July

ஆவியைத் துக்கப்படுத்துதல்

July 6

“And grieve not the Holy Spirit of God, whereby ye are sealed until the day of redemption.” (Eph. 4:30)

Just as it is possible for us to quench the Spirit in the meetings of the church, so it is possible for us to grieve Him in our private lives.

There is a certain tenderness about the word “grieve”. We can only grieve someone who loves us. The neighborhood brats don’t grieve us, but our own naughty children do.

We hold a special place of nearness and dearness to the Holy Spirit. He loves us. He has sealed us until the day of redemption. He can be grieved by us.

But what grieves Him? Any form of sin brings sorrow to His heart. It is not by accident that Paul here calls Him the Holy Spirit. Anything that is unholy bows Him down with grief.

The exhortation “grieve not” comes in the middle of a series of sins against which we are warned. The list is not intended to be exhaustive but merely suggestive.

Lying grieves the Spirit (v. 25)—white lies, black lies, fibs, exaggerations, half-truths and shaded truths. God cannot lie and He cannot give that privilege to His people.

Anger that overflows into sin grieves the Spirit (v. 26). The only time that anger is ever justified is when it is in God’s cause. All other anger gives the devil a beachhead (v. 27).

Stealing is grievous to the Holy Spirit (v. 28), whether from mother’s purse or from our employer’s time, tools or office supplies.

Unwholesome speech grieves the Holy Spirit (v. 29). This runs the gamut from dirty, suggestive jokes to idle chatter. Our conversation should be edifying, appropriate and gracious.

Bitterness, wrath, anger, clamor, slander and malice complete the list in chapter 4.

One of the favorite ministries of the Holy Spirit is to occupy us with the Lord Jesus Christ. But when we sin, He has to turn from this ministry in order to restore us to proper fellowship with the Lord.

But even then He is never grieved away. He never leaves us. We are sealed by Him unto the day of redemption. However, this should not be used as an excuse for carelessness but should be one of the greatest motives for holiness.

யூலை 6

அன்றயும் நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள் (எபேசியர் 4:30)

ஆவியைத் துக்கப்படுத்துதல்

சபைக் கூட்டங்களில் பரிசுத்த ஆவியை அவித்துப் போடுவது எப்படிச் சாத்தியமோ, அப்படியே அவரை நமது தனிப்பட்ட வாழ்க்கையில் துக்கப்படுத்துவதும் சாத்தியமாகும். ‘துக்கப்படுத்தல்” என்னும் சொல்லில் சிறிதளவு அன்பு கலந்திருக்கிறது. யாரிடம் நாம் அன்பு பாராட்டுகிறோமோ அவரையே துக்கப்படுத்த முடியும். பக்கத்து வீட்டில் இருக்கும் முரட்டுக் குழந்தை நம்மைத் துக்கப்படுத்தாது. ஆனால், கீழ்படியாத நமது குழந்தையே துக்கத்தை அளிக்கும்.

தூய ஆவியானவருக்கு நாம் சிறந்த பிரியத்தையும் நெருக்கத்தையும் கொடுத்திருக்கிறோம். அவர் நம்மீது அன்புபாராட்டுகிறார். மீட்பின் நாளுக்கென்று நம்மை முத்திரையிட்டிருக்கிறார். நம்மால் அவரைத் துக்கப்படுத்தக் கூடும். ஆனால் , அவரை எது துக்கப்படுத்துகிறது? எவ்வகைப் பாவமும் அவருக்குத் துக்கத்தையே வருவிக்கிறது. எதிர்பாரா விதமாகத் தூய ஆவியானவரைப் பற்றி பவுல் இங்கு எடுத்துரைக்கவில்லை. பரிசுத்தமற்ற எந்தவொரு நிகழ்ச்சியும் அவரைத் துக்கத்தினால் குனியச்செய்கிறது.

பலவிதமான பாவங்களைக் குறித்து நாம் எச்சரிக்கையுடையோராய் இருக்கவேண்டும் என்று சொல்லப்பட்ட இடத்தில், ‘துக்கப்படுத்தாதிருங்கள்” என்னும் அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது. அங்கே கொடுக்கப்பட்டிருக்கிற பட்டியலில் எல்லாப் பாவங்களும் சொல்லப்படவில்லை. சிந்தனையைக் கிளறி விடுவதற்குப் போதுமானபடி அவை கொடுக்கப்பட்டுள்ளன.

பொய்யுரைத்தல் ஆவியானவரைத் துக்கப்படுத்துகிறது (வச.25) முழுப்பொய், அண்டப்பொய், அரைப்பொய், மிகைப்படுத்திப் பேசுதல், மறைமுகமாய் பேசுதல் யாவும் பொய்யே. தேவனால் பொய் கூற இயலாது. தமது மக்கள் பொய்யுரைக்க அவர் அனுமதிப்பதில்லை.

சினத்தின் மிகுதியால் பாவம் உண்டாகிறது. அங்கு ஆவியானவர் துக்கமடைகிறார் (வச.26) தேவனுக்காக நாம் கோபம் கொண்டால் அதில் தவறில்லை. மற்ற நேரங்களில் சினமடைவோமானால் பிசாசுக்கு இடங்கொடுப்பதாகிவிடும் (வச.27).

திருடுவது தூய ஆவியானவரைத் துக்கப்படுத்துகிறது (வச.28). தாயின் பையிலிருந்த பணத்தையோ, அலுவலக நேரத்தையோ, பொருட்களையோ, திருடக்கூடாது. கெட்டவார்த்தை தூய ஆவியானவரைத் துக்கப்படுத்துகிறது (வச.29). கீழத்;தரமான, சிந்தனையைத் தூண்டுகிற பேச்சுக்கள், பயனற்று மடமடவென்று பேசுதல் யாவும் இதனுள் அடங்கும். நமது உரையாடல் பயனுள்ளதாகவும், தகுந்ததாகவும், கிருபை நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். கசப்பு, கோபம், மூர்க்கம், கூக்குரல், தூஷணம், துர்க்குணம், ஆகியவை 4ஆவது அதிகாரத்தில் அப்பட்டியலை நிறைவு செய்கின்றன.

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுடன் நம்மை ஈடுபடச் செய்வதே தூய ஆவியானவருக்கு மிகவும் பிடித்த ஊழியமாகும். ஆனால் நாம் பாவம் செய்யும் வேளையில், கர்த்தரோடு தகுந்த ஐக்கியத்தை நாம் பெறவேண்டும் என்பதற்காக இந்த ஊழியத்தை அவர் விட்டுவிடுகிறார். ஆனால் அவர் துக்கப்படுவதால் நம்மை விட்டுவிலகிச் செல்வதில்லை. மீட்பின் நாளுக்கென்று அவர் நம்மை முத்திரையிட்டுள்ளார். கவனமற்றுச் செயல்பட நமக்கு இது காரணமாக அமையக்கூடாது. பரிசுத்தத்தை நாம் கைக்கொள்ள இது மிகப்பெரிய தூண்டுகோலாக அமையவேண்டும்.

6. Juli

»Und betrübet nicht den Heiligen Geist Gottes, durch welchen ihr versiegelt worden seid auf den Tag der Erlösung.« Epheser 4,30

So wie es möglich ist, den Heiligen Geist in den Zusammenkünften der Gemeinde auszulöschen, so können wir Ihn auch in unserem persönlichen Leben betrüben. Das Wort »betrüben« enthält eine gewisse Zärtlichkeit. Wir können nur jemanden betrüben, der uns liebt. Die Bengel in der Nachbarschaft betrüben uns nicht, wohl aber unsere eigenen ungezogenen Kinder.

Wir liegen dem Heiligen Geist ganz besonders am Herzen. Er liebt uns. Er hat uns versiegelt auf den Tag der Erlösung. Er kann von uns betrübt werden.

Aber was betrübt Ihn? Jede Form von Sünde macht Sein Herz traurig. Nicht zufällig nennt Ihn Paulus den Heiligen Geist. Alles, was unheilig ist, schmerzt Ihn zutiefst.

Die Ermahnung »Betrübet nicht« erscheint mitten in einer Reihe von Sünden, vor denen wir gewarnt werden. Die Liste soll nicht erschöpfend, sondern nur beispielhaft sein.

Lügen betrübt den Heiligen Geist (Vers 25) – Notlügen, »schlimme« und »weniger schlimme« Lügen, Übertreibungen, Halbwahrheiten und einseitig gefärbte Darstellungen. Gott kann nicht lügen und kann auch den Seinen nicht das Recht dazu geben.

Zorn, der oft zur Sünde wird, betrübt den Geist (Vers 26). Der einzige Fall, in dem Zorn je gerechtfertigt ist, ist, wenn es um die Sache Gottes geht. Jede andere Art von Zorn schafft nur einen Brückenkopf für den Teufel (Vers 27).

Stehlen betrübt den Heiligen Geist (Vers 28), ob es sich nun um Mutters Geldbörse oder die Zeit unseres Arbeitgebers handelt, ob um Werkzeuge oder Büromaterial. Faules Reden betrübt den Heiligen Geist (Vers 29). Das deckt den ganzen Bereich ab von schmutzigen zweideutigen Witzen bis zu leerem nichtsnutzigem Klatsch. Unser Reden sollte auferbauend, angemessen und wohlwollend sein.

Bitterkeit, Wut, Zorn, Geschrei, Lästerung und Bosheit vervollständigen die Liste in Kapitel 4.

Einer der hauptsächlichen Dienste des Heiligen Geistes ist es, uns mit dem Herrn Jesus zu beschäftigen. Aber wenn wir sündigen, muss Er sich von diesem Dienst abwenden, um stattdessen unsere Gemeinschaft mit dem Herrn wiederherzustellen und zu ordnen.

Doch selbst dann können wir Ihn niemals endgültig vergrämen. Er verlässt uns nie. Wir sind durch Ihn auf den Tag der Erlösung versiegelt. Dies dürfen wir jedoch nicht als Entschuldigung für Gleichgültigkeit und Sorglosigkeit gebrauchen, sondern es sollte einer der tiefsten Beweggründe für unsere Heiligung sein.