December

சூழ்நிலைகளை வெறுத்தல்

December 20

“I have learned, in whatever state I am, therewith to be content.” (Phil. 4:11)

We are often told that it isn’t the circumstances of life that are important; it’s how we react to those circumstances that really matters. This is true. Rather than always trying to change our circumstances, we should think more about changing ourselves.

There are several ways in which people respond to adverse happenings. The first is stoically. This means that they are completely impassive, gritting their teeth, and showing no emotion. Their policy is to “cooperate with the inevitable.”

Others respond hysterically. They go to pieces emotionally with loud crying, tears and spectacular physical displays. Some react defeatedly. They give up in abject despondency. In extreme cases, this can end in suicide.

The normal Christian way is to respond submissively. The believer reasons, “This did not happen by accident. God controls everything that comes into my life. He has not made a mistake. He has allowed this in order to bring glory to Himself, blessing to others, and good to me. I can’t see the full outworking of His program, but I will trust Him nevertheless. So I bow to His will, and pray that He will glorify Himself and teach me whatever He wants me to learn.”

There is another way that some choice saints react, that is, super-triumphantly. I dare not count myself among the number, even though I aspire to their company. These are the ones who use adversity as a stepping stone to victory. They transmute the bitter into the sweet and ashes into beauty. They do not let circumstances rule them, rather they make the circumstances serve them. In this sense, they are “more than conquerors.” Let me give a few illustrations.

There was a Christian woman whose life seemed to be filled with disappointment and frustration. Yet her biographer wrote, “She made magnificent bouquets out of the refusals of God.”

Believers in an oriental country had been attacked with stones by an angry mob. When these same believers returned, they built a chapel with the stones that had been hurled at them.

After buying a home, a man found a huge boulder in the middle of the garden. He decided to make a rock garden.

E. Stanley Jones said, “Use your denials and turn them into doors.” Or, as someone else said, “When life gives you lemons, make lemonade.”

I especially like the story of the man who was told by his doctor that he would lose an eye and would have to have a glass eye. His immediate response was, “Be sure to put in one with a twinkle.” That’s what I call living above the circumstances.

டிசம்பர் 20

நான் எந்த நிலையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். பிலிப்பியர் 4:11.

சூழ்நிலைகளை வெறுத்தல்

வாழ்க்கையில் ஏற்படும் சூழ்நிலைகள் இன்றியமையாதவை அல்ல. அந்தச் சூழ்நிலைகளை நாம் எங்ஙனம் எதிர்கொள்கிறோம் என்பதே இன்றியமையாதது என்று அவ்வப்போது நமக்குச் சொல்லப்பட்டுள்ளது. இது உண்மையே. சூழ்நிலைகளை நாம் மாற்றி அமைப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்வதற்கு மாறாக, நம்மை மாற்றிக் கொள்வது எப்படி என்றே நாம் சிந்திக்க வேண்டும்.

மனிதர்கள் தங்களை எதிர்த்துவரும் சூழ்நிலைகளைப் பலவகையில் சந்திக்கின்றனர். விருப்பு வெறுப்பு அற்றபடி நடுநிலை வகிப்பது முதலாவது வகையாகும். அதாவது அவர்கள் அமைதியோடு இருப்பார்கள். பற்களைக் கடிப்பதில்லை. எவ்வித உணர்ச்சியையும் அவர்கள் காட்டுவதில்லை. ‘தவிர்க்க முடியாதவை உண்டாகிறபோது அதற்கு ஓத்துழைப்பு தருவது” அவர்களுடைய கொள்கையாகும்.

சிலர் உணர்ச்சிப் பெருக்கினால் வலிப்பு வந்தவர்களைப்போல நடந்து கொள்கின்றனர். உணர்ச்சியின் மிகுதியால் மிகுந்த சத்தத்தோடு கதறி, அழுது, கைகால்களை உதறி, தங்களது எண்ணத்தை வெளிக்காட்டுகின்றனர். சிலர் தோல்வி மனப்பான்மையோடு அச்சந்தர்ப்பங்களை எதிர்கொள்கின்றனர். மனத்தளர்ச்சியுற்று தாழ்ந்து போகின்றனர். சிலவேளைகளில் சிலருடைய தற்கொலைக்கும் இது காரணமாகிவிடுகிறது.

கீழ்ப்படிதலோடு, எதிர்த்துவரும் சூழ்நிலைகளைச் சந்திப்பதே கிறிஸ்தவ இயல்பாகும். ‘இது தற்செயலாக ஏற்பட்டதன்று. என்னுடைய வாழ்வில் ஏற்படுகிற நிகழ்ச்சிகள் யாவும் தேவனால் கட்டுப்படுத்தப்படுகின்றன. அவர் எந்தத் தவறையும் செய்யவில்லை. தமக்கே மகிமை உண்டாகத்தக்கதாக இதனை அனுமதித்திருக்கிறார். மற்றவர்களுக்கு நற்பேறாகவும் எனக்கு நன்மை பயனாகவும் இது அளிக்கப்பட்டிருக்கிறது. அவருடைய திட்டத்தின் அனைத்து விளைவுகளையும் என்னால் காணமுடியவில்லை. இருந்தபோதிலும் அவரிடத்தில் நான் நம்பிக்கையாயிருக்கிறேன். ஆகவே அவருடைய சித்தத்திற்கு நான் அடிபணிகிறேன். மேலும் அவர் மகிமைப்பட வேண்டுமெனவும், அவர் எனக்கு என்ன சொல்லித்தர விரும்புகின்றார் என்பதையும் அறிந்துகொள்ள வேண்டுமெனவும், நான் மன்றாடுகிறேன்” என்று விசுவாசி அச்சூழ்நிலைக்குக் காரணம் கண்டறிகிறான்.

சில குறிப்பிடத்தக்க பரிசுத்தவான்கள் இவ்வகையான சூழ்நிலைகளை மகத்துவமான வெற்றி ஆதாரத்தோடு எதிர்கொள்கின்றனர். அப்படிப்பட்டவர்களோடு என்னைச் சேர்த்துக்கொள்ள நான் துணியவில்லை. ஆயினும் அப்படிப்பட்டவனாக இருக்க நான் விரும்புகிறேன். பாதகமான சூழ்நிலையை வெற்றிக்குப் படியாகக் பயன்படுத்துகின்றனர். கசப்பை இனிப்பாகவும் சாம்பலை அழகாகவும் மாற்றுகிறவர்கள் அவர்களே. அவர்கள் ஆளுவதற்குப் பணிபுரியும் ஏதுக்களாகச் சூழ்நிலைகளை மாற்றிவிடுவார்கள். இப்பொருளில் சிந்திக்கும்போது அவர்கள் ‘முற்றிலும் வெற்றிபெற்றவர்களாயுள்ளனர்.” நான் சில எடுத்துக்காட்டுக்களைத் தருகிறேன்.

தோல்விகளாலும் ஏமாற்றங்களாலும் நிறைந்த வாழ்க்கையை உடையவராயிருந்த ஒரு பெண்மணியைப் பற்றி வாழ்க்கை வரலாறு எழுதியவர், ‘பயனற்றது என்று தள்ளிவிடப்பட்டதைக் கொண்டு தேவனுக்காக மகத்துவமான மலர்ச் செண்டுகளை உருவாக்கியவர்” என வர்ணித்துள்ளார்.
கிழக்கு நாடுகள் ஒன்றில் கடுஞ்சினம்கொண்ட கூட்டம் விசுவாசிகள்மீது கல்லெறிந்து தாக்கினர். திரும்பிவந்த விசுவாசிகள்அந்தக் கற்களைக்கொண்டு சபைக்கட்டிடம் ஒன்றைக் கட்டினர்.

ஒரு வீட்டை வாங்கிய மனிதன், தோட்டத்தின் நடுவில் ஒரு பெரும் கற்பாறை இருப்பதைப் பின்னர் கண்டறிந்தான். ஒரு பாறைத் தோட்டத்தை உண்டு பண்ண அவன் முடிவுசெய்தான்.

E.ஸ்டேன்லி ஜோன்ஸ், ‘நீங்கள் வரவேண்டாம் என்று மறுக்கப்பட்டீர்கள் எனில், அந்தச் சூழ்நிலைகளை மற்றவர்களை அழைக்கும் கதவுகளாக மாற்றுங்கள்” என்று கூறினார். ‘வாழ்க்கை உங்களுக்கு எலுமிச்சம் பழத்தைக்கொடுத்தால், அதைக்கொண்டு அருமையான பானத்தை உண்டாக்குங்கள்” என்று ஒருவர் கூறியுள்ளார்.

ஒரு கண் மருத்துவர் நோயாளி ஒருவரிடம், அவருடைய கண் ஒன்றை இழக்க நேரிடும் என்றும் கண்ணாடியினால் ஆன கண்ணைப் பொருத்த வேண்டும் என்றும் கூறினார். உடனே அந்த மனிதர், ‘மருத்துவரே, இமை மூடித்திறக்கக் கூடியதாக அதைக் கவனமாகச் செய்யுங்கள்” என்று பதிலுரைத்தார். இந்த மனிதரின் கதை நமக்கு உற்சாக மூட்டக் கூடியதாயிருக்கிறது. இதுவே சூழ்நிலைகளைத் தாண்டி வாழ்வதாகும்.

20. Dezember

»Denn ich habe gelernt, mich darin zu begnügen, worin ich bin.« Philipper 4,11

Man sagt uns oft, dass eigentlich nicht die jeweiligen Lebensumstände das Wichtige sind, sondern dass es auf die Art ankommt, wie wir auf diese Umstände reagieren. Das ist wahr. Wir sollen nicht immer versuchen, unsere Situationen zu verändern, wir sollten lieber mehr darüber nachdenken, wie wir uns selbst ändern können.

Es gibt verschiedene Möglichkeiten, wie Menschen auf ungünstige Ereignisse reagieren. Die erste ist die stoische Art. Das bedeutet, dass diese Menschen vollkommen leidenschaftslos sind, sie beißen die Zähne zusammen und zeigen keinerlei Gefühle. Ihre Strategie besteht darin, »sich mit dem Unvermeidlichen abzufinden«.

Andere reagieren eher hysterisch. Sie brechen gefühlsmäßig völlig zusammen mit lautem Schreien, vielen Tränen und dramatischen Gebärden. Wieder andere reagieren enttäuscht. Sie geben auf und verfallen in tiefe Hoffnungslosigkeit. In Extremfällen kann das sogar im Selbstmord enden.

Die normale christliche Art der Reaktion ist, sich zu fügen. Der Gläubige denkt so: »Das, was mir zugestoßen ist, ist nicht aus Zufall geschehen. Gott weiß von allem, was in mein Leben hineinkommt. Er hat dabei keinen Fehler gemacht. Er hat es zugelassen, damit es Ihm Ehre bringt, auch Segen für andere und Gutes für mich. Ich kann noch nicht sehen, wie Sein Programm für mich weitergeht, aber ich will Ihm trotzdem vertrauen. So beuge ich mich Seinem Willen und bete darum, dass Er sich verherrlichen und mir das beibringen möge, was ich nach Seinem Willen daraus lernen soll.«

Es gibt noch eine andere Art, in der manche auserwählte Christen auf Schwierigkeiten reagieren können, und das ist die triumphierende Art. Ich wage mich selbst nicht zu ihnen zu rechnen, obwohl ich gerne zu ihrer Zahl gehören würde. Das sind diejenigen, die widrige Umstände nur als eine Trittleiter zum Sieg benutzen. Sie verwandeln das Bittere in Süßes und Asche in Schönheit. Sie lassen sich nicht von ihren Lebensumständen regieren, sie lassen sich vielmehr von ihnen dienen. In diesem Sinne sind sie »mehr als Überwinder«. Ich will ein paar Beispiele dafür anführen.

Es gab einmal eine christliche Frau, deren Leben nur aus Enttäuschung und Frustration zu bestehen schien. Und doch schrieb der Mann, der ihre Lebensgeschichte veröffentlichte: »Sie machte noch herrliche Blumensträuße aus dem, was Gott ihr verweigerte.«

Gläubige in einem östlichen Land waren von einer wütenden Menge mit Steinen angegriffen worden. Doch diese Gläubigen kamen später wieder an diesen Platz und bauten eine Kapelle aus den Steinen, die nach ihnen geschleudert worden waren.

E. Stanley Jones hat gesagt: »Gebrauche deine Niederlagen und verwandle sie in Türen.« Oder, wie jemand anders gesagt hat: »Wenn das Leben einem nur Zitronen zu bieten hat, dann macht man eben Limonade daraus.«

Ich selbst mag besonders die Geschichte von dem Mann, dem sein Arzt sagen musste, dass er ein Auge verlieren würde und stattdessen ein Glasauge tragen müsste. Darauf sagte der Mann sofort: »Gut, aber dann setzen Sie mir eins ein, mit dem ich zuzwinkern kann.« Das nenne ich wirklich eine Haltung, die über den Dingen steht.