July

கர்த்தருடைய நாளின் சிறப்பு

July 24

“One man esteemeth one day above another: another esteemeth every day alike. Let every man be fully persuaded in his own mind.” (Rom. 14:5)

The word “alike” should be omitted from this verse; it was added by the translators. It should read, “another esteemeth every day/’ that is, he looks upon every day as sacred.

To Jews, living under law, the Sabbath or seventh day was especially sacred. The law forbade labor on that day and restricted travel. Additional offerings were required.

Christians, living under grace, are never commanded to keep the Sabbath. To them all days are sacred, even though they believe that there is a principle in the Word of one day of rest in seven. They cannot be condemned for failing to keep the Sabbath (Col. 2:16).

The first day of the week, that is, the Lord’s Day, stands out in the New Testament for several reasons. The Lord Jesus arose on that day (John 20:1). After His resurrection He met with His disciples on two successive Sundays (John 20:19, 26). The Holy Spirit was given at Pentecost on the first day; Pentecost occurred seven Sundays after the Feast of Firstfruits (Lev. 23:15,16; Acts 2:1), which symbolizes Christ’s resurrection (1 Cor. 15:20, 23). Hie disciples gathered to break bread on the first day of the week (Acts 20:7). And Paul gave instructions to the Corinthians to take a special offering on the first day of the week (1 Cor. 16:1, 2). However, it is not a day of special obligation, like the Sabbath, but a day of special privilege. Because we are released from our normal employment on Sunday, we are able to devote it to the worship and service of our Lord in a way we are not able to devote the other days.

While we have liberty to regard all days as equally sacred, we do not have liberty to do anything on Sunday that might stumble others. If working around the house, repairing the car or playing football would stumble a brother, then we should forego what we might consider to be a legitimate right. As Paul said, “Let us not therefore judge one another any more: but judge this rather, that no man put a stumblingblock or an occasion to fall in his brother’s way” (Rom. 14:13).

Jews under law had their day of rest at the end of a week of work. Christians under grace begin their week with a day of rest, because Christ has finished the work of redemption.

C. I. Scofield pointed out that the true character of the Lord’s Day is illustrated by the way our Lord used it: “He comforted weeping Mary; walked seven miles with two perplexed disciples, giving a Bible reading by the way; sent messages to other disciples; had a private interview with backslidden Peter; and imparted the Holy Spirit to the men in the upper chamber.”

யூலை 24

அன்றியும் ஒருவன் ஒரு நாளை மற்றொரு நாளிலும் விசேஷமாக எண்ணுகிறான், வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான், அவனவன் தன்தன் மனதிலே நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன். ரோமர் 14:5.

கர்த்தருடைய நாளின் சிறப்பு

இவ்வசனத்தில், ‘சரியாக” என்னும் சொல் மொழி பெயர்ப்பாளர்களால் சேர்க்கப்பட்ட ஒரு சொல்லாகும். ‘எல்லா நாட்களையும் எண்ணுகிறான்” என்றே மொழிபெயர்த்திருக்க வேண்டும். அதாவது வேறொருவன் எல்லா நாட்களையும் விசேஷமாக அல்லது புனிதமாக எண்ணுகிறான் என்பதே அதன் பொருளாகும்.

நியாயப்பிரமாணத்திற்குக் கீழாக வாழும் ஒரு யூதனுக்கு, வாரத்தின் ஏழாம் நாளாகிய ஓய்வு நாள் புனிதமானது ஆகும். இந்நாளில் அவன் வேலைசெய்யவோ, பயணம் மேற்கொள்ளவோ கூடாது. அவை நியாயப்பிரமாணத்தினால் தடைசெய்யப்பட்டவையாகும். கூடுதலான காணிக்கை அந்நாளில் செலுத்தப்பட வேண்டும்.

கிருபைக்குக் கீழாக வாழும் கிறிஸ்தவர்களுக்கு ஓய்வுநாள் கட்டளையிடப்படவில்லை. ஏழுநாட்களில் ஒருநாள் இளைப்பாறுதலின் நாளாக இருக்கவேண்டும். அனைத்து நாட்களும் புனிதமானவையே. ஓய்வுநாளைக் கடைப்பிடிக்கவில்லை என்று அவர்களைக் குற்றப்படுத்த முடியாது (கொலோ.2:16).

பல காரணங்களின் நிமித்தம் கர்த்தருடைய நாளாகிய வாரத்தின் முதல்நாளைத் தனிச் சிறப்பு வாய்ந்ததாகப் புதிய ஏற்பாட்டில் காண்கிறோம். அது கர்த்தாராகிய இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளாகும் (யோவான் 20:1). அவர் உயிர்த்தெழுந்த பின்னர், தொடர்ந்து இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளில் தமது சீடர்களைச் சந்தித்தார். (யோவான் 20:19,26). பெந்தெகொஸ்தே நாளாகிய வாரத்தின் முதல் நாளில் தூய ஆவியானவர் கொடுக்கப்பட்டார். முதற்கனியைச் செலுத்தி ஏழு வாரங்கள் கழித்து வரும் ஞாயிற்றுக்கிழமை பெந்தெகொஸ்தே நாளாகும் (லேவி.23:15,16, அப்.2:1). முதற்பலன் இயேசு கிறிஸ்துவின் உயர்த்தெழுதலுக்கு அடையாளமாயிருக்கிறது (1கொரி:15:20,23). வாரத்தின் முதல் நாளில் சீடர்கள் அப்பம்பிட்கும்படியாகக் கூடினர் (அப்.20:7). வாரத்தின் முதல்நாளில் சிறப்புக் காணிக்கையைச் சேர்க்கும்படியாக பவுல் கொரிந்தியருக்கு அறிவுரை வழங்கினார். (1.கொரி.16:12). கர்த்தருடைய நாள் சிறப்பான சிலாக்கியங்களை உடையதேயன்றி, ஓய்வுநாளைப் போன்று கட்டுப்பாடுகளைக் கொண்டதல்ல, ஞாயிற்றுக்கிழமைகளில் நாம் சாதாரணமாகச் செய்யும் வேலைகளிலிருந்து விடுபட்டு, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தொழுது கொள்வதற்கும், அவருடைய பணியினைச் செய்வதற்கும் ஒப்புவித்த நாளாயிருக்கிறது. மற்ற நாட்களில் இவ்வாறு செய்ய நாம் இயலாதவர்களாயிருக்கிறோம்.

எல்லா நாட்களையும் ஒன்றுபோலப் புனிதமாக எண்ணுவதற்கு நாம் உரிமையுடையவர்களாக இருப்பினும், ஞாயிற்றுக் கிழமைகளில், மற்றவர்களுக்கு இடறல் உண்டாக்கும்படி எதையும் செய்ய நமக்கு உரிமையில்லை. வீட்டின் தோட்டப்பகுதியில் வேலை செய்வதோ, வாகனத்தைப் பழுதுபார்ப்பதோ, கால்பந்து விளையாடுவதோ, மற்றவர்களுக்கு இடறல் உண்டாக்கினால் அவற்றை நாம் அன்றைய நாளில் செய்யக் கூடாது. அவற்றைச் செய்வதற்கு நாம் உரிமையுடையவர்களாயிருப்பினும், அந்த உரிமையைப் பிறருக்காக விட்டுக் கொடுக்கவேண்டும். ‘இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கல்லையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக் கொள்ளுங்கள்”. என்று பவுல் கூறியுள்ளதைக் காண்க (ரோமர் 14:13).

வாரத்தின் கடைசிநாளில் நியாயப்பிரமாணத்திற்குக் கீழான யூதர்கள் தங்களுடைய வேலையிலிருந்து ஓய்வைப் பெற்றிருந்தனர். மீட்பின் கிருபையைக் கிறிஸ்து நிறைவேற்றியிருப்பதினாலே கிருபைக்குக் கீழான கிறிஸ்தவர்கள், வாரத்தின் முதல்நாளை இளைப்பாறுதலோடு தொடங்குகிறார்கள்.

நமது கர்த்தர் இந்த நாளைப் பயன்படுத்திய விதம் கர்த்தருடைய நாளின் உண்மையான பண்பை வெளிப்படுத்துகிறது. என்று C. I. ஸ்கோ.பீல்டு கூறியுள்ளார். ‘அழுதுகொண்டிருந்த மரியாளுக்கு ஆறுதல் அளித்தார். குழப்பம் மேலிட்டவராக நடந்து செல்லும் வழியில் வேதத்திலிருந்து அவர்களுக்குக் கற்ப்பித்தார், மற்ற சீடர்களுக்குச் செய்திகளை அனுப்பினார். பின்னடைவு கொண்டிருந்த பேதுருவுடன் தனித்து சிறிது நேரத்தைச் செலவிட்டார். மேலறையிலிருந்து பரிசுத்த ஆவியைத் தமது சீடர்களுக்குத் ஈந்தருளினார்.”

24. Juli

»Der eine hält einen Tag vor dem anderen, der andere aber hält jeden Tag gleich. Ein jeder aber sei in seinem eigenen Sinn völlig überzeugt.« Römer 14,5

Das Wort »gleich« steht ursprünglich nicht in diesem Vers, es wurde von den Übersetzern hinzugefügt. Eigentlich heißt es: »der andere aber hält jeden Tag«, d.h. für ihn ist jeder Tag heilig.

Für die Juden unter dem Gesetz war der siebte Tag oder Sabbat besonders heilig. Das Gesetz verbot an diesem Tag jede Arbeit und schränkte das Reisen ein. Zusätzliche Opfer wurden verlangt.

Den Christen, die unter der Gnade leben, wird niemals geboten, den Sabbat zu halten. Für sie sind alle Tage heilig, obwohl sie glauben, dass das Wort Gottes den Grundsatz enthält, dass ein Tag von sieben ein Tag der Ruhe ist. Niemand kann sie verurteilen, weil sie den Sabbat nicht einhalten (Kolosser 2,16).

Der erste Tag der Woche, d.h. der Tag des Herrn, sticht besonders heraus. Der Herr ist an diesem Tag auferstanden (Johannes 20,1). Nach Seiner Auferstehung traf Er Sich mit Seinen Jüngern an zwei aufeinander folgenden Sonntagen (Johannes 20,19.26). Der Heilige Geist wurde zu Pfingsten am ersten Tag der Woche gegeben; Pfingsten war sieben Sonntage nach dem Fest der Erstlingsgarbe (3. Mose 23,15.16; Apostelgeschichte 2,1), das ein Vorbild auf die Auferstehung Christi ist (1. Korinther 15,20.23). Die Jünger versammelten sich, um am ersten Tag der Woche das Brot zu brechen (Apostelgeschichte 20,7). Und Paulus gab den Korinthern Anweisung, am ersten Tag der Woche eine besondere Gabe zusammenzulegen (1. Korinther 16,1.2). Jedoch ist es kein Tag besonderer Verpflichtungen wie der Sabbat, sondern ein Tag besonderer Vorrechte. Weil wir am Sonntag von unserer normalen Arbeit entbunden sind, können wir ihn in einem besonderen Maß für die Anbetung und den Dienst des Herrn verwenden, wie es an den anderen Wochentagen nicht möglich ist.

Während wir die Freiheit haben, alle Tage als gleich heilig zu achten, haben wir nicht die Freiheit, am Sonntag etwas zu tun, was anderen zum Fallstrick werden könnte. Wenn Arbeiten am Haus, das Reparieren unseres Autos oder Fußballspielen einen Bruder zu Fall bringen könnte, dann sollten wir lieber auf etwas verzichten, was wir vielleicht als unser legitimes Recht ansehen. Wie Paulus sagt: »Lasst uns nun nicht mehr einander richten, sondern richtet vielmehr dieses: dem Bruder nicht einen Anstoß oder ein Ärgernis zu geben« (Römer 14,13).

Die Juden unter dem Gesetz hatten ihren Tag der Ruhe am Ende einer Woche der Arbeit. Die Christen unter der Gnade beginnen ihre Woche mit einem Tag der Ruhe, weil Christus das Werk der Erlösung vollendet hat.

C.I. Scofield hat darauf hingewiesen, dass der wahre Charakter des Tages des Herrn dadurch illustriert wird, wie der Herr ihn verwendet hat: »Er tröstete die weinende Maria, wanderte sieben Meilen mit zwei verwirrten und traurigen Jüngern und hielt ihnen dabei einen Vortrag über die Bibel, Er ließ anderen Jüngern Botschaften zukommen, Er hatte ein privates seelsorgerliches Gespräch mit dem zurückgefallenen Petrus und teilte den Jüngern im Obersaal den Heiligen Geist mit.«