அது அவசியமானது. தேவனுடைய குமாரனை கர்த்தரும் இரட்சகருமாக நம்பினவர்கள் அனைவரும் நீரில் விசுவாசிக்களுக்குரிய திருமுழுக்கைப் பெற்று அவரோடு இணைந்ததை வெளிப்படையாகக் காட்ட வேண்டுமென்பது தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

திருமுழுக்கு பெறாத விசுவாசி என்று ஒரு முரண்பாட்டை புதிய ஏற்பாடு சிந்தித்துப் பார்க்கவில்லை. ஒரு மனிதன் இரட்சிக்கப்பட்டால் அவன் திருமுழுக்குப் பெறுவான் என்றே அது கருதுகிறது. அப்போஸ்தலர் நடபடிகள் நூலில், ‘உடனடி ஞானஸ்நானத்தைச் ” சீடர்கள் கடைப்பிடித்ததாகப் பார்க்கிறோம். ஒரு மனிதன் அறிக்கை செய்கிற விசுவாசத்தின் அடிப்படையில் உடனடியாக அவர்கள் ஞானஸ்நானம் கொடுத்தனர். சபை கூடி சில ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடித்து ஞானஸ்நானம் கொடுக்க வேண்டுமென்று காத்திருக்கவில்லை.

விசுவாசம் மற்றும் ஞானஸ்நானம் ஆகியவை ஒன்றின்பின் ஒன்று மிகநெருக்கமாயிருப்பதை, ‘விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன்.” என்னும் வேதவசனத்தில் காணலாம்.

ஞானஸ்நானத்தினாலே மறுபிறப்பு உண்டாகிறது என்னும் தவறான உபதேசத்தைத் தவிர்ப்பதற்காக, அவ்வப்போது நம் சிந்தனையின் ஊசலை மறுமுனைக்கு தள்ளிவிடுகிறோம். அதன் காரணமாகப் பலர் ஞானஸ்நானம் எடுக்காதிருப்பது ஒரு பொருட்டன்று என்ற தவறான எண்ணத்திற்குச் சென்றுவிடுகின்றனர். ஆனால் திருமுழுக்கு மிகவும் இன்றியமையாததாகும்.

‘நான் ஞானஸ்நானம் பெறாமல் விண்ணுலகம் செல்வேன்” என்று சிலர் சிந்தனையற்ற முறையில் பேசுகிறதைக் கேட்கிறோம். ‘ஆம் உண்மைதான் நீர் ஞானஸ்நானம் பெறாமல் விண்ணுலகம் செல்லமுடியும். ஆனால் நித்திய காலமும் ஞானஸ்நானம் பெறாதவராகவே இருப்பீர்” என்று நான் அவர்களுக்கு விடைகூறுவதுண்டு. விண்ணுலகில் திருமுழுக்குபெறச் சந்தர்ப்பம் கிடைக்காது. இப்பொழுது கர்த்தருக்குக் கீழ்படியக்கூடிய செயல்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. இப்பொழுது கீழ்படியவில்லையென்றால் எப்பொழுதும் கீழ்படியமுடியாது.

இயேசுகிறிஸ்துவைத் தனது கர்த்தரும் இரட்சகருமாக நம்பி ஏற்றுக்கொண்ட அனைவரும் திருமுழுக்கு எடுக்க காலம் தாழ்த்தக்கூடாது. அவருடைய மரணத்திலும் உயிர்த்தெழுதலிலும் அவரோடு இணைந்துள்ளதை வெளிப்படையாகக் காட்டுகிற செயலாக இது இருக்கிறது. அவரோடுகூட புதிதான ஜீவனுள்ளவர்களாக நடக்கப்போவதைக் குறித்து வெளியரங்கமாகச் சான்று பகர்வதாகவும் இது இருக்கிறது.

28. Juni

»Wer da glaubt und getauft wird, wird errettet werden; wer aber nicht glaubt, wird verdammt werden.« Markus 16,16

Wenn dies der einzige Vers in der Bibel zu diesem Thema wäre, dann müssten wir schlussfolgern, dass die Errettung durch den Glauben plus Taufe geschieht. Aber wenn es 150 Verse im Neuen Testament gibt, welche die Errettung ausschließlich vom Glauben abhängig machen, müssen wir schließen, dass diese 150 Verse nicht von einem oder zweien wie der obige außer Kraft gesetzt werden können.

Nun, wenn die Taufe auch nicht zur Erlösung nötig ist, so ist sie doch notwendig zum Gehorsam. Es ist Gottes Wille, dass alle, die ihr Vertrauen auf Seinen Sohn als Herrn und Heiland gesetzt haben, sich öffentlich mit Ihm identifizieren im Wasser der Glaubenstaufe.

Das Neue Testament kann nichts mit einer so grotesken Anomalie wie einem ungetauften Gläubigen anfangen. Es setzt als selbstverständlich voraus, dass jeder, der errettet wird, sich auch taufen lässt. In der Apostelgeschichte praktizierten die Jünger das, was wir als »Soforttaufe« bezeichnen würden. Sie warteten nicht auf einen formellen Taufgottesdienst im Rahmen
der Gemeinde, sondern tauften sofort auf der Grundlage des persönlichen Glaubensbekenntnisses.

Die Abfolge von Taufe und Glauben ist so dicht, dass die Bibel sie in einem Atemzug nennt: »Wer da glaubt und getauft wird …«

In unserem Bestreben, die unbiblische Lehre der Taufwiedergeburt zu vermeiden, lassen wir das Pendel oft zu weit in die Gegenrichtung ausschlagen. Das führt dann dazu, dass die Menschen den Eindruck haben, als käme es überhaupt nicht darauf an, ob sie getauft sind oder nicht. Aber es kommt sehr darauf an.

Oft hören wir jemand ganz locker sagen: »Ich komme auch ohne Taufe in den Himmel.« Ich antworte darauf immer: »Ja, das ist richtig. Du kannst in den Himmel kommen, ohne getauft zu sein, aber wenn du es wirklich so weit kommen lässt, dann wirst du in alle Ewigkeit ungetauft bleiben.« Im Himmel wird es keine Gelegenheit mehr zur Taufe geben. Die Taufe ist eines der Dinge, worin wir dem Herrn jetzt oder nie gehorchen können.

Alle, die Jesus Christus als ihrem Herrn und Heiland vertraut haben, sollten keine Zeit verlieren, sich taufen zu lassen. Dadurch identifizieren wir uns öffentlich mit Ihm in Seinem Tod und Seiner Auferstehung und verpflichten uns öffentlich, mit Ihm in Neuheit des Lebens zu wandeln.