December

நொருங்குண்ட உள்ளம்

December 27

“My body, which is broken for you.” (1 Cor. 11:24)

Amy Carmichael lists four broken things in the Bible and the results achieved by them.

Broken pitchers (Judges 7:1849)—and the light shone out.

Broken flask (Mark 14:3)—and the ointment was poured forth.

Broken bread (Matt. 14:19)—and the hungry were fed.

A broken Body (1 Cor. 11:24)—and the world was redeemed.

Now it is our privilege to add a fifth to the list – a broken will, and the result will be a life flooded with peace and fulfillment.

Many who have been to the Cross for salvation have never been there for the breaking of their will. They may have a gentle, mild disposition; they may never speak above a whisper; they may have an outward appearance of spirituality; yet they may have a will of iron that keeps them from God’s best in life.

It sometimes happens with young people who are in love and are contemplating marriage. Parents and friends with mature, wise judgment can see that it will never work. Yet the headstrong couple rejects any counsel that they do not want to hear. The same intractable wills that led them to the marriage altar soon lead them to the divorce court.

We’ve seen it with Christians who are determined to go into a certain business when they clearly have no experience or the necessary know-how. Against the advice of knowledgeable associates, they sink their own money and often money borrowed from loving friends. The inevitable happens. The business fails, and the creditors move in to pick up the pieces.

It is not uncommon to see the shattering effects of an unbroken will in Christian service. It takes a man and his family to the mission field, only to be repatriated within a year at great cost to the sending church. It drains funds from gullible Christians to finance a project that was man’s idea, not God’s—a project that proves to be counterproductive. It creates strife and unhappiness because one person refuses to work cooperatively with others; he must have his own way.

We all need to be broken, to take all our obstinacy, all our stubbornness, all our self-will and leave them at the foot of the Cross. That will of iron must be laid upon the altar of sacrifice. We must all say with Amy Carmichael:

Thou wast broken, O my Lord, for me,
Let me be broken, Lord, for love of Thee.

டிசம்பர் 27

இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது. 1.கொரிந்தியர் 11:24

நொருங்குண்ட உள்ளம்

திருமறையில் காணும் நொறுங்கிய பொருட்களைப் பட்டியலிட்டுக் காட்டி, ஏமி கார்மிக்கேல் அம்மையார் அவற்றின் விளைபயன்களையும் எடுத்தியம்பியுள்ளார்.

உடைந்த பானைகள் (நியா.7:18,19) – வெளிச்சம் வெளிப்பட்டது.

உடைந்த வெள்ளைக்கல் பரணி (மாற்.14:3) – நளதைலம் ஊற்றப்பட்டது.

பிட்கப்பட்ட அப்பம் (மத்.14:19) – பசியுற்றோர் உண்டுகளித்தனர்.

பிட்கப்பட்ட சரீரம் (1.கொரி.11:24) – உலகோர் மீட்படைந்தனர்.

இந்தப் பட்டியலோடு இன்னொன்றையும் கூட்டி உரைப்பது நாம் பெற்ற சிறப்பாகும். நொறுக்கிய சித்தம், மனஅமைதியும் நிறைவும் ஒருவருடைய வாழ்வில் நொறுங்கிய சித்தத்தின் பயனாக வெள்ளமென நிறைந்துவரும்.

இரட்சிப்பிற்காகச் சிலுவையண்டையில் வந்தவர்களில் பலர் தங்கள் சித்தம் நொறுங்காத காரணத்தினால், இரட்சிப்பைக் கண்டடையாது போய்விட்டனர். அவர்கள் மேன்மையானவர்களும் கனிவுள்ளம் கொண்டவர்களாவும் இருக்கலாம். மெல்லிய குரலில் பேசுகிறவர்களாயும் இருக்கலாம். வெளித்தோற்றத்தில் ஆவிக்குரியவராய் காணப்படுவர், ஆயினும் அவர்கள் இரும்புபோன்ற வலுபெற்ற சித்தம் உடையவராய் இருப்பர். அது அன்னாரை தேவன் தரும் மிகச்சிறந்த வாழ்னின்று புறத்தே இருக்கச் செய்துவிடும்.

ஒரு பெண்ணைக் காதலிக்கிறவனாகவே அல்லது மணமுடிக்க ஏற்பாடு செய்கிறவனாகவோ இருக்கிற இளைஞனிடத்தில் இவ்வாறாகச் சித்தம் நொறுங்காத நிலை காணப்படுகிறது. பெற்றோர்களும் வளர்ச்சியடைந்த நண்பர்களும் ஞானத்தோடு கொடுக்கிற அறிவுரைகள் பயன் தருகிறதில்லை. தரப்படுகிற எந்த ஆலோசனையையும் புறக்கணித்துத் தள்ளிவிட்டுத் திருமணம் செய்து கொள்ளும் அந்தத் தலைக்கனம் உடைய தம்பதிகள், தங்களது உடைக்க இயலாத சித்தத்தின் கடினத்தினாலே பின்னர் வெகுவிரைவில் விவாகரத்து நீதிமன்றத்தை நோக்கிச் செல்கின்றனர்.

சில கிறிஸ்தவர்களும் இவ்வகையான நிலைமைக்கு ஆளாகின்றனர். அனுபவமற்ற வணிகத்தையோ, நுட்பமறியாத தொழிலையோ அவர்கள் செய்யத் தீர்மானிக்கின்றனர். ஞானமுள்ள கூட்டாளிகள் தரும் அறிவுரைகளை ஏற்க மறுக்கின்றனர். தங்களுடைய செல்வத்தையும், நண்பர்களிடம் பெற்ற கடன் பணத்தையும் தொழிலில் முடக்கிவிடுகின்றனர். பின்னர் தவிர்க்க முடியாதவை நடந்து விடுகின்றன. தொழிலில் வீழ்ச்சி ஏற்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் எஞ்சியதை எடுத்துக் கொள்ள சூழ்ந்து கொள்கின்றனர்.

கிறிஸ்தவ ஊழியத்திலும்கூட சித்தம் நொறுங்காத காரணத்தினால் விளைவுகள் சிதறுண்டுபோவது பரவலாக நடக்கக்கூடியதே. ஒரு மனிதன் தன் குடும்பத்தோடு ஊழியத்தின் பொருட்டு வேறிடம் செல்கின்றான். ஆனால், ஓராண்டிற்குள்ளாக அவர்களைப் பெரும் செலவு செய்து தங்களுடைய நாட்டிற்குத் திரும்பக் கொண்டுவர வேண்டிய கட்டாயத்திற்குள்ளாக அவர்கள் அனுப்பிய சபை அகப்பட்டுக் கொள்கிறது. தேவ சித்தமின்றி மனிதனுடைய சித்தத்தினால் தீட்டப்படுகிற திட்டங்களில் எளிதில் ஏமாறக்கூடிய கிறிஸ்தவர்களின் பணம் பறிபோகிறது. ஒருவர் மற்றவர்களுடன் சேர்ந்து பணிபுரிய மறுப்பதால் சச்சரவும் மகிழ்ச்சியின்மையும் ஏற்படுகின்றன. அவரோ தனது சொந்தவழியில் செல்கிறார்.

நாம் அனைவரும் நொறுக்கப்பட வேண்டியவர்களாக இருக்கிறோம். நம்முடைய இணங்காத தன்மையையும், வீண் பிடிவாதத்தையையும், சொந்த சித்தத்தையும், சிலுவையின் பாதத்தண்டையில் நாம் விட்டொழிக்க வேண்டும். பலிபீடத்தின் மீது நமது இரும்புபோன்ற சித்தத்தைப் பலியாக வைக்கவேண்டும்.

ஏமி கார்மிக்கேல் அம்மையாருடன் சேர்ந்து நாமும், ‘என் கர்த்தரே, எனக்காக நொறுங்குண்டீர், உம் மீது கொண்ட அன்பினாலே நான் நொறுங்கச் சித்தம் கொண்டேன்” என்போமாக.

27. Dezember

»Dies ist mein Leib, der für euch ist.« 1. Korinther 11,24

Amy Carmichael führt vier Dinge an, die in der Bibel zerbrochen werden und eine ganz bestimmte Wirkung haben:

Zerbrochene Krüge (siehe Richter 7,19.20) – und das Licht darin schien hell auf.

Ein zerbrochenes Fläschchen (Markus 14,3) – und das Salböl wurde ausgegossen.

Fünf gebrochene Brote (Matthäus 14,19) – und die Hungrigen wurden satt.

Ein gebrochener Leib (1. Korinther 11,24) – und die Welt wurde erlöst.

Nun haben wir das Vorrecht, noch ein fünftes dieser Reihe hinzuzufügen, nämlich unseren zerbrochenen Willen, und das Ergebnis wird ein Leben sein, das von Frieden und Erfüllung durchflutet ist.

Viele, die zum Kreuz gekommen sind, um dort ihr Heil zu suchen, waren noch nie da, um auch ihren Willen zerbrechen zu lassen. Sie mögen vielleicht eine sanfte, milde Art haben; sie reden möglicherweise immer nur im Flüsterton; sie machen nach außen hin vielleicht einen sehr frommen Eindruck; und doch können sie einen eisernen Willen haben, der sie von dem Besten, was Gott uns im Leben schenken kann, noch trennt.

Manchmal geschieht etwas Ähnliches mit jungen Leuten, die ineinander verliebt sind und unbedingt heiraten wollen. Eltern und Freunde, die aus ihrer Reife und Weisheit heraus urteilen, können schon absehen, dass das nie gut gehen kann. Doch das halsstarrige junge Paar lehnt jeden Ratschlag ab, den es nicht hören will. Und derselbe unbeugsame Wille, der sie erst zum Traualtar geführt hat, bringt sie schon bald vor den Scheidungsrichter.

Wir haben das auch schon bei Christen beobachtet, die entschlossen waren, in einen bestimmten Geschäftszweig einzusteigen, obwohl sie offenbar keine Erfahrungen darin und auch nicht das nötige Wissen dazu hatten. Gegen den Rat von verständigen Bekannten stecken sie dann ihr eigenes Geld und oft auch noch das, was sie von wohlmeinenden Freunden geliehen haben, in diese Sache. Und das Unvermeidliche passiert: Das Geschäft schlägt fehl, und die Gläubiger schreiten ein, um wenigstens die Scherben noch aufzusammeln.

Es kommt auch vor, dass die verheerenden Auswirkungen eines ungebrochenen Willens im christlichen Dienst sichtbar werden. So reist ein Mann mit seiner Familie in ein Missionsgebiet aus, nur um schon ein Jahr später wieder zurückzukehren, was große Kosten für die aussendende Gemeinde verursacht. Da werden erhebliche Geldmittel gutgläubiger Christen dazu verwendet, ein Projekt zu finanzieren, das die Erfindung von Menschen war, aber nicht die Idee Gottes, ein Plan, der sich als völlig unergiebig herausstellt. Es verursacht Zank und Verdruss, weil ein Mensch sich weigert, mit anderen gedeihlich zusammenzuarbeiten; er will unbedingt seinen eigenen Willen durchsetzen. Wir alle haben es nötig, dass wir zerbrochen werden, dass wir
all unsere Hartnäckigkeit, unseren Starrsinn, unseren Eigenwillen nehmen und ihn am Fuß des Kreuzes niederlegen. Dieser eiserne Wille muss auf dem Altar geopfert
werden. Wir müssen alle mit Amy Carmichael sagen:

Du wurdest, o mein großer Herr, für mich zerbrochen, Lass mich durch deine Liebe auch zerbrochen sein.