July

நமது வாழ்வின் தாக்கம்

July 23

“…they brought forth the sick into the streets, and laid them on beds and couches, that at the least the shadow of Peter passing by might overshadow some of them.” (Acts 5:15)

The people recognized that Peter’s ministry was a ministry of power. Wherever he went, the sick were healed. No wonder the crowd wanted to get into his shadow! He wielded a tremendous influence.

Everyone of us casts a shadow. Inevitably we influence the lives of those we contact. Herman Melville wrote: “We cannot live for ourselves alone. Our lives are connected by a thousand invisible threads, and along these sympathetic fibers, our actions run as causes and return to us as results.”

You are writing a gospel,/ a chapter each day,/ by the deeds that you do,/ by the words that you say./ Men read what you write,/ Whether faithless or true./ Say! What is the gospel/ according to you?

When asked which of the gospels was his favorite, one man answered, “The gospel according to my mother.” And John Wesley once said, “I learned more about Christianity from my mother than from all the theologians of England.”

It is sobering to realize that someone looks at each one of us and thinks, “That’s just what a Christian should be.” It may be a son or daughter, a friend or neighbor, a teacher or student. You are his hero, his model, his ideal. He watches you more closely than you think. Your business life, your church life, your family life, your prayer life—all these set the pattern for him to imitate. He wants your shadow to overshadow him.

Generally we think that shadows are nothings. But the spiritual shadow we cast is something real. Therefore we must ask ourselves this question: When to the last great reckoning/ the lives I meet must go,/ Shall this wee, fleeting touch of mine/have added joy or woe?/ Shall He who looks their records o’er -/of name and time and place -/ Say “Here a blessed influence came”/ or “Here is evil’s trace”? (Strickland Gillilan).

Robert G. Lee wrote: “You can no more prevent what you are, what you say, and what you do from affecting other people than you can prevent your body from casting a shadow in sunlight. What you are within you shows without, with no ambiguous expression. You exert an influence which mere language and strong persuasion are feeble to express.”

யூலை 23

பிணியாளிகளைப் படுக்கைகளின் மேலும் கட்டில்களின் மேலும் கிடத்தி, பேதுரு நடந்து போகையில் அவனுடைய நிழலாவது அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு, அவர்களை வெளியே வீதிகளில் கொண்டு வந்து வைத்தார்கள். அப்போஸ்தலர் 5:15.

நமது வாழ்வின் தாக்கம்

பேதுருவின் நற்பணி வல்லமையுள்ள ஊழியம் என்றதை மக்கள் அறிந்து கொண்டனர். அவர் சென்ற இடமெங்கும் நோயுற்றோர் நலம் பெற்றனர். அவருடைய நிழலில் அடைக்கலம் புகவேண்டுமென்று திரள் கூட்டம் எண்ணியதில் வியப்பேதும் இல்லை! பிறருடைய வாழ்வில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறவராக அவர் காணப்பட்டார்.
நம்மில் ஒவ்வொருவரும் ஒரு நிழலை உருவாக்கிறவராக இருக்கிறோம். நம்மோடு பழகுகிறவர்களுடைய வாழ்வில் நாம் நமது தாக்கத்தைச் செலுத்துவது தவிர்க்க இயலாததாகும். ‘நமக்காக மட்டும் நம்மால்வாழ இயலாது. கண்ணுக்குப் புலப்படாத ஆயிரக்கணக்கான இழைகளால் நமது வாழ்க்கை பின்னப்பட்டுள்ளது. இந்த இசைவான உணர்வுகளையுடைய இழைகளின் வாயிலாக, நமது செயல்பாடுகள் ஏதுக்களாகச் சென்று விளைவுகளை நம்மிடத்தில் திரும்பக் கொண்டுவரும்” என்று ஹெர்மான் மெல் வில்லே என்பார் கூறியுள்ளார்.

நண்பரே நீர் எழுதும் செய்தி,

நாளொன்றுக்குக்கொரு பகுதி,

அன்பரே நீர் புரியும் செயல்களும்

பேச்சுமே அச்செய்தி, அறிவீரோ!

உண்மையோ அல்லவோ உம்செய்தி

பலரும் படிப்பாரே அச்செய்தி

சொல்லுவீர்! எச்செய்தி நற்செய்தி

உம் வாழ்வில் வரைந்திடுவீர் அச்செய்தி!

‘உங்களுக்கு விருப்பமான நற்செய்தி நூல் எது?” என்று ஒருவரிடம் வினவியபோது, ‘என்னுடைய தாய் எழுதிய நற்செய்திப் புத்தகமே எனக்கு விருப்பமானது” என்று அவர் விடை பகர்ந்தார். ஜான்வெஸ்லியும் அத்தகைய எண்ணம் உடையவராக இருந்தார். ஐரோப்பாவின் தலைசிறந்த வேத போதகர்களிடமிருந்து கிறிஸ்தவத்தைப் பற்றி, தான் கற்றுக்கொண்டதைப் பார்க்கிலும் தன்னுடைய தாயாரிடமிருந்து மிகுதியாகக் கற்றுக்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

நம்மில் ஒவ்வொருவரையும் கண்டு, ‘இவரைப் போலவே கிறிஸ்தவர்கள் இருக்கவேண்டும்” என்று சிலர் நினைப்பது நம்மைத் திகிலடையச் செய்கிறது. ஒருவேளை அவர் உங்களுடைய மகனோ, மகளோ, நண்பரோ, அயலகத்தாரோ, ஆசிரியரோ, மாணாக்கரோ, யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அவருடைய நாயகராக, மாதிரியாக, பின்பற்றத்தக்கவராக நீங்கள் திகழ்கிறீர்கள். நீங்கள் நினைக்கிதற்கும் மேலாக அவர் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். உங்களுடைய தொழிற்துறை வாழ்க்கை, உங்களுடைய ஜெப வாழ்க்கை, இவையாவும் அவர் பின்பற்றுதற்குரிய மாதிரியாகத் திகழ்கின்றன. உங்களுடைய நிழல் அவரை மூடிக்கொள்ள வேண்டுமென்று அவர் எண்ணுகிறார்.

நிழல்கள் ஒன்றுமில்லையென்று நாம் பொதுவாக நினைக்கிறோம். ஆயின், நாம் ஏற்படுத்துகிற ஆவிக்குரிய நிழல்கள் உண்மையாவையாகும். ஆகவே நம்மை நோக்கி இக்கேள்வியை நாம் எழுப்புவோம். ‘கணக்கெடுக்கப்படும் நாள் வரவிருக்கிறது. என்னோடு தொடர்பு கொண்டோர் அங்கு சென்று தங்களைப்பற்றிய குறிப்பேடுகளைக் காண்பர். ஆட்களைப் பற்றியும், நாட்களைப்பற்றியும், இடங்களைப் பற்றியும் எழுதப்பட்டுள்ள குறிப்புகள் அங்கு காணப்படும். கணப்பொழுது அவர்களோடு நான் கொண்ட தொடர்பு அவர்களுக்குக் களிப்பை ஏற்படுத்தியதா, துயரை ஏற்படுத்தியதா? நற்பேறு மிக்க தாக்கத்தைப் பெற்றோம் எனக் கூறுவார்களா? இல்லையேல் பொல்லாங்கின் கறை தோன்றுகிறது எனக் கூறுவார்களா? (ஸ்டிரிக்லேண்ட் கிள்ளிலான் என்பார் இயற்றியது.)

இராபர்ட் G.E. என்பார் எழுதியுள்ளதாவது. ‘கதிரவனின் ஒளியில் உங்கள் நிழல் உண்டாவதை உங்களால் தடுக்க இயலாது. ஒருவேளை அதை நீங்கள் தடைசெய்தாலும் நீங்கள் யார், நீங்கள் கூறுவது யாது, செய்வது யாது, என்பவை மற்றவர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை உங்களால் தடைசெய்யவே முடியாது. உங்களுக்குள்ளாக நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பதையே நீங்கள் வெளிப்படுத்திக் காட்டுகிறீர்கள். எவ்வித ஐயத்திற்கும் இடமின்றி அதை நீங்கள் வெளிப்படுத்துவீர்கள். வெறும் சொற்பொழிவுகளினாலோ, வலியுறுத்திக் கூறும் அறிவுரைகளினாலோ மற்றவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துவது அரிது. ஆனால் நீங்கள் யாராக உள்ளீர்கள் என்பது பிறரிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்”.

ஒரே வாழ்க்கை அது சீக்கரமாய் கடந்து போகும்,. கிறிஸ்துவுக்காய் செய்பவை மட்டுமே என்றும் நிலை நிற்கும்.

23. Juli

»… sodass sie die Kranken auf die Straßen hinaustrugen und auf Betten und Lager legten, auf dass, wenn Petrus käme, auch nur sein Schatten einen von ihnen überschatten möchte.« Apostelgeschichte 5,15

Die Menschen erkannten, dass Petrus’ Dienst ein Dienst in Kraft war. Wo immer er hinkam, wurden die Kranken geheilt. Es nimmt nicht wunder, dass die Menschen unter seinen Schatten kommen wollten! Er übte einen gewaltigen Einfluss aus.

Jeder von uns wirft einen Schatten. Ob wir wollen oder nicht, wir beeinflussen das Leben derer, mit denen wir in Berührung kommen. Herman Melville schrieb: »Wir können nicht für uns selbst leben. Unser Leben ist mit dem anderer Menschen durch tausend unsichtbare Fäden verbunden, und entlang dieser Nervenbahnen fließen unsere Handlungen als Ursachen von uns weg und kehren als Ergebnisse wieder zu uns zurück.«

»Du schreibst ein Evangelium, eine Botschaft, jeden Tag ein Kapitel; durch die Taten, die du tust, durch die Worte, die du sagst. Die Menschen lesen, was du schreibst, ob es unehrlich ist oder wahr. Sag, was ist das Evangelium nach Dir?«

Auf die Frage nach seinem Lieblingsevangelium antwortete jemand: »Das Evangelium nach meiner Mutter.« John Wesley sagte einmal: »Ich lernte von meiner Muter mehr über das Christentum als von allen Theologen in England.«

Es ist ziemlich ernüchternd, wenn wir uns vergegenwärtigen, dass oft jemand auf uns blickt und dabei denkt: »So sollte also ein Christ sein.« Es kann ein Sohn oder eine Tochter sein, ein Freund oder Nachbar, ein Lehrer oder ein Schüler. Wir sind sein Held, sein Modell, sein Ideal. Er beobachtet uns genauer, als wir vielleicht denken. Unser Berufsleben, unser Gemeindeleben, unser Familienleben, unser Gebetsleben – all das gibt ihm das Muster vor, das er nachahmt. Er möchte, dass unser Schatten auf ihn fällt.

Im Allgemeinen denken wir, dass Schatten völlig bedeutungslos sind. Aber der geistliche Schatten, den wir werfen, ist etwas sehr Reales. Deswegen müssen wir uns die Frage stellen: Wenn einst die Leben, die ich berühre, zum Letzten Gericht gehen müssen, hat dann diese meine winzige, kurze Berührung Freude oder Leid zugefügt? Wird Er, der ihre Verzeichnisse überprüft – nach Namen, Zeit und Ort – sagen:  »Hier findet sich ein gesegneter Einfluss« oder: »Hier ist die Spur des Bösen«?

Robert G. Lee schrieb: »Man kann den Einfluss dessen, was wir sind, sagen und tun, auf andere Menschen genauso wenig verhindern, wie wir verhindern können, dass unser Körper im Sonnenlicht einen Schatten wirft. Was wir in uns sind, zeigt sich ohne Verzerrung nach außen. Wir üben einen Einfluss aus, im Vergleich zu dem bloßes Reden und starke Überzeugungskraft
nur schwache Mittel sind.