January

விசுவாசியின் விடுதலை

January 15

“For, brethren, ye have been called unto liberty; only use not liberty for an occasion to the flesh, but by love serve one another.” (Gal. 5:13)

The liberty of the child of God is one of his priceless possessions. Made free by the Son, he is free indeed. But he is called to responsible freedom, not to license.

Children want to be free from the restraints of home. Young people want to be free from the discipline of study. Adults want to be free from their marriage vows. Still others rebel against being boxed in by regular employment. But these are not the freedoms to which we are called.

The stars are not free to leave their orbits and wander throughout space. A train is not free to leave the tracks and meander over the countryside. A plane is not free to leave its assigned course; its safety depends on the pilot’s obeying the regulations.

Jowett comments, “There is no realm where the lawless are the free. In whatever way we wish to go we must accept bondage if we would discover liberty. A musician must reverence the laws of harmony if he would exult in his lovely world. A builder must put himself in bondage to the law of gravity, or it is not a house that emerges, but a rubbish-heap. What sort of liberty does a man enjoy who consistently defies the laws of health? In all these realms to trespass is to be maimed, to pay homage is to be free.”

It is true that the believer is free from the law (Rom. 7:3) but that does not mean that he is lawless. He is now enlawed to Christ, bound by the cords of love, and committed to obey the numerous commandments that are found in the New Testament.

The believer is free from sin as master (Rom. 6:7, 18, 22) but only to become a servant to God and to righteousness.

The believer is free from all men (1 Cor. 9:19) in order to become a servant to all, that he might win the more.

But he is not free to use his liberty as a pretext for evil (1 Pet. 2:16 RSV). He is not free to indulge the flesh (Gal. 5:13). He is not free to stumble or offend another person (1 Cor. 8:9). He is not free to bring dishonor on the Name of the Lord Jesus (Rom. 2:23, 24). He is not free to love the world (1 John 2:15-17). He is not free to grieve the indwelling Holy Spirit (1 Cor. 6:19).

Man does not find fulfillment or rest in doing his own thing. He finds it only in taking Christ’s yoke and learning of Him. “His service is perfect freedom.”

ஜனவரி 15

சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள். இந்தச் சுயாதீனத்தை மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள். கலாத்தியர் 5:13

விசுவாசியின் விடுதலை

தேவனுடைய பிள்ளை என்னும் சுயாதீனம் விலைமதிக்க இயலா நற்பேறாகும். குமாரனின் மூலமாக ஒருவன் விடுதலை அடைந்தவனாயின், அவன் உண்மையிலேயே விடுதலை பெற்றவனாவான். ஆயினும் அவன் பொறுப்புமிக்க விடுதலையைப் பெற்றிருக்கிறானேயொழிய, எல்லாவற்றையும் செய்ய உரிமைபெற்றவனல்லன்.

வீட்டிலுள்ள கட்டுப்பாடுகளலிருந்து விடுதலைபெற பிள்ளைகள் விரும்புகின்றனர். பாடத்திட்டத்தின் ஒழுங்கினின்று விடுதலைபெற இளைஞர் விரும்புகின்றனர்;. வேலைசெய்யும் இடங்களில் இருக்கும் கட்டுப்பாட்டிற்கு எதிராகச் சிலர் நடந்துகொள்கின்றனர். நாம் இப்படிப்பட்ட விடுதலைக்கென்று அழைக்கப்படவில்லை.
விண்மீன்கள் தங்களுக்கென்று கொடுக்கப்பட்ட பாதையிலிருந்தோ, தொடர்வண்டி தண்டவாளத்திலிருந்தோ, விமானம் அதற்கென்று கொடுக்கப்பட்ட வழியிலிருந்தோ மாறிச்செல்லக்கூடாது. அவ்வாறு சென்றால் விபரீதமே.

ஜோவெட் என்பார், „சட்டம் இல்லாதவர்களாகக் கட்டுப்பாடின்றி செயல்புரிய அனுதிக்கப்பட்ட ஒரு ஆட்சியை நாம் எங்கும் காணமுடியாது. விடுதலை அடைந்துவிட்டோம் என்று சொல்லி, எவ்வழியில் சென்றாலும் நாம் கட்டுப்பாட்டிற்குள்தான் இருக்கிறோம் என்பதை உணரவேண்டும். இசையின் விதிகளுக்குக் கட்டுப்பட்டுப் பாடுகிறவன் இன்னிசையை வெளிப்படுத்துகின்றான். புவியீர்ப்பு விதிகளுக்குக் கட்டுப்பட்டு கட்டுகிறவன் அழகிய வீட்டை எழுப்புகிறான். உடல் நலத்திற்குத் தேவையான கட்டுப்பாடுகளை அவ்வப்போது மீறகிறவன் எத்தகைய விடுதலையை உடையவனாயிருக்கிறான்? இக்கட்டுப்பாட்டை மீறுகிறவன் உடல் பாதிப்பையே அடைகிறான்“ எனத் தமது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பிரமாணத்தினின்று விசுவாசி விடுதலைபெற்றள்ளான் என்பது உண்மையே (ரோ.7.3). அவன் எவ்விதக் கட்டுப்பாடும் அற்றவன் என்பது அதன் பொருளன்று. இப்பொழுது அவன் கிறிஸ்துவின் பிரமாணத்திற்கு உடன்பட்டிருக்கிறான். அன்பினாலே கட்டப்பட்டிருக்கிறான். புதிய ஏற்பாட்டில் காணும் பற்பல கட்டளைகளுக்குக் கீழ்ப்படியக் கடமைப்பட்டிருக்கிறான்.

விசுவாசி பாவத்தை எஜமானாகக் கொண்டிருப்பதில்லை (ரோ.6:7,18,22). தேவனுக்கு அடிமையாகவும், நீதிக்கு ஊழியம்செய்யவுமே அவ்விடுதலை அவனுக்கு அழிக்கப்பட்டிருக்கிறது. எல்லா மனிதர்களிலிருந்தும் விசுவாசி விடுதலைபெற்றுள்ளான் (1.கொரி.9:19). எல்லாருக்கும் அடிமையாகி, அநேகரைக் கிறிஸ்துவுக்காக வெற்றிகொள்ள அவ்விடுதலையைப் பெற்றுள்ளான். துர்க்குணத்திற்குக் காரணமாகவோ (1.பேது.2:16), மாமிசத்திற்கு ஏதுவாகச் செயலாற்றவோ (கலா.5:13), எவருக்கும் தடையாக விளங்கவோ (1.கொரி.8:9), கர்த்தருடைய திருப்பெயருக்கு களங்கத்தை விளைவிக்கவோ (ரோ.2:23-24), உலகத்தில் அன்புகூரவோ (1.யோ.2:15-17), தூய ஆவியானவரைத் துக்கப்படுத்தவோ, விசுவாசிக்கு விடுதலையில்லை.

நிறைவேற்றிவிட்டேன் என்ற எண்ணத்தையும், இளைப்பாறுதலையும் தன்னுடைய சொந்த செயலைச் செய்வதினாலே ஒரு மனிதன் பெறுவதில்லை. கிறிஸ்துவின் நுகத்தை எடுத்துக்கொண்டவனாக அவரிடத்தில் கற்றுக்கொள்பவனே அதனைக் கண்டடைகிறான். „அவருக்குப் பணிசெய்தலே நிறைவான விடுதலை“.

15. Januar

»Denn ihr seid zur Freiheit berufen worden, Brüder; allein gebrauchet nicht die Freiheit zu einem Anlass für das Fleisch, sondern durch die Liebe dienet einander. « Galater 5,13

Die Freiheit des Gotteskindes ist eines seiner unschätzbaren Besitztümer. Frei gemacht durch den Sohn, ist es wirklich frei. Aber wir sind zu verantwortlicher Freiheit berufen, nicht zu Zügellosigkeit.

Kinder wollen frei sein von den zu Hause auferlegten Beschränkungen. Junge Menschen wollen frei sein von der Disziplin des Lernens und Studierens. Erwachsene wollen frei sein von ihrem ehelichen Treuegelöbnis. Wieder andere wehren sich dagegen, durch regelmäßige Arbeit eingeschränkt zu werden. Aber dies sind nicht die Freiheiten, zu denen wir berufen sind.

Den Sternen steht es nicht frei, ihre Bahnen zu verlassen und durchs Weltall zu vagabundieren. Einem Zug steht es nicht frei, die Schienen zu verlassen und sich durch die Landschaft zu schlängeln. Einem Flugzeug steht es nicht frei, seinen festgesetzten Kurs zu verlassen; seine Sicherheit hängt davon ab, dass der Pilot den Vorschriften gehorcht.

Jowett (John Henry, 1864-1923, englischer, eine Zeit lang in New York wirkender Prediger) sagt dazu: »Es gibt keinen Bereich, wo der Gesetzlose der Freie wäre. In welche Richtung wir auch gehen – wir müssen Gebundenheit akzeptieren, wenn wir Freiheit entdecken wollen. Ein Musiker muss sich den Gesetzen der Harmonie beugen, wenn er in seiner lieblichen Welt wirklichen Jubel hervorbringen möchte. Ein Architekt
muss sich dem Gesetz der Schwerkraft unterwerfen, sonst geht aus seinen Bemühungen kein Haus hervor, sondern ein Schutthaufen. Und welche Freiheit genießt ein Mensch, der beständig die Gesetze der Gesundheit herausfordert? In allen diesen Bereichen bedeutet Gesetzesübertretung Verkrüppelung, Unterwerfung aber Freiheit.«

Es ist wahr, dass der Gläubige frei ist vom Gesetz (Römer 7,3). Aber das heißtnicht, dass er gesetzlos ist. Er ist jetzt gesetzmäßig mit Christus verankert,verbundenmit den Seilen der Liebe und verpflichtet, den zahlreichenGeboten zu gehorchen,die wir im Neuen Testament finden.

Der Gläubige ist frei von der Sklavenherrschaft der Sünde (Römer 6,7.18.22), um aber andererseits Sklave Gottes und Sklave der Gerechtigkeit zu sein.

Der Gläubige ist frei von allen Menschen (1. Korinther 9,19), um andererseits Knecht aller Menschen zu sein, um möglichst viele zu gewinnen.

Aber er ist nicht frei, seine Freiheit zum Deckmantel der Bosheit zu gebrauchen (1. Petrus 2,16). Er ist nicht frei, die Lüste des Fleisches zu befriedigen (Galater 5,13). Er ist nicht frei, einem anderen zum Anstoß oder zum Fallstrick zu werden (1.Korinther 8,9). Er ist nicht frei, auf den Namen des Herrn Jesus Unehre zu bringen (Römer 2,23.24). Er ist nicht frei, die Welt zu lieben (1. Johannes 2,15-17). Er ist nicht frei, den in ihm wohnenden Heiligen Geist zu betrüben (1. Korinther 6,19).

Der Mensch findet nicht Erfüllung und Frieden, indem er seinen eigenen Glücksvorstellungen nachjagt. Er findet sie nur, wenn er das Joch Christi auf sich nimmt und von Ihm zu lernen beginnt. »Sein Dienst ist vollkommene Freiheit.«