June

மாசற்ற மனச்சாட்சி

June 3

“And herein do I exercise myself, to have always a conscience void of offense toward God, and toward men.” (Acts 24:16)

In a society like ours,, and with a corrupt old nature like ours, we are constantly faced with problems of ethics that test the sincerity of our commitment to Christian principles.

The student, for instance, is tempted to cheat on his exams. If all diplomas earned dishonestly were returned, the schools and colleges would scarcely contain them.

The taxpayer is forever tempted to understate his income, overstate his expenses or withhold some pertinent information altogether.

The name of the game in business, politics and law is payola. Bribes are used to pervert justice. Gifts change hands to get orders. Kickbacks keep business coming. Payoffs appease local inspectors who often make extreme and sometimes ridiculous demands.

Almost every profession has its own pressures to be dishonest. The Christian doctor is called on to sign his name to insurance claims that are patently false. The lawyer must decide whether to defend a criminal whom he knows to be guilty, or to handle a divorce case where both parties are Christians. The used car dealer fights a battle within whether to adjust the odometer to show a lower mileage. The laborer faces the decision, in joining a union, of committing himself to violence in the event of a strike. Should a Christian flight attendant serve liquor (or, choosing that job, does she have any choice)? Should a Christian athlete play on the Lord’s Day? Should a Christian grocer sell cigarettes, which are known to produce cancer?

Is it worse for a Christian architect to design a nightclub or a modernistic, liberal church building? Should a Christian organization accept gifts from a brewery? Or from a Christian who is living in sin? Should a buyer accept a crate of oranges or a box of jams and jellies from one of his suppliers at Christmas time?

The best deciding rule is the one in our text—“to have always a conscience void of offense toward God, and toward men.”

யூன் 3

இதனால் நான் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிருக்கப் பிரயாசப்படுகிறேன். அப்போஸ்தலர் 24:16

மாசற்ற மனச்சாட்சி

இந்தச் சமுதாயம் நேர்மையற்றதாயிருக்கிறது. நமது முந்தின இயல்பும் நேர்மையற்றது. இதன் காரணமாக நாம் நம்மை ஒப்புவித்திருக்கிற கிறிஸ்தவக் கொள்கைகளுக்கு உண்மையுள்ளவர்களாக இருக்கிறோமா என்னும் சோதனைகளைத் தொடர்ந்து நாம் சந்திக்க வேண்டியவர்களாகயிருக்கிறோம்.

எடுத்துக்காட்டாக, மாணவன் ஏமாற்றி மோசடி செய்ய ஏவப்படுகிறான். தவறிழைத்து வாங்கிய பட்டங்கள் எல்லாவற்றையும் திருப்பிக் கொடுத்துவிட்டால் அவற்றை வைக்கக் கல்லூரிகளில் இடம் போதாது.

தங்களது வருமானத்தைக் குறைத்துக் கூறவும், செலவீனங்களை மிகுதியாகக் காட்டவும்., சில இன்றியமையாத செய்திகளை மறைத்து வைக்கவும், வரிசெலுத்துபவர்கள் ஏவப்படுகின்றனர்.

அரசியல், தொழில், சட்டம், எதுவாயிருப்பினும் லஞ்சம் விளையாடுகிறது. தீர்ப்பை மாற்றி எழுதுவதற்கு லஞ்சம் அளிக்கப்படுகிறது. ஒரு வேலைக்கான ஆணையைப் பெறுவதற்கு அன்பளிப்பு கைமாறுகிறது. தொழில் விருத்தியடைய பெரும் பணம் கொடுக்கப்படுகிறது. உள்ளுராட்சி ஆய்வாளர்கள் பலவிதமான விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று கோருவாhர்கள். ஆனால் பணமோ அவர்களைச் சமாதானப்படுத்தும்.

நேர்மையற்ற முறையில் நடக்க ஒவ்வொரு துறையிலும் பலவகைகளில் வற்புறுத்தப்படுகின்றனர். காப்பீட்டுக் கழகங்களில் சமர்ப்பிக்கப்படும் தவறான கோரிக்கைகளில் கிறிஸ்தவ மருத்துவர்கள் கையெழுத்துப்போட வற்புறுத்தப்படுகின்றனர். குற்றவாளி என்று தெரிந்தும் அவருக்காக வழக்குரைஞர் வாதாட வேண்டியுள்ளது. கணவன் மனைவி இருவரும் கிறிஸ்தவராயிருப்பனும் விவாகரத்து வழக்குகளில் வழக்காட வழக்கறிஞர் கட்டாயப்படுத்தப்படுகிறார். பழைய கார்களை விற்பனை செய்வதற்கு முன் தூரம் காட்டும் கருவியில் தூரத்தைக் குறைக்கச் சொல்லி வற்புறுத்துகின்றனர். தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தில் சேரவும், வேலைநிறுத்தத்தில் ஈடுபடவும், வன்முறையில் ஈடுபடவும், கட்டாயப்படுத்துகின்றனர். விமானத்தில் மது விநியோகம் செய்யலாமா? ஒரு கிறிஸ்தவன் அல்லது ஒரு கிறிஸ்தவப்பெண் இவ்வேலைக்குச் சேரலாமா? கர்த்தருடைய நாளில் ஒரு கிறிஸ்தவ விளையாட்டு வீரர் பந்தயத்தில் கலந்து கொள்ளலாமா? புற்றுநோயை விளைவிக்கும் சிகரட் போன்றவற்றை கிறிஸ்தவக் கடைக்காரர் விற்கலாமா?

இரவு நடனக் காட்சி அரங்குகளுக்கோ, கோட்பாடுகளற்ற நவீன கிறிஸ்தவ சபைக் கட்டிடங்களுக்கோ, ஒரு கிறிஸ்தவப் பொறியாளர் வடிவமைத்துக் கொடுப்பது சரியாகுமா? மதுபான உற்பத்தித் தொழிச்சாலையில் இருந்து கிறிஸ்தவ ஸ்தாபனங்கள் அன்பளிப்பை பெறலாமா? பாவத்தில் வாழும் ஒரு கிறிஸ்தவரிடமிருந்து அந்த நிறுவனம் அன்பளிப்பைப் பெறலாமா? கிறிஸ்மஸ் காலத்தில் தமது வாடிக்கையாளரிடமிருந்து அன்பளிப்பை ஒரு தொழிச்சாலையில் பொருட்களை வாங்கும் பிரிவில் மேலாளராக இருப்பவர் பெற்றுக்கொள்ளலாமா?

தேவனுக்கும் மனிதருக்கும் எதிராகக் குற்றமுடைய மனட்சாட்சியை ஏற்படுத்தும் எதனையும் செய்யாதிருப்போமாக என்பதே ஒரு செயலைச் செய்யலாமா கூடாதா என்று தீர்மானிப்பதற்கு நாம் பயன்படுத்த வேண்டிய விதியாகும்.

3. Juni

»Darum übe ich mich auch, allezeit ein Gewissen ohne Anstoß zu haben vor Gott und den Menschen.« Apostelgeschichte 24,16

In einer Gesellschaft wie der unseren und mit einer verdorbenen alten Natur wie der unseren werden wir ständig mit ethischen Problemen konfrontiert, welche die Echtheit unserer Treue zu christlichen Grundsätzen auf die Probe stellen.

Der Student ist z.B. versucht, in seinen Examina zu betrügen. Wenn alle unehrlich erworbenen Diplome und Titel zurückgegeben würden, dann könnten die Schulen und Universitäten sie wohl kaum alle fassen.

Der Steuerzahler ist ständig versucht, sein Einkommen zu gering und seine Ausgaben zu hoch anzugeben oder wichtige Informationen vorzuenthalten. Das Stichwort im Geschäftsleben, in der Politik und in der Rechtsprechung ist Bestechung. Schmiergelder werden verwendet, um das Recht zu verdrehen. Geschenke verändern Einstellungen, und man bekommt Aufträge. Provisionen unter der Hand sorgen dafür, dass das Geschäft floriert. Schweigegelder stellen Beamte von Behörden ruhig.

Fast jeder Beruf hat seine eigenen Versuchungen zur Unehrlichkeit. Der christliche Arzt soll mit seiner Unterschrift Versicherungsansprüche bestätigen, die offensichtlich falsch sind. Der gläubige Rechtsanwalt muss sich fragen, ob er einen Kriminellen verteidigen soll, um dessen Schuld er weiß, oder ob er einen Scheidungsfall übernimmt, wo beide Parteien Christen sind. Der Gebrauchtwagenhändler kämpft einen innerlichen Kampf, ob er den Kilometerzähler manipulieren soll, um den Wagen günstiger zu verkaufen. Der Arbeiter steht vor der Entscheidung, ob er sich der Gewerkschaft anschließen soll, was im Fall eines Streiks zur Teilnahme an gewalttätigen Aktionen verpflichtet. Sollte eine christliche Stewardess Alkohol ausschenken (oder hat sie überhaupt eine Wahl, wenn sie diesen Beruf einmal gewählt hat)? Sollte ein christlicher Sportler am Tag des Herrn spielen? Sollte ein christlicher Lebensmittelhändler Zigaretten verkaufen, die erwiesenermaßen Krebs fördern?

Was ist schlimmer für einen christlichen Architekten, einen Nachtclub zu planen oder das Gebäude für eine modernistische liberale Kirche? Sollte eine christliche Organisation Spenden von einer Brauerei annehmen? Oder von einem Christen, der in Sünde lebt? Soll ein Einkäufer zu Weihnachten von einem seiner Lieferanten eine Kiste Orangen oder einen Karton Marmelade annehmen?

Die beste Regel, diese Frage zu entscheiden, ist die in unserem Text – »immer ein Gewissen ohne Anstoß zu haben vor Gott und den Menschen«.