July

அறிவிக்க வேண்டிய இறை உண்மைகள்

July 11

“Not as though I had already attained, either were already perfect.” (Phil. 3:12)

In yesterday’s study we saw that our conduct should correspond to our creed. But in order to balance the subject we must add two postscripts.

First, we have to acknowledge that we will never fully and completely live out the truth of God as long as we are in this world. After we have done our best, we still have to say that we are unprofitable servants. But we must not use this fact to excuse failure or even mediocrity: our obligation is to continually try to close the gap between our lips and our lives.

The second consideration is this. The message is always greater than the messenger, no matter who he is. Andrew Murray said, “We who are the Lord’s servants will sooner or later have to preach words which we ourselves are unable to fulfil.” Thirty-five years after he wrote the book Abide in Christ, he wrote, “I would like you to understand that a minister or Christian author may often be led to say more than he has experienced. I had not then (when he wrote Abide in Christ) experienced all that I wrote of. I cannot say that I have experienced it all yet.”

The truth of God is superlative and sublime. It is so supernal that, as Guy King wrote, it “causes one to fear lest one should in any wise spoil it by touching it.” But must it go forever unheralded simply because we do not reach its loftiest summits? On the contrary we will proclaim it, even if in so doing we condemn ourselves. To whatever extent we fail to experience it ourselves, we will make it the aspiration of our hearts.

Once again we emphasize that these considerations must never be used to excuse behavior that is unworthy of the Savior. But they should keep us from unwarranted condemnation of a true man of God just because his message sometimes leaps to heights which he himself has not attained. And it should not keep us ourselves from holding back the full counsels of God, even if we have not experienced them in full. God knows our hearts. He knows whether we are practicing hypocrites or passionate aspirants.

யூலை 11

நான் அடைந்தாயிற்று அல்லது முற்றும் தேறினவனானேன் என்று நான் எண்ணவில்லை. பிலிப்பியர் 3:12

அறிவிக்க வேண்டிய இறை உண்மைகள்

நமது கோட்பாடுகளுக்கிணங்க நமது நடத்தை காணப்பட வேண்டும் என்று நேற்றைய தினம் கண்டோம். ஆயின் அப்பொருளைச் சரியான முறையில் அறிந்திட இரண்டு பிற்சேர்க்கைகளை நாம் அதனுடன் சேர்த்துக் காண வேண்டியவர்களாயிருக்கிறோம்.

முதலாவது, நாம் இப்புவியில் இருக்கும்வரை, தேவனுடைய சத்தியங்கள் அனைத்தையும் நிறைவாக வாழ்ந்திட முடியாது என்பதை ஒப்புக் கொள்ளவேண்டும். நம்மால் முடிந்த மட்டும் சிறப்பாக செய்துமுடித்த பிறகும், நம்மைக் குறித்து ‘அப்பிரயோஜமான ஊழியக்காரன்” என்றே நாம் சொல்ல வேண்டும். நம்முடைய தோல்விகளுக்கும் குறைவுகளுக்கும் காரணமாக இதைச் சொல்லக்கூடாது. நமது பேச்சுக்கும் நமது வாழ்க்கைக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்க தொடர்ந்து முயற்ச்சி செய்கிறவர்களாக இருக்கவேண்டும்.

இரண்டாவதாக, நாம் கருத்தில்கொள்ள வேண்டியது யாதெனில், செய்தியளிப்பவர் யாராக இருப்பினும், செய்தியளிப்பவரைக் காட்டிலும் செய்தியானது மேலானது என்பதேயாகும். ஆண்ட்ரு முர்ரே என்பார் இதைக் குறித்து, ‘கர்த்தருடைய ஊழியக்காரனாகிய நாம் சில வேளைகளில் நம்மால் செய்து முடிக்க இயலாதவைகளையும் பேச வேண்டியவர்களாயிருக்கிறோம்.” என்று எழுதினார். ‘கிறிஸ்துவுக்குள் நிலைத்திருத்தல்” என்னும் நூலை அவர் எழுதிமுடித்து முப்பத்தைந்தாண்டுகளுக்குப் பிறகு, ‘ஒரு கிறிஸ்தவ ஊழியரோ, எழுத்தாளரோ, தன்னுடைய அனுபவங்களுக்கு மேலாகச் சொல்லும்படியாக நடத்தப்படுகின்றனர். நான் கிறிஸ்துவுக்குள் நிலைத்திருத்தல் என்னும் நூலை எழுதிய போது, நான் எழுதிய அனைத்தையும் அனுபவித்ததில்லை. இப்பொழுதும் கூட நான் யாவற்றையும் அனுபவித்துவிட்டேன் என்று சொல்லமுடியாது” என்றுதொடர்ந்து எழுதினார்.

தேவனுடைய சத்தியம் ஒப்பற்றதும் தெய்வீகமானதுமாகும். ‘அதைத் தொடுவதால் அதை எவ்விதத்திலாவது தான் கெடுத்துவிடக்கூடும் என்று ஒருவன் அச்செயலைச் செய்வதற்கு முன்னர் கொள்ளும் எண்ணம் அவனுக்கு அச்சத்தை உண்டாக்குகிறது” என்று கை கிங் என்பார் எழுதியதில் வியப்பில்லை. தேவ சத்தியத்தில் மிகஉயரமான சிகரத்தை நம்மால் எட்டமுடியவில்லையென்னும் காரணத்தில் இதை நாம் அறிவிக்காமல் விட்டுவிட வேண்டுமோ? மாறாக, நாம் அதனை அறிவிப்போம். அவ்வாறு அதனை அறிவிப்பதால், அதனைக் கடைப்பிடிக்காத குற்றத்திற்குள்ளாவோம். அதனை எவ்வளவாக நாம் கடைப்பிடிக்கவில்லையோ, அவ்வளவாக நாம் அதனை நிறைவேற்ற நமதுள்ளத்தில் ஏவுதல் பெறுவோம்.

நமது இரட்சகரின் திருப்பெயருக்குப் பங்கம் உண்டாகும்படி நாம் நடந்து கொள்வதற்கு, இதுகாறும் சொன்னவற்றைக் காரணமாகப் பயன்படுத்தக்கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். சில வேளைகளில், தான் அடைந்திராத உன்னத நிலையைப்பற்றி ஒருவர் செய்தி கொடுத்தால், அவரை வீணாக குறைசொல்லக் கூடாது. அதேபோல நாமும் எல்லாவற்றையும் நிறைவாக அனுபவிக்கவில்லையே என்னும் காரணத்திற்காக, தேவ ஆலோசனையை முற்றிலும் சொல்லாமல் விட்டுவிடக்கூடாது. நமது உள்ளங்களை தேவன் அறிவார். நாம் மாய்மாலமாகப் பிரசங்கம் செய்கிறோமா, நிறைவேற்ற வேண்டும் என்னும் ஆர்வத்துடன் இருக்கிறோமா என்பதை தேவன் அறிவார்.

11. Juli

»Nicht, dass ich es schon ergriffen habe oder schon vollendet sei.« Philipper 3,12

Gestern sahen wir, dass unser Verhalten unserem Bekenntnis entsprechen sollte. Um dieses Thema aber ausgewogen darzustellen, müssen wir noch zwei Anmerkungen hinzufügen.

Zuerst müssen wir einsehen, dass wir die Wahrheit Gottes niemals vollständig und vollkommen ausleben werden, solange wir in dieser Welt sind. Auch wenn wir unser Bestes gegeben haben, müssen wir immer noch bekennen, dass wir unnütze Knechte sind. Doch dürfen wir diese Tatsache nicht als Entschuldigung für Versagen oder gar Mittelmäßigkeit gebrauchen: Wir sind verpflichtet, die Kluft zwischen unseren Lippen und unserem Leben ständig mehr und mehr zu schließen.

Eine zweite Überlegung ist diese: Die Botschaft ist immer größer als der Bote, wer immer dieser auch sei. Andrew Murray sagte: »Wir werden als Diener des Herrn früher oder später auch einmal Worte predigen müssen, die wir selbst nicht immer zu verwirklichen in der Lage sind.« Fünfunddreißig Jahre, nachdem er das Buch »Bleibe in Jesus« verfasst hatte, schrieb er: »Ich möchte, dass Sie verstehen, dass ein Prediger oder christlicher Autor oft geführt sein kann, mehr zu sagen, als er selbst erfahren hat. Ich hatte damals nicht all das erfahren, wovon ich schrieb. Ich kann auch jetzt nicht sagen, dass ich es schon alles erfahren habe.«

Die Wahrheit Gottes ist gewaltig und erhaben. Sie ist so unendlich hoch, dass wir, wie Guy King schreibt, »Angst haben müssten, sie durch unsere Berührung zu verderben«. Aber muss sie für immer ungepredigt bleiben, nur weil wir ihre erhabenen Gipfel nicht erreichen? Nein, im Gegenteil, wir verkündigen sie, auch wenn wir dadurch das Urteil über uns selbst sprechen. Das Ausmaß, in dem wir mit unserer Erfahrung hinter ihr zurückbleiben, machen wir dann zum beständigen Sehnen und Trachten unserer Herzen.

Noch einmal müssen wir betonen, dass wir diese Überlegungen niemals als Entschuldigung für ein Betragen, das des Herrn unwürdig ist, hernehmen dürfen. Aber sie sollten uns von ungerechtfertigter Verurteilung eines echten Mannes Gottes abhalten, nur weil seine Botschaft manchmal in Höhen stürmt, die er selbst nicht erreicht hat. Und sie sollten uns davor bewahren, mit dem ganzen Ratschluss Gottes zurückzuhalten, auch wenn wir ihn nicht in seiner ganzen Tiefe und Höhe erfahren haben. Gott kennt unsere Herzen. Er weiß, ob wir praktizierende Heuchler sind oder leidenschaftlich nach Höherem streben.