December

பாவத்தில் விழுதலும் பாவத்தில் வாழ்தலும்

December 23

“Whosoever abideih in him sinneth not: whosoever sinneth hath not seen him, neither known him.” (1 John 3:6)

Yesterday we considered a passage that often proves distressing to sincere Christians. Today we will look at three verses in John’s first epistle that also disturb believers who are all too aware of their sinfulness. There is the verse already quoted at the top of the page. Then there is 1 John 3:9: “Whosoever is born of God doth not commit sin; for his seed remaineth in him: and he cannot sin, because he is born of God.” And 1 John 5:18: “We know that whosoever is born of God sinneth not; but he that is begotten of God keepeth himself, and that wicked one toucheth him not.” Taken as is, these verses might very well make any one of us question whether he is a true believer.

And yet other verses in this same letter recognize that the believer does sin, for example 1:8-10; 2:1b.

The problem is largely one of translation. In the original language of the New Testament, there is a difference between committing occasional acts of sin and practicing sin as a way of life. The Christian does commit acts of sin, but sin is not what characterizes his life. He has been freed from sin as his master.

The New International Version shows that the verbs in these verses are in what we might call the present continuous tense, as follows: “No one who lives in him keeps on sinning. No one who continues to sin has either seen him or known him.”(3:6). “No one who is born of God will continue to sin, because God’s seed remains in him; he cannot go on sinning, because he has been born of God” (3:9). “We know that anyone born of God does not continue to sin; the one who was born of God keeps him safe, and the evil one does not touch him” (5:18).

Any Christian who says he does not sin has imperfect views of what sin is. He apparently doesn’t realize that anything that falls short of God’s perfect standard is sin. The fact is that we do commit acts of sin every day in thought, word and deed.

But John makes a distinction between what is exceptional and what is habitual. With the true saint, sin is alien and righteousness is characteristic.

When we see this, there is no need to torture ourselves with these verses that make us doubt our salvation. The simple facts are these: God’s will is that we should not sin. Unfortunately we do sin. But sin is no longer the dominating power in our lives. We no longer practice sin as we did before we were saved. If we do sin, we find forgiveness through confessing and forsaking our sin.

டிசம்பர் 23

அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை. பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை. அவரை அறியவுமில்லை. 1.யோவான்.3:6

பாவத்தில் விழுதலும் பாவத்தில் வாழ்தலும்

மெய்யார்வமிக்க கிறிஸ்தவர்களுக்குக் கவலையளிக்கிற வேதபகுதியை நேற்று நாம் சந்தித்தோம். இன்றைக்குத் தங்களுடைய பாவ நிலையைக் குறித்து அறிந்து அதையே சிந்தித்துக் கொண்டிருக்கும் கிறிஸ்தவர்களுக்கு இடையூறு அளிக்கும் மேலும் மூன்று வசனங்களைப் காண்போம். அவை மூன்றும் யோவான் எழுதிய முதலாம் மடலில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஒன்று மேலே எழுதப்பட்டுள்ளது. மற்றவை 1.யோவான் 3:9 ‘தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது. அவன் தேவனால் பிறந்தபடியால் பாவஞ்செய்ய மாட்டான்.” 1.யோவான் 5:18. ‘தேவனால் பிறந்தபடியால் பாவஞ் செய்யானென்று அறிந்திருக்கிறோம். தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான். பொல்லாங்கன் அவனைத் தொடான்.” சொல்லப்பட்டிருக்கிற வண்ணமாக இந்த வசனங்களை எடுத்துக்கொள்வோமெனில், நம்மில் ஒவ்வொருவரும் விசுவாசி தானா என்று ஐயுறக்கூடும்.

என்றாலும், இதே மடலில் வேறு சில வசனங்கள் விசுவாசிகள் பாவஞ்செய்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கின்றன, எடுத்துக்காட்டாக 1:8,-10, 2:1 ஆகிய வசனங்கள்.

இவை பெரும்பாலும் மொழிபெயர்ப்பில் காணப்படுகிற பிரச்சனையாகும். புதிய ஏற்பாட்டின் மூலமொழியில் பாவச்செயல்களை எப்போதாவது செய்து விடுகிறதற்கும், பாவத்தை பழக்கமாகக் கொண்டிருக்கும் வாழ்க்கைக்கும் இடையே உள்ள வேறுபாடு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. கிறிஸ்தவர்கள் பாவத்தைச் செய்துவிடுகிறார்கள். ஆனால் பாவம் அவர்களுடைய வாழ்க்கையின் இயல்பாக இருப்பதில்லை. அவர்களுடைய வாழ்வில் பாவமே எஜமானன் என்னும் நிலையிலிருந்து விசுவாசிகள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

N I V என்னும் பெருடைய மொழிபெயர்ப்பில் இங்கு கையாளப்பட்ட வினைச்சொற்கள் தொடர்நிகழ்காலத்தைக் காட்டுபவையாக இருக்கின்றன. அந்த மொழிபெயர்ப்பின் தமிழாக்கத்தைக் காணவிளைவோம். ‘அவருக்குள்ளாக வாழ்கிற எவனும் தொடர்ந்து பாவம் செய்துகொண்டிருப்பதில்லை. பாவத்தை தொடர்ந்து செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை., அவரை அறியவுமில்லை” (3:6). தேவனால் பிறந்த எவனும் பாவத்தைத் தொடர்ந்து செய்யமாட்டான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது. அவன் தேவனால் பிறந்தபடியால் தொடர்ந்து பாவத்தைச் செய்து கொண்டிருக்கமாட்டான்.” (3:9). தேவனால் பிறந்த எவனும் தொடர்ந்து பாவத்தைச் செய்துகொண்டிருக்க மாட்டான் என்று அறிந்திருக்கிறோம். தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான். பொல்லாங்கன் அவனைத் தொடான் (1.யோவான் 518).

தான் பாவம் செய்கிறதில்லை என்று சொல்கிற எந்த விசுவாசியும், பாவம் என்ன என்பதைக் குறித்த சரியான அறிவற்றவனாக இருக்கிறான். தேவனுடைய நிறைவான அளவுகோலுக்குக் குறைவான எந்தச் செயலும் பாவமே என்பதை அவன் அறியாதிருக்கிறான். நாம் ஒவ்வொருநாளும் நம்முடைய எண்ணத்திலும், பேச்சிலும், செயலிலும், பாவச்செயல்களைச் செய்து விடுகிறவர்களாயிருக்கிறோம்.

ஆனால், எப்போதாவது செய்கிற செயலுக்கும், ஒரே செயலைத் தனது பழக்கமாகக் கொண்டிருப்பதற்கும் உள்ள வேறுபாட்டை யோவான் இங்கே விளக்குகிறார். பாவம் மெய்யான விசுவாசியின் விருப்பத்திற்கு ஒவ்வாததாகும். ஆனால் அவனிடத்தில் அவனுடைய குணநலனான நீதி விளங்குகிறது.

நம்முடைய இரட்சிப்பைக் குறித்து ஐயம் ஏற்படச் செய்யும் இவ்வசனங்களால் நாம் கலங்க வேண்டியதில்லை. இது பற்றிய எளிய உண்மைகளைக் காண்போம். நாம் பாவம் செய்யக்கூடாது என்பது தேவனுடைய சித்தமாக இருக்கிறது. ஆயின் நாம் பாவம் செய்து விடுகிறது வருத்தத்திற்குரியதாகும். ஆனால் பாவம் நம்முடைய வாழ்க்கையில் நம்மை அடக்கியாளக் கூடிய நிலையில் இப்பொழுது இருப்பதில்லை. நாம் இரட்சிக்கப்படுவதற்கு முன்னர் பாவத்தைப் பழக்கமாகக் கொண்டிருந்தது போல இப்பொழுது பழக்கமாகச் செய்வதில்லை. நாம் பாவம் செய்வோமானால், அதை அறிக்கை செய்து விட்டொழித்துப் பாவ மன்னிப்பைப் பெறுகிறவர்களாயிருக்கிறோம்.

23. Dezember

»Jeder, der in ihm bleibt, sündigt nicht; jeder, der sündigt, hat ihn nicht gesehen noch ihn erkannt.« 1. Johannes 3,6

Gestern hatten wir es schon mit einer Bibelstelle zu tun, die sich oft für Christen, die es sehr ehrlich meinen, als notvoll erweist. Heute wollen wir drei Verse aus dem ersten Johannesbrief betrachten, die die Gläubigen ebenfalls beunruhigen, wenn sie sich ihrer Sündigkeit nur allzu bewusst sind. Zu dem oben zitierten Vers kommt noch ein weiterer: »Jeder, der aus Gott geboren ist, tut nicht Sünde, denn sein Same bleibt in ihm; und er kann nicht sündigen, weil er aus Gott geboren ist« (1. Johannes 3,9). Und in 1. Johannes 5,18 heißt es ganz ähnlich: »Wir wissen, dass jeder, der aus Gott geboren ist, nicht sündigt; sondern der aus Gott Geborene bewahrt ihn, und der Böse tastet ihn nicht an.« Wenn man diese Verse isoliert betrachtet, dann veranlassen
sie bestimmt manchen von uns zu der Frage, ob er selbst denn überhaupt ein echter Christ ist.

Und doch heißt es in anderen Versen in demselben Johannesbrief, dass auch der Gläubige sündigt, beispielsweise in 1,8-10 und 2,1b.

Die Schwierigkeiten liegen zum großen Teil in der Übersetzung. Denn in der Ursprache des Neuen Testaments gibt es von den Begriffen her einen Unterschied zwischen dem Begehen von gelegentlichen Sünden und dem Ausüben der Sünde sozusagen als Lebensprogramm. Ein Christ begeht sehr wohl einzelne Sünden, aber die Sünde bestimmt nicht mehr sein ganzes Leben.
Er ist ja befreit worden von der Sünde, unter deren Knechtschaft er bisher stand.

In einer neueren Übersetzung kommt klarer heraus, dass in den genannten Versen ein Beharren in der Sünde gemeint ist, nicht eine gelegentliche sündige Tat: »Wer mit Ihm verbunden bleibt, der hört auf zu sündigen. Wer aber weiterhin sündigt, hat Ihn weder gesehen noch verstanden« (1. Johannes 3,6). »Wer ein Kind Gottes ist, sündigt nicht mehr, weil Gottes Geist in ihm wirkt. Er kann gar nicht weitersündigen, weil Gott sein Vater ist« (1. Johannes 3,9). »Wir wissen, dass ein Kind Gottes nicht sündigt. Gott schützt es, damit der Satan ihm nicht schaden kann« (1. Johannes 5,18).

Jeder Christ, der sagt, dass er nicht sündigt, hat noch nicht voll verstanden, was Sünde eigentlich ist. Er erkennt offensichtlich nicht, dass alles, was Gottes vollkommenen Maßstäben nicht genügt, bereits Sünde ist. Es bleibt eine Tatsache, dass wir jeden Tag sündige Taten begehen in Gedanken, Worten und Werken.

Aber Johannes unterscheidet zwischen dem, was als Ausnahme geschieht, und dem, was gewohnheitsmäßig getan wird. Bei einem wahren Gläubigen ist die Sünde etwas Fremdes und die Gerechtigkeit das eigentlich Kennzeichnende.

Wenn wir das erkannt haben, brauchen wir uns selbst nicht mehr mit diesen Versen zu quälen, die uns womöglich an unserem Heil zweifeln lassen. Die Tatsachen sind die folgenden: Gottes Wille ist es, dass wir nicht sündigen sollen. Doch leider tun wir es immer wieder einmal. Die Sünde ist jedoch nicht mehr die beherrschende Macht in unserem Leben. Wir üben sie nicht mehr so aus, wie wir es vor unserer Erlösung getan haben. Und wenn wir trotzdem noch sündigen, finden wir Vergebung, wenn wir bekennen und uns von unserem Unrecht abwenden.