December

இறைமகனின் பிறப்பு

December 25

“And without controversy great is the mystery of godliness: God was manifest in the flesh.” (1 Tim. 3:16)

The mystery is great, not because it is very mysterious but because it is so astounding. The mystery is the amazing truth that God was manifest in the flesh.

It means, for instance, that the Eternal One was born into a world of time. He, the Timeless One, lived in a sphere of calendars and timepieces.

The One who is omnipresent, existing in all places at one and the same time, confined Himself to a single place—like Bethlehem, or Nazareth, Capernaum or Jerusalem.

It is wonderful to think that the Great God, who fills heaven and earth, should compress Himself into a human body. As men looked at Him, they could say accurately, “In Him dwells all the fulness of the godhead bodily.”

The mystery reminds us that the Creator visited this insignificant planet called Earth. It is only a speck of cosmic dust, relative to the rest of the universe, yet He bypassed all the rest to come here. From the palace of heaven to a cattle shed, a stable, a manger!

The omnipotent One became a helpless Baby. It is no exaggeration to say that He whom Mary held in her arms held Mary, for He is the Sustainer as well as the Maker.

The omniscient One is the fountain of all wisdom and knowledge, and yet we read of Him that, as a Child, He increased in wisdom and knowledge. It is almost incredible to think of the Owner of all arriving unwelcome on His own premises. There was no room for Him in the inn. The world knew Him not. His own received Him not.

The Master came into the world as a Servant. The Lord of glory veiled that glory in a body of flesh. The Lord of life came into the world to die. The Holy One came to a jungle of sin. The One who is infinitely high became intimately nigh. The Object of the Father’s delight and of angelic worship hungered and thirsted, was weary at Jacob’s well, slept in a boat on Galilee, wandered “as a homeless stranger in the world His hands had made.” He came from luxury to poverty, with no place to lay His head. He worked as a carpenter. Never slept on a mattress. Never had hot and cold running water, or the other conveniences that we take for granted.

And it was all for you and for me!
O, come, let us adore Him!

டிசம்பர் 25

அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடி மகா மேன்மையுள்ளது. தேவன் மாமிசத்திலே வெளிப்பட்டார். 1.தீமோ.3:16.

இறைமகனின் பிறப்பு

இந்த இரகசியம் மகா மேன்மையுள்ளது. இது புரிந்து கொள்வதற்கு இயலாதது என்ற காரணத்தால் அன்று, இது திகைப்படையச் செய்யக்கூடிய ஒன்றாக இருப்பதே அதன் காரணமாகும். தேவன் மாமிசத்திலே வெளிப்பட்டார் என்பதே இந்த இரகசியம்.

எடுத்துக்காட்டாக, நித்தியமானவர் காலவரம்பிற்கு உட்பட்ட உலகில் பிறந்தார். காலவரம்பிற்கு அப்பாற்பட்டவராகிய அவர் நாட்களுக்கும் மணிகளுக்கும் உட்பட்ட எல்லைக்குள் வாழ்ந்தார்.

சர்வ வியாபியாகிய அவர், அதாவது ஓரே நேரத்தில் எல்லா இடங்களிலும் இருக்கிறவர் தம்மை ஓர் இடத்திற்குள்ளாக அடக்கிக்கொண்டார். பெத்லகேம், நாசரேத்து, கப்பர்நகூம், எருசலேம், என்னும் இடங்களில் அவர் காணப்பட்டார்.

வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவராகிய மகாதேவன், ஒரு மனித சரீரத்திற்குள்ளாகத் தம்மை சுருக்கிக் கொண்டதை எண்ணிப் பார்ப்போமானால் அது வியக்கத்தக்கதாயிருக்கிறது. அவரை நோக்கிப் பார்த்த மனிதர்கள், ‘தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது” என்று மிகச் சரியாகக் கூறினார்.

இந்த அற்பமான பூமி என்னும் கோளுக்கு அவர் வருகை புரிந்ததை இந்த இரகசியம் நமக்கு நினைவூட்டுகிறது. பிரபஞ்சத்தில் இந்த பூமியானது ஒரு தூசிக்குச் சமமாகும். ஆனால் மற்ற விண்கோள்கள் அனைத்தையும் விடுத்து இப்புவிக்கு அவர் வருகை புரிந்தார். விண்ணுலக அரண்மனையிலிருந்து மாட்டுக் கொட்டிலுக்கு, தொழுவத்திற்கு, தீவனம் வைக்கும் முன்னணைக்கு அவர் வருகை புரிந்தார்.!

சர்வ வல்லமையுள்ளவர் தாமே உதவியற்ற குழந்தையாகக் காணப்பட்டார். மரியாள் தனது கரங்களில் ஏந்திய குழந்தைதாமே, மரியாளைத் தாங்கினவரும் உருவாக்கினவுமானவர் என்று கூறுவோமானால் அது மிகையாகாது.

சர்வஞானியாகிய அவர், எல்லா ஞானத்திற்கும் அறிவிற்கும் ஊற்றாக விளங்குகிறவர் ஆவார். ஆயினும் அவரைக் குறித்து, குழந்தையாக இருந்த அவர், ‘ஞானத்திலும் வளர்த்தியிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.” என்று வாசிக்கிறோம். எல்லாவற்றிற்கும் உரிமையாளராகிய அவர், அவருக்குச் சொந்தமானதிலே வந்தபோது வரவேற்கப்படாதது நம்புதற்கரியதாயிருக்கிறது. சத்திரத்தில் அவருக்கு அறை கிடைக்கவில்லை. அவரை உலகம் அறியவில்லை. அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

எல்லாருக்கும் எஜமானர் இவ்வுலகிற்கு அடிமையாக வந்தார். மகிமையின் கர்த்தர் தனது மகிமையைத் தமது மாமிச சரீரத்தில் மறைத்துக்கொண்டார். ஐPவனின் கர்த்தர் இறப்பதற்காக இவ்வுலகிற்கு வந்தார். பரிசுத்தர் பாவமென்னும் காட்டிற்குள்ளாக வந்தார். எல்லையிலடங்கா உயர்ந்தவர் உற்ற நேயராக அருகில் இருக்கிறவராக காணப்பட்டார். திருத்தந்தைக்கு இன்பமானவர். தேவதூதர்களின் ஆராதனைக்குப் பாத்திரமானவர். பசியுள்ளவராகவும், தாகமுடையவராகவும் காணப்பட்டார். யாக்கோபின் கிணற்றண்டைக்கு வந்தபோது களைப்படைந்திருந்தார். கலிலேயாவில் படகிலே படுத்துறங்கினார். தம்முடைய கரங்களால் உண்டாக்கின இவ்வுலகில் வீடற்ற அன்னியராகத் திரிந்தார். தமது இன்பப்பெருவாழ்வினின்று ஏழ்மையை ஏற்றுக்கொண்டார். அவர் தலை சாய்க்க இடமில்லாதிருந்தது. மெத்தையில் அவர் ஒருபோதும் படுக்கவில்லை. வெந்நீரும் தண்ணீரும் கிடைக்கிற குழாயின் வசதியை அவர் பெறவில்லை. நமக்கே உரியது என்று நாம் கருதுகிற எந்த வசதியையும் அவர் அனுபவிக்கவில்லை.

இவையாவும் உனக்கும் எனக்குமாய் ஏற்றிட்டார்.
சபை யாவும் ஒன்றுகூடித் தொழுதிடுவோம், வந்திடுவீர்.

25. Dezember

»Und anerkannt groß ist das Geheimnis der Gottseligkeit: Der geoffenbart worden ist im Fleisch …« 1. Timotheus 3,16

Das Geheimnis ist groß, nicht weil es uns so geheimnisvoll bleibt, sondern weil es so verblüffend ist. Das Geheimnis ist die erstaunliche Erkenntnis, dass Gott zu einem Menschen aus Fleisch und Blut geworden ist.

Das heißt zum Beispiel auch, dass der Ewige in eine Welt hineingeboren wurde, die von der Zeit bestimmt ist. Er, der Zeitlose, lebte im Bereich von Kalendern und Uhren.

Der Eine, der überall gegenwärtig ist, der an allen Orten gleichzeitig ist, beschränkte sich nun auf einen einzigen Ort wie Bethlehem oder Nazareth, Kapernaum oder Jerusalem.

Es ist wunderbar, sich vorzustellen, dass der große Gott, der Himmel und Erde ausfüllt, sich selbst auf einen menschlichen Körper beschränkte. Wenn die Menschen Ihn ansahen, dann konnten sie mit Recht sagen: »In Ihm wohnt die Fülle der Gottheit leibhaftig.«

Das Geheimnis erinnert uns daran, dass der Schöpfer diesen unbedeutenden Planeten mit dem Namen Erde besucht hat. Sie ist nur ein Körnchen Staub im Kosmos im Vergleich zum Rest des Universums, und doch ließ Gott den Rest links liegen und kam zu uns. Er kam aus dem Palast des Himmels in einen Stall hinein, in einen Schuppen, in eine Futterkrippe!

Der allmächtige Gott wurde ein hilfloses Kind. Es ist keine Übertreibung, wenn man sagt, dass der, den Maria in ihren Armen hielt, eigentlich sie trug, denn Er ist der Erhalter und auch der Schöpfer aller Welt.

Der allwissende Gott ist die Quelle aller Weisheit und allen Wissens, und doch lesen wir von ihm, dass Er als Kind zunahm an Weisheit und Verstand. Es ist fast undenkbar, dass der, dem alles gehört, in Sein eigenes Besitztum kam und nicht willkommen geheißen wurde. Es war kein Platz mehr da für Ihn in der Herberge. Die Welt erkannte Ihn nicht. Die Seinen nahmen ihn nicht auf.

Der Herr kam in die Welt als ihr Diener. Der Herr der Herrlichkeit nahm einen ganz gewöhnlichen menschlichen Leib an. Der Herr des Lebens kam in die Welt, um hier zu sterben. Der Heilige kam in einen wahren Dschungel der Sünde. Der Eine, der unendlich hoch ist, kam uns unendlich nahe. Der, der die ganze Freude Seines Vaters war und den die Engel anbeteten, musste Hunger und Durst leiden, Er war müde, als Er sich an den Jakobsbrunnen setzte, Er schlief in einem Boot auf dem See Genezareth, Er wanderte umher als ein heimatloser Fremder in der Welt, die Er doch
mit den eigenen Händen geschaffen hatte. Er kam aus dem Reichtum in die bitterste Armut, Er hatte noch nicht einmal einen Platz, wo Er sein Haupt hinlegen konnte. Er arbeitete mit Seinen Händen. Er schlief sein Leben lang auf keiner Matratze. Er hatte niemals fließendes kaltes und warmes Wasser zur Verfügung oder die anderen Annehmlichkeiten, die wir für selbstverständlich halten.

Und alles das für dich und mich! O lasset uns anbeten, o lasset uns anbeten den König!