February

கிறிஸ்துவின் மகிமையான நற்செய்தி

February 1

“…the gospel of the glory of Christ.” (2 Cor. 4:4)

We should never forget that the gospel is the good news of the glory of Christ. True, it concerns the One who was crucified and who was buried. But He is no longer on the Cross, no longer in the Tomb. He has risen, has ascended to heaven, and is the glorified Man at God’s right hand.

We do not present Him as the humble Carpenter of Nazareth, the suffering Servant or the Stranger of Galilee. Neither do we present Him as the effeminate do-gooder of modern religious art.

We preach the Lord of life and glory. He is the One whom God has highly exalted and given a Name which is above every name. At His Name every knee shall bow and every tongue confess Him Lord to the glory of God the Father. He is crowned with glory and honor, a Prince and a Savior.

Too often we dishonor Him by the message we preach. We exalt man with his talents and create the impression that God would be lucky to have such a man to serve Him. We make it sound as if man were doing a colossal favor to the Lord by trusting Him. That isn’t the Gospel which the Apostles preached. They said, in effect, “You are the guilty murderers of the Lord Jesus Christ. You took Him and with wicked hands nailed Him to the tree. But God raised Him from the dead and glorified Him at His own right hand in heaven. He is there today, in a glorified body of flesh and bones. His nail-scarred hand holds the sceptre of universal dominion. He is coming back again to judge the world in righteousness. And you’d better REPENT and turn to Him in FAITH. There is no other way of salvation. There is no other name under heaven, given among men, whereby we must be saved.”

O, for a fresh vision of the Man in the glory! And for a tongue to tell forth the myriad glories that crown His brow! Surely then, as at Pentecost, sinners would tremble before Him and cry out, “Men and brethren, what shall we do?”

பெப்ரவரி 1

கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி (2.கொரி.4:4)

கிறிஸ்துவின் மகிமையான நற்செய்தி

அருட்செய்தி கிறிஸ்துவின் மகிமையான நற்செய்தி என்பதை நாம் ஒருக்காலும் மறக்கலாகாது. மரத்தினில் ஆணிகளால் அடிக்கப்பட்டு, அடக்கம் செய்யப்பட்ட ஒருவரைப்பற்றிய செய்தியாகவே அது இருக்கிறது என்பது உண்மைதான். எனினும் அவர் இப்பொழுது மரத்தில் தொங்கவில்லை. கல்லறையிலும் தூங்கவில்லை. உயிர்த்தெழுந்த நாயகர் பரலோகிற்கு ஏறிச்சென்று, தேவனுடைய வலது புறத்தில் மகிமைநிறை மனிதராக வீற்றிருக்கிறார்.

நாசரேத்து ஊரைச் சேர்ந்த ஏழ்மைமிகு தச்சராகவோ, பாடுகளைத் தாங்கி நிற்கும் அடிமையாகவோ, கலிலேயா நாட்டின் அந்நியராகவோ அவரை நாம் அருட்செய்தியில் அறிமுகப்படுத்துவதில்லை. தற்காலச் சமயக்கலை அவரை நன்மை செய்யும் மிருதுவான தன்மையுடையவராகக் காட்டுகிறது. நாமோ அவரை அவ்வாறு அறிமுகப்படுத்துவதில்லை.

நமது அருட்செய்தியின் நாயகர் உயிருள்ளவர், மகிமை நிறைந்தவர். தேவன் அவருக்கு எல்லாப் பெயர்களுக்கும் மேலான திருப்பெயரைத் தந்தருளி, எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தியிருக்கிறார். மகிமையினாலும், கனத்தினாலும் முடிசூட்டப்பட்ட அவர், பிரபுவாகவும் இரட்சகராகவும் இருக்கிறார்.

என்றாலும் அவ்வப்போது நமது பிரசங்கங்களினாலே நமது அண்ணலுக்கு அவப்பெயரைக் கொண்டுவருகிறோம். இப்பேர்ப்பட்ட ஊழியங்களைப் பெற்றது கர்த்தருடைய பாக்கியம் என்று கருதத்தக்கதாக அருட்செய்திப் பணியாளர்களின் திறமை உயர்த்திப் பேசப்படுகிறது. கிறிஸ்துவினிடத்தில் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையினாலே, அவருக்கு ஏதோ நன்மை செய்தவிட்டதாகக் காண்பித்துக்கொள்கிறோம். ஆயின், முதல் நூற்றாண்டு திருத்தூதுவர்கள் பறைசாற்றிய நற்செய்தி அதுவன்று. அவர்கள் அறிவித்த செய்தி யாதெனில், „கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைக் கொலைசெய்த குற்றவாளிகள் நீங்களே! கொடுமை நிறைந்த கரங்களால் மரத்தினில் அவரை அறைந்தீர்கள். ஆனால், தேவன் அவரை இறந்தோரினின்று உயிருடன் எழுப்பி, வானுலகில் தமது வலப்பறத்தில் அமரச்செய்து, மகிமைப்படுத்தினானர். தசையும், எலும்பும் கொண்ட மகிமையுடைய சரீரத்துடன் இன்றைக்கு அவர் அங்கே வீற்றிருக்கிறார். ஆணிகளால் அறையுண்ட அவர் கரத்தில், அகில உலகின் ஆளுகையின் செங்கொல் உள்ளது. நீதியுடன் நியாயந்தீர்க்க அவரே இப்புவிக்கு மீண்டும் வரவிருக்கிறார். நீங்கள் மனந்திரும்பி விசுவாசத்துடன் அவரிடம் திரும்புவது நன்று. இரட்சிப்பு அடைவதற்கு வேறு வழியேதுமில்லை. நாம் இரட்சிக்கப்படுவதற்கு வானத்தின் கீழெங்கும் மனிதர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறோரு நாமம் கட்டளையிடப்படவில்லை“ என்பதேயாகும்.

மகிமை நிறைந்த மனிதனாகப் புதியதொரு காட்சியில் கிறிஸ்துவை நாம் எடுத்துக் காட்டுவோம். எண்ணிக்கையில் அடங்கா புகழ்ச்சிகளை, அவருடைய நெற்றியில் கிரீடங்களாகச் சூட்டுவோம். அவ்வாறு சொல்லப்படும் அருட்செய்தி, „சகோதரரே நாங்கள் என்ன செய்யவேண்டும்“ என்று கேட்கும்படி மக்களைக் கதறச் செய்யும். பெந்தேகொஸ்தே நாளில் நடந்தது போன்று பாவிகள் மனந்திரும்புவார்கள்.

1. Februar

»… das Evangelium der Herrlichkeit des Christus.«   2. Korinther 4,4

Wir sollten niemals vergessen, dass das Evangelium die frohe Botschaft von der Herrlichkeit Christi ist. Natürlich hat es Den zum Inhalt, der gekreuzigt und begraben wurde. Aber Er ist jetzt nicht mehr am Kreuz, Er ist nicht mehr im Grab. Er ist auferstanden, ist aufgefahren in den Himmel und ist jetzt der verherrlichte Mensch zur Rechten Gottes.

Wir stellen Ihn den Menschen nicht als den einfachen Zimmermann aus Nazareth vor, nicht als den leidenden Gottesknecht oder den Unbekannten aus Galiläa. Erst recht präsentieren wir Ihn nicht als den verweichlichten Humanitätsapostel der modernen religiösen Kunst.

Wir predigen den Herrn des Lebens und der Herrlichkeit. Er ist Derjenige, den Gott hoch erhoben und Ihm einen Namen gegeben hat, der über jeden Namen ist. Vor Seinem Namen wird jedes Knie sich beugen, und jede Zunge wird bekennen, dass Er Herr ist, zur Verherrlichung Gottes, des Vaters. Er ist mit Herrlichkeit und Ehre gekrönt, ein Fürst und ein Erretter.

Allzu oft verunehren wir Ihn durch die Botschaft, die wir predigen. Wir verherrlichen den Menschen mit seinen Talenten und erwecken den Eindruck, dass Gott eigentlich froh sein müsste, dass ein solcher Mensch Ihm dient. Wir vermitteln die Vorstellung, als ob der Mensch Gott kolossales Wohlwollen bewiese, wenn er Ihm vertraut. Das ist aber nicht das Evangelium, das die Apostel predigten. Sie sagten praktisch: »Ihr seid des Mordes des Herrn Jesus Christus schuldig. Ihr habt Ihn genommen und mit gesetzlosen Händen ans Kreuz genagelt. Aber Gott hat Ihn von den Toten auferweckt und Ihn zu Seiner Rechten im Himmel verherrlicht. Dort ist Er jetzt in einem verherrlichten Leib aus Fleisch und Gebein. In Seiner vom Mal der Nägel gezeichneten Hand hält Er das Zepter des ganzen Universums. Er wird wiederkommen und den Erdkreis in Gerechtigkeit richten. Deshalb müsst ihr Buße tun und euch im Glauben an Ihn wenden. Es gibt keine andere Möglichkeit der Errettung. ›Denn auch kein anderer Name ist unter dem Himmel, der unter den
Menschen gegeben ist, in welchem wir errettet werden müssen.‹«

O dass wir doch einen neuen Blick für den verherrlichten Sohn des Menschen bekommen! Und eine Zunge, die die Myriaden von Herrlichkeiten verkündigt, die Seine Stirn krönen! Gewiss würden dann, wie einst zu Pfingsten, Sünder wieder vor Ihm erzittern und ausrufen: »Was sollen wir tun, Brüder?«