July

சமபங்கு பிரமாணம்

July 30

“…as his part is that goeth down to the battle, so shall his part be that tarrieth by the stuff: they shall part alike. “(1 Sam. 30:24)

When David recovered the city of Ziklag from the Amalekites, some of his men did not want to share the spoil with 200 who had stayed behind at the brook Besor. David ruled that those who stayed by the supplies should share equally with those who went into the battle.

For every soldier who engages in combat, there are several who work behind the lines. In the U. S. Army in World War II, only about 30% of the troops were in combatant units. The others were support personnel, serving in such units as engineer, quartermaster, ordnance, communications, chemical, transportation and military government.

There is a parallel to this situation in the work of the Lord. Although all Christians are soldiers, not all are in the front line of battle. Not all are preachers, or evangelists, or teachers, or pastors. Not all are missionaries serving on the battle fronts of the world.

God has support personnel in His army too. There are His faithful prayer warriors who agonize daily until the tide of battle turns. There are His devoted stewards who live sacrificially so that they can send more money to the front. There are those who provide food and accommodations for those who are in face-to-face conflict with the enemy. Then think of those who type manuscripts that will one day carry the message to distant lands. Think of those who edit, translate and print Christian literature. Think of the women of excellence who minister in the home, raising sons and daughters for the service of the King. For every one in the thick of the battle, there are several others serving as support personnel.

When the rewards are passed out, those who had supportive roles will share equally with those who were acclaimed as war heroes. Those who served quietly behind the lines will share equal honors with the evangelical celebrities.

God is able to sort it all out. He can accurately measure the importance of everyone’s contribution. There will be plenty of surprises. Inconspicuous people whom we thought to be fairly unimportant will be seen to have occupied crucial positions. Without them, we ourselves would have been powerless.

யூலை 30

யுத்தத்திற்குப் போனவர்களின் பங்கு எவ்வளவோ, அவ்வளவு ரஸ்துக்களண்டையில் இருந்தவர்களுக்கும் பங்குவீதம் கிடைக்க வேண்டும். சரி பங்காகப் பங்கிடுவீர்களா. (சாமுவேல் 30:24).

சமபங்கு பிரமாணம்

அமலேக்கியரோடு போரிட்டு சிக்லாகை தாவீது மீட்டபோது, அவனோடிருந்த மனிதர்கள் தங்களோடு வராமல் பேசோர் ஆற்றங்கரையில் நின்றுவிட்ட 200 பேரோடு கொள்ளைப் பொருளைப் பங்கிட்டுக் கொள்ள விரும்பவில்லை. ஆயுதங்களையும் பிறபொருள்களையும் அனுப்பும் இடத்தில் தங்கி விட்டவர்களும், போர் முகத்திற்குச் சென்றவர்களும் கொள்ளைப் பொருளைச் சரிசமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டுமென்று தாவீது அங்கு ஆணையிட்டான்.

போர்முகத்தில் ஈடுபடுகிற ஒவ்வொரு போர்வீரனுக்கும் பின்னணியில் பலர் பணிபுரிகிறவர்களாக இருக்கிறார்கள். இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் படையில் 30 வீத படைவீரர்களே யுத்தத்திற்குச் சென்றனர். மற்றவர்கள் அவர்களுக்கு உதவிசெய்கிறவர்களாகப் பணிபுரிந்தனர். சிலர் பொறியல் வல்லுனர்கள், பண்டகசாலைகளை மேற்பார்வை செய்பவர்கள், ஆயுத கிடங்குகளில் பணிபுரிவோர், தொலைத்தொடர்பு கொள்வோர், மருத்துவத் துறையினர், போக்குவரத்துத் துறையினர், மற்றும் போர்ப்படை அரசாங்கம் ஆகியோர் அவ்விதமாகப் பணிபுரிந்தோராவர்.

கர்த்தருடைய ஊழியத்திலும் இதற்கு இணையான சூழ்நிலை இருக்கிறது. எல்லாக் கிறிஸ்தவர்களும் போர்வீரர்களாக இருப்பினும், எல்லாரும் போர்களத்திற்குச் சென்று போரிடுவதில்லை. எல்லாரும் பிரசங்கிகளாகவோ, சுவிசேஷகராகவோ, போதகர்களாகவோ, விளங்குவதில்லை. உலகத்தின் போர்முனைகளில் பணிபுரியும் மிஷனரிகளாக அனைவரும் செயல்படுவதில்லை.

தேவனுடைய படையிலும்; பலர் உதவியாட்களாகப் பணியாற்றுகின்றனர். போரின் அலை திரும்பும்வரை அயராது ஜெபிக்கும் உண்மையுள்ள ஜெபவீரர்கள் அப்படையில் பணிபுரிகின்றனர். தியாக மனப்பான்மையோடு வாழ்ந்து போர் முகத்திற்கு தங்களது செல்வத்தைச் செலவிடுகிற ஒப்புவித்த உக்கிராணக்காரர்கள் இருக்கின்றனர். எதிரியோடு முகமுகமாக எதிர்த்து நின்று போரிடுகிறவர்களுக்கு உணவும் உறவிடமும் அளிப்பவர்களும் அப்படையில் உள்ளனர். நற்செய்தியை வெகுதொலைவிற்கு எடுத்துச் செல்லும் இலக்கியத்தை உருவாக்குவோரை எண்ணிப்பாருங்கள். கிறிஸ்தவ இலக்கியப் பணியில் ஈடுபடுவோர், மொழிபெயர்ப்பாளர்கள், அச்சிட்டு வெளியிடுவோர் அனைவரையும் எண்ணிப்பாருங்கள். வீடுகளில் குமாரர்களையும் குமாரத்திகளையும் மன்னரின் மகத்தான பணிக்கென வளர்க்கும் தாய்மார்களைப் பற்றி எண்ணிப்பாருங்கள். போர்முகத்தில் பணியாற்றும் ஒவ்வொரு போர்வீரனுக்கும் உதவிசெய்யும் வகையில் பலர் தேவனுடைய படையில் பணிபுரிகின்றார்கள்.

பரிசுப்பொருட்கள் வழங்கும் விழாவில், போரில் வெற்றிபெற்ற வீரர்கள் பாராட்டைப் பெறுவதற்கு இணையாக, இவ்வாறு உதவியாளர்களாகப் பணிபுரிந்தோரும், பாராட்டைப் பெறுவார்கள். பின்னணியில் அமைதியாக ஊழியம் செய்தோரும், நற்செய்திப் பணியில் முன்னணியில் புகழ்பெற்று விளங்கிய மனிதர்களுக்கு இணையாகவே பரிசைப் பெறுவர்.

எல்லாவற்றையும் வகையறுத்து அறிகிறவராக தேவன் உள்ளார். ஒவ்வொருவருடைய முக்கியமான பங்கையும் சரியாக அளவிடுகிறவராக அவர் இருக்கிறார். அங்கே பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. முக்கியமற்றவர்கள் என்று கருதப்பட்ட நல்ல அறிமுகம் ஆகாத மக்கள் சிறப்பான பதவிகளை வகிப்பதைக் காண்போம். அவர்கள் இல்லையெனில் போர்முனையில் பணியாற்றுவோர் எங்கிருந்து வல்லமையைப் பெற்றிடுவர்?

மெய்யான இறைப்பணி, தாழ்மையான பணியாகும்.

30. Juli

»Denn wie das Teil dessen, der in den Streit hinabzieht, so soll auch das Teil dessen sein, der bei dem Geräte bleibt: gemeinsam sollen sie teilen.« 1. Samuel 30,24

Als David Ziklag von den Amalekitern zurückerobert hatte, wollten einige seiner Leute nicht die Beute mit den 200 Mann teilen, die am Bach Besor zurückgeblieben waren. David bestimmte, dass die, die beim Gepäck blieben, zu gleichen Teilen mit denen teilen sollten, die in die Schlacht zogen.

Auf jeden Soldat, der im Kampf steht, kommen mehrere, die hinter der Front arbeiten. In der amerikanischen Armee im Zweiten Weltkrieg standen nur etwa 30% der Truppen in kämpfenden Einheiten. Die anderen waren mit Hilfsaufgaben beschäftigt und dienten in ihren Einheiten als Ingenieure, Quartiermeister, Ordonnanzen, Kommunikationsspezialisten, Chemiker, Transportpersonal und Mitglieder der militärischen Verwaltung.

Dazu gibt es Parallelen im Werk des Herrn. Obwohl alle Christen Soldaten sind, werden nicht alle an der Hauptkampflinie eingesetzt. Nicht alle sind Prediger oder Evangelisten oder Hirten oder Lehrer. Nicht alle sind Missionare, die an den Fronten der geistlichen Kriegsschauplätze in der Welt im Einsatz stehen.

Gott hat auch in Seiner Armee Sein Hilfspersonal. Da sind Seine treuen Gebetskämpfer, die täglich beten und flehen, bis sich das Blatt zum Guten wendet. Da sind Seine treuen Verwalter, die ein Leben ständigen Opfers und Verzichts führen, damit sie mehr Geld an die Front schicken können. Da sind diejenigen, die Nahrung und Unterkunft für diejenigen bereitstellen, die im Nahkampf mit dem Feind stehen. Denken wir weiter an die, die Manuskripte tippen, die einmal die Botschaft in ferne Länder tragen werden. Denken wir an die ausgezeichneten Frauen, die zu Hause
dienen, indem sie Söhne und Töchter zum Dienst für den König aufziehen. Auf jeden, der mitten in der Schlacht steht, kommen mehrere andere, die als Hilfspersonal arbeiten.

Wenn der Lohn ausgeteilt wird, werden diejenigen mit Hilfsaufgaben das gleiche Teil bekommen wie die, die als Kriegshelden gerühmt wurden. Diejenigen, die still und bescheiden hinter den Linien gedient haben, werden die gleichen Ehren bekommen wie die, die sich einen Namen im Kampf an der Front gemacht haben.

Gott ist in der Lage, alles genau zu beurteilen. Er kann die Bedeutung des Beitrags eines jeden exakt gewichten. Es wird eine Menge von Überraschungen geben. Wir werden sehen, dass unscheinbare Leute, die wir für ziemlich unwichtig gehalten haben, in Wirklichkeit entscheidende Stellungen innehatten. Ohne sie wären wir selbst kraftlos gewesen.