July

இழப்புக்கு ஈடு செய்தல்

July 22

“Behold, Lord…if I have taken anything from any man by false accusation, I restore him fourfold.” (Luke 19:8)

As soon as Zacchaeus had opened his heart to the Lord Jesus, a divine instinct told him that he should make restitution for the past. It might sound from the text that there was a question whether he had ever cheated anyone, but it is reasonable to believe that the “if” really means “since” in the case of this rich tax collector. He had gotten money dishonestly, he knew it, and he was determined to do something about it.

Restitution is good Bible doctrine and good Bible practice. When we are converted, we should restore to the rightful owner things we have taken wrongfully. Salvation doesn’t relieve a person from making right the wrongs of the past. If money was stolen before salvation, a true sense of the grace of God requires that this money be repaid. Even legitimate debts contracted during one’s unconverted days are not cancelled by the new birth.

Years ago, when hundreds of people were saved in Belfast under the preaching of W. P. Nicholson, the local factories had to build huge sheds to hold the stolen tools that were returned by the new converts.

Mammoth warehouses would be needed in this country to house the loot taken from the Armed Services alone. To say nothing of the steady leak of tools, supplies and merchandise that flows illegally from factories, offices and stores.

Ideally, when restitution is made by a believer, it should be done in the Name of the Lord Jesus. For example, “I stole these tools when I worked for you years ago, but I was saved recently and my life has been transformed by the Lord Jesus Christ. He has put it on my heart to return the tools and to ask your forgiveness.” In this way, the glory goes to the Savior, where it belongs.

There are circumstances where, as a matter of Christian testimony, interest should be paid on money that was stolen. The trespass offering in the Old Testament foreshadowed this. It required the payment of damages plus one-fifth.

Admittedly, there are situations where, because of the passing of time or because of changed conditions, it is no longer possible to make restitution. The Lord knows about this. If the sin is confessed, He accepts the sincere desire for the actual act—but only in those cases where restitution is impossible.

யூலை 22

ஆண்டவரே…… நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன். லூக்கா 19:8.

இழப்புக்கு ஈடு செய்தல்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குத் தனது உள்ளத்தை சகேயு திறந்து கொடுத்தவுடனேயே, தனது முந்தின பிழைகளுக்கு இழப்பீடு கொடுக்கவேண்டுமென்று தெயவீக உணர்வைப் பெற்றான். ‘அநியாயமாய் வாங்கினதுண்டானால்” என்று எழுதப்பட்டுள்ளதால், உண்மையாகவே அவன் யாரையாவது எப்பொழுதாவது ஏமாற்றியிருப்பானோ அல்லவோ என்ற கேள்வி எழுகிறது. செல்வந்தனாகிய சகேயு வரி வசூலிக்கும் தொழிலைச் செய்து கொண்டிருந்தான். ஆகவே, இங்கு ‘ஆல்” என்னும் விகுதி ஐயத்தை ஏற்படுத்துவதாக இருப்பினும், உண்மையால் ‘ஆகையால்” என்னும் பொருள்படவே எழுதப்பட்டிருக்கும் என்று நம்புவதில் தவறேதுமில்லை. தான் நேர்மையற்ற முறையில் செல்வத்தைச் சேர்த்துள்ளதை அவன் அறிவான். அதைக் குறித்து ஒரு பரிகாரம் செய்ய வேண்டுமென்று நினைத்தான்.

ஏற்படுத்திய இழப்பை ஈடுசெய்தல் வேதத்தில் நல்லதொரு உபதேசமாகவும் பழக்கமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. நாம் மனமாற்றம் பெற்றவுடன், முன்னர் நாம் தவறாக எடுத்துக்கொண்ட பொருட்களை இவற்றின் உரிமையாளரிடம் திரும்பக் கொடுக்க வேண்டும். முந்தின தவறுகளைச் சரிசெய்வதிலிருந்து இரட்சிப்பு ஒருவரை விடுவிப்பதில்லை. இரட்சிப்புக்கு முன்னர் ஒருவர் பணத்தைத் திருடியிருந்தால், தேவனுடைய கிருபையால் உணர்வடைந்து அப்பணத்தைத் திரும்பச் செலுத்த வேண்டியவராக அவர் இருக்கிறார். முறைப்படி வாங்கிய கடனையும் அவர் திருப்பிச் செலுத்தியே தீரவேண்டும்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் பெல்.பாஸ்ட் நகரில் W.P. நிக்கல்சன் என்பார் வழங்கிய தேவ செய்தியால் பலர் மனமாற்றம் அடைந்தனர். அவர்கள் வேலை செய்த தொழிற்சாலைகளில் திருடிய இயந்திரக் கருவிகளைத் திரும்பக் கொடுத்ததால், அத்தொழிற்சாலைகளில் புதிய கிடங்குகளைக் கட்ட வேண்டியதாயிற்று.

ஒரு விசுவாசி திரும்பச் செலுத்தும்போது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பெயரால் அதைச் செய்வதே தகும். எடுத்துக்காட்டாக, ‘உங்களுடைய தொழிற்சாலையில் நான் வேலை செய்தபோது இந்தப் பொருட்களையெல்லாம் திருடினேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னை முற்றிலும் மாற்றிவிட்டார். இப்பொழுது அவருடைய பிள்ளையாக இருக்கிறேன். நான் எடுத்ததைத் திரும்பக் கொடுக்கவேண்டுமென்றும் உங்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டுமென்றும் என் உள்ளத்தில் இயேசு கிறிஸ்து பேசினார்.” என்று எழுத வேண்டும். இதன் வாயிலாக மகிமையானது கர்த்தரையே சென்றடையும். அது அவருக்கே உரியது.

கிறிஸ்தவ நற்சான்றினை நிறுவுவதற்காக, களவு செய்த பணத்தைத் திரும்பச் செலுத்தும் வேளையில் அதை வட்டியுடன் செலுத்த வேண்டும். பழைய ஏற்பாட்டுக் கால குற்றநிவாரண பலி இதற்கு நிழலாக விளங்கிற்று. இழப்பை ஈடு செய்வதோடு ஐந்தில் ஒரு பங்கைக் கூட செலுத்த வேண்டும்.

காலம் கடந்து விட்டதாலும், சூழ்நிலைகள் மாறிவிட்டதாலும், சில வேளைகளில் திரும்பச் செலுத்த முடியாது போய்விடலாம். அந்தப் பாவத்தை நாம் அறிக்கை செய்தபோது நமது உள்ளத்தில் அதைச் சரிசெய்ய வேண்டுமென்ற மனமார்ந்த விருப்பம் எழுந்ததை கர்த்தர் அறிவார். இழப்பீடு செய்ய இயலாத சூழ்நிலைகளுக்கு மட்டும் பொருந்தும்.

கடந்தகாலத்தில், நாம் செய்த தவறுகளை முடிந்த மட்டும் சரிசெய்ய வேண்டியது தேவனுடைய கிருபை நமக்குக் கற்பிக்கும் பாடமாகும். நாம் தவறான முறையில் எடுத்துக்கொண்ட பொருட்களை, அவற்றின் உரிமையாளரிடம் திரும்பக் கொடுப்பது என்பதும் இதன் பொருளாகும்.

22. Juli

»Siehe, Herr … und wenn ich von jemand etwas durch falsche Anklage genommen habe, so erstatte ich es vierfach.« Lukas 19,8

Sobald Zachäus sein Herz für den Herrn Jesus geöffnet hatte, sagte ihm eine gottgewirkte Verhaltensweise, dass er seine in der Vergangenheit begangenen Sünden wieder gutmachen sollte. Vom Text her könnte man sich fragen, ob er überhaupt jemand betrogen hatte, aber es ist wahrscheinlich, dass im Fall dieses reichen Steuereinnehmers das »wenn« die Bedeutung
von »weil« hat. Er hatte Geld auf unehrliche Weise verdient, er wusste es, und er war entschlossen, in dieser Sache etwas zu unternehmen.

Wiedergutmachung ist gute biblische Lehre und gute biblische Praxis. Wenn wir bekehrt sind, sollten wir dem rechtmäßigen Besitzer Dinge zurückgeben, die wir unrechtmäßig genommen haben. Die Errettung befreit uns nicht von der Verantwortung, die Fehler der Vergangenheit wieder gutzumachen. Wenn vor der Errettung Geld gestohlen wurde, dann verlangt ein echtes Gespür für die Gnade Gottes, dass dieses Geld zurückgezahlt wird. Auch Schulden, die wir vor unserer Bekehrung gemacht haben, sind nicht durch die neue Geburt einfach getilgt.

Vor Jahren, als in Belfast unter der Predigt von W.P. Nicholson (1876-1959) Hunderte von Menschen zum Glauben kamen, mussten die örtlichen Fabriken riesige Schuppen für all die Güter bauen, die die Neubekehrten zurückbrachten.

In Amerika würde man Mammut-Warenhäuser brauchen, um allein das von den Streitkräften gestohlene Heereseigentum unterbringen zu können. Ganz zu schweigen von dem ständigen Strom an Werkzeugen, Material und Waren aus Fabriken, Büros und Geschäften, der ständig im Unbekannten versickert.

Wenn ein Gläubiger eine solche Wiedergutmachung durchführt, dann sollte sie im Idealfall im Namen des Herrn Jesus gemacht werden. Er könnte zum Beispiel sagen: »Ich habe diese Werkzeuge gestohlen, als ich vor Jahren für Sie arbeitete, aber vor kurzem wurde ich errettet, und mein Leben wurde durch den Herrn Jesus umgestaltet. Er hat es mir aufs Herz gelegt, diese Werkzeuge zurückzubringen und Sie um Vergebung zu bitten.« Auf diese Weise bekommt der Herr die Ehre, dem sie ja auch gebührt.

Es gibt Umstände, wo als Zeugnis für Christus für gestohlenes Geld auch Zinsen gezahlt werden sollten. Das Schuldopfer im Alten Testament ist ein Vorbild davon. Es verlangt zur Zahlung des Schadens ein Fünftel zusätzlich.

Es gibt zugegebenermaßen Situationen, wo wegen der verstrichenen Zeit und aufgrund veränderter Umstände eine Wiedergutmachung nicht mehr möglich ist. Der Herr weiß darum. Wenn die Sünde bekannt wird, nimmt Er den ernsthaften und ehrlichen Wunsch als die vollbrachte Tat an – aber nur in den Fällen, wo eine Wiedergutmachung nicht möglich ist.