February

தேவனைச் சென்றுசேரும் குறைவற்ற புகழ்ச்சி

February 3

“And another angel came and stood at the altar, having a golden censer; and there was given unto him much incense, that he should offer it with the prayers of all saints upon the golden altar which was before the throne.” Rev. 8:3.

We believe that the angel in this passage is none other than the Lord Jesus Himself. And His ministry here is full of comfort and encouragement for us.

What is He doing? He takes the prayers of all saints, adds His precious incense to them and presents them to God the Father.

We know only too well that our prayers and praises are very imperfect. We don’t know how to pray as we should. Everything we do is stained with sin, with false motives, with selfishness.

“The holiest hours we spend in prayer upon our knees,
The times when most we deem our songs of praise will please,
Thou Searcher of all hearts, forgiveness pour on these.”

But before our worship and intercession ever get to God the Father, they pass through the Lord Jesus. He removes every trace of imperfection so that when they finally reach the Father they are flawless. And something else that is very wonderful happens. He offers the incense with the prayers of the saints. The incense speaks of the fragrant perfection of His person and work. It is this that gives efficacy to our prayers.

What an encouragement this should be to us. We are all too aware of how we bungle in prayer. We slaughter the rules of grammar, express ourselves inelegantly and say things that are doctrinal absurdities. But this need not discourage us from praying. We have a Great High Priest who edits and purifies all our communications with the Father.

Mary Bowley captured the truth in poetic form when she wrote:

Much incense is ascending
Before th’ eternal throne;
God graciously is bending
To hear each feeble groan;
To all our prayers and praises
Christ adds His sweet perfume,
And love the censer raises
These odours to consume.

பெப்ரவரி 3

வேறொரு தூதனும் வந்து, தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப் பலிபீடத்தின் படியிலே நின்றான். சிங்காசனத்திற்குமுன்பாக இருந்த பொற்பீடத்தின்மேல் சகல பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தும்படி மிகுந்த தூபவர்க்கம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. (வெளி 8:3)

தேவனைச் சென்றுசேரும் குறைவற்ற புகழ்ச்சி

இப்பகுதியில் தேவதூதன் என்று குறிப்பிடப்பட்டுள்ளவர், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவேயல்லாமல் வேறு எவருமல்லை. இங்கு அண்ணல், ஆற்றும் ஊழியம் நமக்கு முற்றிலும் ஆறுதலும், தேறுதலுமாயிருக்கிறது. இங்கே அவர் செய்வது யாது? பரிசுத்தவான்களின் மன்றாட்டைத் தம்மிடத்தில் ஏற்றுக்கொண்டவராக, தமது மேன்மையான நறுமணப்பொருட்களைச் சேர்த்து, தமது தந்தையாகிய தேவனிடம் அர்ப்பணிக்கிறார்.

நமது மன்றாட்டிலும் புகழ்ச்சியிலும் எண்ணற்ற குறைகள் உள்ளன என்பதை அறிந்திருக்கும் நாம், எவ்வாறு நமது விண்ணப்பங்களை ஏறெடுக்கவேண்டும் என்பதை அறியாதிருக்கிறோம். நமது செயல்கள் யாவும் தவறான நோக்கங்கள் கொண்டவை, தன்னலமிக்கவை, பாவத்தினால் கறைப்பட்டவை.

முழங்காலில் நின்றிட்டு மன்றாடும் வேளைகள்
மனம் தாழ்த்தும் மாந்தர்கள் தூய நல் நேரங்கள்,
விண்ணகரின் பேர்புகழைப் போற்றிடும் காலங்கள்
மன்னவனைக் களிப்பூட்டும் என நினைத்து மயங்கிட்டோம்.
உள்ளத்தைத் துருவியே ஆய்ந்திடும் அண்ணல்நீர்
அள்ளியே மன்னிப்பை பொழிந்திடுவீர் எம்மீது!

தந்தையாகிய தேவனிடம் நாம் ஏறெடுக்கும் புகழ்ச்சியும், பரிந்து பேசுதலும், முதலாவதாகக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைச் சென்றடையும். அங்கு, அவற்றில் காணும் மாசுகள் யாவும் அகற்றப்பட்டு, முற்றிலும் குற்றமற்றதாகப் பிதாவினிடத்தில் சென்றுசேரும். இதனோடு வியத்தகு முறையில் வேறொன்றும் நடைபெறுகிறது. பரிசுத்தவான்களின் ஜெபத்தோடு, கர்த்தர் தமது நறுமணத் தூபத்தைச் சேர்க்கிறார். அந்தத் தூபவர்க்கம் இயேசு கிறிஸ்துவின் நறுமணம் கமழும் ஆள்தத்துவத்தையும், அவரது செயலாக்கங்களையும் குறிக்கிறது. இதுவே நமது மன்றாட்டுகளுக்கு ஆறுதல் தருகிறது.

இவ்வுண்மை நமக்கு உற்சாகத்தை மேலிடச்செய்கிறது. நாம் அரைகுறையான ஜெபத்தையே ஏறெடுக்கிறோம் என்பதை அறிவோம். மொழியின் இலக்கணத்தைக் கொலை செய்கிறோம். அதில் சொல்வளம் காணப்படுவதில்லை. வேதாக உபதேசங்களை மாற்றித் தவறு செய்கிறோம். இவையாவும் நமது ஜெபத்தின் உற்சாகத்தைக் குன்றிவிடச் செய்யக்கூடாது. மகா பிரதான ஆசாரியரை நாம் உடையவராக இருக்கிறோம். இயேசு கிறிஸ்துவாகிய அவர் அதனைச் சீராக்கி, தூய்மையாக்கி நாம் கூறுகிறது அனைத்தையும், தமது தந்தையிடம் சமர்ப்பிக்கிறார்.

3. Februar

»Und ein anderer Engel kam und stellte sich an den Altar, und er hatte ein goldenes Räucherfass; und es wurde ihm viel Räucherwerk gegeben, auf dass er Kraft gebe den Gebeten aller Heiligen auf dem goldenen Altar, der vor dem Throne ist.« Offenbarung 8,3

Wir glauben, dass der Engel in diesem Vers niemand anders ist als der Herr JesusSelbst. Und Sein Dienst hier ist voller Trost und Ermutigung für uns.Was tut Er? Er nimmt die Gebete aller Heiligen, fügt Seinen kostbaren Weihrauchhinzu und bringt sie so vor Gott den Vater.

Wir wissen nur allzu gut, dass unser Gebet und Lobpreis äußerst unvollkommen ist. Wir verstehen es nicht, so zu beten, wie wir eigentlich sollten. Alles, was wir tun, ist mit Sünde, mit falschen Motiven, mit Selbstsucht befleckt.

»Über die heiligsten Stunden, die wir im Gebet auf unseren Knien verbringen, Über die Zeiten, wenn wir am meisten meinen, dass unsere Loblieder Dir gefallen, O Erforscher der Herzen, gieß Deine Vergebung über sie aus.«

Aber bevor unsere Anbetung und Fürbitte vor Gott den Vater kommt, geht sie über den Herrn Jesus. Er entfernt jede Spur von Unvollkommenheit, so dass sie völlig tadellos ist, wenn sie schließlich den Vater erreicht. Und noch etwas Wunderbares geschieht dabei. Mit den Gebeten der Heiligen opfert Er das Räucherwerk. Der Weihrauch spricht von der wohlriechenden Vollkommenheit Seiner Person und Seines Werkes. Das ist es, was unsere Gebete letztlich wirksam macht.

Was für eine Ermunterung sollte uns das sein! Wir sind uns nur zu deutlich bewusst, wie stümperhaft unser Gebet ist. Wir machen die Regeln der Grammatik nieder, drücken uns alles andere als gewählt aus und sagen oft lehrmäßige Absurditäten. Aber das braucht uns nicht vom Gebet zu entmutigen. Wir haben einen Großen Hohenpriester, der all unsere Kommunikation mit dem Vater überarbeitet und reinigt. Mary Bowley erfasst diese Wahrheit in dichterischer Form:

Viel Weihrauch steigt empor
Vor den ewigen Thron;
Gott beugt Sich in Gnade hernieder
Um jedes schwache Seufzen zu hören;
Zu allen unseren Gebeten und Lobpreisungen
Fügt Christus Seinen kostbaren Wohlgeruch hinzu,
Und Seine Liebe hebt das Rauchfass,
All diese Düfte zu verbreiten.