June

கனிவான கணவன்

June 21

“Husbands, love your wives, even as Christ also loved the church, and gave himself for it.” (Eph. 5:25)

What does a Christian wife desire in her husband? Her first concern should be with his spiritual life, not with his physical appearance.

He should be a man of God, one who seeks first the kingdom of God and his righteousness. His objective is to serve the Lord and to be active in the local fellowship. In the home he should maintain a family altar, and be an example of the believer.

This man takes his proper place as head of the house, but he is not a tyrant.

He loves his wife and thereby wins her subjection rather than demanding it. He is respectful to her, treating her like a lady at all times. He is faithful, understanding, longsuffering, kind, thoughtful, considerate and joyful.

The ideal husband is a good provider, one who is diligent in business. But money is not his first priority. He is not covetous or greedy.

He is one who loves his children, trains them, spends time with them, plans social activities for them, is a good example for them and gives each one individual attention.

He is a lover of hospitality. His home is open to the Lord’s servants, to all Christians and to the unsaved as well.

He keeps lines of communication open with his wife and family. He understands and accepts their limitations and can laugh goodnaturedly at their blunders. He shares with them on a social and intellectual basis. When he does or says something wrong, he is quick to admit his mistake and apologize. He is always open to suggestions from the family. It is highly desirable that he be able to keep on top when his wife is down.

Other desirable traits are that he be clean and well-groomed, unselfish, honest, gentle, dependable, loyal, generous and appreciative. He should have a good sense of humor and be neither grouchy nor complaining.

Few if any men embody all these virtues and it is unrealistic to expect them all. A wife should be grateful for those which she does find and lovingly help her husband to develop others.

யூன் 21

புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள். அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூருந்து…. தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார். எபேசியர் 5:25-28

கனிவான கணவன்

தன்னுடைய கணவனிடத்தில் ஒரு கிறிஸ்தவ மனைவி எதனை எதிர்பார்க்கிறாள்? அவனுடைய சரீரத்தோற்றத்தைக் குறித்து அவள் அக்கறை கொள்ளாமல், அவனுடைய ஆவிக்குரிய வாழ்வைக் குறித்தே கருத்துடையவளாக இருக்க வேண்டும்.

தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் முதலாவது தேடுகிற தேவனுடைய மனிதனாக இருக்க வேண்டும். கர்த்தருக்காகப் பணிபுரிகிறவனாகவும், உள்ளுர் சபை ஜக்கியத்தில் திறப்பட செயல்புரிகிறவனாகவும் இருக்கவேண்டும். வீட்டில் குடும்ப ஜெபத்தை நடத்துகிறவனாகவும், முன்மாதிரியான கிறிஸ்தவனாகவும் விளங்கவேண்டும்.

வீட்டின் தலைமையிடத்தை எடுத்துக் கொள்ளும் அவன், கொடுங்கோல் ஆட்சி புரிவதில்லை. தன் மனைவியினிடத்தில் அன்புகூருவதால் அவளுடைய கீழ்படிதலை வெற்றிகொள்கிறான். அதனை அவன் கட்டாயப்படுத்திக் கேட்கிறதில்லை. அவளை அவன் மதிக்கிறான். பெண்ணை மதித்து நடத்த வேண்டிய வகையில் நடத்துகிறான். உண்மை, இரக்கம், நீடிய பொறுமை, மகிழ்ச்சி, ஆகிய நற்குணங்களுடையவனாகிய கணவன், அவளைப் புரிந்து கொண்டு, அவள்மீது அக்கறை கொள்கிறான்.

முன்மாதிரியான கணவன் குடும்பத்தின் தேவைகளைச் சந்திக்கிறான். தொழிலில் கவனமுள்ளவனாயிருக்கிறான். பணத்திற்கு முதலிடம் கொடுக்கிறதில்லை. செல்வத்தை இச்சிக்கிறதில்லை. பேராசை கொள்கிறதுமில்லை.

தன்னுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறான். அவர்களோடு நேரத்தைச் செலவிட்டு, பயிற்சி அளிக்கிறான். ஒவ்வொருவரிடத்திலும் தனித்தனியாகக் கவனம் செலுத்துகிறான். அவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறான். சமுக நிலையங்களில் பிள்ளைகள் கலந்துகொள்ள ஏற்பாடு செய்கிறான்.

விருந்தோம்பலை விரும்புகிறான். கர்த்தருடைய பிள்ளைகளுக்கும், ஊழியக்காரர்களுக்கும், அவிசுவாசிகளுக்கும் கூட அவன் வீடு திறந்திருக்கிறது.
தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளுடன் அளவளாவுகிறான். அவர்களது குறைகளைப் புரிந்துகொள்ளும் அவன், தான் தவறிழைக்குபோது, தனது தவற்றை ஒத்துக்கொள்வதற்கும் மன்னிப்பைக் கேட்பதற்கும் காலம் தாழ்த்துவதில்லை. குடும்பத்தினர் கூறும் ஆலோசனைகளைத் திறந்த மனதுடன் கேட்கிறான். மனைவி சோர்வடைந்தாலும், தான் மனஉறுதி கொண்டவனாகச் செயல்புரிகிறான்.

தூய்மை, தன்னலமின்மை, நேர்மை, மென்மை, நம்பகத்தன்மை, பெருந்தன்மை, பாராட்டுகிற தன்மை, ஆகிய குணங்கள் உடையவனாக இருக்கிறான். நேர்த்தியாக உடை அணிந்து காணப்படுகிறான். நகைச்சுவையோடு நடந்து கொள்கிறான். குறைகூறுவதில்லை, முறுமுறுப்பதும் இல்லை.

இத்தகைய எல்லா நற்குணங்களையும் ஒருங்கே உடையவரைக் காண்பது அரிது. அவ்வாறு எதிர்பார்க்கவும் கூடாது. இக்குணங்களின் சிலவற்றைத் தன் கணவனிடத்தில் காண்கிற மனைவி அவற்றிக்காக நன்றி செலுத்தி, பிற நற்குணங்களும் பெருகுவதற்கு அவனிடம் அன்பு பாராட்டி உறுதுணையாக இருக்கவேண்டும்.

21. Juni

»Ihr Männer, liebet eure Frauen, gleichwie auch der Christus die Versammlung geliebt und sich selbst für sie hingegeben hat.« Epheser 5,25

Was erwartet eine christliche Frau von ihrem Ehemann? Sie sollte zuerst auf sein geistliches Leben bedacht sein, nicht auf seine äußere Erscheinung. Er sollte ein Mann Gottes sein, der zuerst nach dem Reich Gottes und Seiner Gerechtigkeit trachtet. Sein Lebensziel ist es, dem Herrn zu dienen und in der örtlichen Gemeinde Verantwortung zu tragen. Zu Hause sollte er als »Hauspriester« Gebet und Bibelstudium in der Familie aufrechterhalten und das Muster eines Gläubigen sein.

Dieser Mann nimmt seine gottgegebene Stellung als Haupt des Hauses ein, ist aber kein Tyrann.

Er liebt seine Frau und erlangt dadurch ihre bereitwillige Unterwerfung, ohne sie von ihr fordern zu müssen. Er ist ihr gegenüber rücksichtsvoll und behandelt sie jederzeit mit Respekt. Er ist treu, verständnisvoll, langmütig, freundlich, aufmerksam, zuvorkommend und fröhlich.

Der ideale Ehemann ist ein guter Ernährer, der in seinem Beruf fleißig und sorgfältig arbeitet. Aber Geld ist nicht seine erste Priorität. Er ist nicht geldgierig oder habsüchtig.

Er liebt seine Kinder, erzieht sie, verbringt Zeit mit ihnen, plant mit ihnen gemeinsame Unternehmungen, ist ein gutes Vorbild für sie und widmet jedem einzelnen Kind besondere Aufmerksamkeit.

Er liebt Gastfreundschaft. Sein Haus ist offen für die Diener des Herrn, für alle Christen und auch für die Unbekehrten. Er hat immer einen guten Draht zu seiner Frau und seiner Familie. Er versteht und akzeptiert ihre Begrenzungen und kann über ihre Fehler verständnisvoll lächeln. Er hat mit ihnen Gemeinschaft auf menschlicher und geistiger Ebene. Wenn er etwas
Falsches tut oder sagt, gibt er seinen Fehler sofort zu und entschuldigt sich. Er ist immer offen für Vorschläge und Wünsche seiner Familie. Es ist äußerst wichtig, dass er sein geistliches und seelisches Gleichgewicht halten kann, wenn seine Frau niedergeschlagen ist.

Andere wünschenswerte Züge sind, dass er sauber und ordentlich in seinem Äußeren ist, selbstlos, ehrlich, sanft, zuverlässig, freigebig und verständnisvoll. Er sollte humorvoll sein und nicht nörglerisch und unzufrieden.

Wenige Männer – wenn nicht keiner – verkörpern alle diese Eigenschaften, und es ist unrealistisch, alle auf einmal zu erwarten. Eine Frau sollte dankbar sein für die, welche vorhanden sind, und ihrem Mann eine liebevolle Hilfe bei der Entwicklung weiterer positiver Charakterzüge sein.