December

அழியா ஒழியா திருமறை

December 19

“Heaven and earth shall pass away; but my words shall not pass away.” (Lu. 21:33)

The Word of God is not only eternal; it is absolutely sure of fulfillment. In Matthew 5:18 Jesus said that not one jot or tittle will pass from the law until all be fulfilled. A jot is a letter of the Hebrew alphabet that resembles a comma or an apostrophe. A tittle is a stroke of a Hebrew letter; we might compare it to the bottom stroke of a capital E that distinguishes the E from the F. In other words, Jesus was saying that God’s word will be fulfilled down to the minutest details.

Julian the Apostate, a Roman emperor who lived A.D. 331-36, decided that he would disprove the Bible and discredit Christianity. The particular passage he chose to disprove was Luke 21:24: “And they shall fall by the edge of the sword, and shall be led away captive into all nations: and Jerusalem shall be trodden down of the Gentiles, until the times of the Gentiles be fulfilled.” He began by encouraging the Jews to rebuild the temple. According to Gibbon in The Decline and Fall of the Roman Empire, they went to work eagerly, using even silver shovels in their extravagance, and carrying the dirt in purple veils. But while they were working, they were interrupted by an earthquake and by balls of fire coming from the ground. They had to abandon the project.

Almost 600 years before Christ, Ezekiel predicted that the Eastern Gate of Jerusalem would be shut and that it would remain shut until “the prince” would come (Ezek. 44:3). Many Bible students understand “the prince” to be the Messiah. The gate, subsequently called the Golden Gate, was closed up by Sultan Seuleman in A.D. 1543. In Kaiser Wilhelm’s plan to capture Jerusalem, he hoped to enter by this gate, but his hope was dashed. The gate remains closed.

Voltaire boasted that the Bible would be a dead book in 100 years. When the hundred years had passed, Voltaire was dead and his house had become headquarters for the Geneva Bible Society. Ingersoll made a similar boast. He said that he would have the Bible in the morgue in 15 years. It was he, not the Bible, who went to the morgue. The Bible outlives all its critics.

You would think that men would wake up to the fact that the Bible is God’s eternal Word and that it will never pass away. But then, as Jonathan Swift said, “There’s none so blind as they that won’t see.”

டிசம்பர் 19

வானமும்; பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை. லூக்கா 21:33

அழியா ஒழியா திருமறை

இறைவனின் திருமறை நிலைபோறானது மட்டுமின்றி, அதில் கூறப்பட்டுள்ளவை அனைத்தும் முற்றிலுமாக நிறைவேறக் கூடிய உறுதிபடைத்தவை. நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று இயேசு கிறிஸ்து மத்தேயு 5:18-இல் கூறியுள்ளார். சிறு எழுத்து என்பதாவது, எபிரேய மொழியில் கால்புள்ளி போன்ற வடிவமைப்புள்ள ஒரு எழுத்தாகும். எழுத்தின் உறுப்பு என்பது ஒரு எழுத்தின் ஒரு பகுதியாகும். ‘எ” என்ற குறிலுக்கும் ‘ஏ” என்ற நெடிலுக்கும் உள்ள சிறிய வேறுபாட்டுடன் இதனை ஒப்பிடலாம். அதாவது இறைவனின் திருமறையில் சொல்லப்பட்டிருக்கிற சிறிய குறிப்புகள் வரை எல்லாம் நிறைவேறும் என்று இயேசு கிறிஸ்து இங்கே கூறியுள்ளார்.

கி.பி 331-336 வரை ரோம நாட்டு மாமன்னனாக விளங்கிய ஐPலியன் என்னும் கள்ளபோதகன், திருமறையைத் தவறு என்று நிருபிக்கவும்அதன் வாயிலாகக் கிறிஸ்தவம் நம்பிக்கைக்கு உரிதன்றும் என்று உறுதிப்படுத்தவும் தீர்மானித்தான். கிறிஸ்துவை மறுத்துரைத்தவனாகிய அந்த அரசன் லூக்கா 21:24ஐ தவறு என்று நிரூபிக்க நினைத்தான். ‘பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிக்குள்ளும் சிறைபட்டுப்போவார்கள், புறஜாதியாரின் காலம் நிறைவேறும்வரைக்கும் எருசலேம் புறஜாதியரால் மிதிக்கப்படும்” என்பதே அந்த வசனம். அதற்காக ஆலயத்தை மீண்டும் கட்டும்படி அவன் யூதர்களை ஊக்கிவித்தான். ரோமப் பேரரசின் வீச்சியும் அழிவும் என்னும் நூலில் கிப்போன் என்பார் இதைப்பற்றி எழுதியுள்ளதாவது: ‘ஆவலுடன் ஆலயப்பணியை மேற்கொள்ள யூதர்கள் முனைந்தனர். அவர்களுடைய செல்வ மேம்பாட்டினால் அப்பணியைச் செய்வதற்கு வெள்ளி மண்வெட்டிகளைப் பயன்படுத்தினர், இரத்தாம்பரத் துணியால் குப்பையைச் சுமந்து சென்றனர். ஆனால் அவ்வாறு அவர்கள் வேலைசெய்யும்போது நில அதிர்ச்சி ஏற்பட்டு, பூமியிலிருந்து தீப்பிழம்புகள் வெளிப்பட்டன. தொடர்ந்து அவர்கள் அவ்வேலையைச் செய்யக்கூடாதபடி அது தடைபட்டுப் போயிற்று.

கிறிஸ்துவுக்கு 600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த எசேக்கியல், எருசலேமின் கிழக்கு வாசல் மூடப்படும், ‘அதிபதி” மீண்டும் வரும்வரை அது மூடியிருக்கும் என்று கூறி முன்னுரைத்தான் (எசேக்.44: 2-3). திருமறை அறிஞர்கள் பலர் அந்த ‘அதிபதி” மேசியாவே என்று அறிந்து இருக்கின்றனர். பின்னர் அந்த வாசல் ‘தங்க வாசல்” என்று அழைக்கப்பட்டது. கி.பி 1543 இல் அந்த வாசலை சுல்தான் சல்மான் மூடினான். எருசலேமைக் கைப்பற்ற கைசர் வில்ஹெல்ம் என்பார் திட்டமிட்டார், அந்த வாசல் வழியாகச் செல்ல முடியுமென்று அவர் நம்பிக்கை கொண்டார். ஆயின் அவருடைய நம்பிக்கை சிதறுண்டது. இன்னும் அந்த வாசல் மூடிக்கிடக்கிறது.
நூறு ஆண்டுகளுக்குள்ளாகத் திருமறை அழிந்து போகும் என்று வோல்டேர் என்பவர் கூறினார். பல நூற்றாண்டுகள் கடந்து விட்டன. வோல்டேர் இறந்து போனார். அவனுடைய வீடு ஜெனிவா வேதாகமச் சங்கத்தின் தலைமை அலுவலகமாக மாறிற்று. இங்கர்சால் இதுபோன்றதொரு அறிக்கை செய்தார். 15 ஆண்டுகளுக்குள்ளாக வேதாகமத்தை பிணவறையில் அடக்கம் செய்து விடுவேன் என்று அவர் கூறினார். அவரோ பிணவறைக்குச் சென்றார். வேதாகமம் அங்கு செல்லவில்லை. குறை கூறினவர் அனைவரையும் கடந்து திருமறை வாழ்கின்றது.

தேவனுடைய நித்திய வார்த்தையாக வேதம் திகழ்கிறது. மற்றும் அதில் கூறப்பட்டுள்ளவை யாவும் நிறைவேறாமல் போகா என்னும் உண்மைக்கு மனிதர்கள் விழிப்படைவார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், ஜோன்த்தான் ஸ்விப்ட் என்பார் இவ்வாறு கூறியுள்ளார். ‘வேதத்தைக் காணாதவர்களுக்கு ஒப்பான குருடர்கள் வேறு எவருமில்லை.”

19. Dezember

»Der Himmel und die Erde werden vergehen, meine Worte aber werden nicht vergehen.« Lukas 21,33

Das Wort Gottes ist nicht nur ewig; es wird sich auch absolut sicher erfüllen. In Matthäus 5,18 hat Jesus gesagt, dass »nicht ein Jota oder ein Strichlein von dem Gesetz vergehen soll, bis alles geschehen ist«. Das Jota ist ein Buchstabe im hebräischen Alphabet, der einem Komma oder einem Apostroph ähnlich sieht. Und ein Strichlein ist nur ein Teil eines hebräischen Buchstabens; man könnte ihn mit dem untersten Strich des großen E vergleichen, durch das sich das E eben vom F unterscheidet. Jesus meinte damit, dass Gottes Wort sich bis in die kleinsten Einzelheiten
hinein erfüllen würde.

Julianus der Abtrünnige, ein römischer Kaiser, der von 331-336 n. Chr. regierte, war entschlossen zu beweisen, dass die Bibel Unrecht habe; er wollte das Christentum in Verruf bringen. Er suchte sich sogar eine bestimmte Bibelstelle aus, die er widerlegen wollte, nämlich Lukas 21,24: »Und sie werden fallen durch die Schärfe des Schwertes und gefangen weggeführt werden unter alle Nationen; und Jerusalem wird zertreten werden von den Nationen, bis die Zeiten der Nationen erfüllt sein werden.« Er ermutigte die Juden dazu, dass sie ihren Tempel wiederaufbauen sollten. Nach dem Buch von Gibbon »Untergang und Fall des Römischen Reiches« gingen die Menschen in Jerusalem auch eifrig ans Werk, sie benutzten sogar silberne Schaufeln in ihren übertriebenen Erwartungen und trugen die Erde in purpurnen Tüchern ab. Doch mitten in ihrer Arbeit wurden sie von einem Erdbeben und durch Klumpen von Feuer, die aus der Erde kamen, unterbrochen. So mussten sie ihren Plan wieder aufgeben.

Fast 600 Jahre vor Christus hatte Hesekiel vorausgesagt, dass das Osttor von Jerusalem verschlossen werden sollte und nicht wieder geöffnet werden dürfte, bis der »Fürst« kommen würde (siehe Hesekiel 44,2.3). Dieses Tor, das auch das Goldene Tor genannt wurde, wurde von Sultan Suleiman auch wirklich im Jahre 1543 verschlossen. Kaiser Wilhelm plante, Jerusalem zu besetzen, und er hoffte, durch dieses Tor einzuziehen, aber seine Hoffnungen wurden zerstört. Das Tor ist bis heute verschlossen geblieben.

Voltaire prahlte, dass die Bibel schon in 100 Jahren ein totes Buch sein würde. Doch als die 100 Jahre vorbei waren, war Voltaire tot, sein Haus aber war inzwischen zur Zentrale der Genfer Bibelgesellschaft geworden. Ingersoll brüstete sich mit einer ähnlichen Behauptung. Er sagte, dass in 15 Jahren die Bibel nur noch in Archiven herumstehen würde wie in einem Leichenschauhaus. Doch schließlich kam er selbst ins Leichenschauhaus und nicht die Bibel. Sie überlebte alle ihrer Kritiker.

Man sollte glauben, dass die Menschen aufmerksam werden könnten für die Tatsache, dass die Bibel Gottes ewiges Wort ist und dass sie niemals vergehen wird. Aber es ist schon so, wie Jonathan Swift gesagt hat: »Niemand ist so blind wie der, der nicht sehen will.«