June

எங்கும் நிறைந்த தேவன்

June 6

“Do not I fill heaven and earth? saith the Lord.” (Jer. 23:24b)

When we speak of God’s omnipresence, we mean that He is present in all places at one and the same time. A Puritan named John Arrowsmith told of a heathen philosopher who once asked, “Where is God?” The Christian answered, “Let me first ask you, ‘Where is He not?’”

An atheist wrote on a wall, “God is nowhere.” A child came along and changed the spacing to read, “God is now here.”

We are indebted to David for a classic passage on the omnipresence of God. He wrote, “Whither shall I go from thy Spirit? or whither shall I flee from thy presence? If I ascend up into heaven, thou art there: if I make my bed in hell, behold, thou art there. If I take the wings of the morning, and dwell in the uttermost parts of the sea; even there shall thy hand lead me, and thy right hand shall hold me.” (Psa. 139:7-10).

When we speak of omnipresence, we must be careful not to confuse it with pantheism. The latter says that all is God. In some of its forms, men worship trees or rivers or the forces of nature. The true God controls the universe and fills the universe, but He Himself is separate from the universe and is greater than it.

What practical influence should the truth of God’s omnipresence have in the life of His people?

There is the solemn reminder, of course, that we cannot hide from God. He is inescapable.

There is unspeakable comfort in knowing that God is always with His people. He never leaves us. We are never alone.

Then there is challenge! Because He is always with us, we should walk in holiness and in separation from the world.

He has promised His presence in a special way when two or three are gathered together in His Name: He is in the midst. This should inspire deep reverence and solemnity in the gatherings of the Saints.

யூன் 6

நான் வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவர் அல்லவா என்று கர்த்தர் சொல்லுகிறார். எரேமியா 23:24.

எங்கும் நிறைந்த தேவன்

தேவன் சர்வ வியாபியாக இருக்கிறார் என்று நாம் கூறும்போது, அவர் ஒரே நேரத்தில் எங்கும் இருக்கிறார் என்றே பொருள்கொள்கிறோம். தத்துவஞானி ஒருவர் புயூரிடன் புளுவைச் சேர்ந்த ஜான் ஆரோஸ்மித் என்பரிடம், ‘தேவன் எங்கே இருக்கிறார்?” என்று வினவினார். இதற்கு கிறிஸ்தவர் கொடுத்த மறுமொழி, ‘முதலில் நான் ஒரு கேள்வியைக் கேட்கிறேன். அவர் எங்கே இல்லை? என்பதேயாகும்.

நாத்திகன் ஒருவன், ‘இறைவன் எங்கே இருக்கிறார்” என்று எழுதினான். அதைக் கண்ட ஒரு சிறுவன்  ~எ~ எழுத்தை மாற்றி  ~இ~  என்று எழுதி, ‘இறைவன் இங்கே இருக்கிறார்” என்று திருத்தினான்.

தேவன் எங்கும் நிறைவாய் இருக்கிறார் என்பதை தாவீது அழகுற மொழிந்துள்ளதைக் காணும் நாம் அவனுக்கு நன்றிக்கடன்பட்டோராய் இருக்கிறோம். ‘உம்முடைய ஆவிக்கு மறைவாய் எங்கே போவேன்? உம் சமூகத்தை விட்டு எங்கே ஓடுவேன்? நான் வானத்திற்கு ஏறினாலும் நீர் அங்கே இருக்கிறீர், நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். நான் விடியக்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்திரங்களிலே போய்த் தங்கினாலும், அங்கேயும் உமது கை என்னை நடத்தம். உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்” (சங்.139:7-10).

தேவன் எங்கும் இருக்கிறார் என்று கூறும்போது, நாம் மிகுந்த எச்சரிக்கையுடையவர்களாயிருக்க வேண்டும். ‘அனைத்துமே கடவுள்” என்னும் கொள்கையோடு இதனை இணைத்துக் குழப்பி விடக்கூடாது. அனைத்தும் கடவுளே என்று எண்ணம் கொண்ட மனிதர்கள் மரங்களையும், ஆறுகளையும், இயற்கைச்சக்திகளையும், தொழுதுகொள்கின்றனர். மெய்யான தேவன் இப்பிரபஞ்சத்தை அடக்கி ஆளுகிறவர், இப்பிரபஞ்சத்தை நிரப்புகிறவர், என்றாலும் இப்பிரபஞ்சத்தின்று வேறுபட்டவர். இப்பிரபஞ்சத்தைக் காட்டிலும் அவர் மிகப்பெரியவர்.

சர்வ வியாபியாக தேவன் இருக்கிறார் என்னும் உண்மை, அவர் தம் மக்களுடைய வாழ்வில் எப்படிப்பட்ட விளைவை ஏற்படுத்தவேண்டும்?.

தேவனிடத்திலிருந்து நம்மை மறைத்துக்கொள்ள முடியாது என்னும் ஆழ்ந்த சத்தியத்தினால் நாம் அறிவுறுத்தப்படுகிறோம். அவரிடமிருந்து நாம் தப்ப இயலாது.
தேவன் எப்பொழுதும் தம் மக்களுக்கு சொல்லிமுடியாத ஆறுதல் அளிப்பவராக இருக்கிறார். அவர் நம்மை விட்டுச் சென்றுவிடுவதில்லை. நாம் ஒருக்காலும் தனித்திரோம்.

இங்கு நமக்கொரு அறைகூவல் விடுக்கப்படுகிறது! அவர் எப்பொழுதும் நம்மோடு இருக்கிற காரணத்தால், நாம் பரிசுத்தமாய் நடந்திடவேண்டும். இவ்வுலகினின்று பிரிந்து வாழ்திடவேண்டும்.

எங்கே இருவர் அல்லது மூவர் அவருடைய திருப்பெயரில் ஒன்று கூடியிருக்கின்றனரோ, அவர்கள் நடுவில் இருப்பதாக, அவருடைய பிரசன்னத்தைக் குறித்து வாக்குரைத்துள்ளார். பரிசுத்தவான்கள் ஒன்றுகூடியிருக்கிற வேளையில், அங்கு பயபக்தியும், புனித நினைவுகளும் நிறைந்து காணப்பட வேண்டும்.

6. Juni

»Bin ich es nicht, der den Himmel und die Erde erfüllt? spricht der Herr.« Jeremia 23,24b

Wenn wir von Gottes Allgegenwart sprechen, meinen wir damit, dass Er überall gleichzeitig gegenwärtig ist. Ein Puritaner namens John Arrowsmith erzählt von einem heidnischen Philosophen, der einmal fragte: »Wo ist Gott?« Der Christ antwortete: »Darf ich dich zuerst fragen, wo Er nicht ist?«

In Amerika schrieb ein Atheist auf eine Mauer: »God is nowhere« (»Gott ist nirgendwo «). Ein Kind kam vorbei und schrieb mit verändertem Buchstabenabstand: »God is now here« (»Gott ist jetzt hier«).

Wir verdanken David eine klassische Passage über die Allgegenwart Gottes. Er schrieb: »Wohin sollte ich gehen vor deinem Geist, und wohin fliehen vor deinem Angesicht? Führe ich auf zum Himmel, du bist da; und bettete ich mir in dem Scheol, siehe, du bist da. Nähme ich Flügel der Morgenröte, ließe mich nieder am äußersten Ende des Meeres, auch daselbst würde deine Hand mich leiten und deine Rechte mich fassen« (Psalm 139,7-10).

Wenn wir von Allgegenwart sprechen, müssen wir uns sorgfältig vor einer Verwechslung mit Pantheismus hüten. Letzterer sagt, dass alles Gott ist. In einigen seiner Formen beten die Menschen Bäume oder Flüsse oder die Naturkräfte an. Der wahre Gott dagegen regiert und erfüllt das ganze Universum, aber Er selbst existiert unabhängig davon und ist größer als es.

Welche praktischen Auswirkungen sollte die Allgegenwart Gottes im Leben Seines Volkes haben? Zunächst erinnert sie uns natürlich daran, dass wir uns vor Gott nicht verstecken können. Wir können Ihm nicht entfliehen.

Aber es liegt auch unaussprechlicher Trost in dem Wissen, dass Gott immer und überall bei den Seinen ist. Er verlässt uns nie. Wir sind niemals allein.

Dann ist Seine Allgegenwart auch eine Herausforderung für uns! Weil Er immer bei uns ist, sollten wir in Heiligkeit und Absonderung von der Welt wandeln.

Er hat Seine Gegenwart in besonderer Weise da verheißen, wo zwei oder drei in Seinem Namen zusammenkommen: Dann ist Er in der Mitte. Dies sollte in den Zusammenkünften der Heiligen zu tiefer Ehrfurcht und feierlichem Ernst führen.