July

இவ்வுலகப் பாடுகள்

July 7

“For I reckon that the sufferings of this present time are not worthy to be compared with the glory which shall be revealed in us.” (Rom. 8:18)

Taken by themselves, the sufferings of this present time can be appalling. I think of the gruesome sufferings of the Christian martyrs. I think of what some of God’s people have had to endure in the concentration camps. What shall we say concerning the horrible sufferings associated with war? The cruel dismemberment and paralysis connected with accidents? The unspeakable pain of human bodies racked by cancer or other diseases?

And yet physical suffering isn’t the whole story. It seems at times that bodily pain is easier to bear than mental torture. Isn’t that what Solomon meant when he wrote, “The spirit of a man will sustain his infirmity, but a wounded spirit who can bear?” (Prov. 18:14)? There is the suffering that comes with unfaithfulness in the marriage relationship, or with the death of a loved one, or with disappointment over a broken dream. There is the heartbreak of being forsaken, of being betrayed by a close friend. We wonder oftentimes at the ability of the human frame to endure the blows, the agonies, the crushing griefs of life.

Viewed by themselves, these sufferings are overwhelming. But when seen alongside the coming glory, they are only pinpricks. Paul says they are “not worthy to be compared with the glory which shall be revealed in us.” If the sufferings are so great, how much greater must be the glory!

In another passage, the Apostle Paul indulges in a delightful burst of spiritual imagery when he says that “our light affliction, which is but for a moment, worketh for us a far more exceeding and eternal weight of glory” (2 Cor. 4:17). Seen on the scales, the afflictions are feather-light while the glory is infinitely heavy. Judged by the calendar, the sufferings are momentary while the glory is eternal.

When we see the Savior at the end of the journey, the sufferings of this present time will fade into insignificance.

It will be worth it all when we see Jesus.
Life’s trials will seem so small when we see Christ.
One glimpse of His dear face all sorrow will erase,
So bravely run the race till we see Christ.

Esther K. Rusthoi

யூலை 7

ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன். (ரோமர் 8:18)

இவ்வுலகப் பாடுகள்

இக்காலத்துப் பாடுகளை மட்டும் காண்போமாயின் அவை பயங்கரமானவைகளாகத் தோன்றுகிறன. கிறிஸ்துவிற்காக உயிர்த்தியாகம் செய்தவர்கள் அடைந்த கொடுமைகளை எண்ணிப்பார்க்கிறேன். சித்திரவதைக் கூடத்தில் தேவனுடைய மக்கள் அனுபவித்த கொடுமைகள் எத்தனையெத்தனை? போர்களத்தில் அடைந்த துன்பங்கள் என்னவென்று சொல்வது? விபத்துக்களினால் உடல் ஊனமுற்றுப் போவதும், உறுப்புக்கள் செயலிழந்து போவதும் எவ்வளவு கொடுரமானவை? புற்றுநோய் மற்றும் புறநோய்களினால் மனித சரீரங்களில் அடையும் வேதனையைச் சொல்லி முடியாது.

என்றபோதிலும் சரீரப்பாடுகள் மட்டுமே முழுக்கதையாகாது. உள்ளத்தில் ஏற்படும் வேதனை, சரீரத்திற்கு இழைக்கப்படும் கொடுமையைக் காட்டிலும் கொடுரமானதாகும். இதையன்றோ சாலொமோன் ‘மனுஷனுடைய ஆவி அவன் பலவீனத்தைத் தாங்கும். முறிந்த ஆவி யாரால் தாங்கக்கூடும்?” என்று கூறினான் (நீதி.18:14). தாம்பத்ய உறவில் கணவனோ, மனைவியோ, உண்மையற்று விளங்குவதினாலும், நமக்குப் பிரியமானவரது மரணத்தாலும், எதிர்பார்த்தது நிறைவேறாத ஏமாற்றத்தாலும், இவ்வித வேதனை ஏற்படுகிறது. நெருங்கிய நண்பன் நம்பிக்கை துரோகம் செய்தாலோ, கைவிட்டாலோ உள்ளம் நொருங்கும் அனுபவம் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட தாக்குதல்களையும், வேதனைகளையும், வாழ்க்கையில் ஏற்படும் துயரங்களையும் மனிதன் தாங்கிக் கொள்கிறான் என்பதை எண்ணிப் பார்க்கிறபோது திகைப்படைகிறோம்.

இந்தப் பாடுகள் மட்டும் தனியே எண்ணிப்பார்க்கிறபோது, அவை நம்மைத் துக்கத்தில் மூழ்கச் செய்து விடுகிறவைகளாக இருக்கின்றன. ஆயின் வெளிப்பட இருக்கும் மகிமையோடு இப்பாடுகளை இணைத்துப் பார்க்குங்கால், இவை சிறிய நச்சரிப்பாகவே தோன்றும். ‘இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவை அல்லவென்று எண்ணுகிறேன்” என்று பவுல் இதைக் குறித்து எழுதுகிறார். இந்தப் பாடுகளே இவ்வளவு பெரியவையென்றால் வரப்போகும் மகிமை எத்தனை பெரிதாயிருக்கும்.

‘அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது” என்று அபோஸ்தலனாகிய பவுல் தனது ஆவிக்குரிய கற்பனை வளத்தினால் மகிழ்ச்சி பொங்க, 2.கொரிந்தியர் 4:17 இல் மொழிந்துள்ளார். அதனைத் தராசிலே எடைபோட்டுப் பார்ப்போமாயின், பாடுகள் பறவையின் சிறகுக்கு ஒப்பாயிருக்கிறது. ஆனால் மகிமையோ எடைபோடுவதற்கு இயலாதபடி மிகுந்த பாரமானதாக இருக்கிறது. கால அளவின்படி பார்த்தால், பாடுகள் ஒருகணப்பொழுதில் கடந்து செல்வதாகவும் மகிமையோ நிலைபேறானதாகவும் உள்ளன.

நமது வாழ்க்கைப் பயணத்தின் முடிவில் இரட்சகரை நாம் காண்கிறபோது, தற்போதைய பாடுகள் குறிப்பிட்டுச் சொல்வதற்குத் தகுதியற்றபடி மறைந்து போகும்.

7. Juli

»Denn ich halte dafür, dass die Leiden der Jetztzeit nicht wert sind, verglichen zu werden mit der zukünftigen Herrlichkeit, die an uns geoffenbart werden soll.« Römer 8,18

Für sich gesehen, können die Leiden der Jetztzeit furchtbar sein. Ich denke an die grausamen Leiden der christlichen Märtyrer. Ich denke daran, was manche Kinder Gottes in den Konzentrationslagern durchmachen mussten. Was sollen wir über die schrecklichen Leiden sagen, die mit Krieg verbunden sind, oder über die entsetzlichen Verstümmelungen und Lähmungen
als Folge von Unfällen? Der unaussprechliche Schmerz menschlicher Körper, die von Krebs und anderen Krankheiten gequält werden?

Und doch ist körperliches Leiden nicht das einzige. Manchmal scheint es, dass physischer Schmerz leichter zu ertragen ist als seelische Qual. War das nicht auch Salomos Erfahrung, als er schrieb: »Eines Mannes Geist erträgt seine Krankheit; aber ein zerschlagener Geist, wer richtet ihn auf?« (Sprüche 18,14). Da ist das Leiden, das Untreue in der ehelichen Beziehung mit sich bringt, oder der Tod eines geliebten Angehörigen oder die Enttäuschung über einen zerbrochenen Traum. Da ist das Herzeleid, von einem engen Freund verlassen und verraten worden zu sein.
Manchmal staunen wir über die Fähigkeit des Menschen, die Schläge, Schmerzen und erdrückenden Leiden des Lebens zu ertragen.

Für sich gesehen, sind diese Leiden überwältigend. Aber im Hinblick auf die zukünftige Herrlichkeit erscheinen sie nur wie Nadelstiche. Paulus sagt, dass sie »nicht wert sind, verglichen zu werden mit der zukünftigen Herrlichkeit, die an uns geoffenbart werden soll«. Wenn die Leiden schon so groß sind, wie überwältigend groß muss dann die Herrlichkeit sein!

An einer anderen Stelle bricht der Apostel in glückselige Ausrufe mit geistlichen Bildern aus, wenn er sagt, dass »das schnell vorübergehende Leichte unserer Drangsal uns ein über die Maßen überschwängliches, ewiges Gewicht von Herrlichkeit bewirkt« (2. Korinther 4,17). Wenn man sie auf die Waagschale legt, sind die Leiden federleicht, während die Herrlichkeit unendlich gewichtig ist. Am Kalender gemessen, währen die Leiden nur einen Augenblick, die Herrlichkeit aber eine Ewigkeit.

Wenn wir am Ende der Reise den Heiland sehen, werden die Leiden dieser gegenwärtigen Zeit zu Bedeutungslosigkeit verblassen.

Es wird sich alles gelohnt haben, wenn wir Jesus erblicken. Die Prüfungen des Lebens werden uns so klein erscheinen, wenn wir Christus sehen.

Ein Blick Seines teuren Angesichts wird allen Schmerz auslöschen. So lasst uns tapfer den Wettlauf laufen, bis wir den Herrn sehen.