July

அற்பமானவர்களிடம் விளங்கும் தேவ தயவு

July 25

“And when the Lord saw that Leah was hated, he opened her womb: but Rachel was barren.” (Gen. 29:31)

There is a law of compensation in life. According to that law, people who are deficient in one respect are given some counterbalancing benefit in another. The law prevents anyone from having everything. What one person lacks in beauty, she may make up for in practical wisdom. A man who is not well-coordinated in athletics may have a better disposition than if he were. Poets are not always practical, and artists are not always good managers of their finances.

When God saw that Jacob loved Rachel more than Leah, He caused Leah to be more prolific. Years later the law of compensation worked in the same way with Hannah and Peninnah. Elkanah loved Hannah more than Peninnah, but Peninnah had children and Hannah did not (1 Sam. 1:1-6).

Though Fanny Crosby did not have the gift of sight, she had the gift of song to a superlative degree. Her hymns are one of the Church’s great legacies. Alexander Crudens suffered from severe depression but he had the strength to produce the concordance that bears his name.

Here is a humble Christian who cannot preach for sour apples; he has no public gift at all. But he is a mechanical genius, and thankfully can keep the preacher’s car in operating condition. The preacher is hopeless in mechanics. When anything goes wrong with his car, all he can do is raise the hood, put his head under it and pray.

If someone objects that the law of compensation does not work perfectly in this life, we would have to agree. There are inequalities and injustices. But this life is not all! The last chapter has not been written. When God pulls back the curtain and lets us see the world beyond, we realize that the scores are evened and the tables turned. We hear Abraham, for example, say to the rich man, “Son, remember that thou in thy lifetime receivedst thy good things, and likewise Lazarus evil things: but now he is comforted, and thou art tormented” (Lu. 16:25).

In the meantime, it’s good for us to take a balanced view of life. Instead of concentrating on our deficiencies, we should remember that God has given us some qualities and abilities that others who seem to be more favored do not have. This will save us from feelings of worthlessness, inadequacy and envy.

யூலை 25

லேயாள் அற்பமாய் எண்ணப்பட்டாள் என்று கர்த்தர் கண்டு, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார். ராகலோ மலடியாயிருந்தாள். ஆதியாகமம் 29:31.

அற்பமானவர்களிடம் விளங்கும் தேவ தயவு

மனிதர்களின் வாழ்வில் ஈடுசெய்தல் என்னும் பிரமாணம் விளங்குகிறது. இந்த விதியின் அடிப்படையில் ஒன்றில் குறைவுடையவர், அதனை ஈடுசெய்யும் வகையில் வேறொரு நன்மை பெற்றிருப்பார். ஒருவர் எல்லாவற்றையும் பெற்றிருப்பதை இவ்விதி தடைசெய்கிறது. ஒருவர் அழகற்றவராக இருக்கலாம். ஆனால் அதனை ஈடுசெய்யும்படி மிகுந்த அறிவு படைத்தவராயிருப்பார். உடல் உறுதி அற்றவராக இருப்பவர் நல்ல மனவலிமையைப் பெற்றிருப்பார். கவிஞர்கள் நடைமுறை வாழ்வில் நடந்து கொள்ள அறிவற்று இருப்பர். கலைஞர்கள் தங்களது பொருளாதரத்தைச் சீராக வகிக்க வகையறியாதிருப்பர்.

லேயாளைக் காட்டிலும் ராகேலை, யாக்கோபு மிகுதியாக நேசித்ததைக் கண்ட தேவன், அவளை அதிகமாக பிள்ளைகளைப் பெறும்படி செய்தார். பல ஆண்டுகளுக்குப் பின்னர் அன்னாள், பெனின்னாள், ஆகியோருடைய வாழ்விலும் இவ்விதி தொடர்ந்ததைக் காண்கிறோம். பெனின்னாளைக் காட்டிலும் அன்னாளை எல்க்;கானா அதிகமாக நேசித்தான். பெனின்னாளுக்கு நிறையப் பிள்ளைகள் இருந்தனர். அன்னாளோ பிள்ளையற்றவளாக இருந்தாள் (1.சாமு.1:1-6).

பேனி கிராஸ்பி அம்மையார் கண்பார்வை அற்றவராக இருந்தார். ஆயினும் பாடல்களை இயற்றுவதில் அவர் பெற்றிருந்த திறமை மிகச்சிறப்பு வாய்ந்ததாகும். அவர் இயற்றிய பாடல்கள் சபைக்குக் கிடைத்த மாபொரும் மரவழிச் செல்வமாகும். அலெக்ஸாண்டர் க்ரூடன்ஸ் என்பார் மனச்சோர்வினாலே மிகவும் பாதிக்கப்பட்டவர். ஆனால் வேத சொல் அட்டவணையை இயற்ற அவருக்கு வலிமை கொடுக்கப்பட்டது. இன்று அந்நூல் அவரது பெயரைத் தாங்கி நிற்கிறது.

இங்கு ஒரு தாழ்மையான விசுவாசியைக் காண்கிறோம். அவருக்குப் பிரசங்கம் ஆற்றத் தெரியாது. வெளிப்படையாக எந்த ஊழியத்தையும் செய்யத் திறமையற்றவர். ஆனால் வாகனங்களைப் பழுது பார்ப்பதில் திறமைமிக்கவர். பிரசங்கியின் வாகனத்தை ஓடும் நிலையில் பழுதுபார்த்து தருவார். ஆனால் அந்த பிரசங்கிக்கு வாகனத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது. ஏதாவது பழுது ஏற்பட்டால் இயந்திரத்தை திறந்து முகத்தை அதற்குள் புதைத்துக் கொண்டு ஜெபிப்பார்.

ஈடுசெய்தல் என்னும் விதியானது சரியானபடி, வாழ்வில் செயல்படுவதில்லை என்று யாராவது எதிர்ப்புத் தெரிவித்தால் நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஏற்றத்தாழ்வுகளும், அநீதிகளும் ஏற்படுகின்றன. இந்த வாழ்கையோடு அது முடிந்து விடுகிறதில்லை! அன்னாளுடைய கடைசி அத்தியாயம் இன்னும் எழுதப்படவில்லை. தேவன் திரையை அகற்றி இவ்வுலக வாழ்விற்கு அப்பால் நடக்கவிருப்பதைக் காண்பிப்பார். அங்கே மதிப்பெண்கள் சமமாக்கப்படும். யாவும் திசை திரும்பும். எடுத்துக்காட்டாக, ‘மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அனுபவித்தான், அதை நினைத்துக்கொள், இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்” என்று ஆபிரகாம் செல்வந்தனிடம் கூறுவதைக் கேட்கிறோம் (லூக்.16:25).

அந்த நிலையான வாழ்க்கைக்குள் பிரவேசிப்பதற்கு முன்னர் சமநிலை நோக்கம் கொண்டவர்களாக வாழவேண்டும். நம்முடைய குறைவுகளையெல்லாம் நினைத்து அவற்றில் நமது கவனத்தைச் செலுத்தாமல், நம்மைக்காட்டிலும் கூடுதலாகச் சிலாக்கியங்களைப் பெற்றவர்களாகத் தோன்றுகிறவர்களிடம் இல்லாத நன்மைகளை நாம் தேவனிடத்திலிருந்து பெற்றுள்ளதை நினைவுகூறுவோம். தகுதியற்ற நினைவுகள், மனநிறைவற்ற தன்மை, பொறாமை, ஆகியவற்றினின்று இது நம்மைக் காக்கும்.

25. Juli

»Und als der Herr sah, dass Lea ungeliebt war, da öffnete er ihren Mutterleib; Rahel aber war unfruchtbar.« 1. Mose 29,31

Es gibt ein Gesetz des Ausgleichs im Leben. Nach diesem Gesetz haben Menschen, die auf einem Gebiet benachteiligt sind, auf einem anderen Gebiet besondere Vorzüge. Was einer Frau an Schönheit abgeht, gleicht sie vielleicht durch große praktische Weisheit aus. Ein Mann, der im Sport etwas unbeholfen ist, hat vielleicht größere intellektuelle Fähigkeiten. Dichter sind nicht immer praktisch veranlagt, und Künstler können nicht immer richtig mit ihren Finanzen umgehen.

Als Gott sah, dass Jakob Rahel mehr liebte als Lea, ließ Er Lea fruchtbarer sein. Jahre später wirkte dieses Gesetz des Ausgleichs bei Hanna und Peninna ganz genauso. Elkana liebte Hanna mehr als Peninna, aber Peninna hatte Kinder – und Hanna nicht (1. Samuel 1,1-6).

Obwohl Fanny Crosby (1823-1915, amerikanische Liederdichterin) nicht die Gabe des Augenlichts hatte, hatte sie eine unvergleichliche Gabe im Dichten von geistlichen Liedern. Sie sind einer der großen Schätze der Gemeinde (z.B. »Sicher in Jesu Armen«, »Seliges Wissen, Jesus ist mein!«, »O Gott, Dir sei Ehre, der Großes getan«, »Gehe nicht vorbei, o Heiland« u.v.a.). Alexander Crudens (1699-1770) litt unter schweren Depressionen, hatte aber die Kraft, die Konkordanz anzufertigen, die seinen Namen trägt (und eigentlich die Grundlage aller modernen Konkordanzen
ist).

Da gibt es z.B. einen bescheidenen Christen, der nicht einmal vor sauren Äpfeln predigen könnte, er hat einfach keine Gabe für öffentliche Dienste. Aber er ist ein mechanisches Genie und kann glücklicherweise den Wagen des Predigers immer in fahrbarem Zustand halten. Der Prediger ist ein hoffnungsloser Mechaniker. Wenn mit seinem Auto etwas nicht stimmt, kann er nichts weiter tun, als die Motorhaube öffnen, den Kopf darunterstecken und beten.

Wenn jemand einwendet, dass das Gesetz des Ausgleichs nicht immer im Leben vollkommen funktioniert, dann müssen wir ihm wohl zustimmen. Es gibt Ungleichheiten und Ungerechtigkeiten. Aber dieses Leben ist nicht alles! Das letzte Kapitel ist noch nicht geschrieben. Wenn Gott den Vorhang öffnet und uns die jenseitige Welt sehen lässt, dann wird uns klar, dass sich spätestens dann das Blatt wendet und das Punktekonto ausgeglichen wird. Wir hören z.B., wie Abraham zu dem reichen Mann sagt: »Kind, gedenke, dass du dein Gutes völlig empfangen hast in deinem
Leben und Lazarus gleicherweise das Böse; jetzt aber wird er hier getröstet, du aber leidest Pein« (Lukas 16,25).

In der Zwischenzeit aber ist es gut für uns, wenn wir eine ausgewogene Sichtweise des Lebens haben. Anstatt uns auf unsere Mängel zu konzentrieren, sollten wir daran denken, dass Gott uns einige Eigenschaften und Fähigkeiten geschenkt hat, die andere, die vom Leben mehr begünstigt scheinen, nicht haben. Das bewahrt uns vor Minderwertigkeitsgefühlen, Neid und Bitterkeit.