January

தெளிவான பார்வை

  • january07
❚❚

January 7

“We walk by faith, not by sight.” (2 Cor. 5:7)

Did you ever stop to wonder why a baseball game is more exciting to most people than a prayer meeting? Yet comparative attendance records prove that it is so.

Or we might ask, “Why is the Presidency of the United States more appealing than overseership in an assembly?” Parents don’t say to their sons, “Eat your food and some day you may be an elder.” No, they say, “Clean your plate and some day you may grow up to be President.”

Why is a successful career in business more attractive than the life of a missionary? Christians often discourage their children from going to the mission field, content to see them rise to be “titled officials in secular enterprises.”

Why is a television documentary more absorbing than the study of God’s Word? Think of the hours spent before the TV set and the hurried moments before the open Bible!

Why are people willing to do for dollars what they wouldn’t do for love to Jesus? Many who are tireless in their work for a corporation are lethargic and unresponsive when the Savior calls.

Finally why does our nation loom larger and more important than the Church? National politics are colorful and engrossing. The Church often seems to lumber on without dynamic.

The reason for all these things is that we walk by sight and not by faith. Our vision is distorted. We don’t see things as they actually are. We value the temporal above the eternal. We value the soulish above the spiritual. We value man’s judgment above God’s.

When we walk by faith, all is changed. We have 20/20 spiritual vision. We see things as God sees them. We value prayer as the unspeakable privilege of having direct audience with the Sovereign of the universe. We see that an elder in an assembly means more to God than the ruler of a nation. We see, with Spurgeon, that if God calls a man to be a missionary, it would be a tragedy to see him drivel down into a king.” We see television as a never-never land of unreality, whereas the Bible holds the key to a life of fulfilment. We are willing to spend and be spent for Jesus in a way we would never be willing for an unworthy impersonal corporation. And we reckon that our local church is more important to God and to His people than the greatest empire in the world.

Walking by faith makes all the difference!

ஜனவரி 7

நாம் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடக்கிறோம். (2.கொரி.5:6)

தெளிவான பார்வை

ஜெபக்கூட்டத்தைக் காட்டிலும் கிரிக்கட் விளையாட்டு மக்களுக்கு ஆவலைத் தருகிறது என்பதைப்பற்றி நீங்கள் சிந்தித்ததுண்டா? இது உண்மைதான்.

‘குடியரசுத் தலைவர் பதவி, ஒரு சபையின் கண்காணியைக் காட்டிலும் சிறப்பாக கருதப்படுவதன் காரணம் என்ன?’ பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளிடம், ‘ நீ கவனத்தோடு படி. ஒரு நாளில் நீ கண்காணியாவாய்’ என்று கூறுவதில்லை. மாறாக, ‘ நீ நன்றாகப் படி ஒரு நாள் குடியரசுத் தலைவன் ஆவாய்’ என்றே கூறுகின்றனர்.

தொழிலில் வெற்றிபெற்ற வாழ்க்கை இறைப்பணியைக் காட்டிலும் மேன்மையாகக் கருதப்படுவது ஏன்? தங்களுடைய பிள்ளைகள் ஊழியத்திற்குச் செல்லவேண்டுமென்று பெற்றோர்கள் ஊக்கமளிப்பதில்லை. உலகில் உயர்பதவியை அடைந்தால் போதும் என்று கருதுகின்றனர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பலருக்கு திருமறையைப் படிப்பதைக் காட்டிலும் மனநிறைவு அளிப்பது ஏன்? தொலைக்காட்சிப் பெட்டிக்குமுன் வெகுநேரத்தைச் செலவழித்துவிட்டு, திறந்தவேதத்திற்குமுன் சில மணித்துளிகளை செலவிடுவதைக்குறித்து நினைத்துப்பார்த்திருக்கிறீர்களா?

இயேசுகிறிஸ்துவின் மேல் உள்ள அன்பினால் பணியைச் செய்யத் தயங்கும் பலர், பணத்திற்காக அதனைச் செய்கின்றனர். தாங்கள் அலுவல் புரியும் நிறுவனங்களுக்காக அயராது உழைக்கும் மக்கள், இரட்சகரின் அழைப்பிற்குப் பதில் கூறாமல், முடங்கிப்படுத்துக்கொள்வது ஏன்?

கடைசியாக, சபையைக் காட்டிலும், நமது நாடு மேலானதாகக் கருதப்படுவது ஏன்? அரசியல் கவர்ச்சி மிக்கதாகவும், சபையோ ஆற்றல் அற்ற பொருளாகவும் கருதப்படுகின்றன. இவையனைத்திற்கும் காரணம், நாம் விசுவாசித்து நடவாமல், தரிசித்து நடக்கிறவர்களாக இருக்கிறோம் என்பதே. நம்முடைய பார்வை மங்கிப்போய் இருக்கிறது. பொருட்களின் உண்மையான நிலையை நாம் கண்கிறதில்லை. நிலையற்றவைகளை நிலைபேறானது என்று கருதுகிறோம். ஆவிக்குரியவைகளைக் காட்டிலும் சரீரத்திற்குரியவைகளுக்கு அதிகமதிப்பளிக்கிறோம். தேவனுடைய தீர்மானத்தைக் காட்டிலும் மனிதனுடைய தீர்மானத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம்.

ஆனால் நாம் விசுவாசதித்து நடப்போமானால், எல்லாவற்றிலும் மாற்றம் உண்டாகும். ஆவிக்குரிய நிறைவான பார்வையைக் கொண்டிருப்போம். தேவன் காண்பதுபோல நாமும் காண்போம். நமது ஜெபவேளையில் நாம் சர்வலோக அதிபதியாகிய தேவனுடைய முன்னிலையில் இருக்கிறோம் என்ற எண்ணம் அதனுடைய சொல்லிமுடியாத சிலாக்கியதை உணரச்செய்யும். நாட்டின் தலைவரைக் காட்டிலும் சபையின் மூப்பர் மேலானவர் என்பதைக் காணுவோம். ‘மன்னன் ஆவது அறிவற்ற செயல், இறைபணியோ மேல்’ என்று ஸ்பர்ஜன் கண்டதுபோல நாமும் காணுவோம். தொலைக்காட்சி உண்மைக்கு வெகுதொலைவு என்றும், வேதாமோ வாழ்வின் நோக்கத்தின் நிறைவாய் இருக்கிறது என்றும் அறிவோம். தொழில் நிறுவனங்களுக்காக நம்மையே அற்பணிப்பதற்கு மாறாக, இயேசு கிறிஸ்துவுக்காக நாம் செலவிடவும், செலவிடப்படவும் விருப்பம் கொள்வோம். உலகின் மாமன்னனைக் காட்டிலும், உள்ளுர் சபையும், சபை மக்களும் தேவனுக்கு முக்கியமானவர் என்பதை அறிவோம்.

விசுவாசித்து நடப்பது இத்தகைய வேறுபாட்டை உண்டாக்குகிறது.

7. Januar

»Wir wandeln durch Glauben, nicht durch Schauen.« 2. Korinther 5,7

Haben wir jemals darüber nachgedacht, warum ein Fußballspiel für die meisten Leute spannender ist als eine Gebetsversammlung? Ein Vergleich der jeweiligen Besuchsstatistiken beweist es jedenfalls eindeutig.

Oder wir könnten uns fragen: »Warum ist das Amt des Präsidenten der Vereinigten Staaten attraktiver als das Aufseheramt in einer Versammlung?« Im Allgemeinen sagen Eltern zu ihren Söhnen nicht: »Iss tüchtig, und vielleicht wirst du eines Tages Ältester.« Nein, bei uns sagt man: »Mach den Teller sauber, und wenn du groß und stark bist, wirst du vielleicht Präsident.«

Warum ist eine erfolgreiche Karriere in der Wirtschaft anziehender als ein Leben als Missionar? Oft entmutigen Christen ihre Kinder, aufs Missionsfeld zu gehen, und sehen es lieber, wenn sie es zu guten Posten im Management weltlicher Unternehmen bringen.

Warum nimmt uns ein Dokumentarfilm im Fernsehen mehr gefangen als das Studium des Wortes Gottes? Denken wir an die zahllosen vor der »Röhre« verbrachten Stunden und die flüchtigen Augenblicke vor der geöffneten Bibel!

Warum sind Menschen bereit, für Geld Dinge zu tun, die sie aus Liebe zum Herrn Jesus nicht tun würden? Viele, die sich unermüdlich für ihre Firma einsetzen, sind lethargisch und gleichgültig, wenn der Heiland sie ruft. Warum schließlich scheint uns unser Staat oft größer und bedeutender als die Versammlung Gottes? Politik ist abwechslungsreich und aufregend. Das Versammlungsleben dagegen scheint uns oft langweilig und kraftlos.

Der Grund für all dies ist, dass wir durch Glauben und nicht durch Schauen wandeln. Unser Blick ist verzerrt. Wir sehen die Dinge nicht, wie sie wirklich sind. Wir schätzen das Zeitliche mehr als das Ewige. Wir schätzen das Natürliche mehr als das Geistliche. Wir schätzen das Urteil von Menschen mehr als das Urteil Gottes.

Wenn wir durch Glauben wandeln, ändert sich alles. Wir haben eine glasklare geistliche Sicht. Wir sehen die Dinge, wie Gott sie sieht. Wir schätzen das Gebet als das unbeschreibliche Vorrecht ständiger Privataudienz beim Herrscher über das ganze Universum. Wir erkennen, dass ein Ältester in einer Versammlung für Gott mehr bedeutet als der Führer eines Staates. Wir sehen mit Spurgeon, dass, wenn
Gott jemand als Missionar beruft, es eine Tragödie wäre, wenn er »zu einem König herunterkommen« würde. Wir sehen das Fernsehen als Wolkenkuckucksheim voller Unwirklichkeit, während die Bibel den Schlüssel zu einem Leben der Erfüllung enthält. Wir sind bereit, uns für den Herrn zu verbrauchen und verbrauchen zu lassen, wie wir es für eine wertlose unpersönliche Firma nie zulassen würden. Und wir erkennen, dass unsere örtliche Versammlung für Gott und Sein Volk wichtiger ist als das größte Weltreich.

Wandel durch Glauben ist der alles entscheidende Unterschied!