June

அவிசுவாசிகளின் மரணம்

June 25

“O my son Absalom! my son, my son Absalom! would God I had died for thee, O Absalom, my son, my son!” (2 Sam. 18:33)

Whether Absalom was a saved man or not, his father’s wail mirrors the grief of many believers who mourn the death of an unsaved relative for whom they may have prayed for many years. Is there any balm in Gilead for such an occasion? What is the Scriptural attitude to take?

Well, first of all, we cannot always be sure whether the person actually did die without Christ. We have heard of the testimony of one man who was thrown by a horse and who trusted Christ “Between the stirrup and the ground, he mercy sought and mercy found.” Another man slipped off a gangplank and was converted before he hit the water. If either had died in these mishaps, no one would have known that he died in faith.

We believe that it is possible for a person to be saved in a coma. Medical authorities tell us that a person in a coma can often hear and understand what is being said in the room, even if he himself cannot speak. If he can hear and understand, why can he not receive Jesus Christ by a definite act of faith?

But let us suppose the worst. Let us suppose that the person actually did die unsaved. What should be our attitude then? We should very clearly take sides with God against our own flesh and blood. It is not God’s fault if anyone dies in his sins. At stupendous cost, God has provided a way by which people can be saved from their sins. His salvation is a free gift, quite apart from debt or merit. If men refuse the gift of eternal life, what more can God do? He certainly cannot populate heaven with people who don’t want to be there, for then it would not be heaven.

So if some of our loved ones do go into eternity without hope, all we can do is share the grief and heartbreak of the Son of God, who, weeping over Jerusalem, said, “I would but ye would not.”

We know that the Judge of all the earth will do right (Gen. 18:25), so we vindicate Him in the punishment of the lost as much as in the salvation of repentant sinners.

யூன் 25

என் மகனாகிய அப்சலோமே, நான் உனக்குப் பதிலாகச் செத்தேனானால் நலமாயிருக்கும். அப்சலோமே, என் மகனே, என் மகனே என்று சொல்லி அழுதான் 2. சாமுவேல் 18:33.

அவிசுவாசிகளின் மரணம்

அப்சலோம் இரட்சிக்கப்பட்டவனா, இல்லையா என்பதை நாம் அறியோம். இரட்சிக்கப்படாத ஒருவருக்காகப் பல ஆண்டுகள் சில விசுவாசிகள் ஜெபித்திருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் இரட்சிக்கப்படாமலேயே இறந்து போகும்போது விசுவாசிகள் அடைகிற கவலையையே தாவீதின் கவலை பிரதிபலித்துக் காட்டுகிறது. அப்படிப்பட்ட தருணங்களுக்குத் தேவையான ஆறுதல் கீலேயாத்தில் இருக்கிறதா? இதைக் குறித்து வேதம் கற்பிப்பது யாது?

முதலாவது, இறந்துபோன மனிதன் உண்மையாகவே கிறிஸ்து அற்றவனாக இறந்தானா என்பதை நாம் அறியோம். குதிரையினின்று தூக்கி எறியப்பட்ட மனிதனுடைய சாட்சியை நாம் கேட்டிருக்கிறோம். அவன் தூக்கி எறியப்பட்டுத் தரையில் விழுவதற்கு முன்னர் கிறிஸ்துவை விசுவாசித்தான். நாடிய இரக்கத்தை அவன் தேடிய உடனே கண்டடைந்தான். கப்பலில் ஏறுவதற்குப் பயன்படும் இயங்கு பாலத்தில் நின்றுகொண்டிருந்த மனிதன் நீருக்குள் விழுவதற்கு முன்னர் மனந்திரும்பினான். இந்த விபத்துக்களில் அவர்கள் இறந்து போயிருந்தால், அவர்கள் மரிக்கும் முன்னர் இரட்சிக்கப்பட்டதை ஒருவரும் அறிந்திருக்கமாட்டார்கள்.

உணர்ச்சிகளை இழந்து மயங்கிய நிலையில் கிடக்கும் ஒரு மனிதன் இரட்சிக்கப்பட முடியும் என்றே நாம் விசுவாசிக்கிறோம். அவ்வாறு செயலிழந்த நிலையில் இருப்பவர் அறையில் பிறர் என்ன பேசுகிறார்கள் என்பதைக் கேட்டு, புரிந்து கொள்ளமுடியும் என்றே மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் அவரால் பேசமுடியாது. அவர் நற்செய்தியைக் கேட்டு, தனது உள்ளத்தில் இயேசு கிறிஸ்துவை இரட்சகராகவும் கர்த்தராகவும் ஏற்றிருக்கமாட்டார் என்று நம்மால் கூறமுடியாது.

அந்த மனிதன் இரட்சிக்கப்படாமலேயே இறந்து போனான் என்று வைத்துக்கொள்வோம் அப்பொழுது நாம் என்ன செய்யவேண்டும்? நமது சொந்த இரத்தத்தையும் மாம்சத்தையும் எதிர்த்து நின்று தேவனுடைய பக்கத்தையே நாம் சார்ந்து கொள்ளவேண்டும். ஒருவன் தனது பாவத்தோடு இறந்துபோவானானால் அது தேவனுடைய தவறல்ல. பிரமிக்கத்தக்க விலையைக் கொடுத்து, மனிதர்களுடைய இரட்சிப்புக்கான வழியை தேவன் உண்டு பண்ணியிருக்கிறார். தகுதியின் அடிப்படையினால் அன்றி பாவமன்னிப்பாகிய இரட்சிப்பு இலவசமாகத் தரப்படுகிறது. நித்திய வாழ்வாகிய அந்த ஈவை மனிதர்கள் வேண்டாமென்று மறுத்துரைத்தால், அதற்கும் மேலாக தேவனால் என்ன செய்யமுடியும்? விண்ணுலகிற்கு வர மறுக்கும் மக்களைக் கொண்டு பரலோகத்தை நிரப்ப நிச்சயமாக தேவன் விரும்பமாட்டார். அவ்வாறு செய்தால் அது பரலோகமாக இருக்காது.

ஆகவே, நமது உறவினர் யாராவது நம்பிக்கையில்லாதவராக இறந்து போனால், எருசலேம் நகரத்தைக் குறித்து தேவகுமாரன் அடைந்த துயரத்திலும், உள்ளம் உடைந்த நிலையிலும் நாம் பங்கு கொள்ளவேண்டும். ‘நான் மனதாயிருந்தேன், உங்களுக்கே மனதில்லை” என்று அவர் பொழிந்ததைக் கண்டுணர்க.
சர்வலோகத்தின் நியாயாதிபதி எப்பொழுதும் நேர்மையாய்ச் செய்வார் என்பதை நாம் அறிவோம் (ஆதி.18:25). இழந்து போனவர்கள் நீதியான தண்டனையைப் பெறுவதிலும், மனந்திரும்பிய பாவிகள் இரட்சிக்கபடுவதிலும் அவர் வெற்றிசிறந்தார் என்று முழங்கிடுவோம்.

25. Juni

»Mein Sohn Absalom! Mein Sohn, mein Sohn Absalom! Wäre ich doch an deiner statt gestorben! Absalom, mein Sohn, mein Sohn!« 2. Samuel 18,33

Ob Absalom nun errettet war oder nicht, so spiegelt die Wehklage seines Vaters doch eindringlich den Schmerz vieler Gläubiger wider, die den Tod eines unerretteten Verwandten beklagen, für den sie schon jahrelang gebetet haben. Gibt es in einer solchen Situation »Balsam in Gilead« (Jeremia 8,22)? Welche Haltung sollten wir nach der Schrift einnehmen?

Nun, erstens können wir nicht immer sicher sein, dass jemand wirklich ohne Christus gestorben ist. Wir haben vom Zeugnis eines Mannes gehört, der vom Pferd geworfen wurde und in diesem Augenblick Christus annahm: »Zwischen Steigbügel und Erdboden hat er Gnade gesucht und Gnade gefunden.« Ein anderer Mann rutschte auf dem Fallreep aus und bekehrte sich, ehe er auf dem Wasser aufschlug. Wenn einer von beiden bei diesen Unfällen gestorben wäre, hätte niemand gewusst, dass sie im Glauben gestorben wären.

Wir glauben, dass ein Mensch auch im Koma gerettet werden kann. Medizinische Autoritäten sagen, dass man im Koma oft hören und verstehen kann, was im Zimmer gesagt wird, auch wenn man selber nicht sprechen kann. Wenn man hören und verstehen kann, warum kann man dann nicht den Herrn Jesus in einem definitiven Glaubensakt annehmen?

Aber nehmen wir einmal das Schlimmste an. Nehmen wir an, dass der Betreffende tatsächlich in unerrettetem Zustand gestorben ist. Wie sollte dann unsere Haltung aussehen? Wir sollten uns ganz klar auf die Seite Gottes stellen, gegen unser eigenes Fleisch und Blut. Es ist nicht Gottes Schuld, wenn jemand in seinen Sünden stirbt. Gott hat mit unermesslichen Kosten einen Weg geschaffen, wodurch Menschen von ihren Sünden errettet werden können. Seine Errettung ist eine freie Gabe, ganz unabhängig von Verdienst oder Schuldigkeit. Wenn Menschen die Gabe des ewigen Lebens ablehnen, was kann Gott dann noch tun? Er kann den Himmel gewiss nicht mit Menschen bevölkern, die gar nicht dort sein wollen, denn dann wäre es nicht mehr der Himmel.

Wenn also eines unserer Lieben ohne Hoffnung in die Ewigkeit geht, dann können wir nur den Schmerz und das Herzeleid des Sohnes Gottes teilen, der über Jerusalem weinte: »Ich wollte … aber ihr habt nicht gewollt « (Matthäus 23,27).

Wir wissen, dass der Richter der ganzen Erde Recht üben wird (siehe 1. Mose 18,25). Er wird also durch die Verdammung der Verlorenen ebenso sehr gerechtfertigt wie durch die Errettung bußfertiger Sünder.